Breaking

Showing posts with label Semester Exam. Show all posts
Showing posts with label Semester Exam. Show all posts

Wednesday, December 06, 2023

December 06, 2023

ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள் - மறுதேதி அறிவிப்பு



ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டர் தேர்வுகள். - மறுதேதி அறிவிப்பு.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெறும் - திருவள்ளுவர் பல்கலை. அறிவிப்பு

புயல் காரணமாக கடந்த 4, 5 தேதிகளில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

Thursday, November 17, 2022

November 17, 2022

அரசுக் கலை கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு எப்போது? - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

அரசு கலை கல்லூரிகளில் ரூ. 1,000 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள்

சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு வளாகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின்போது கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புதல், நிர்வாக ரீதியான சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து உயர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி கூறுகையில்: கலை கல்லூரிகளில் 25 சதவிகித இடம் கூடுதலாக கொடுக்கப்பட்டதன் விளைவாக 1,53,323 இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. அவற்றில் தற்போதுவரை 1,31,173 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதமுள்ள இடங்களில் மாணவர் சேர்க்கை 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி துணைவேந்தர்கள் உடனான ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீட்டில் அரசு கலை கல்லூரிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம். அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 14 கல்லூரிகளில் 7 கல்லூரிகளையும் நாங்கள் கட்டி வருகிறோம்.

*டிசம்பரில் செமஸ்டர் தேர்வு

அமைச்சர் பொன்முடி மேலும் கூறுகையில், ‘‘அரசுக் கலை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதால் முதலாம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு முதல் செமஸ்டர் தேர்வு ஆண்டு இறுதியில் தாமதமாக நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Thursday, November 03, 2022

November 03, 2022

பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லுாரி செமஸ்டர் தேர்வு அறிவிப்பு

டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக உயர் கல்வித் துறையின் அங்கீகாரம் பெற்று செயல்படும், 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த மாணவர்களுக்கு, ஆண்டுக்கு இரண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் செமஸ்டர் தேர்வு, இம்மாதம் 25ம் தேதி துவங்க உள்ளது. பல்வேறு பாட வாரியாக தினமும் தேர்வுகள் திட்டமிடப்பட்டு உள்ளன.

செய்முறை தேர்வுகள், டிச., 13ல் நடத்தப்படும். டிச., 17ல் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட உள்ளது. பின், ஜனவரி 2ல், மீண்டும் கல்லுாரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தேர்வுக்கான விரிவான அட்டவணை, வரும் 11ம் தேதி வெளியிடப்படும் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

Thursday, September 29, 2022

September 29, 2022

Anna University Semester Exam Results Released.. - அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு..

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு..!!

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியாகின

CLICK HERE Anna University Semester Exam Results

Wednesday, September 21, 2022

September 21, 2022

conduct of the First Semester Comprehensive Assessment Examination - 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம்

4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் தொடர்பாக திருச்சிராப்பள்ளி முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் சார்ந்த கடிதம் - Letter of Instruction to the District Education Officers regarding the conduct of the First Semester Comprehensive Assessment Examination for Class 4 and 5 students.

முதன்மைக் கல்வி அலுவலகம் திருச்சிராப்பள்ளி.

ந.க.எண். 08314 /ஆ4 /2022. நாள். 21.09.2022 (நகல் )தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

இணைப்பில் கண்டுள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுக்கான தேர்வினை நடத்திடுமாறு வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேலும் வினாத்தாட்கள் பள்ளிவாரியாக வட்டாரக்கல்வி அலுவலகங்களுக்கு 25.09.2022 அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.. க்குள் வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினந்தோறும் (26.09.200 முதல் 30.09.2022 வரை) அன்றைய நாட்களுக்குரிய வினாத்தாட்களை காலை 8.00 முதல் 9.00 மணிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்களிடம் குறுவளமைய ஆசிரியப் பயிற்றுநர்கள் அலுவலகப் பணியாளர்கள் வாயிலாக 10 முதல் 15 பள்ளிகளாக பிரித்து அந்தந்தப் பகுதிகளில் வழங்கிட ஏற்பாடு செய்திட வேண்டும்.

வினாத்தாள் கட்டுகளை ஒப்படைக்க வட்டாரக்கல்வி அலுலவர்கள் சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

விடைக்குறிப்புகள் 30.09.2022 அன்று வழங்கப்பட வேண்டும்.இப்பொருள் சார்பாக எவ்வித புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக தேர்வுகளை நடத்தி முடித்திட அனைத்து நிலை அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்க.ள்.

இணைப்பு - கடித நகல்

Thursday, April 28, 2022

April 28, 2022

தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும்

அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் வரும் மே மாதத்துக்கான செமஸ்டர் தேர்வு ஜூன் 1 முதல் 14 வரை நேரடி எழுத்துத்தேர்வாக நடைபெறும்.

Saturday, January 29, 2022

January 29, 2022

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம்

செமஸ்டர் தேர்வுகளுக்கு பதிவு செய்யாத மாணவர்களுக்கு புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது. இது குறித்து அண்ணா பல்கலைகழக தேர்வுகள் கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிக்கை: நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி பருவத்தேர்வுகளுக்கு பதிவு செய்ய தவறியவர்கள் https://coe1.annauniv.edu என்ற இணையதளம் சென்று இன்று இரவு 7 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இது குறித்து சந்தேகங்கள் இருப்பின் 044-22357272, 7307, 7303 ஆகிய தொலைப் பேசி எண்களுக்கு மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலும் நவம்பர், டிசம்பர் - 2021 பருவத் தேர்வுகளுக்கு ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog