Breaking

Showing posts with label தற்காலிக ஆசிரியர். Show all posts
Showing posts with label தற்காலிக ஆசிரியர். Show all posts

Monday, August 08, 2022

August 08, 2022

தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணி

தற்காலிக இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள்: திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியா் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தற்காலிக ஆசிரியா் நியமனம் சாா்ந்து சென்னை உயா்நீதிமன்ற இடைக்கால ஆணையின்படி இடைநிலை ஆசிரியா் பணிக்கு உரிய கல்வித் தகுதிகளுடன், ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை மட்டுமே தற்காலிக நியமனம் செய்யத்தக்க வகையில் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். 1.6.2022-ஆம் தேதி வரையில் அரசு நகராட்சி, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள்

விண்ணப்பதாரா்களின் கல்விச் சான்றுகளை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியா்கள், வட்டார வள மைய மேற்பாா்வையாளா்களைக் கொண்ட குழு சரிபாா்த்து தகுதியானவா்களை வகுப்பறையில் மாணவா்களுக்கு பாடம் நடத்த (டெமோ கிளாஸ்) அறிவுறுத்தி அதன் அடிப்படையில் அவா்களது திறனை அறிய வேண்டும்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் ஆசிரியா்களுக்கு தனியாக வருகைப்பதிவேடு மற்றும் மதிப்பூதியம் வழங்கப்பட்டதற்கான பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும். நியமிக்கப்படும் தற்காலிக ஆசிரியரின் பணி, நடத்தையில் திருப்தி இல்லையெனில் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவா் என்பதை அவா்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலா்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை தோ்வுக்குழு பரிசீலித்து தகுதியான நபா்களை ஆக.8, 10 ஆகிய நாள்களுக்குள் இறுதி செய்ய வேண்டும். தெரிவு செய்யப்பட்ட இறுதிப் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலரிடம் வட்டாரக் கல்வி அலுவலா் ஆக.11-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

அந்தப் பட்டியலை மாவட்டக் கல்வி அலுவலா் கூா்ந்தாய்வு செய்து ஆக.12-ஆம் தேதிக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதையடுத்து ஆக.16-க்குள் பள்ளி மேலாண்மைக்குழுவின் ஒப்புதலைப் பெற்று தற்காலிக நியமனம் பெற்றவா்களை ஆக.17-ஆம் தேதிக்குள் பணியில் சோ்க்க வேண்டும்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் - கல்வியாளர்கள் கருத்து!

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் என்பது உழைப்பு சுரண்டல் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சென்னை: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருவதால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, கற்பிக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியில் 2,559 இடங்கள் காலியாக இருந்தும், 152 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர்.

அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 4,910 இடங்கள் காலியாக இருந்தும் 2,069 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் காலியாக நிரப்ப இருந்த 11,825 ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,50,648 பேர் விண்ணப்பம் செய்திருந்தாலும், பட்டதாரி ஆசிரியர்கள் 2,069 பேரும், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 152 பேர் என 2,221 பேர் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். எனவே 9,604 பணியிடங்கள் காலியாக உள்ளது.தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரி ரெய்மாண்ட் பேட்டிதொகுப்பூதிய விவரம்: தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.7,500 தொகுப்பூதியத்திலும், 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதியத்திலும், 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 ரூபாய் தொகுப்பூதியத்திலும் நிரப்பப்பட உள்ளது. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறையில் காலியாக இருந்த பணியிடங்களில் 2,069 பட்டதாரி ஆசிரியர்களும், முதுகலை ஆசிரியர்கள் 152 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தொடக்கக்கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.திமுகவின் கொள்கை எது? இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரி ரெய்மாண்ட் கூறுகையில், “தற்காலிக ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கு 2,200 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தப் பணிக்கு மிகக் குறைந்த அளவிலேயே விண்ணப்பித்துள்ளனர்.

கல்வியாளர் சீனிவாச சம்பந்தம் பேட்டிஆசிரியர் சங்கங்கள் தற்காலிக பணியில் நியமனம் செய்யக் கூடாது என தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம். மிகக் குறைவான ஊதியத்தில் நியமனம் செய்வது என்பது உழைப்பு சுரண்டாலாக இருக்கும் என ஆசிரியர்கள் நினைக்கின்றனர். எனவே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை முறையான ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.தேர்வு நெருங்கும் நேரத்தில் மாணவர்களுக்கு இது சுமையாக இருந்திடக் கூடாது. திமுகவின் கொள்கையே தொகுப்பூதியத்தை ஓழிக்க வேண்டும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் கவனம் செலுத்திட வேண்டும்” என தெரிவித்தார். நல்ல சம்பளம் வேண்டும்: மேலும் கல்வியாளர் சீனிவாச சம்பந்தம், “அரசுப்பள்ளிகளில் 12,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கிறது. கரோனாவால் தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் வந்து சேர்கின்றனர். இதற்குக் காரணம் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையும், கல்வியின் தரத்தை அரசு உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும்தான்.12,000 ஆசிரியர் காலிப்பணியிடம் இருக்கும் நிலையில், 2,200 பேர் மட்டுமே வந்து சேர்ந்துள்ளனர். 10,000 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. பள்ளிகள் திறந்து மாணவர்கள் வந்து விட்டனர். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் இல்லாவிட்டால் கல்வி பாதிக்கும். பள்ளிக்கல்வித்துறையில் வேலை வாய்ப்புகள் இருந்தும், அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், 10 மாதம் மட்டுமே பணி என்பதும், மாதம் 7,500 ரூபாய் தொகுப்பூதியம் என்பதும் காரணமாக இருந்து வருகிறது.

