language courses
March 01, 2026
Showing posts with label KVS. Show all posts

Sunday, March 01, 2026
Monday, March 24, 2025
Tuesday, February 18, 2025
Saturday, December 07, 2024
Monday, April 01, 2024
Tuesday, August 08, 2023
KVS
August 08, 2023
கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டம்?
K.V. Plan to bring back reservation for MPs in schools? - கே.வி. பள்ளிகளில் எம்.பி.களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டு வரும் திட்டம்?
கே.வி. பள்ளிகளில் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டுக்கு நோ!
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கையில், எம்.பி.க்களுக்கான இடஒதுக்கீடு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் எண்ணம் இல்லை என | மக்களவையில் இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி தகவல்
788 எம்.பி.க்களின் பரிந்துரையில், 7800 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டை ரத்து செய்தது; அதிக மாணவர்கள் சேர்க்கப்பட்டதால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக அரசு விளக்கம்
கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்கள் உள்ளிட்டோருக்கு இருந்து வந்த ஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த ஆண்டு ரத்து செய்தது. இதன் மூலம் மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இப்பள்ளிகளில் 40,000 மாணவர் இடங்கள் காலியாகின.
ஏற்கெனவே ஒரு கேந்த்ரீய வித்யாலயா பள்ளிக்கு எம்.பி.க்களால் தலா பத்து குழந்தைகளைப் பரிந்துரைக்க முடியும் என்ற நிலை இருந்தது. ஒரு மாவட்ட ஆட்சியரால் ஒரு பள்ளிக்கு 17 குழந்தைகள் வரை பரிந்துரைக்க முடிந்தது. இந்நிலையில் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் படிப்பதற்கு குழந்தைகளைப் பரிந்துரைக்கும் சலுகை எம்.பி.க்களுக்கு மீண்டும் வழங்கப்படுமா? என்று மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னபூர்ணா தேவி திங்கள்கிழமை கூறியதாவது:
கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை புதுப்பிக்கும் திட்டம் இல்லை. பாதுகாப்புப் படையினர், ஊர்க்காவல் படையினர், மத்திய தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியிட மாறுதலுக்கு வாய்ப்புள்ள பணிகளில் இருப்போரின் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. எம்.பி.க்கள் உள்ளிட்டோரின் பரிந்துரைகள் மூலம் இப்பள்ளிகளில் மாணவர்களைச் சேர்ப்பதால் அங்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட 40 சதவீத கூடுதல் மாணவர்கள் படிக்கும் நிலை தோன்றுகிறது. இதனால் அங்கு கற்றல் பாதிக்கப்பட்டு வந்தது என்று அவர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 1200க்கும் மேற்பட்ட கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகல் உள்ளன. அவற்றில் 14.35 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.
முன்னதாக, மக்களவை எம்.பி.க்கள் 543 பேர், மாநிலங்களவை எம்.பி.க்க்ள் 245 பேர் மூலம் கேந்த்ரீய வித்யாலயா பள்ளிகளில் படிப்பதற்கு 7,880 மாணவர்கள் வரை பரிந்துரைக்கப்பட்டு வந்தனர்
Thursday, July 20, 2023
Wednesday, July 12, 2023
Tuesday, July 04, 2023
Saturday, May 20, 2023
Friday, March 31, 2023
KVS
March 31, 2023
மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி?

இந்தியா முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 2023 - 24 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை மார்ச் 27 முதல் துவங்கியுள்ளது. இது ஏப்ரல் 17 மாலை 7 மணியுடன் முடிவடையும். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் யார் யாருக்கு இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை, எப்படி சீட் பெறுவது என பார்ப்போம்.
சிவில் மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் கேந்திர வித்யாலா பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவர்.
இது தவிர பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிப்பர். பிறகு அனைத்து பிரிவு குழந்தைகளும் இந்த படிநிலையில் வருவர். பொதுத் துறை நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்களின் கீழ் வரும் கே.வி.,க்களில் அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்ந்து ஊழியர்களின் பேரக்குழந்தைகளுக்கு, ஓய்வு பெற்ற ஊழியரின் குழந்தை அல்லது பேரக்குழந்தைக்கு என்ற வரிசையில் முன்னுரிமை அளிப்பர். அதன் பின்னர் அனைத்து வகையினரும் இதில் வருவர். இவை தவிர சிறப்பு விதிகளின் கீழ் வகுப்பின் அளவைக் காட்டிலும் குறிப்பிட்ட குழந்தைகள் கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்படுவர். பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள கேவிக்களுக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படையினர் 6 பேரை பரிந்துரைக்கலாம். ஆனால் அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பினராக இருக்கக் கூடாது.
