Breaking

Showing posts with label Neet results. Show all posts
Showing posts with label Neet results. Show all posts

Tuesday, September 20, 2022

September 20, 2022

Increase in NEET pass percentage this year - நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

நடப்பாண்டில் நீட் தேர்வு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு தகுதி

விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டு கூடுதலாக 119 பேர் மருத்துவ படிப்பிற்கு செல்கின்றனர்.

இந்தியாவில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சியாகும் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்து படித்து வருகின்றனர்.ஆரம்பத்தில், நீட் தேர்வில் அதிகளவில் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று வந்தனர்.

இந்த நிலையை மாற்றி அரசு பள்ளி மாணவர்களும், அதிகளவில் தேர்ச்சி பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இப்பயிற்சி விழுப்புரம் மாவட்டத்தில் கோலியனுார், காணை, கண்டமங்கலம், விழுப்புரம், வானுார், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லுார், முகையூர், மரக்காணம், ஒலக்கூர், மயிலம், வல்லம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய 14 மையங்களில் நடத்தப்பட்டு வருகிறது.வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடப்பிரிவுகள் முதுகலை ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது.இப்பயிற்சியில் வாரம்தோறும் தேர்வு மற்றும் நீட் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு மாணவர்களின் திறமையை வளர்த்து வருகின்றனர்.இத்தேர்வில் கடந்த 2019-20ம் ஆண்டு பங்கேற்ற 368 மாணவர்களில் 58 பேர் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, 2020-21ம் ஆண்டில் பங்கேற்ற 330 பேரில் 65 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இதேபோன்று, நடப்பு 2021-22ம் ஆண்டில் பங்கேற்க 735 பேரில், 184 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டைவிட, நடப்பாண்டில் 119 நீட் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி மாணவர்களிடையே நீட் தேர்வு குறித்து அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது. கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக உள்ள விழுப்புரம் மாவட்ட மாணவர்களிடையே நீட் தேர்வு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், மாவட்டத்தில் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Wednesday, September 07, 2022

September 07, 2022

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியீடு

நீட் நுழைவு தேர்வு: இன்று ‛ரிசல்ட்

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு முடிவுகள் இன்று(செப்.,7) வெளியாகின்றன.

பிளஸ் 2 முடித்த மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் ஆயுஷ் படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான, மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு, ஜூலை 17ல், நாடு முழுதும், 3,500 மையங்களில் நடந்தது.நாடு முழுதும், 9.5 லட்சம் மாணவியர் உட்பட, 16 லட்சம் பேர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை சேர்ந்த, 15 ஆயிரம் பேர் உள்பட, 1.30 லட்சம் பேருக்கு மேல் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகளை, தேசிய தேர்வு முகமை இன்று அறிவிக்கிறது. தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவரின் விடைத்தாள் நகல், கடந்த வாரமே மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

அதன் வாயிலாக, ஒவ்வொரு மாணவரும், தோராயமாக தங்களின் மதிப்பெண்களை தெரிந்துள்ளனர். இன்றைய தேர்வு முடிவில், ஒட்டுமொத்தமாக மாணவர்களின் தரவரிசை, மதிப்பெண் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

-பள்ளிகள் அழைப்பு

அரசு பள்ளிகளில் படித்து, நீட் தேர்வு எழுதிய மாணவர்களை, பள்ளிகளுக்கு வரவைத்து, அவர்களின் மதிப்பெண் விபரம் சேகரிக்க, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இதற்காக உயர் கல்வி வழிகாட்டல் என்ற பெயரில், மாணவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும், இன்று முதல் இரண்டு நாட்களுக்கு புள்ளிவிபரம் சேகரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்போது, மாணவர்களுக்கு உயர் கல்வி குறித்த ஆலோசனைகளை வழங்கவும், '14417' மற்றும் '104' என்ற தொலைபேசி எண்கள் வழியாக, உளவியல் கவுன்சிலிங் அளிக்கவும், பள்ளிக் கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.
September 07, 2022

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை ஏன்?

NEET UG தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், மாலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகளை இன்று மாலை https://neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Total Pageviews

Search This Blog