Breaking

Showing posts with label Hall Ticket Issue for TNPSC Group 2. Show all posts
Showing posts with label Hall Ticket Issue for TNPSC Group 2. Show all posts

Thursday, February 16, 2023

February 16, 2023

TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு



TNPSC - குரூப் 2, 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

25.02.2023 முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (நேர்முகத் தேர்வு பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்) (தொகுதி-II & II ) எழுத்துத்தேர்விற்கான நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு (Press Release)

குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் காலியாக உள்ள சார்-பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தேர்வை டிஎன்பிஎஸ்சி வரும் பிப்ரவரி 25-ம் தேதி நடத்தவுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD

Sunday, November 27, 2022

November 27, 2022

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வனத்தொழில் பழகுநர் பதவிக்கான தேர்வு, ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

வனத் தொழில் பழகுநர் பதவிக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி 6) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு வருகிற 4ம் தேதி முற்பகல் தாள்-1 ஓஎம்ஆர் முறையிலும், தாள்-2, தாள்-3 கணினி வழித் தேர்வாகவும் வருகிற 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை முற்பகல் மற்றும் பிற்பகல், 11ம் தேதி முற்பகல் என 7 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (ஹால்டிக்கெட்) பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Friday, September 02, 2022

September 02, 2022

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

TNPSC - ஹால் டிக்கெட் வெளியீடு

இந்து அறநிலையத் துறை பதவிக்கான தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறையில் செயல் அலுவலர் நிலை - -4 பதவியில், 36 காலியிடங்களை நிரப்ப, வரும் 11ம் தேதி, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடத்தப் படுகிறது.இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

விண்ணப்பதாரர்கள் தங்களின் பயனாளர் பெயர் மற்றும் ரகசிய எண்ணை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என, அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துஉள்ளது.

Wednesday, May 11, 2022

May 11, 2022

TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் tnpsc.gov.in இணையதளத்தில் வெளியீடு

தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று TNPSC அறிவிப்பு.

வரும் 21-ம் தேதி நடைபெறும் குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் கட்டாயம்

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி

தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்

அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும்.

Total Pageviews

Search This Blog