இந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு எதுவும் செய்ய முடியாது. மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் என்றால், நல்ல சம்பளத்தை கொடுத்து ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். ஆசிரியர்களை நியமனம் செய்தால்தான், மாணவர்கள் தேர்வினை எழுதி சாதிக்க முடியும்” என கூறினார்.

Friday, July 22, 2022

July 22, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவு.

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உத்தரவு.

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நான் கணிதத் துறை மற்றும் கல்வியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண் குறைவால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பின்னர் போட்டித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு 2018 ஜூலை 20-ல் உத்தரவிட்டது.

இதையும் படிக்க | 6-12 வகுப்புகளுக்கு அலகுத் தேர்வு நடத்துதல் - சென்னை முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு பிறப்பித்துள்ளது. அந்த வழிகாட்டுதல்களில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.

எனவே, இடஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்ட முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தடை விதித்தும், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தடை காரணமாக தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை தொடங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க | TNPSC குரூப் 1 தேர்விற்கு இன்று முதல் ஆகஸ்ட் 22-ம் வரை விண்ணப்பிக்கலாம்..

இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்தார்.

Thursday, July 21, 2022

July 21, 2022

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு- தலைமை நீதிபதி முன் பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை ஆணை

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி முன்பு பட்டியலிட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டது.

இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Saturday, July 09, 2022

July 09, 2022

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

Thursday, July 07, 2022

July 07, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கு ஒத்திவைப்பு

தற்காலிக ஆசிரியர்கள் நியமன வழக்கை வரும் 11ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது. வழக்கில் உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுகளை தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இடஒதுக்கீடு, முன்னுரிமை போன்ற வழிகாட்டுதல் இன்றி தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பு வெளியானது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Tuesday, July 05, 2022

July 05, 2022

பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் தகவல்

பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பட்டதாரி, முதுகலை ஆசிரியர் தற்காலிக பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் அமிர்த ஜோதி தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் சு.அமிர்த ஜோதி வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் கடந்த 1ம் தேதி நிலவரப்படி காலியாகவுள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக்கல்வி அலுவலரிடம் வருகிற 6ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது. சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் 16 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 24 முதுகலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் உள்ளன.

மேலும் குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளியிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது. விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலகம், வட சென்னை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகம், வில்லிவாக்கம், சென்னை-49. deonortha2section என்ற மின்னஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

மாவட்ட கல்வி அலுவலகம், தென் சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், சென்னை-8. deosouth08@gmail. com என்ற மின்னஞ்சலிலும், மாவட்ட கல்வி அலுவலகம், மத்திய சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், சைதாப்பேட்டை , சென்னை-15க்கு deocnc@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும், மாவட்ட கல்வி அலுவலகம், கிழக்கு சென்னை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி, சென்னை-05க்கு deocne@nic.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம்.
July 05, 2022

தற்காலிக ஆசிரியர்கள் பணிக்கு ஏராளமானோர் விண்ணப்பம் - அலைமோதும் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முதல் நாளான நேற்று ஏராளமாேனார் மாவட்ட கல்வி அலுவலகங்களில் திரண்டனர்.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை, நடப்பு கல்வி ஆண்டில் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ேடார் விண்ணபித்தால், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணிபுரியும் நபருக்கு முன்னுரிமை அளிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு, ஏற்கனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில், இடைநிலை ஆசிரியர்கள் 678, பட்டதாரி ஆசிரியர்கள் 811, முதுநிலை ஆசிரியர்கள் 259 உள்பட மொத்தம் 1,748 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு நேற்று தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகங்களில், நூற்றுக்கணக்கானோர் நேற்று விண்ணப்பங்களை அளித்தனர். இணையதள முகவரியிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவித்திருந்தும், பெரும்பாலானோர் நேரில் விண்ணப்பங்களை அளித்தனர். விண்ணப்பங்களை அளிக்க நாளை மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்றும், நாளையும் விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிக ஆசிரியர் பணியில் சேருவோருக்கு, இடைநிலை ஆசிரியருக்கு ₹7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ₹10 ஆயிரம், முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கு ₹12,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், எதிர்காலத்தில் நிரந்தர பணி வழங்கும்போது, முன்னுரிமை கிடைக்கும் என்ற எண்ணத்தில, தற்காலிக ஆசிரியர் பணியில் சேர ஆர்வம் அதிகரித்திருக்கிறது.

போளூர்: போளூர் கல்வி மாவட்டத்தில் 38 மேல்நிலைப் பள்ளிகளில் 55 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், 33 உயர்நிலைப் பள்ளிகளில் 164 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 84 நடுநிலைப் பள்ளிகள் மற்றும் 296 தொடக்கப் பள்ளிகளில் 141 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 3 பட்டதாரி ஆசிரியர் என மொத்தம் 363 தற்காலிக ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க போளூர் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று நூற்றுக்கணக்கோனார் குவிந்தனர். அனைவரும் போட்டி போட்டு கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, உரிய கல்வி சான்றுகளுடன் மனு கொடுத்தனர்.

Total Pageviews

Search This Blog