Breaking

Showing posts with label CM NOTICE. Show all posts
Showing posts with label CM NOTICE. Show all posts

Sunday, September 04, 2022

September 04, 2022

அரசு மாதிரிப்பள்ளி மாணவர்களுடன் முதல்வர் கலந்துரையாடல் - Live Link



Dear All, 
We welcome you to Join the Special Live Event of Our Hon'ble Chief Minister of Tamil Nadu Thiru. M.K.Stalin & Hon'ble Chief Minister of Delhi Thiru. Arvind Kejriwal Interaction with Students of Government Model Schools. 

Kindly click on the below link to join in this Special Live Event👇🏻


Date : 05.09.2022

Time : 11.30 AM

Place : Anna Centenary Library, Chennai

TN SED

Tuesday, April 05, 2022

April 05, 2022

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைப்பு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அறிவிப்பு - Press Release No : 542 - 05-04-2022

Friday, February 25, 2022

February 25, 2022

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மாணவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான செலவை அரசே ஏற்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

உக்ரைனில் சுமார் 5000 தமிழ்நாட்டு மாணவர்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிப்போருக்கு வழங்கும் கருணைத்தொகை 24 ஆயிரமாக உயர்வு - அரசாணை வெளியீடு

Wednesday, January 12, 2022

January 12, 2022

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் அளித்த கோரிக்கை மனு!

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை துவக்க வேண்டும்.

6 புதிய மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும்.
Admission Policy in Medicine and Opposition to National Eligibility Cum Entrance Test (NEET)

Expediting Construction and Establishment of AIIMS at Madurai

Establishment of New Government Medical Colleges in Six Districts.

Request for a New AIIMS Hospital in Coimbatore

All India Quota Abolition for Fully State Funded Medical Institutions

Reservation of 50% Seats in Super Speciality (DM/ M.Ch.) Courses to the Tamil Nadu Government

Compulsory Rotating Medical Internship (CRMI)

Additional Funding under National Health Mission

Reservation of Seats for Service Candidates in the State Government Quota for the DM / M.Ch courses

Objection to the Draft Post Graduate Medical Education Regulations recently Circulated for Public Opinion Proposal for Establishment of District Headquarters Hospitals in 19 Districts Across Tamil Nadu

Sunday, November 14, 2021

Thursday, November 11, 2021

November 11, 2021

மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

செய்தி வெளியீடு எண்:1077

நாள்:11.11.2021

செய்தி வெளியீடு

மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர் சேத விவரங்களைப் பார்வையிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைப்பு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்து, தற்போது பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும். பயிர் சேத விவரங்களை அறியவும், அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றினை மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (11-11-2021) உத்தரவிட்டுள்ளார்கள். இந்தக் குழுவில், மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு, மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு கே.ஆர். பெரியகருப்பன். மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு. எஸ் ரகுபதி, மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் துறை அமைச்சர் திரு.சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழுவினர் உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, நிவாரண நடவடிக்கைகளை துரிதப்படுத்திட ஏதுவாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அறிக்கை தர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Sunday, November 07, 2021

November 07, 2021

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு - செய்தி வெளியீடு எண்:1054 நாள்:07.11.2021

செய்தி வெளியீடு எண்:1054

நாள்:07.11.2021

செய்தி வெளியீடு

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (7.11.2021) வடகிழக்கு பருவமழையையொட்டி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை. வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு, அவற்றை உடனடியாக களைய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிக வழங்கினார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையையொட்டியும். வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னையில் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய பகுதிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்று காலையில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, மாலையில் சைதாப்பேட்டை, ஆட்டுத்தொட்டி பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், ஆட்டுத்தொட்டி, செங்கேணியம்மன் கோயில் தெரு மற்றும் வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். எடுக்க வேண்டும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும், கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார். அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், ஆவின், பொது போக்குவரத்து. மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு. தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே. என். நேரு, மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா. சுப்பிரமணியன். மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Friday, October 15, 2021

October 15, 2021

பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் - செய்தி வெளியீடு எண்:889 நாள்:15.10.2021

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த 23 மீன்வர்களை உடனடியாக விடுக்கவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் செய்தி வெளியீடு எண்:889

