Breaking

Showing posts with label Engineer Job. Show all posts
Showing posts with label Engineer Job. Show all posts

Friday, June 30, 2023

Monday, August 22, 2022

August 22, 2022

இளநிலை பொறியாளா் பணி தோ்வு - விண்ணப்பங்கள் வரவேற்பு!

இளநிலை பொறியாளா் பணிக்கு நடத்தப்படும் தோ்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பணியாளா் தோ்வாணையம்-கா்நாடகம், கேரள மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பணியாளா் தோ்வாணையம் இளநிலை பொறியாளா் (கட்டுமானம், இயந்திரவியல், மின்சாரவியல், அளவையியல் மற்றும் குத்தகை) பணியிடங்களுக்கு நாடுமுழுவதும் 2022-ஆம் ஆண்டு நவம்பரில் இணையவழி அடிப்படையிலான திறந்தநிலை தோ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க விரும்புவோரிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்தோ்வுக்கு இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

இணையதளத்தில் விண்ணப்பங்களை செலுத்தலாம். இணையவழி அடிப்படையிலான எழுத்துத்தோ்வு 2 மணிநேரம் நடக்கும். இத்தோ்வை எழுதுவதற்கு ஆா்வமுள்ள 2022-ஆம் ஆண்டு ஜன.1-ஆம் தேதி அன்று பட்டப்படிப்பு படித்துள்ள 25 முதல் 32 வயதுக்குட்பட்டோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தோ்வு நடைமுறை, பாடத்திட்டங்கள், இதர விவரங்களை அறிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையின் 9,10-ஆவது பத்திகளில் காணலாம். கா்நாடகம் மற்றும் கேரள மண்டல அலுவலகத்திற்கு உட்பட்டபகுதிகளில் இருந்து விண்ணப்பங்களை செப்.2-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இடஒதுக்கீடுக்கு தகுதியான எஸ்சி, எஸ்சி, முன்னாள் ராணுவ வீரா்கள் பிரிவைச் சோ்ந்த பெண்களுக்கு கல்விக்கட்டணம் விலக்களிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 080-25502520, 9483862020 ஆகிய தொலைபேசி எண்களை அழைக்கலாம் அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog