Breaking

Showing posts with label தற்கொலை முயற்சி. Show all posts
Showing posts with label தற்கொலை முயற்சி. Show all posts

Thursday, August 04, 2022

August 04, 2022

தேர்வில் மதிப்பெண் குறைவு - 10-ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!

10ம் வகுப்பு மாணவி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை..!


ஈரோடு அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததில் பெற்றோர் கண்டித்ததால் மனவருத்ததில் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற 10-ம் வகுப்பு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்றோர் கண்டித்ததில் 10-ம் வகுப்பு பள்ளி மாணவி எலி மருந்தை உட்கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு அருகே கல்லுக்கடைமேடு பகுதியை சேர்ந்தவர் பசீர் அகமது. இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவரது மகளான 10-ம் வகுப்பு பள்ளி மாணவி அருகில் உள்ள மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த காலாண்டு தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்ததால் மாணவியை அடிக்கடி டி.வி பார்க்காதே எனவும் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து படிக்கவரவில்லையென மன உளைச்சலில் இருந்த பள்ளி மாணவி பெற்றோர் இல்லாத நேரத்தில் எலி மருந்து எடுத்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி அடிக்கடி வாந்தி எடுக்கவே அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்றோர் திட்டியதாக பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் ஈரோட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் பெற்றோர்கள் முன்னிலையில் சிறுமிகளை திட்டுவதை குறித்து பெற்றோர்களிடம் அறிவுரை வழங்கினர்.
August 04, 2022

மருத்துவக்கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

சென்னையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவிகள் இருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரியில் கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மதுரை மற்றும் வேலூரைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் இந்தக் கல்லூரி விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர். நெருங்கிய தோழிகளான இருவரும் மாணவர்களிடம் சகஜகமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள் இருவரையும் சக மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தவறானவர்களாகக் கருதி அவர்களிடம் யாரும் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த இரு மாணவிகளில் ஒருவர் நேற்று மாலை கல்லூரி லேப்பில் இருந்து மெர்குரிசல்பேட் என்ற மருந்தை கொண்டு வந்து விடுதி அறையில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த அவரது நெருங்கிய தோழியான மற்றொரு மாணவியும், ' நீ இல்லாத உலகத்தில் நானும் இருக்க விரும்பவில்லை' எனக் கூறி அதே மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அங்கு வந்த மற்றொரு மாணவி, அறையில் இரு மாணவிகளும் மயங்கி கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனே அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து இருவரும் நலமுடன் உள்ளனர்.

தகவல் அறிந்த மருத்துவமனை நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். அதில், தங்களை மோசமானவர்கள் என்று கூறி சக மாணவிகள், மற்றும் ஆசிரியர்கள் தங்களிடம் பேசாமல் ஓதுக்கி வைத்ததால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தனர். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் இது குறித்து சம்பந்தபட்ட மாணவிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் மாணவிகள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து வேப்பேரி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Monday, July 18, 2022

July 18, 2022

அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி - சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்

மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு மாணவி 2வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை முயற்சி மேற்கொண்டார். கால்முறிவு ஏற்பட்ட நிலையில் மாணவி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சேலத்தில் அரசு பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவி பள்ளி கட்டிடத்தின் 2வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

*சிறுமிக்கு கால்முறிவு மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர்

*குடும்ப பிரச்சினையால் தற்கொலை முயற்சி என மாவட்ட ஆட்சியர் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவர், இன்று (ஜூலை 18) காலை பள்ளியின் 2ம் மாடியில் இருந்து கீழே குதித்தார். தற்கொலைக்கு முயன்ற மாணவியை கண்டு சக மாணவிகள் கூச்சலிட்டதும், அங்கு திரண்ட ஆசிரியர்கள், படுகாயமடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து சம்பவ இடத்திற்கு வந்த சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தினர்.

இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: ஆசிரியைகள் இருவர் கைது
அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கோகிலவாணி என்ற மாணவி இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்துள்ளார். இதையடுத்து மாணவி பள்ளியின் இரண்டாம் மாடியில் உள்ள வகுப்பறைக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கூச்சலிட்ட நிலையில், உடனடியாக அங்கு வந்த பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உடனடியாக தகவல்றிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் காவல் துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மாணவி குடும்பத்த தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது . பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் இதற்கு காரணம் இல்லை என்றும் தன்னுடைய இந்த தற்கொலை முயற்சிக்கு அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மாணவி தரப்பில் தெரிவித்ததாக தெரிகிறது. இரண்டாம் மாடிலிருந்து குதித்து தற்கொலை முயற்சித்ததில் சிறுமியின் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது மற்றும் தாடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது . மருத்துவர்கள் தொடர்ந்து மாணவிக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இருப்பினும் மாணவியின் மனநிலையை அறிந்த அவருக்கு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் அரசு பள்ளி மாணவியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Total Pageviews

Search This Blog