நாள்:15.10.2021

செய்தி வெளியீடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த 23 மீனவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களுக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11-10-2021 அன்று நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள், 13-10-2021 அன்று, பாரம்பரிய மீன்பிடித் தளமாக உள்ள பருத்தித்துறை அருகே இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, காரைநகர் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கைக் கடற்படையினரின் இந்த நடவடிக்கை மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையேயான இந்த நீண்ட காலப் பிரச்சினையில் உடனடியாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு, இப்பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்திட, உறுதியான வழிமுறைகளைக் காண வேண்டுமென்றும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 23 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட, இலங்கை அதிகாரிகளிடம் உறுதியாக. தீர்க்கமான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துச் சென்றிட இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களை தனது கடிதத்தில் கொண்டுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் மேலும், இலங்கைக் கடற்படையினரால் அப்பாவி மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று தாக்கப்படுவது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள், உரிய வழிமுறைகளைக் கையாண்டு. இதற்கு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Tuesday, September 21, 2021

September 21, 2021

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா? CM CELL REPLY

பணிவரன்முறை , தேர்வு நிலை , சிறப்பு நிலை பெற கல்விச் சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை பெற வேண்டுமா ?? தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவில் பதில்
கோரிக்கை


மாண்புமிகு ஐயா வணக்கம்.


1) திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் கல்விச் சான்றுகள் உண்மைத்தன்மை பெற்றால் தான் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகள் அனுமதிக்கப்பட வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவுகள் ஏதும் வெளியிடப்பட்டு உள்ளதா என்றும் ஆம் எனில் அந்த உத்தரவுகளின் விபரங்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.


2) ஆசிரியர்கள் கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை பெறாத நிலையிலும் பணிவரன்முறை தேர்வுநிலை சிறப்புநிலை மற்றும் இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடு சரிசெய்தல் ஆகியவைகளுக்கு இனி வரும் காலங்களில் மாவட்டக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்து உரிய உத்தரவுகளை பெற்றுக் கொள்ளலாமா? என்பது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன்.


3) மேற்கண்ட எனது ஐயங்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சார்பில் வழங்கப்படும் விபரங்கள் அல்லது பதில்களை உரிய அலுவர்களிடம் சார்பு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்வது குறித்து தெரிவிக்க வேண்டுகிறேன். பதில்


ஏற்கப்பட்டது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது பணிநியமன ஆணையிலே அன்னாரின் கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து அரசுப் பணியாளர்களும் தங்களது கல்விச் சான்றுகள், சாதிச் சான்று மற்றும் இதர ஆவணங்கள் மீது உண்மைத்தன்மை கண்டறிய வேண்டும் என்பது அவசியமானது என்ற விவரம் திருப்பூர் முதன்மைக்கல்வி அலுவலரின் ந.க.எண். 7547/ இ3/ 2021 நாள். 15.09.2021- இன்படி மனுதாரருக்கு தெரிவிக்கலாகிறது.

Sunday, September 19, 2021

September 19, 2021

WhatsAppல் TNPSC குரூப் தேர்வுகளுக்கான நோட்ஸ் இலவசமாக பெறுவது எப்படி?

வாட்ஸ்அப்-ல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கான நோட்ஸ் - எப்படி பெறுவது?


அரசுப் பணித் தேர்வுக்கு தயாராவோருக்கு வாட்ஸ்அப்-ல் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அகாடமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது, ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தும் (Tnpsc) குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோவுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பாடத் திட்டத்தின்படி , சமச்சீா் பாடப் புத்தகங்களை தேர்வு நோக்கில் தொகுத்து, இந்த டி.என்.பி.எஸ்.சி பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது.


இதைப் பெற விரும்புவோர், தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


முன்பதிவு செய்த அனைவருக்கும் PDFவடிவில் பாடநூல் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அகாடமியை நேரிலோ, 91763 92791, 99439 46464 ஆகிய எண்களையோ அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, September 15, 2021

September 15, 2021

'மாணவர்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்' - விடியோவில் முதல்வர் உருக்கமான வேண்டுகோள்!

"நீட் தேர்வு அச்சத்தால் 3 மாணவ, மாணவியர் தற்கொலை செய்துகொண்டதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு பயத்தினால் மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ், அரியலூரைச் சேர்ந்த மாணவி கனிமொழியைத் தொடர்ந்து இன்று வேலூர் காட்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவி சௌந்தர்யா தற்கொலை செய்துகொண்டார்.


இதையடுத்து, மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'மாணவர்கள் மனம் தளர வேண்டாம், உங்களை கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன், ஈடில்லா உயிர்களை மாய்த்துக் கொள்ளாதீர்கள், நீட் எனும் அநீதியை ஒழிக்கும்வரை நாம் ஓயமாட்டோம்' என்று கூறி காணொலிக் காட்சி வாயிலாக மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


'உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது.


அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம்' என்று குறிப்பிட்டுள்ளார்" "விடியோவில் முதல்வர் பேசியதாவது:


கடந்த 2017-ஆண்டு செப்டம்பர் மாதம் மாணவி அனிதா இறந்த போது என்ன மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். சனிக்கிழமை சேலத்தைச் சேர்ந்த மாணவன் தனுஷ் தற்கொலை செய்து கொண்ட போதே, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்று மாணவச் செல்வங்களைக் கேட்டுக்கொண்டேன்.


ஆனால், நேற்று அரியலூர் மாவட்டத்தில் கனிமொழி என்ற மாணவியும், இன்றைக்கு வேலூர் மாவட்டத்தில் சவுந்தர்யா என்ற மாணவியும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் சுக்குநூறாக உடைந்துவிட்டேன். இப்போது எனக்கு இருக்கும் வேதனையைவிட, இனி இப்படியொரு துயரம் நடக்கக் கூடாது என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. அந்த அக்கறையோடுதான் உங்களிடம் பேசுகிறேன்.


பல தலைமுறைகளாக மறுக்கப்பட்டு வந்த கல்விக் கதவை, இழுத்து மூடும் செயல்தான் நீட் தேர்வைக் கொண்டு வந்தது. படிப்பதற்குத் தகுதி தேவையில்லை; படித்தால் தன்னால் தகுதி வந்து விடும். பல குளறுபடிகளைக் கொண்ட நீட் தேர்வு ஏழை – எளிய மாணவர்களுடைய கல்விக் கனவை நாசமாக்கக்கூடியது என்றுதான், தி.மு.கழகம் இந்த அநீதி தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியது; அதுக்கு முன்னால் நாம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும் நடத்தவிடவில்லை. ஆனாலும், சிலர் தங்களுடைய சுயலாபத்துக்காக, இந்தத் தேர்வைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தார்கள். சிலர் இப்போதும் இந்த அநீதி தொடர வேண்டும் என்று பல பொய்யான பரப்புரைகள் செய்கிறார்கள்.


மருத்துவம் படிக்க வேண்டும் - டாக்டர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருப்பவர்களின் கனவைச் சிதைக்கக் கூடியதாக நீட் தேர்வு முறை இருக்கிறது.


ஆனால், மத்திய அரசு, இதில் இருந்து விலக்களிக்க இன்னும் இறங்கி வராமல் கல்நெஞ்சோடு இருக்கிறது.


கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசு, நீட் தேர்வு குறித்து விசாரிக்க ஒரு ஆணையத்தை அமைத்தது. அந்த ஆணையத்திடம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்தார்கள். ஒரு சிலரைத் தவிர எல்லோருமே நீட் தேர்வை எதிர்த்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில நீட் தேர்வு வேண்டாம் என்று அந்த ஆணையமும் அறிக்கை அளித்தது.


அதை அடிப்படையாக வைத்து, நீட் தேர்வை ரத்து செய்வதற்கான தனி மசோதாவை, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் தாக்கல் செய்தேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக இதனை நிறைவேற்றி இருக்கிறோம். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை பல்வேறு மாநில அரசுகளின் கவனத்திற்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். இறுதியாக நீட் தேர்வை ரத்து செய்யும் நிலையை நிச்சயம் ஏற்படுத்துவோம். இந்தச் சூழலில் மருத்துவம் படிக்க முடியவில்லையே - நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லையே என்ற ஏக்கம் காரணமாக உயிரை மாய்த்துக்கொள்ளும் செய்தி என் நெஞ்சில் ஈட்டியைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.


உங்களுடைய உயிர், விலைமதிப்பு இல்லாதது. உங்கள் உயிர், உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கும் முக்கியமானது. உங்களுடைய எதிர்காலத்தில்தான் இந்த நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. அத்தகைய மதிப்பு வாய்ந்த உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடிக் கேட்கிறேன்.


உங்களால் மருத்துவர்கள் ஆக முடியும். உங்களால் நினைத்ததை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்ட முடியும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. அந்த தன்னம்பிக்கையோடு நீங்கள் அனைவரும் படிக்க வேண்டும். உங்கள் உயிரை மாய்த்து, உங்கள் பெற்றோருக்கு வாழ்க்கை முழுவதும் துன்பத்தை ஏற்படுத்தாதீர்கள்.


கல்வியில் மட்டுமல்ல - தன்னம்பிக்கையிலும் தலைசிறந்த மனிதர்களாக வளர வேண்டும். பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளைக் கல்வியில் மட்டுமின்றி, தன்னம்பிக்கையும் கொண்ட மனிதர்களாக வளர்க்க வேண்டும். இதுதான் விதி என்று எதுவுமில்லை. விதியை மதியால் வெல்ல முடியும்.


