Breaking

Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts

Thursday, January 18, 2024

January 18, 2024

பிரதமர் மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!



செய்தி வெளியீடு எண்.71/01/2024

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்

បង់क्रीीक नही - 18.01.2024

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் 19.01.2024 அன்று நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் "கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு" தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். இதில் மாண்புமிகு தமிழக ஆளுநர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழகத்தைச் சேர்ந்த மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் சென்னை வருகையின் போது விழா நடைபெறும் இடங்களைச் சுற்றியுள்ள சாலைகள், ஐஎன்எஸ் அடையாறு முதல் நேரு வெளி விளையாட்டு அரங்கம், நேரு உள் விளையாட்டு அரங்கம் முதல் ராஜ்பவன் வரை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக சாலைப் பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை, தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை போக்குவரத்து சிறிதளவு நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் வணிக வாகனங்களுக்கு மதியம் 3 மணி முதல் மாலை 8 மணி வரை இடையே மாற்று வழிதடங்களில் செல்ல கீழ்கண்டவாறு நடைமுறைபடுத்தப்படும். அண்ணா Arch முதல் முத்துசாமி சாலை சந்திப்பு வரை இரு திசைகளிலும் வணிக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படாது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் அண்ணா Arch-ல் திரும்பி அண்ணா நகர் வழியாக புதிய ஆவடி சாலையில் திருப்பி விடப்படும். வட சென்னையில் இருந்து பாரிமுனை நோக்கி வரும் வாகனங்கள் என்.ஆர்.டி புதிய பாலத்தில் இருந்து திருப்பி விடப்பட்டு ஸ்டான்லி சுற்றி மின்ட் சந்திப்பு. மூலக்கொத்தளம் சந்திப்பு, பேசின் பிரிட்ஜ் டாப் மற்றும் வியாசர்பாடி வழியாக திருப்பி விடப்படும்.

ஹண்டர்ஸ் சாலையில் இருந்து வரும் வணிக வாகனங்கள் ஹன்டர்ஸ் ரோடு ஈ.வி.கே சம்பத் சாலை வழியாக ஈவிஆர் சாலையை நோக்கி திருப்பி விடப்பட்டு நாயர் பாயிண்ட்(டாக்டர் அழகப்பா சாலை X ஈவிஆர் சாலையை சந்திப்பு) வழியாக சென்றடையலாம்.

எனவே வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Wednesday, April 05, 2023

April 05, 2023

இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்

இந்தியாவிலேயே முதலிடம்; உலக அளவில் 13-ம் இடம்: மிளிரும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் - First in India; 13th in the world: The glittering Chennai Institute of Hotel Management

சென்னை தரமணியில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் எனும் மத்திய அரசு நிறுவனம், 'விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது; சர்வதேச அளவில் 13-வது இடம் பிடித்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிர்வாகக் குழு தலைவரும், தமிழக அரசின் முதன்மைச் செயலருமான சந்திர மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் வருமாறு: ''மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி கல்வி நிறுவனமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம், 1963ல் இருந்து செயல்பட்டு வருகிறது. உலகத்தரத்திலான விருந்தோம்பல் கல்வியை வழங்குவதன் 60-ம் ஆண்டை இந்நிறுவனம் கொண்டாடி வருகிறது.

இந்நிறுவனத்தின் சார்பில் 3 வருட B.Sc. Hospitality and Hotel Administration படிப்பும், 2 வருட M.Sc. Hospitality Administration படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது. அதோடு, ஒன்றரை ஆண்டுகள் டிப்ளமோ படிப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இங்கு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் வளாக நேர்காணல்கள் வாயிலாக 100 சதவீத வேலைவாய்ப்பை இந்நிறுவனம் பெற்றுத் தருகிறது.

இந்நிலையில், இந்நிறுவனம் தர நிலையில் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. அமெரிக்காவின் CEOWORLD MAGAZINE இதனை தெரிவித்துள்ளது. தகுதி தேர்வு, தேர்வு பெற்றவர்களின் கருத்துக்கள், பணியாளர்களின் கருத்துகள், வேலைவாய்ப்பபை பெற்றுத் தரும் விகிதம், சர்வதேச நிறுவனங்களுடன் உள்ள தொடர்பு உள்பட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை கல்வி நிறுவனங்களை CEOWORLD MAGAZINE நிறுவனம் தர வரிசைப்படுத்தி உள்ளது. அதன்படி, இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் இந்திய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 13வது இடத்தையும் பிடித்துள்ளது. இதற்கு முன்பாக, இந்நிறுவனம் 2017ல் சர்வதேச அளவில் 34வது இடத்தையும், 2018ல் 28வது இடத்தையும், 2019ல் 24வது இடத்தையும், 2020ல் 22வது இடத்தையும், 2021ல் 18வது இடத்தையும், 2022ல் 14வது இடத்தையும் பிடித்தது. நிறுவனத்தின் தரம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை CEOWORLD MAGAZINE உறுதிப்படுத்தி இருக்கிறது. உலக அளவில் முதல் 15 இடங்களைப் பெற்றுள்ள ஒரே இந்திய நிறுவனமாக இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி மற்றும் அப்ளைடு நியூட்ரிஷன் நிறுவனம் விளங்குகிறது.

இந்நிறுவனத்தின் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு மூலமாகவே நடைபெறுகிறது. இந்நிறுவனத்தில் சேர விரும்புபவர்கள் https://nchmjee.nta.nic.in என்ற இணையளத்தின் மூலம் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.''

Friday, August 19, 2022

August 19, 2022

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர் 4 ல் சென்னையில் நடைபெறுகிறது - முதல்வர் கலந்துகொள்கிறார் - வைக்கப்படும் கோரிக்கைகள்

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

ஜாக்டா ஜியோ மாநாடு செப்டம்பர்4 இல் சென்னையில் நடைபெறுகிறது.முதல்வர் கலந்துகொள்கிறார்.

தமிழக முதல்வர் அவர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்

1) CPS ரத்து செய்ய வேண்டும்.. பழைய ஓய்வூதியத்-திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

2)அரசாணை 101,108 ரத்து செய்ய வேண்டும்

(தொடக்கக் கல்வித் துறை தனியாக செயல்படுத்தல் ) ஆணையர் பதவி ரத்து செய்ய வேண்டும்

3) ஒப்படைப்பு மீண்டும் வழங்குதல்

4)மேற்படிப்புகளுக்கான ஊக்கஊதியம் மீண்டும் செயல்படுத்த வேண்டும்

5)இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைதல் வேண்டும்

6) 1.1.2022 முதல் D.A வழங்க வேண்டும்

7) ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்

8) Emis - இணையதளத்தினால் ஏற்படும் சுமைகளை குறைத்தல்

9) 2004-2005 - ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை பணி நியமன செய்யப்பட்ட நாள் முதல் பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.

10) உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு TET தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் .

11) ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்

12) பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்

Total Pageviews

Search This Blog