Breaking

Showing posts with label crack SSC. Show all posts
Showing posts with label crack SSC. Show all posts

Tuesday, April 18, 2023

April 18, 2023

SSC தேர்வுகளும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

சி.ஆர்.பி.எப். தேர்வைத் தொடர்ந்து எஸ்.எஸ்.சி. தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் எம்.டி.எஸ்.(MTS- Multi Tasking Staff) மற்றும் சிஹெச்எஸ்எல் (CHSL - Combined Higher Secondary Level Exam) ஆகிய தேர்வுகளை தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட இரு தேர்வுகளும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் நடத்தப்பட்ட நிலையில் இனி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, ஒடிசா, அசாமி, பெங்காலி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, மணிப்புரி, கொங்கணி என 13 மாநில மொழிகளில் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எஸ்.எஸ்.சி. எம்டிஎஸ் தேர்வு வருகிற மே 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

முன்னதாக சி.ஆர்.பி.எப். தேர்வும் 13 மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Friday, February 17, 2023

February 17, 2023

SSC Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் அவகாசம்

SSC Multi-Tasking (Non-Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination தேர்வுக்கு விண்ணப்பிக்க ஒரு வார காலம் அவகாசம்

எஸ்எஸ்சி தேர்வு ஒரு வார காலம் அவகாசம்

Important Notice

F. No. HQPPI03/26/2022-P&P I - The Commission has decided to extend the closing date for receipt of online application for Multi-Tasking (Non-Technical) Staff, and Havaldar (CBIC & CBN) Examination, 2022 to 24-02-2023. Accordingly, other important dates have also been changed. Following are the important dates:

2. It is informed that relevant part in the notice of Examination where closing date has been treated as crucial date for ascertaining eligibility, will now be as per new closing date i.e. 24-02-2023.

ஒன்றிய அரசில் காலியாக உள்ள 11,409 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருந்தது. இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தேர்வர்கள் அவதிக்குள்ளான நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டது

Tuesday, January 31, 2023

January 31, 2023

Free Coaching Course for Union Civil Service Exams - ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் அறிவிப்பு Free Coaching Course for Union Civil Service Exams: Collector Notification

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு: ஆட்சியர் ஆர்த்தி

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் நடத்தும் பல்நோக்கு பணியாளர், ஹவில்தார் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்; ஒன்றிய அரசில் உள்ள 11,409 (இந்தியா முழுவதும்) பணிக்காலியிடங்களுக்கு பல்நோக்கு பணியாளர் (Multi Tasking Staff) மற்றும் Havidar என்ற பணியிடத்திற்கு ஒன்றிய அரசுப்பணி தேர்வாணையம் (Staff Selection Commission) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இத்தேர்வினை தமிழில் எழுதவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், வயது வரம்பு 01.01.2023 தேதியில் 18 வயது முதல் 27ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினவருக்கு 5 வருடங்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 3 வருடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்கள் வயது வரம்பில் தளர்வு உண்டு. இப்பணிக்காலியிடத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 17.0.2023 ஆகும். மேலும், விவரங்கள் அறிந்து கொள்ளவும், விண்ணப்பிக்கவும் https://ssc.nic.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி கொள்ளலாம். காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக மேற்காணும் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் 01.02.2023 நடத்திட உத்தேசிக்கப்பட்டு உள்ளது.

மேலும், இப்போட்டி தேர்விற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இவ்விலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை நகல், போட்டித்தேர்வுக்கு விண்ணப்பித்தமைக்கான சான்று மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், 044 27237124 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tuesday, September 20, 2022

September 20, 2022

How to crack SSC exam easily? - SSC தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

எஸ்.எஸ்.சி. தேர்வில் எளிமையாக சாதிப்பது எப்படி?

Important tips to crack SSC CGL

Go through the Syllabus and focus on study accordingly.

Solve Previous Year Papers.

Prepare your study plan and follow it.

Choose only best books as study material.

Solve practice set regularly.

Set your study goal.

Make Important Study Notes.

Do revision of your notes every week.

எஸ்.எஸ்.சி. தேர்வில் சாதிப்பது எப்படி?

மத்திய பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission - SSC) பன்னிரெண்டாம் வகுப்பு கல்வித் தகுதியிலான லோயர் டிவிஷன் கிளார்க், ஷார்ட்டிங் அசிஸ்டன்ட், போஸ்டல் அசிஸ்டன்ட், ஜூனியர் செகரட்டேரியேட் அசிஸ்டன்ட் ஆகிய பணியிடங்களை நிரப்ப தேர்வை நடத்துகிறது.

