Education Loans
September 19, 2025
Showing posts with label Education Loans. Show all posts

Friday, September 19, 2025
Tuesday, August 19, 2025
Tuesday, May 27, 2025
Sunday, April 06, 2025
Tuesday, February 04, 2025
Wednesday, August 28, 2024
Tuesday, April 23, 2024
Friday, November 24, 2023
Loan
November 24, 2023
கல்விக் கடன் மானிய தொகை செலுத்த மத்திய அரசு தாமதம் - மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை
Central govt delay in payment of education loan subsidy - Increase in interest burden on students - Judge Angam
“கல்விக் கடன் மானிய தொகையில் தாமதம் கூடாது"
கல்விக் கடனுக்கான மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மத்திய அரசு மானியம் செலுத்த தாமதிப்பதால் மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை
திருச்சி மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் தொடங்க வழக்கில் நீதிபதி உத்தரவு
கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!
கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவர் வெங்கட்ராமன் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக்கடன் வட்டியாக சேர்க்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மாணவர் கல்விக் கடன் விவகாரத்தில் உரிய மானிய தொகையை செலுத்த, அறிவுரை வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

Saturday, November 18, 2023
Loan
November 18, 2023
சென்னையில் இன்று கல்விக்கடன் சிறப்பு முகாம்

சென்னை லயோலா கல்லூரியில் (நவ.18) தமிழக அரசின் சார்பில் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசும், வங்கிகளும் இணைந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் கல்விக்கடன் வழங்குவதற்கான சிறப்பு முகாம்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட மாணவர்களுக்காக லயோலா கல்லூரியில் நவ.18-ம் தேதி மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
கல்விக்கடன் விண்ணப்பம், தேவையான வருமானச் சான்றிதழ், விண்ணப்பம் மற்றும் பான்கார்டு ஆகியவை இ-சேவை மையம் மூலம் முகாமிலேயே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ, மாணவியரும், பெற்றோரும் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Thursday, March 23, 2023
SCHOLARSHIP
March 23, 2023
கல்வி உதவித்தொகை - அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்
Scholarship – Students can open account with Post Office -
அஞ்சல்துறையில் மாணவர்கள் கணக்குத் தொடங்கலாம்
சென்னை: கல்வி உதவித்தொகையை பெறும் மாணவ, மாணவிகள் அஞ்சல்துறையின் வங்கிக் கணக்கை மாா்ச் 25-ஆம் தேதிக்குள் தொடங்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்த ஜோதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் வழங்கப்படும் கல்வி உதவி தொகையை பெறும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக , அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் அந்தந்தப் பள்ளிகளில் வங்கிக் கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து கடந்த 10 நாள்களாக பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இதன் மூலம் 2,894 மாணவ, மாணவிகளுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 18,850 மாணவ, மாணவிகளுக்கு மாா்ச் 25-ஆம் தேதிக்குள் ஆதாா் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்படவுள்ளது. இதனால், பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மட்டுமில்லாமல், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் உள்ள அலுவலரை அல்லது தபால்காரரை அணுகி இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை மாணவ, மாணவிகள் தொடங்கலாம்.
தபால்காரா்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் அலகு ஆகியவை மூலம் மாணவ, மாணவிகள் தங்கள் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணை பயன்படுத்தி, விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கை தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

Tuesday, March 21, 2023
Tamilnadu Government
March 21, 2023
அரசு ஊழியர்கள் வீடுகட்ட முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்வு

சென்னை, மார்ச் 20: தமிழகத்தில் அரசுப் பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன்பணம் ரூ.50 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரசுப் பணியாளர் கள், ஓய்வூதியதாரர்களின் நல னைப் பாதுகாப்பதில் அரசு மிகுந்த அக்கறையுடன் உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியி ருப்புகள் படிப்படியாக புதிதா கக் கட்டப்படும். வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமானச் செலவுக ளைக் கருத்தில் கொண்டு அர சுப் பணியாளர்களுக்கு வழங்கப் படும் வீடு கட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டி லிருந்து உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday, February 19, 2023
Getting an Educational Loan
February 19, 2023
கல்வி உதவித் தொகையில் மோசடி - 22 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

உத்தர பிரதேசத்தில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால் சில கல்வி நிறுவனங்கள் போலியான மாணவ, மாணவிகளின் பெயரில் உதவித் தொகையைப் பெற்று மோசடி செய்து வருவதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது.
இதைத் தொடர்ந்து உத்தர பிரதேச தலைநகர் லக்னோ உட்பட 22 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். லக்னோவில் உள்ள ஹைஜியா இன்ஸ்டிடியூட் ஆப் பார் மஸிக்கு சொந்தமான 3 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. லக்னோ, ஹர்டோய், பார பங்கி, பரூக்காபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் கல்வி நிலையங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உ.பி.யின் பல கல்வி நிறுவ னங்களில் சிறுபான்மையின மாணவ, மாணவியரின் கல்வி உதவித் தொகையில் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. முதல் கட்டவிசாரணையில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அதாவது 7 வயதுடைய குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு மோசடியாக பணம் பெறப் பட்டிருக்கிறது. கல்வி உதவித் தொகை மோசடி தொடர்பாக சுமார் 3,000 வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டுள்ளோம். அந்த வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினர்.

