Breaking

Showing posts with label Announcements. Show all posts
Showing posts with label Announcements. Show all posts

Wednesday, March 29, 2023

March 29, 2023

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை எண்.32 - அறிவிப்புகள் 2023 - 2024 - Announcements of Labour Welfare and Skill Development Department - 2023-24

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை எண்.32 - அறிவிப்புகள் 2023 - 2024 - Announcements of Labour Welfare and Skill Development Department - 2023-24



CLICK HERE TO DOWNLOAD PDF
March 29, 2023

நீர்வளத்துறை மானியக் கோரிக்கை எண்.40 - அறிவிப்புகள் 2023 - 2024 - Announcements of Water Resources Department - 2023-24 - PDF



நீர்வளத்துறை மானியக் கோரிக்கை எண்.40 - அறிவிப்புகள் 2023 - 2024 - Announcements of Water Resources Department - 2023-24 - Tamil Version

CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, March 05, 2022

Tuesday, March 01, 2022

March 01, 2022

மார்ச் 7 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு 07.03.2022 அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப.,அவர்கள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் வட்டம், அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 07.03.2022 அன்று நடைபெறவுள்ள திருத்தேர் உற்சவத்தை முன்னிட்டு, 07.03.2022 அன்று ஒரு நாள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இதையும் படிக்க | மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை

மேற்படி தினத்தில் அவசர அலுவல்களை கவனிக்கும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலகமும் மற்றும் சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும். மேலும், மாணவ/மாணவியர்களுக்கு 07.03.2022 அன்று தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் எனவும், உள்ளூர் விடுமறை அறிவிக்கப்பட்டுள்ள 07.03.2022-க்குப் பதிலாக 19.03.2022 (சனிக்கிழமை) பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.த.மோகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Wednesday, February 23, 2022

February 23, 2022

வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் தீர்த்தமலை அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயிலில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு இன்று (23.02.2022 - புதன்கிழமை) அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிக்க | BRTE - ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பணி மற்றும் அறிவுரைகள் - CEO Proceeding.

மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற (26.02.2022) சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று அரூர் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Sunday, February 06, 2022

February 06, 2022

வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க அவகாசம்

புதுப்பித்தல் சலுகை பெறவிரும்பும் பதிவுதா ரர்கள் மார்ச் 1ம்தேதிக்குள், https://tnvelaivaaippu.gov.in/ என்ற வேலைவாய்ப் புத்துறை இணையதளத் தில் தங்கள் விடுபட்ட பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.

Thursday, February 03, 2022

February 03, 2022

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிப்பு

காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு தமிழ்மொழி கட்டாயம், 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மாற்றம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு பணிக்கு நடைபெறும் தேர்வில் தமிழ் கட்டாயம் என்ற அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து துறைகளிலும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வந்தனர். இதை தொடர்ந்து, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தற்போது தேர்வு முறையில் மாற்றம் கொண்டுள்ளது. எனவே, இனி நடைபெறும் காவலர் தேர்வில் தமிழ் தகுதி தேர்வு 80 மதிப்பெண்களுக்கு நடைபெறும். அந்த தகுதி தேர்வு 1 மணி 20 நிமிடம் நடைபெறும். தேர்வில் 40 சதவீதம் மதிப்பெண்கள் அதாவது 32 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் அடுத்த கட்டமாக காவலர்களுக்கு என நடத்தப்படும் 80 மதிப்பெண்கள் தேர்வில் தகுதியானவர்களாக பார்க்கப்படும். எனவே தமிழ் தேர்ச்சி தேர்வில் தகுதி பெற்றவர்கள் மட்டும் காவலர்களாக முடியும் என்று மாற்றம் கொண்டுள்ளது.

மேலும் இனிவரும் காவலர்கள் தேர்வில் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகளையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே காவலர்கள் தேர்வில் சான்றிழ் சரிபார்ப்பு, உடல் தகுதி தேர்வு மற்றும் தமிழ்தகுதி தேர்வும் முக்கியமாக பார்க்கப்படும்.