முயற்சிதான் வெற்றியைத் தரும் என்றார் திருவள்ளுவர். அத்தகைய துணிச்சலும் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக, நமது மாணவ, மாணவிகள் வளர வேண்டும், வாழ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.


நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் சொல்வதற்காக அரசு சார்பில் 104 என்ற தொலைபேசி எண்ணை உருவாக்கிக் கொடுத்துள்ளோம். மாணவ மாணவியர்க்கு ஆலோசனை சொல்வதற்காக மனநல மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள்.


உடல் நலன் - உள்ள நலன் கொண்டவர்களாக நமது மாணவச் செல்வங்களை வளர்த்தெடுத்தாக வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு அளவுக்கு மீறிய அழுத்தங்கள் தர வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.


ஆசிரியர்கள், சமூக சேவை செய்வோர், திரைத்துறையினர் ஆகியோர் மாணவச் செல்வங்களுக்கு தன்னம்பிக்கை விதை விதைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


தயவு செய்து - தயவு செய்து – மாணவச் செல்வங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். வாழ்ந்து போராடுவோம். வாழ்ந்து வென்று காட்டுவோம் என்று பேசியுள்ளார். "

Saturday, September 11, 2021

September 11, 2021

BREAKINGNEWS - 10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

10, 11ம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி!

கொரோனா காரணமாக தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

Sunday, August 01, 2021

August 01, 2021

அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவு - செய்தி வெளியீடு எண்: 542 - நாள்: 01.08.2021

செய்தி வெளியீடு எண்: 542
செய்தி வெளியீடு
நாள்: 01.08.2021
விவசாயிகள் மற்றும் துறை வல்லுநர்கள் பல்வேறு சங்கப் பிரநிதிகளை கலந்தாலோசித்து மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் பயன்தரத் தக்க வகையில் இவ்வாண்டு நிதி நிலை அறிக்கையும் விவசாயத் துறைக்கான முதல் தனி நிதிநிலை அறிக்கையும் அமைய வேண்டும் - மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தல்.

திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, தமிழ்நாடு அரசு இவ்வாண்டு இரண்டு நிதிநிலை அறிக்கைகளை சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்ய உள்ளது. தமிழ்நாடு அரசு வரலாற்றில் முதன்முறையாக வழக்கமான நிதிநிலை அறிக்கையோடு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை சார்பாக தனியே ஒரு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண்மை மற்றும் அறிக்கையினை விவசாயிகள், சங்கங்கள் ஆகியோரை விவசாயிகள் நலத்துறை நிதிநிலை விவசாய நிபுணர்கள் மற்றும் விவசாய கலந்தாலோசித்து விவசாயம் செழிக்கவும் விவசாயிகள் அவர்களது உழைப்பிற்கேற்ற உரிய பயன்களைப் பெறும் வகையில் சிறந்த திட்டங்களை உள்ளடக்கி தயாரிக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.

மேலும், பொது நிதிநிலை அறிக்கையினை பொருளாதார மற்றும் நிதிநிலை வல்லுநர்கள், பெருந் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புபிரதிநிதிகள், தொழிலதிபர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள். மீனவர் பிரதிநிதிகள் ஆகியோரை வாழ்வில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் கலந்தாலோசித்து நிதிநிலை அறிக்கையினை தயாரிக்க மாண்புமிகு அமைச்சர் பெருமக்களையும் அரசு உயர் அலுவலர்களையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.
August 01, 2021

தமிழகத்தில் முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு – முதல்வர் கடிதம்!

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதுகலை மருத்துவ கல்வி:

முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் இதுவரை மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநில அரசுகளின் ஒதுக்கீடு முறையை மத்திய அரசு ரத்து வகையில், இனி நாடு முழுவதும் முதுகலை மருத்துவ படிப்பில் மத்திய அரசின் ஒதுக்கீடு முறைப்படியே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு இன்று புதிதாக முதுகலை மருத்துவ கல்வி வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, 2021 மாணவர் சேர்க்கை தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில், நாடு முழுவதுக்குமான மாநில அரசின் இடங்களுக்கும் ஒன்றிய அரசே மாணவர் சேர்க்கை நடத்தும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக மத்திய அரசின் மருத்துவத்துறை தலைமை இயக்குனருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மாநில அரசுகளின் ஒதுக்கீட்டின் கீழ் முதுகலை மருத்துவ சேர்க்கையில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழக அரசு உறுதியான எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Total Pageviews

Search This Blog