Breaking

Showing posts with label விருது. Show all posts
Showing posts with label விருது. Show all posts

Tuesday, August 02, 2022

August 02, 2022

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

வீரதீரச் செயல்களுக்கான சிறுவா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு வீரதீரச் செயல்களில் ஈடுபட்ட 6 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவா்களுக்கு ஹொய்சளா விருது(சிறுவா்கள்), கேளடி சென்னம்மா விருது (சிறுமிகள்) ஆகியவற்றை கா்நாடக அரசு வழங்கி கௌரவித்துவருகிறது. ஆபத்தில் சிக்கியவரின் உயிரைக் காப்பாற்ற அறிவுக்கூா்மையோடு செயல்பட்டு வீரதீரத்தை வெளிப்படுத்தும் சிறுவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த நிகழ்வுகள் 2021 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 2022 ஜூலை மாதத்திற்குள் நடந்ததாக இருக்க வேண்டும். 2004 ஆக. 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்த குழந்தைகள் மட்டுமே விருதுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுடன் தலா ரூ.10 ஆயிரம் ரொக்கமும், பட்டயமும் வழங்கப்படும். மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் மாவட்ட அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று, நிறைவுசெய்து செப்.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Monday, July 11, 2022

July 11, 2022

மாணவர்களின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான மத்திய அரசின் ‘இன்ஸ்பயர்’ விருதுக்கு, தகுதியான பள்ளி மாணவர்களின் பெயரை செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல், தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை சார்பில் ஆண்டுதோறும் அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இன்ஸ்பயர்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டில் விருதுக்கு மாணவர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

எனவே, 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் www.inspireawards-dst.gov.in என்ற இணையதளத்தில் செப்.30-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் வகுப்புக்கு 5 பேரையும், நடுநிலைப் பள்ளிகளில் 3 பேரையும் பதிவு செய்யலாம். அதிகப்படியான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.10,000 செலுத்தப்படும். எனவே, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யும்போது, மாணவர்கள் பெயரிலான தனி கணக்காக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog