Manarkkeni
April 20, 2024
Showing posts with label Manarkeni App. Show all posts
Showing posts with label Manarkeni App. Show all posts
Saturday, April 20, 2024
Wednesday, April 17, 2024
Wednesday, July 26, 2023
Manarkkeni
July 26, 2023
மேல்நிலைப் பள்ளியில் கற்போருக்கான புதிய செயலி அறிமுகம்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் உறுதி
மேல்நிலைப் பள்ளியில் கற்போருக்கான புதிய செயலி அறிமுகம்: மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் உறுதி
தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கற்போருக்கான புதிய செயலி - மணற்கேணி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் செயலி மூலம் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என அமைச்சர் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். மணற்கேணி’ என்ற பெயரில் கற்போருக்கான புதிய செயலியை, தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி வெளியீட்டு நிகழ்ச்சி, தாம்பரத்தை அடுத்த சேலையூர், தாம்பரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், நேற்று நடைபெற்றது.
மணற்கேணி - கற்போருக்கான செயலியை, யு.என்.சி.சி.டி., துணை பொது செயலர் மற்றும் நிர்வாக செயலருமான இப்ராஹிம் தயாவ் வெளியிட்டார். நிகழ்ச்சியில், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தாம்பரம் எம்எல்ஏ ராஜா, பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே காணொலி பாடங்கள் கிட்டும் என்ற நிலையை போக்கி அவற்றை அனைவருக்குமானதாக மாற்றும் நோக்கத்திலேயே இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காணொலி முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு, கற்போரின் புரிதல் திறனை சரிபார்க்கும் வசதியும் உள்ளது. மேலும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்வதற்கும், எதையும் விட்டு விடாமல் படிப்பதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இச்செயலி இலவசமாக வழங்கப்படுகிறது. இச்செயலியை, ப்ளே ஸ்டோரில்’ எந்த தடையும் இன்றி, எளிதாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தற்போது, பிளஸ் 2 முதல் பருவத்துக்கான பாடங்களோடு இச்செயலி வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வகுப்புக்கும், காணொலிகளும், கேள்விகளும் தயாராக தயாராக இச்செயலில் பதிவேற்றம் செய்யப்படும். தமிழகத்தில் மட்டுமின்றி உலகத்தில் எந்த இடத்தில் உள்ள தமிழர்களும், இச்செயலியை பயன்படுத்தலாம். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கி அளித்துள்ள காணொலிகள் இச்செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மணற்கேணி செயலி வாயிலாக ஆசிரியர்கள் கற்பிப்பதன் மூலம் வருங்காலங்களில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்கும் என்றார். பின்னர் மணற்கேணி செயலியை தொடங்கி வைத்த இப்ராஹிம் தயாவ் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
Tuesday, July 25, 2023
Manarkeni App
July 25, 2023
இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்
இந்தியாவிலேயே முதல்முறை.. 'மணற்கேணி' ஆப்.. மாணவர்களே வரப்பிரசாதம்.. இன்று தமிழகத்தில் அறிமுகம்
நாட்டிலேயே முதல்முறையாக காணொலி வடிவில் பாடங்களை அளிக்கும், 'மணற்கேணி' என்ற செயலி இன்று தமிழ்நாட்டில் (25ம் தேதி) அறிமுகப்படுத்த உள்ளது.அதுவும் தாம்பரத்தில் உள்ள அரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: "நாட்டிலேயே முதன்முறையாக பாடங்களை காணொலி வடிவத்தில் தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.
நம் கல்வி முறையில் உயர்தரமான டிஜிட்டல் பாடங்களை உருவாக்கவும், இருப்பில் வைக்கவும், வகுப்பறைகளை மேலும் மேம்படுத்தவும் சுவாரஸ்யமானதாக மாற்றவுமே காணொலிப் பாடங்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்த இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பயிலும் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பாடங்களை 27,000 கருப்பொருள்களாக வகுப்புகள் தாண்டி வகை பிரித்து அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்களை உருவாக்கி அளித்திருக்கிறது பள்ளிக் கல்வித் துறை.
நாட்டிலேயே ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி இருக்கும் இத்தகைய செயலி இதுவே முதல் முறை.
இந்தச் செயலியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் அதில் உள்ள பாடப்பொருட்களின் துணைக்கொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய செயலி வெளியீட்டு விழா தாம்பரம் பெருநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நாளை 25.07.2023, செவ்வாய்க் கிழமை அன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த வெளியீட்டு விழாவில் uncco துணை பொதுச்செயலாளர்/நிர்வாக பொதுச்செயலாளர் இப்ராகிம் தயாவ் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்று விழாப் பேருரை ஆற்ற இருக்கிறார்கள்.
இதையும் படிக்க | TNSED Manarkeni Learning App - ன் மாபெரும் தொடக்க விழா - நேரலை