மேலும் கேந்திர வித்யாலா சங்கதன் ஊழியர்களின் பிள்ளைகள், பரம்வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா போன்ற விருது பெற்றவர்களின் குழந்தைகள், ஜனாதிபதி போலீஸ் மெடல் பெற்றவர்களின் பிள்ளைகள், மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கவுட்டில் ராஷ்டிரபதி புரஸ்கர் விருது பெற்ற மாணவர்கள், கோவிட்டால் பெற்றோரை இழந்து பிஎம் கேர்ஸில் பதிவு செய்த பிள்ளைகள், ஒரே ஒரு பெண் குழந்தை ஆகியோர் சிறப்பு விதியின் கீழ் வருவர்.
தகுதி என்ன வேண்டும்
தற்போது முதல் வகுப்புக்கான அட்மிஷன் ஆரம்பமாகியுள்ளது. குழந்தைக்கு அந்த கல்வி ஆண்டில் கட்டாயம் 6 வயதாக இருக்க வேண்டும். ஏப்., 1 அன்று பிறந்த குழந்தையும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் எனில் பள்ளியின் முதல்வர் 2 ஆண்டுகள் வயதில் தளர்ச்சி வழங்குவார். அதாவது 8 வயதிலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
இடஒதுக்கீடு
எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு. 15% இடங்கள் எஸ்.சி., பிரிவினருக்கு, 7.5% எஸ்.டி., பிரிவினருக்கு, 27% இடங்கள்
ஓ.பி.சி., பிரிவினருக்கு என ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு உண்டு. விண்ணப்பிப்பது எப்படி?
https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இது முதல் வகுப்பிற்கான சேர்க்கைக்கு
மட்டுமே. 2 முதல் 9 வகுப்பினர் மற்றும் 11ம் வகுப்பினர் பள்ளி முதல்வரிடம் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
குழந்தையின் புகைப்படம்
முதல் வகுப்பில் சேர்க்கப்பட உள்ள குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள்.
சாதிச் சான்றிதழ், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சான்றிதழ்
மாற்றுத்திறனாளி எனில் அதற்கான மருத்துவச் சான்று
வசிப்பிடச் சான்று ஆகியவை கட்டாயம் சேர்க்கை வழி முறை
பொதுவாக கேவி பள்ளிக்களில் ஒரு வகுப்பில் 40 பிள்ளைகள் இருப்பர். அதன்படி ஆர்.டி.இ., எனும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 10 பேர், எஸ்.சி., பிரிவில் 6 பேர், எஸ்.டி., பிரிவில் 3 பேர், ஓபிசி., பிரிவில் 11 பேர் என சேர்க்கப்படுவார்கள்.
முதலில் லாட்டரி முறையில் ஆர்.டி.இ., சீட்டுகள் நிரப்பப்படும். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள், அரசு ஊழியர்கள் போன்ற முன்னுரிமையாளர்களுக்கான இடங்கள் நிரப்பப்படும். இவற்றிலும் எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி., இடஒதுக்கீடு பின்பற்றப்படும். அதன் பின்னர் நான்காவது லாட்டில் மீதமுள்ள சீட்டுகள் சாதிவாரி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.
விண்ணப்பதாரர் பள்ளிக்கு அருகே இருக்கிறாரா என்பதும் பார்க்கப்படும். நகர்ப்புறம் எனில் 5 கி.மீக்குள் இருந்தால் அருகே உள்ளதாக பொருள். பிற இடங்கள் எனில் 8 கி.மீ., இருந்தால் அருகே இருப்பதாகப் பொருள்.
கட்டணம்
ஆர்.டி.இ., சட்டம் 2009ன் கீழ் விண்ணப்பித்து சீட் பெறுவோருக்கு கட்டணம் கிடையாது. புத்தகங்கள், யூனிபார்ம், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவற்றுக்கான பில்களை தந்தால் அப்பணமும் திருப்பி வழங்கப்படும். ஆர்.டி.இ., விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உங்களது நிறுவனம் கல்விக் கட்டணத்தை ஊதிய கட்டமைப்பில் சேர்த்திருக்கக் கூடாது.
மேற்கூறிய தகுதி மற்றும் ஆவணங்கள் இருந்தால், https://kvsonlineadmission.kvs.gov.in/index.html விண்ணப்பித்து சீட் பெறலாம்.

Sunday, March 26, 2023
KVS
March 26, 2023
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம் - Kendriya Vidyalaya Sangathan (HQs) New Delhi Admission Notice: 2023-24
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை: மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நிர்வகிக்கும் கேந்திரிய வித்யாலயா சங்கதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
ஆன்லைனில் விண்ணப்பம்: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.
மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும். மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும்அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைவிண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 1. Online Registration for Admission to Class-I in Kendriya Vidyalayas for the Academic Year 2023-24 will commence at 10:00 am on 27.03.2023 and will close at 07:00 pm on 17.04.2023. The Admission details are available on website https://kvsonlineadmission.kvs.gov.in and Android MobileApp.
2. Minimum age for admission in class-I will be 6 years. Reckoning of age for all Classes shall be as on 31.03.2023. Reservation of seats will be as per KVS Admission Guidelines 2023-24 available on the Website (https://kvsangathan.nic.in)
3. The official Android Mobile App for KVS Online Admission for Class-I for the Academic Year 2023-24 and instructions for downloading and installing the App will be available at https://kvsonlineadmission.kvs.gov.in/apps/. The app will be available at the above URL and also at Google Play Store. Parents are requested to go through the instructions for using the portal and mobile app carefully before using them.
4. Registration for Class II and above will be started from 03.04.2023 (Monday) at 08:00 am to 12.04.2023 (Wednesday) upto 04:00 pm if vacancies exist in offline mode only. The duly filled up form needs to be submitted to the office of the Principal in the respective KV. 5. All information regarding Admission & Registration forms for Class-II and above are available in the Vidyalaya Websites and registrations can be done as per the Schedule for Admission -2023-24.
6. Registration for Class-II and above will be accepted only if vacancy exists in the respective KV.
7. Admission will not be granted, if wrong and misleading information in the application form is found at the time of scrutiny by the KV.
8. Contact Principal/Admission In-charge only when called in the given time slot.
Thursday, March 09, 2023
KVS
March 09, 2023
கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு - PDF
கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் பணிக்கான நேர்காணல் அறிவிப்பு ( விண்ணப்ப படிவம், விண்ணப்பிக்கும் முறை இணைப்பு )
கேந்திர வித்யாலயா பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு வருகின்ற 17.03.2023 & 20.03.2023 தேதியில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள கேந்திர வித்யா பள்ளியில் நேர்காணல் நடைபெறுகின்றது.
Part - Time Teachers & Staff on Contractual basis ( Purely on temporary ) for the session 2023-24 for KENDRIYA VIDYALAYA CUTN , THIRUVARUR.
Interested and eligible candidates can appear for Walk - in - interview with duly filled in Registration form , a set of Xerox copies of qualifications , experiences with original certificates along with one recent passport size photograph. Without original certificates your candidature will not be considered for the selection.
Dear friends, the registration links, important instructions and application form is available in the above mentioned school website for appointment of contractual staff for 2023-24. Please go through it and register yourself for the same
Notifications - Download here

Friday, December 30, 2022
KVS
December 30, 2022
கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்கள் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் தன்னாட்சியாகச் செயல்படும் கேந்த்ரிய வித்யாலயாவில் 25 பிராந்திய அலுவலகங்கள் மற்றும் 1252 பள்ளிகள் செயல்படுகின்றன.
தற்போது அதில் உள்ள 13,404 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் முடிந்த நிலையில் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் பணியிடம் அதிகபட்ச வயது சம்பளம்
ASSISTANT COMMISSIONER 52 50 ரூ.78,800-2,09,200/-
PRINCIPAL 239 35 ரூ.78,800-2,09,200/-
VICE PRINCIPAL 203 35-45 ரூ.56,100-1,77,500/-
POST GRADUATE TEACHER 1409 40 ரூ.47,600-1,51,100/-
TRAINED GRADUATE TEACHER 3176 35 ரூ.44,900-1,42,400/-
LIBRARIAN 355 35 ரூ.44,900-1,42,400/-
PRIMARY TEACHER (MUSIC) 303 30 ரூ.35,400-1,12,400/-
FINANCE OFFICER 6 35 ரூ.44,900-1,42,400/-
ASSISTANT ENGINEEER (CIVIL) 02 35 ரூ. 44,900-1,42,400/-
ASSISTANT SECTION OFFICER 156 35 ரூ.35,400-1,12,400/-
HINDI TRANSLATOR 11 35 ரூ.35,400-1,12,400/-
SENIOR SECRETARIAT ASSISTANT 322 30 ரூ.25,500-81,100/-
JUNIOR SECRETARIAT ASSISTANT 702 27 ரூ.25,500-81,100/-
STENOGRAPHER GRADE - II 54 27 ரூ.19,900-63,200/-
PRIMARY TEACHER 6414 30 ரூ.35,400-1,12,400/-
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்குத் தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர். Assistant Section Officer, Senior Secretariat Assistant, Stenographer Grade-II மற்றும் Junior Secretariat Assistant பதவிகளுக்கு நேர்காணல் கிடையாது.