இந்த தேர்வுக்கு எப்படி திட்டமிட்டு தயாராக வேண்டும் என்று பார்க்கலாம்...

முதலில் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை 4 அல்லது 5 முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ளுங்கள். பின்பு, தலைப்பு வாரியாக பாடக்குறிப்புகளை சேகரியுங்கள். சந்தையில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன.

இவற்றை நேரடியாக படிப்பதைவிட, பாடப்புத்தகங்களை படித்து சுயமாக குறிப்பெடுத்து படித்த பின்பு, படிப்பது நல்ல பலனைத் தரும். ஆங்கிலப் பகுதி மற்றும் புத்திக்கூர்மை பகுதிக்கு நேரடியாக சந்தையில் கிடைக்கும் இவை சார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.

முந்தைய தேர்வு வினாத் தாள்களை பொறுமையாக வாசித்து, வினாக்கள் கேட்கப்படும் விதம் பற்றி அறிந்து கொள்ளுங்கள். பின்பு எந்த பகுதிக்கு அதிக நேரம் படிக்க வேண்டும், எந்த பாடத்திற்கு பிறரின் உதவி தேவை, எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை படித்து முடிக்க முடியும் என்பது குறித்து ஆழமாக சிந்தித்து ஒரு கால அட்டவணையை உருவாக்குங்கள்.

உதாரணமாக, சிலருக்கு கணிதப்பகுதியில் பிறரின் உதவி தேவைப்படலாம். சிலருக்கு ஆங்கிலப் பகுதியில் தேவைப்படலாம்.

தினமும் பயிற்சி

எத்தனை நாட்களுக்குள் பாடத்திட்டத்தை முடிக்கலாம் என்பது அவரவர் கல்வித் திறன், தேர்வுகள் எழுதிய அனுபவம், தினசரி படிக்கும் முறை, ஆர்வம் ஆகியவற்றை பொறுத்தது. எவ்வாறாயினும், அதிகபட்சம் 45 தினங்களுக்குள் ஓரளவு முடித்துவிடலாம்.

பின்பு தினசரி ஒரு மாதிரி வினாத்தாளை பயிற்சி செய்ய வேண்டும். ஏனெனில், குறிப்பிட்ட கால அளவுக்குள் விடையளிப்பது, தினசரி பயிற்சி செய்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆங்கிலம்

பெரும்பாலானவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்க தயங்கக் காரணம் ஆங்கிலப் பகுதி மற்றும் கணிதப்பகுதியைக் கண்டுதான். ஆங்கில வினாக்கள் நீங்கள்

நினைக்குமளவிற்கு கடினமானவை அல்ல.

பத்தாம் வகுப்பு தரத்தில்தான் கேட்கப்படுகின்றன. அவற்றை ஒருமுறை திருப்பிப் படித்தாலே போதுமானது. எட்டாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் போன்றவற்றையும் படிப்பது நல்லது.

இலக்கணத்தில் தெளிவிருந்தால் இப்பகுதியில் முழு மதிப்பெண் பெற முடிவதுடன், குறைந்த நேரத்திலேயே அடுத்த பகுதிக்கு செல்ல முடியும் என்பது சிறப்பு. ஸ்பாட்டிங் எரர் பகுதி வினாக்கள், வங்கித் தேர்வு வினாக்கள்போல சிரமாக இருக்காது என்பதை நினைவில் கொள்ளுங்கள். முந்தைய கேள்வித்தாள்களைப் பார்த்தால் நல்ல தெளிவு கிடைக்கும்.

கணிதம்

கணிதப்பகுதி, மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது சற்று கடினமான பகுதி மற்றும் தேர்வில் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளும் பகுதியாகும். ஆனால், வங்கித் தேர்வில் இடம்பெறும் கணக்குகளைப் போல் அவ்வளவு கடினமான பகுதி அல்ல.

நம்பர் சிஸ்டம் மற்றும் அல்ஜிப்ரா பகுதிகளில் இருந்து படிக்க ஆரம்பிப்பது சிறப்பு. பள்ளி பாடப்புத்தகங்களை படித்த பின்பு, சந்தையில் கிடைக்கும் புத்தகங்களில் உள்ள கணக்கு மாதிரிகளுக்கு பயிற்சி செய்யுங்கள். எளிமையான வழியில் எந்த புத்தகத்தில் கணக்கு தீர்வு செய்யப்பட்டிருக்கிறதோ அதை குறிப்பெடுத்து பின்பற்றுங்கள்.

தினசரி குறைந்தபட்சம் ஒருமணி நேரம் கணிதப்பகுதிக்கென ஒதுக்கி பயிற்சி செய்யுங்கள். தேர்வில் ஒரு கணித வினாவிற்கு விடை சரியாக வரவில்லையெனில் அதையே யோசித்து நேரத்தை வீணாக்காமல் அடுத்த வினாவிற்கு சென்றுவிடுங்கள்.

ரீசனிங்

இப்பகுதிக்கு இதர மூன்று பகுதிகளைப் போல் மனப்பாடம் செய்ய வேண்டியதில்லை. லாஜிக்கை புரிந்து கொண்டாலே போதும். அதிக நேரம் பயிற்சி செய்தல் நல்ல பயனைத் தரும். அதிக மதிப்பெண்களை எளிதாக பெற்றுவிடலாம். ஒரே நேரத்தில் இருவேறு ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிப்பதை தவிர்க்கலாம். ஒன்றை முழுமையாக படித்த பின்பு, அடுத்தவர் எழுதிய புத்தகத்தை படிப்பது தெளிவைத் தரும். குழப்பங்களை தவிர்க்கும்.

பொது அறிவுப் பகுதி

இந்திய வரலாறு, புவியியல், அறிவியல், பொருளாதாரம், இந்திய அரசியலமைப்பு, பொது அறிவுப் பகுதி மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் ஆகிய பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படுகின்றன.

ஆறாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள NCERT புத்தகங்களை படிக்கலாம். அதற்கு முன்பாக ஐந்து வருடத்திற்குரிய முந்தைய தேர்வு வினாக்களை பொறுமையாக படிப்பதன் மூலம் எந்தப் பகுதிகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன, கேள்விகள் கேட்கப்படும் முறை மற்றும் தரம் ஆகியவை குறித்து ஒரு தெளிவு கிடைக்கும். அதன் பின்பு பாடப்புத்தகங்களைப் படிப்பது நல்ல பலனைத் தரும்.

இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தினமும் காலை, மாலை தட்டச்சு பயிற்சி செய்யுங்கள். கட்டுரைத் தேர்வுக்கும் போதிய அவகாசம் கிடைக்கும்.

பயம் தவிர்ப்போம்



எஸ்.எஸ்.சி. நடத்தும் தேர்வுகளுக்கு தமிழக இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதில்லை. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பாக உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி “ நான் ஏன் இத்தேர்வினை எழுத முடிவு செய்துள்ளேன்” என்பதுதான். உங்களது குறிக்கோள் தெளிவானதாக, உறுதியாக இருக்கும்பட்சத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம்.

பயிற்சி வகுப்புக்கு செல்வது உங்கள் திறமையைப் பொறுத்து நீங்களே முடிவு செய்யலாம். ஆனால் கண்டிப்பாக பயிற்சியும், முயற்சியும் அவசியம். முந்தைய வினாக்களை படிப்பது, தகுந்த தரமான புத்தகங்களை படிப்பது, நிறைய பயிற்சி வினாக்களை செய்து பழகுவது ஆகியவை சேர்ந்தே உங்கள் வெற்றியை தீர்மானிக்கும். எனவே, தயக்கமின்றி முழு மனதுடன் இத்தேர்வுகளுக்கு தயார் செய்யுங்கள்.

ஆயிரம் மைல்கள் கொண்ட பயணம் நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடியில்தான் ஆரம்பமாகிறது. எனவே, இத்தேர்வுக்கு தயார் செய்வதும் ஒரு பயணமே. முழு பயணத்திற்கும் முறையாக திட்டம் வகுத்து முதல் அடியை இன்றே எடுத்து வையுங்கள், உங்கள் இலக்கை அடைய வாழ்த்துகள்.

நம்பிக்கையுடன் இன்றே விண்ணப்பியுங்கள். விடாமுயற்சியுடனும், ஆர்வத்துடனும் தேர்வுக்கு தயாராகுங்கள்.

Total Pageviews

Search This Blog