Breaking

Showing posts with label 11th and 12th class general examinations. Show all posts
Showing posts with label 11th and 12th class general examinations. Show all posts

Wednesday, June 01, 2022

June 01, 2022

+1, +2 விடைத்தாள் திருத்தும் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

சேலத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்கி உள்ளது.

இந்நிலையில், சேலம் ராஜாஜி சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், திடீரென பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கமாக, ஆசிரியர்களின் விருப்பத்தின் பேரில், விடைத்தாள் திருத்தும் மையங்கள் ஒதுக்கப்படும் என்றும், தற்போது வழக்கமான நடைமுறை மாற்றப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

தொலைவிலுள்ள மையங்களுக்கு செல்ல வெகுதூரம் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து, கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, விருப்பப்படும் மையங்கள் ஒதுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

June 01, 2022

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு :விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி வரும் 9ம் தேதி தொடங்குகிறது.

11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 83 மையங்களிலும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 86 மையங்களிலும் திருத்தப்படுகிறது.

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது..

10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

அடுத்த கல்வியாண்டு விரைவில் தொடங்க உள்ளதால் தேர்வு முடிவுகள் விரைந்து அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது

Friday, April 22, 2022

April 22, 2022

இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுக்கு தேர்வுத்துறை இயக்ககம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட்டை http://dge.tn.gov.in என்ற அரசு தேர்வுகள் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Total Pageviews

Search This Blog