தேர்வு கட்டணம்:
பதவியின் பெயர் கட்டணம்
ASSISTANT COMMISSIONER ரூ.2,300/-
PRINCIPAL ரூ.2,300/-
VICE PRINCIPAL ரூ.2,300/-
POST GRADUATE TEACHER ரூ.1,500/-
TRAINED GRADUATE TEACHER ரூ.1,500/-
LIBRARIAN ரூ.1,500/-
PRIMARY TEACHER (MUSIC) ரூ.1,500/-
FINANCE OFFICER ரூ.1,500/-
ASSISTANT ENGINEEER (CIVIL) ரூ.1,500/-
ASSISTANT SECTION OFFICER ரூ.1,500/-
HINDI TRANSLATOR ரூ.1,500/-
SENIOR SECRETARIAT ASSISTANT ரூ.1,200/-
JUNIOR SECRETARIAT ASSISTANT ரூ.1,200/-
STENOGRAPHER GRADE - II ரூ.1,200/-
PRIMARY TEACHER ரூ.1,500/-
கல்வித்தகுதி:
பணியின் பெயர் மற்றும் கல்வித்தகுதி:
உதவி ஆணையர் பணி:
45% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். கல்வித்துறையில் முதல்வராக அல்லது தலைமை ஆசிரியராக சிபிசி 7வது நிலை 12வது சம்பளத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் அனுபவம் தேவை. மேலும் கணினி பற்றிய அறிவு தேவை.
பள்ளி முதல்வர்:
45% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். சிபிசி 7 வது நிலை 12வது சம்பளத்தில் முதல்வராக அல்லது துணை முதல்வர்/ உதவி கல்வி அலுவலராகச் சம்பள அளவு 10 படி பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது விரிவுரையாளராகச் சம்பள அளவு 8 படி பணிபுரிந்திருக்க வேண்டும் அல்லது சம்பள அளவு 7 மற்றும் 8 படி TGT மற்றும் PGT இணைத்து 15 வருட அனுபவம் தேவை. கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.
துணை பள்ளி முதல்வர்:
50% சதவீத மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி பெற்றிருக்க வேண்டும். துணை முதல்வராக 2 வருடப் பணி அனுபவம் தேவை. PGT அல்லது விரிவுரையாளராக 6 வருட அனுபவம் அல்லது PGT மற்றும் விரிவுரையாளர் இணைந்து 10 ஆண்டுகள் அனுபவம். கணினி உபயோகம் எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை ஆசிரியர் :
ஆங்கிலம், ஹிந்தி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், வணிகம், கணிதம், உயிரியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், உயிரி தொழில்நுட்பம் பிரிவுகளில் முதுகலை ஆசிரியர் பணிகள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
50% மதிப்பெண்களுடன் இரண்டு ஆண்டுகள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பாடப்பிரிவுக்கு ஏற்ற முதுகலைப் பட்டம் தேவை. மேலும் B.Ed அல்லது அதற்குத் தகுந்த டிகிரி தேவை. ஹிந்தி மற்றும் ஆங்கிலம் வழிக் கல்வியில் கற்பித்தல் திறன் வேண்டும். கணினி அறிவு எதிர்பார்க்கப்படுகிறது.
முதுகலை ஆசிரியர் : கணினி அறிவியல்
50% சதவீதம் மதிப்பெண்களுடன் B.E or B.Tech (Computer Science/ IT) அல்லது ஏதாவது பிரிவில் B.E or B.Tech மற்றும் கணினியில் முதுகலை டிப்ளமோ அல்லது M.Sc. (Computer Science)/ MCA அல்லது B.Sc. (Computer Science) / BCA அல்லது கணினியில் முதுகலை டிப்ளமோ மற்றும் முதுகலைப் பட்டம்.
அல்லது பி-லேவல் DOEACC மற்றும் முதுகலைப் பட்டம் அல்லது சி-லேவல் DOEACC மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் படிப்பு. மேலும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தேவை. B.Ed படிப்பு பதவி உயர்வுகளுக்கு உதவியாக இருக்கும்.
முதுகலை ஆசிரியர் : உயிர் தொழில்நுட்பம்
50% சதவீதம் மதிப்பெண்களுடன் Bio-Technology/Genetics/Micro Biology/Life Science/Bio-Science/Bio-Chemistry பிரிவுகளில் முதுகலைப்பட்டம்.ஹிந்தி மற்றும் ஆங்கிலம் தேவை.B.Ed படிப்பு பதவி உயர்வுகளுக்கு உதவியாக இருக்கும்.
தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்:
ஆங்கிலம், ஹிந்தி, சமூக அறிவியல், அறிவியல், சமஸ்கிருதம், கணிதம், உடற்கல்வி, கலைக்கல்வி, வேலை அனுபவம் பணிகள் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.
ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாட ஆசிரியர் பணிக்குக் குறிப்பிட்ட மொழி சார்ந்த இளங்கலை படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சமூக அறிவியல் பாட ஆசிரியருக்கு வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல் பாடங்கள் கொண்ட இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதில் வரலாறு மற்றும் புவியியல் கண்டிப்பாகத் தேவை.
அறிவியல் பாட ஆசிரியருக்கு தாவரவியல், விலங்கியல், வேதியியல் கொண்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணித ஆசிரியருக்குக் கணிதத்தில் இளங்கலை பட்டம் மற்றும் இயற்பியல், வேதியியல், எலக்டரானிக்ஸ், கணினி அறிவியல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
மேலும் B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CTET) Paper-II தேர்ச்சி, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் கற்பித்தல் திறன் தேவை.
உடற்கல்வி ஆசிரியருக்கு உடற்கல்வி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலைக்கல்வி ஆசிரியருக்கு Drawing and Painting/Sculpture/ Graphic Art போன்ற பிரிவில் 5 வருட டிப்ளமோ அல்லது இணைய டிகிரி.
வேலை அனுபவம் பிரிவு ஆசிரியருக்கு Electrical பிரிவில் 3 வருட டிப்ளமோ.Electrical அல்லது Electronics Engineering பாடத்தில் டிகிரி. மேலும் ஒரு வருட அனுபவம்.
நூலக அலுவலகர்:
Library Science பாடத்தில் இளங்கலைப் பட்டம் அல்லது 1 வருட டிப்ளமோ.
முதன்மை ஆசிரியர் (இசை):
50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இசையில் இளங்கலை பட்டம். டிப்ளமோ படித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கக் கூடாது.
நிதி அதிகாரி :
50% சதவீதத்துடன் B.Com மற்றும் 4 ஆண்டுகள் அனுபவம் அல்லது M.Com 3 வருட அனுபவம் அல்லது CA (Inter)/ICWA (Inter)/MBA (Finance)/PGDM (Finance) மற்றும் 2 வருட அனுபவம்.
உதவிப் பொறியாளர் (சிவில்):
Civil Engineering தேர்ச்சி மற்றும் 2 வருட அனுபவம் அல்லது 3 வருட டிப்ளமோ மற்றும் 5 வருட அனுபவம்.
உதவி பிரிவு அதிகாரி:
பட்டப்படிப்பு மற்றும் 3 வருட அனுபவம் தேவை.
இந்தி மொழிபெயர்ப்பாளர்:
ஹிந்தி மற்றும் ஆங்கிலம் கலந்த முதுகலைப்பட்டம் அல்லது டிப்ளமோ மற்றும் இரண்டு ஆண்டுகள் அனுபவம்.
மூத்த உதவி செயலாளர்:
பட்டப்படிப்பு மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.
ஸ்டெனோகிராஃபர் கிரேடு - II:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். திறன் தேர்வு நடைபெறும்.
ஜூனியர் உதவி செயலாளர்:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தேவை ஹிந்தி மொழி தேவை.
முதன்மை ஆசிரியர் :
50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 2 வருட டிப்ளமோ அல்லது 4 வருட டிகிரி மற்றும் Central Teacher Eligibility Test (Paper-I) தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://kvsangathan.nic.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023 இரவு 12 மணி வரை.
Friday, October 07, 2022
KVS
October 07, 2022
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு - Click Here To Download Application Form
கேந்திர வித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு- விண்ணப்பம் டவுன்லோடு செய்ய
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் எல்.கே.ஜி மாணவர் சேர்க்கை அறிவிப்பு
மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் கேந்திரவித்யாலயா பள்ளிகள் நாடு முழுதும் செயல்பட்டுவருகின்றது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது.
கேந்திரவித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஐந்திலிருந்து, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது.இதை தொடர்ந்து, ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி, மற்றும் யு.கே.ஜி வகுப்புகள், ‘பால்வாடிகா’ என்ற பெயரில், கே.வி பள்ளியில் துவங்கப்படுகிறது.
👉பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும்,
👉பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும்,
👉பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும்
மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பங்களை, https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் அக்டோபர் 10ம் தேதி வரை காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பதிவுகள் நடக்கும். பால்வாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும்.
இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அதிகார பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் டவுன்லோடு செய்ய
👇👇👇👇👇👇👇👇
Monday, October 03, 2022
LKG in this school
October 03, 2022
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.
இந்த பள்ளியில் எல்.கே.ஜி. தொடக்கம்.. வெளியானது மாணவர் சேர்க்கை அறிவிப்பு.. - LKG in this school. Commencement.. Student Admission Notification Released.
நாடு முழுவதும், மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா (கே.வி) பள்ளிகள் செயல்படுகின்றன. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், குறைந்த கட்டணமே வசூலிக்கப் படுகிறது. மத்திய - மாநில அரசுப் பணியாளர்கள், பொதுத் துறை நிறுவன பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு இந்த பள்ளிகளில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. காலியிடங்கள் இருந்தால், பொது தரப்பினர் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே கே.வி. பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், ஒன்றாம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஐந்தாக இருந்த குறைந்த பட்ச வயது, நடப்பு கல்வி ஆண்டில் ஆறாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 'பால்வாடிகா' என்ற பெயரில் ப்ரீ.கே.ஜி, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்படுகின்றன. இதுகுறித்த அறிவிப்பை, சென்னை ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி.பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்டுள்ளார்.அதில், "பால்வாடிகா முதல் பிரிவில் 3 முதல் 4 வயது வரையிலும், பால்வாடிகா இரண்டாம் பிரிவில் 3 வயது முதல் 5 வயது வரையிலும், பால்வாடிகா மூன்றாம் பிரிவில் 6 வயது வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான விண்ணப்பங்களை https://chennaiiit.kvs.ac.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நேரடியாக விண்ணப்ப பதிவு நடக்கும். வரும் 10-ம் தேதி வரை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பதிவுகள் நடக்கும். பாலவாடிகா ஒன்றாம் பிரிவில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி சேர்க்கை வழங்கப்படும். இந்த வகுப்புகளுக்கு ஒரு காலாண்டுக்கு, ஒரு மாணவருக்கு 1,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கூடுதல் வகுப்புகளுக்கு, 73051 60907, 971058 8122 என்ற எண்களில் ஐ.ஐ.டி.யில் உள்ள கே.வி. பள்ளியை தொடர்பு கொள்ளலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 15, 2022
Tribal Vacancies for Student Admission
May 15, 2022
மாணவர் சேர்க்கைக்கு பழங்குடி பிரிவினர் காலியிடங்கள்
கேந்திரிய வித்யாலயாவில், ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, பழங்குடியினர் பிரிவில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., வளாக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் மாணிக்கசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கே.வி.,யில் ஒன்றாம் வகுப்புக்கு, ஆன்லைன் வழி விண்ணப்பங்கள் பெற்று சேர்க்கை நடக்கிறது. இதில், பழங்குடியினர் பிரிவுக்கான சில இடங்கள் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களில் சேர விருப்பம் உள்ளவர்கள், பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பம் அளிக்கலாம்.
பள்ளி அலுவலகத்தில், வரும், 18ம் தேதி வரை, காலை 9:30 மணியில் இருந்து பகல், 3:30 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு, 73051 60907என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 01, 2022
KVS
May 01, 2022
கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் ஒதுக்கீடு ரத்து குறித்த தலையங்கம்

மத்திய அரசின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினா்களின் சிறப்பு ஒதுக்கீடு, மத்திய கல்வி அமைச்சகப் பணியாளா்களின் 100 குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, நாடாளுமன்ற உறுப்பினா்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகளுக்கான ஒதுக்கீடு, ஓய்வு பெற்ற கேந்திரிய வித்யாலய பணியாளா்களுக்கான ஒதுக்கீடு, நிா்வாகக் குழு தலைவருக்கான சிறப்பு ஒதுக்கீடு ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன.
இரண்டாவது மத்திய சம்பள ஆணையத்தின் பரிந்துரைப்படி 1963-இல் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்பட்டன. அடிக்கடி பணியிட மாற்றத்தை சந்திக்கும் ராணுவத்தினா், துணை ராணுவத்தினா் உள்ளிட்ட மத்திய அரசு ஊழியா்களுடைய குழந்தைகளின் கல்வி தடைபடக் கூடாது; பள்ளிகள் மாறினாலும் ஒரே கல்வித் தரத்தில் அவா்கள் பயில வேண்டும் என்பதுதான் இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டதன் நோக்கம். மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலய சங்கதன் என்ற தன்னாட்சி அமைப்பு இந்தப் பள்ளிகளை 1975-ஆம் ஆண்டு முதல் நிா்வகித்து வருகிறது. முன்னதாக இந்த சிறப்பு ஒதுக்கீட்டின்படி, ஒரு மக்களவை உறுப்பினா் தனது தொகுதிக்குட்பட்ட கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்கள் வரை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய வித்யாலய பள்ளி இல்லையென்றால் பக்கத்து தொகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளியில் மாணவா்களை சோ்க்க பரிந்துரை செய்ய முடியும். மாநிலங்களவை உறுப்பினா்களைப் பொறுத்தவரை, அவா்கள் எந்த மாநிலத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்படுகின்றனரோ, அந்த மாநிலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் 10 மாணவா்களைச் சோ்க்க பரிந்துரை செய்யலாம்.