Saturday, November 05, 2022
Politicians
November 05, 2022
கல்விக்கடன் ரத்து எப்போது?
கல்விக்கடன் ரத்து எப்போது? - ஆர்.பி. உதயகுமார் கேள்வி
மாணவர்களின் கல்விக்கடன் எப்போது ரத்து செய்யப்படும் என திமுக அரசுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 'இளைஞர்களின் எதிர்காலத்தை நிலைநிறுத்துவது அரசின் கடமையாகும். திமுக தேர்தலின்போது 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தனர். அதில் மாணவர்கள் வாங்கிய கடன் ரத்து என்பதை அறிவித்தார்கள். ஓர் ஆண்டில் கல்விக்கடனை கட்ட முடியாமல் இருக்கும், 30 வயதுக்குள்ளான இளைஞர்களின் கல்விக்கடனை அரசே ஏற்கும் என்று திமுக தேர்தல் அறிக்கை அறிவித்தது, அது தற்போது கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது.
தமிழகத்தில் 6,74,066 மாணவர்கள் 17,193 கோடி அளவில் கல்விக் கடனை வாங்கி உள்ளார்கள். இந்த 18 மாத ஆட்சியில் 30 வயதுக்குட்பட்ட மாணவர்கள் வாங்கிய கடன் குறித்து அரசு விபரம் தெரிவிக்கப்படவில்லை, அது ரத்து செய்யப்பட்டதா ? எத்தனை நபர்களுக்கு கடன் ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்ற விவரம் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
அதேபோல் திமுக தேர்தல் அறிவிப்பில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளில் 50 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்படும் என்று கூறினார்கள். அதேபோல் அரசுத் துறையில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அறிவித்தார்கள். புதிதாக 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவித்தாகள். வேலையில்லா பட்டதாரிகளுக்கு குறுந்தொழில் தொடங்க 20 லட்சம் வரை கடன் வசதி வழங்கப்படும் என்றும் திமுக வாக்குறுதி கொடுத்தனர்.
ஆனால் இன்றைக்கு வாக்களித்து காத்துள்ள இளைஞர்களுக்கு ஏமாற்றம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு இன்றைக்கு எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, நடுத்தெருவில் நிற்கும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு வழங்க முன்வருமா, இது எல்லோர் மனதில் எழுந்துள்ள கேள்வி.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பிற்கு 1,50,533 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்ட நிலையில் தற்பொழுது இறுதி நிலையில் எட்டவுள்ள நிலையில் இதுவரை 95,032 இடங்கள்தான் நிரம்பியுள்ளன. நடப்பாண்டில் பொறியியல் கல்லூரியில் சுமார் 50,000 இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏன் இந்த நிலை இன்றைக்கு? உயர்கல்வியில் சேர்வதற்கு சிறந்த பள்ளியில் படித்து, உயர்ந்த மதிப்பெண்கள் மாணவர்கள் பெற்ற அறிவாற்றலை, உயர்கல்விலே தொடர்ந்து பெறுவதற்கு கல்விக் கடன் ரத்து என்ற திமுகவின் அறிவிப்பு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கின்ற காரணத்தினால், மாணவர்கள் கல்வி கடன் பெற முடியுமா, பெற முடியாதா, வங்கிகள் கடன் தர முன் வருவீர்களா? என்ற குழப்ப சூழ்நிலை உள்ளது.
திமுக அரசு இளைஞர்கள் வாழ்வை கேள்விக்குறியாக்கி உள்ளது. திமுகவின் வாக்குறுதிகள் இளைய சமுதாயத்திற்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. இதனால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் என்னாகும் என்ற அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.
ஆகவே , மாணவர்கள் கல்விக்கடன் உடனடியாக ரத்து செய்வதற்கு இந்த அரசு முன்வருமா என்று மாணவர்களால் 'ஆல்பாஸ் முதல்வர்' என்று பாராட்டு பெற்ற பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார். ஆகவே, இந்த கோரிக்கையை அரசு செயல்படுத்த முன்வருமா செயல்படுத்துமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.