மேலும், தமிழில் தேர்ச்சி பெறும் வகையில் பயிற்சி பெற வேண்டும் என்று தமிழ்நாடு சீருடை தேர்வாணையம் புதிய தேர்வு முறையை கொண்டுள்ளது. வரும் காலங்களில் விரிவான நடைமுறைகளை அமல்படுத்தி தேர்வு நடத்தப்படும். ஏற்கனவே சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தில் 80 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். அதில் 50 பொது அறிவு சம்பந்தப்பட்ட கேள்வி, 15 உளவியல், 15 விளையாட்டு துறையில் சான்றிதழ் பெற்றிருந்தால் அதற்கு வழங்கப்படும். அதன்பிறகு மருத்துவ சோதனை, உடற்தகுதி தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்படும். இந்நிலையில் அதனுடன் தமிழ் தகுதி தேர்வும் எழுத வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Wednesday, February 02, 2022

February 02, 2022

பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்: கல்வித்துறை அறிவுறுத்தல்

பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்: கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கு பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுபிபுய சுற்றறிக்கை:

தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையின்போது பிறப்பு சான்றிதழின்படி மாணவா், பெற்றோா் பெயா் (தமிழ், ஆங்கிலம் 2 மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முகமை தளத்தில் (எமிஸ்) உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, எமிஸ் தளத்தில் மாணவா்களின் சுய தகவல்களை பிழையின்றி பதிவுசெய்வதை உறுதிசெய்தல் வேண்டும். அதற்கேற்ப எமிஸ் தளத்திலும் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

Tuesday, February 01, 2022

February 01, 2022

Union Budget 2022: ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

2022-2023ஆம் ஆண்டிற்கான மத்திய 💰பட்ஜெட் -

—————————————————-

🔻மெட்ரோ ரயில் திட்டங்கள் புதிய வசதிகளுடன் செயல்படுத்தப்படும்: நிர்மலா சீதாராமன்

🔻ஒரு ரயில் நிலையம், ஒரு உற்பத்திப் பொருள் என்ற போக்குவரத்துத் திட்டம் செயல்படுத்தப்படும்- பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்

🔻கோதாவரி - பெண்ணையாறு - காவிரி உள்ளிட்ட 5 நதி இணைப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

🔻MSME நிறுவனங்கள் கொரோனா பாதிப்பில் இருந்து மீள அறிமுகம் செய்யப்பட்ட ECLGS திட்டம் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

🔻ஊரக மாணவர்கள் மற்றும் தலித் மாணவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் கூடுதல் கல்வி தொலைக்காட்சி சேனல்கள் உருவாக்கப்படும் : நிதியமைச்சர்

Sunday, January 30, 2022

January 30, 2022

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு: தமிழக அரசு புதிய உத்தரவு

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், நியாய விலைக்கடைகளில் கை ரேகை பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், க்யூ.ஆர் ஸ்கேன் செய்து பொருட்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை பதிவு செய்வதில் பிரச்னை எழுந்தாலும், பொருட்களை வினியோக்க வேண்டும் எனவும், குடும்ப அட்டை எண்ணை, விற்பனை முனையத்தில் பதிவு செய்து, ரேஷன் பொருட்களை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக மண்டல மற்றும் வட்டார அளவில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், பயிற்சி வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
January 30, 2022

தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி

தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் மூன்று கட்டமாக, பயிற்சி வகுப்புகள் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும், முதல் கட்ட பயிற்சி வகுப்பை, நாளை நடத்த வேண்டும்.

பிப்., 9ம் தேதி, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்., 18ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தேர்தல் பணியாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ள, மென்பொருள் உதவி யுடன் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Saturday, January 29, 2022

January 29, 2022

17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது
January 29, 2022

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம்

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைகழக தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை: நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி பருவத்தேர்வுகளுக்கு பதிவு செய்ய தவறியவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளம் சென்று இன்று இரவு 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் 044-22357272, 7307, 7303 ஆகிய தொலைப் பேசி எண்களுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, January 27, 2022

January 27, 2022

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்: வழிகாட்டுதல்களை வெளியிட்டது தமிழக அரசு

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும் என தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது. இசைத்தட்டுகளை கொண்டு இசைக்கப்படுவதை தவிர்த்து தமிழ்த்தாய் வாழ்த்தை வாய்ப்பாட்டாக பாட வேண்டும் எனவும் கூறியுள்ளது. அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் இன்று காலை குடியரசு தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். இதன்பிறகு நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அங்கிருந்த பலர் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை என்பதால் சலசலப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டது.

Total Pageviews

Search This Blog