நாடு முழுவதும் உள்ள 1,248 கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சுமாா் 14 லட்சம் மாணவா்கள் படித்து வருகின்றனா். இப்போது நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பதன் மூலம், மக்களவை உறுப்பினா்கள் 543 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 245 போ் ஆக மொத்தம் 788 எம்.பி.க்கள் மூலம் பரிந்துரைக்கப்படும் 7,880 மாணவா்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு பட்டியலில் இருந்து அகற்றப்பட்டிருக்கிறது.
உயா்வான கல்வித் தரம், 1-40 என்ற ஆசிரியா்-மாணவா் விகிதம் ஆகியவை இந்தப் பள்ளிகளின் சிறப்புகள். குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக் கட்டண சலுகையும் உண்டு. எம்.பி.க்களுக்கான ஒதுக்கீடு உள்பட மொத்தம் 16 வகையான சிறப்பு ஒதுக்கீட்டு முறை மாணவா் சோ்க்கையின்போது கடைப்பிடிக்கப்படுகிறது. கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படுகிறது. இந்தப் பள்ளிகளில் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமை தவறாகப் பயன்படுத்தப்படுவதாக நீண்டகாலமாக புகாா்கள் இருந்து வருகின்றன. பல இடங்களில் இந்த ஒதுக்கீடு பணத்துக்காக விற்பனை செய்யப்படுவதாகவும் புகாா்கள் உண்டு. இதே போன்ற புகாா்களின் அடிப்படையில், 2010-இல் சிறப்பு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அரசியல் அழுத்தம் காரணமாக மீண்டும் கொண்டுவரப்பட்டது.
நாட்டில் உள்ள அனைத்து எம்.பி.க்களும் இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி மாணவா்களுக்கு பரிந்துரை செய்கின்றனா் என்று சொல்வதற்கில்லை. ஆனால், 2018-19-இல் எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டையும் தாண்டி அதிக மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். இதனால், பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதத்தை பின்பற்ற முடியாமல் போனது. மேலும், இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகளை நடத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது. இது, மாணவா்களின் கல்வித் தரம் குறைவதற்கு வழிவகுக்கும் என்ற நிலை ஏற்பட்டது. இதுவும் எம்.பி.க்களின் ஒதுக்கீட்டு உரிமையை மத்திய அரசு ரத்து செய்ததற்கு இன்னொரு காரணம்.
கேந்திரிய வித்யாலய பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வதற்கு பதிலாக முறைப்படுத்த வேண்டும் என்றும் எம்.பி.க்கள் பலா் கோருகிறாா்கள். எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீட்டு உரிமையை முழுமையாக ரத்து செய்வதால் மத்திய அரசு ஊழியா்கள் அல்லாத ஏழைகளின் குழந்தைகள் எம்.பி.க்களின் பரிந்துரைப்படி கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் சோ்க்கை பெற முடியாத சூழல் ஏற்படும் என்பது அவா்கள் வாதம்.
கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் மத்திய அரசு ஊழியா்களின் குழந்தைகள் கல்வி பயில்வது படிப்படியாக குறைந்து வருகிறது. அவா்கள் பெரும்பாலும் தனியாா் உறைவிடப் பள்ளிகளை நாடுகிறாா்கள். மத்திய அரசு ஊழியா்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இப்பள்ளிகள் இல்லாததால் பலரும் தங்கள் குழந்தைகளை அதில் சோ்ப்பதில்லை.
வேலைவாய்ப்புக்காக மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா்தல் அதிகரித்திருக்கும் நிலையில், மாவட்டந்தோறும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தொடங்கப்படுவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அதன் மூலம் ஏனைய பள்ளிகளுக்கு முன்மாதிரி பள்ளிகளாகவும் அவை அமையும். மாவட்டந்தோறும் நவோதாய, கேந்திரிய வித்யாலய பள்ளிகள் அமைவதன் மூலம் அடித்தட்டு மக்களின் கல்வித்தரத்தை உயா்த்த முடியும்.

Thursday, March 31, 2022
STUDENTS
March 31, 2022
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது 6-ஆக உயர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியதில் இருக்கும் பின்புல காரணங்கள் என்ன எனவும் எல்கேஜி வகுப்பில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்படுகிறார்களா எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என்றும், அதற்கான பின்புல காரணம் என்ன என்றும் மாநிலங்களவையில் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த விளக்கத்தையும் வைகோ வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்வி , “ கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா?
1. 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா?
2. அவ்வாறு இருப்பின், தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்புலக் காரணங்கள் என்ன?
3. எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்களா?
4. அவ்வாறு இருப்பின், அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளுமா? முந்தைய வழமை போல் சேர்க்கை நடைபெறுமா?
5. இல்லை என்றால், அதற்கான காரணம் என்ன? கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி விளக்கம் 1 முதல் 3 கேள்விகளுக்கு விளக்கம் : ஆம். 2022/23 கல்வி ஆண்டில், 1.04.2022 முதல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு, 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற கற்பித்தல் முறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி, அங்கன்வாடி, பாலவாடிகா மற்றும் 3 ஆண்டுகள் முன்பள்ளிக் கல்வி ஆகியவை, 3 முதல் 6 வயது வரையிலும், 1,2 ஆம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளும் என வகுக்கப்பட்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது.
கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன. இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன. 2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் பார்வையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேள்வி 4 க்கு விளக்கம். இந்தப் பிரச்சினை, நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது. “ என்று குறிப்பிட்டுள்ளார்.

Sunday, February 27, 2022
Latest News
February 27, 2022
கேந்திரியா பள்ளி அட்மிஷன் வயது வரம்பு திடீர் உயர்வு
கேந்திரியா பள்ளி அட்மிஷன் வயது வரம்பு திடீர் உயர்வு.
கேந்திரிய வித்யாலயா என்ற கே.வி., பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | தமிழில் கையெழுத்திடும் முறை பள்ளிகளில் அமல்படுத்த உத்தரவு.
மத்திய கல்வி அமைச்சகத்தின், தன்னாட்சி பெற்ற அமைப்பாக உள்ள கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிறுவனத்தின் கீழ், நாடு முழுதும் கே.வி., பள்ளிகள் செயல்படுகின்றன.ராணுவத்தினர், மத்திய, மாநில அரசின் அலுவலர்,ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனத்தினர் ஆகியோரின் பிள்ளைகளுக்கு, முன்னுரிமை அளித்து, இந்த கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.மீதமுள்ள இடங்கள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படும். இந்த பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பணி நடக்கும் போது, அந்த ஆண்டு மார்ச், 31 அல்லது ஏப்., 1ல், 5 வயது நிறைந்திருக்க வேண்டும் என்ற விதி, பல ஆண்டுகளாக உள்ளது. வரும், 2022- - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை, கே.வி.சங்கதன் நேற்று வெளியிட்டுள்ளது.அதில், ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள்,புதிய கல்வி கொள்கையின்படி, 6 வயதாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.இதில் மாணவர்களுக்கு 6 வயது முடிந்திருக்க வேண்டுமாஅல்லது 5 வயது முடிந்து, 6 வயதில் இருக்க வேண்டுமா என்ற தெளிவு இல்லை.மேலும் மாணவர், எந்த ஆண்டில் இருந்து, எந்த ஆண்டிற்குள் பிறந்திருக்க வேண்டும் என்ற குறிப்பும், முதல் கட்ட அறிவிப்பில் இடம் பெறவில்லை.ஏற்கனவே, 5 வயது நிறைவடைந்தால் போதும் என்ற நிலையில், 6 வயது நிறைவடைய வேண்டும் என, திடீரென வயது வரம்பை உயர்த்தினால், ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்த ஆண்டு கே.வி., பள்ளிகளில் சேர முடியாத நிலை ஏற்படும். தனியார் பள்ளிகளில் ஏற்கனவே, 'அட்மிஷன்' முடிந்து விட்டதால், அங்கும், 'சீட்' பெற முடியாது. தமிழக மாணவர்களை பொறுத்தவரை, அரசு பள்ளிகளில் மட்டுமே சேருவதற்கு வாய்ப்பு உள்ளது.இது குறித்து, நாளை துவங்க உள்ள, 'ஆன்லைன்' பதிவில், கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம் என, கே.வி., தரப்பில் கூறப்பட்டுள்ளது. கே.வி., மாணவர் சேர்க்கை அறிவிப்பை, kvsangathan.nic.in/ என்ற இணையதளத்திலும், ஆன்லைன் பதிவு விபரங்களை, kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.