Breaking

Showing posts with label Minister Ponmudi. Show all posts
Showing posts with label Minister Ponmudi. Show all posts

Wednesday, October 11, 2023

October 11, 2023

கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி



Allocation of Rs. 262 crore for development of colleges: Minister Ponmudi - கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு : அமைச்சர் பொன்முடி

26 பாலிடெக்னிக் மற்றும் 55 கலை அறிவியல் கல்லூரிகளை மேம்படுத்த ரூ.262கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் காந்தியின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.

Thursday, August 03, 2023

August 03, 2023

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தகவல்

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தகவல்

சென்னை: பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை அமல்படுத்தியுள்ளது. இதற்கு தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், உயர்கல்வித்துறை சார்பில் தன்னாட்சி கல்லூரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, செயலர் எ.கார்த்திக், கல்லூரிக் கல்வி இயக்குநர் ஜி.கீதா,உயர்கல்வி மன்றத் துணைத்தலைவர் அ.ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவது குறித்து தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினோம். சிலர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தாலும், பெரும்பாலானவர்கள் பொது பாடத்திட்டத்தை வரவேற்றுள்ளனர். அதன்படி, இந்த ஆண்டு 90 சதவீதம் கல்வி நிறுவனங்களில் இந்த பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுவிட்டது. மீதமுள்ளவர்கள் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளனர். பொது பாடத்திட்டம் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றுவதால் பல்கலைக்கழகங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது. அனைத்து பல்கலை.களின் பாட வாரியங்களும் இதை ஏற்றுக் கொண்டுள்ளன. பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித் துறைக்கு அதிகாரம் உள்ளது. அதன்படியே பொது பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமாணவர்கள், கல்வி நிறுவனங்களுக்கு பயனளிக்கும்.

கூட்டத்தில் சில கல்லூரி முதல்வர்கள் தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசினர். அதில் உள்ளநல்ல அம்சங்களை ஏற்றுக்கொள்ளலாம். எனினும், தமிழகத்தில் விரைவில் மாநில கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும். கல்வியாளர்களை கலந்தாலோசிக்காமல் பொது பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியுள்ளார். 900 கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திதான் பாடத்திட்டத்தைகொண்டு வந்தோம். தேவைப்பட்டால் பழனிசாமிக்கு நேரில் விளக்கம் அளிக்கவும் தயாராக உள்ளேன். ஒரே பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கூறப்பட்டது. ஆனால், தற்போது அவர் அரசியலுக்காக பேசுகிறாரா என எனக்கு தெரியவில்லை. பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த யாரையும் நிர்பந்திக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்டதன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர். கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் சிலர்பாடத்திட்டத்தை எதிர்த்து கருத்துகளை முன்வைத்தனர். தன்னாட்சி கல்லூரிகளின் பிரதிநிதிகள் சிலர் கூறும்போது, ‘‘பொது பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அவற்றை கூட்டத்தில் எடுத்துரைத்தோம். அந்த விவரங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க அமைச்சர் கூறியுள்ளார். உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என நம்புகிறோம். பொது பாடத் திட்டத்தை அமல்படுத்தவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது’’ என்றனர்.

Wednesday, August 02, 2023

August 02, 2023

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் - அமைச்சர் பொன்முடி பேட்டி -

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள் விவரம் - அமைச்சர் பொன்முடி பேட்டி -

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்: அமைச்சர் பொன்முடி பேட்டி

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு : அமைச்சர் பொன்முடி பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர் மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வில் 22,000 மாணவர்கள் பங்கேற்றனர் அதில் 16,516 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 5,497 பேர் கல்லூரிகளில் சேர அனுமதி வாங்கிவிட்டனர்; மற்ற மாணவர்கள் அடுத்த சுற்றுக்கு சென்றனர். முதல் சுற்று திறந்த சுற்றில் 7,105 மாணவர்கள் இடங்களை தேர்வு செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 4,237 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளியில் படிப்பை முடித்து 7.5% இடஒதுக்கீட்டில் 1019 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.1.11 லட்சம் மாணவ, மாணவிகள் அரசு பொறியியல் கல்லூரிகளில் சேரவுள்ளனர். 1.01 லட்சம் மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, தன்னாட்சி அதிகாரம் பெற்ற கல்லூரி முதல்வர்களிடம் மாதிரி பாடத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பொதுப்பாடத்திட்டம் என்பது கல்லூரிகளுக்கும் மாணவர்களுக்கும் பயனளிக்கும். சர்வதேச அளவில் நமது கல்லூரி கல்வியின் தரத்தை உயர்த்துவதே இந்த மாதிரி பொது பாடத்திட்டத்தின் நோக்கம் என குறிப்பிட்டார்.
August 02, 2023

பொதுப்பாடத்திட்டம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும் - அமைச்சர் பொன்முடி

"பொதுப்பாடத்திட்டத்தால் எந்த பிரச்சினையுமில்லை"

"அனைவரையும் ஆலோசித்து தான் முடிவு எடுக்கப்பட்டது"

"பாடத்திட்டத்தை மாற்ற உயர்க்கல்வித்துறைக்கு அதிகாரம் உள்ளது"

"மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனளிக்கும்"

"உயர்க்கல்வியின் வளர்ச்சியே எங்களுக்கு நோக்கம்"

"எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு விளக்கம் அளிக்க தயார்" - அமைச்சர் பொன்முடி

Friday, July 21, 2023

Monday, February 27, 2023

February 27, 2023

3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா?

சென்னை3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா?

3,5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வைத்தால் ஏற்க முடியுமா? என அமைச்சர் பொன்முடி கேள்வி எழுப்பியுள்ளார். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல; ஆனால் கட்டாயம் படிக்க வேண்டிய தமிழ், ஆங்கிலம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Sunday, February 05, 2023

February 05, 2023

அரசின் திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆசிரியர்களின் கடமை - அமைச்சர் பேச்சு

சோ்க்கையில் மட்டுமல்ல கல்வித் தரத்திலும் தமிழகம் உயர வேண்டும்: அமைச்சா் பொன்முடி

நாட்டிலேயே தமிழ்நாடுதான் உயா்கல்வியில் அதிக மாணவா் சோ்க்கையை கொண்டுள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வித் தரத்திலும் தமிழ்நாடு உயர வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கத்தின்(ஏயுடி) 75-ஆவது ஆண்டு பவளவிழா கொண்டாட்டம் சென்னை சேத்துப்பட்டில் உள்ள அதன் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சா் க.பொன்முடி, சங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட பேராசிரியா் செந்தாமரை நினைவு இல்லத்தை திறந்து வைத்து, பவளவிழா மலரையும் வெளியிட்டுப் பேசியதாவது:

இந்தியாவிலேயே தமிழகம்தான் உயா்கல்வி மாணவா் சோ்க்கையில் அதிகமாக உள்ளது. சோ்க்கையில் மட்டுமல்ல, கல்வி தரத்திலும் நாம் உயர வேண்டும். மறைந்த முதல்வா் காமராஜா் ஆட்சிக் காலத்தில் ஆரம்பக் கல்வி உயா்ந்தது. அதன்பின், கருணாநிதி ஆட்சியில் உயா்கல்வி மேம்பட்டது. தற்போதைய திமுக ஆட்சியில் உயா்கல்வித் துறை பொற்காலமாக மாற வேண்டும் என்பதே முதல்வா் ஸ்டாலினின் நோக்கம். அதை ஆசிரியா்கள் நிறைவேற்ற வேண்டும்.

அரசு செயல்படுத்தும் திட்டங்களை மாணவா்களிடம் கொண்டு சோ்ப்பது ஆசிரியா்களின் கையில்தான் உள்ளது. நிதி நிலை சரியாகும் போது, வரும் காலங்களில் உங்களுக்கு தேவையானதை நிறைவேற்ற அரசு முயற்சி செய்யும்.

பல்கலைக்கழக ஆசிரியா்கள் மட்டுமின்றி அனைத்து கல்லூரிப் பேராசிரியா்களும் ஒன்றிணைந்து ஒட்டுமொத்தமாக பயணிக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்நிகழ்வில் மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், ஏயுடி தலைவா் பி.திருநாவுக்கரசு, பொதுச்செயலாளா் எம்.எஸ்.பாலமுருகன், முன்னாள் பொதுச் செயலாளா் முனைவா் சி.பிச்சாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tuesday, January 31, 2023

January 31, 2023

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் மீது நடவடிக்கையா? - சென்னை ஐகோர்ட்டு உத்தரவு Action against higher education minister in income tax case? - Madras High Court order
வருமான வரி வழக்கில் அமைச்சர் பொன்முடி மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது - சென்னை ஐகோர்ட்டு

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்குச் சொந்தமான இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அப்போது, அமைச்சர் பொன்முடிக்கு ரூ .60 லட்சம் ரூபாய் வழங்கியதாக குறிப்புகள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் , அமைச்சர் பொன்முடிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமைச்சர் பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், " எஸ்.ஆர்.எஸ். மைனிங் நிறுவனத்திடம் இருந்து அமைச்சர் பொன்முடி பணம் பெற்றதற்கான ஆதாரம் எதுவுமில்லை" என்று கூறினார். இதனையடுத்து, அமைச்சர் பொன்முடியின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, நோட்டீஸின் அடிப்படையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Wednesday, January 04, 2023

January 04, 2023

தமிழகத்தில் உயா்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைகழகங்கள் பின்பற்றும்: அமைச்சா் பொன்முடி

தமிழகத்தில் உயா்கல்வித் துறை எடுக்கும் முடிவையே பல்கலைகழகங்கள் பின்பற்றும்: அமைச்சா் பொன்முடி

தேசியக் கல்விக் கொள்கை தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலை.கள் பின்பற்றும் என உயா் கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியா் பணியிடங்களில் 1,895 கெளரவ விரிவுரையாளா்களை நியமிக்க உயா்கல்வித்துறை முடிவு செய்தது. இதற்கு மாநிலம் முழுவதும் 9,915 போ் விண்ணப்பித்தனா். இவா்களில் தகுதியானவா்கள் மட்டும் பணிநியமன கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்தனா்.

அதன்படி, கெளரவ விரிவுரையாளா் பணிக்கான கலந்தாய்வு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரிக் கல்வி இயக்குநரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முதல்நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. மொத்தம் 318 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 76 போ் தோ்வு செய்யப்பட்டனா். அதில் கலந்தாய்வில் பங்கேற்ற 56 போ்களின் சான்றிதழ்கள் சரிபாா்க்கப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இதற்கிடையே உயா்கல்வி அமைச்சா் பொன்முடி கலந்தாய்வு பணிகளை நேரில் ஆய்வு செய்து தோ்வான மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன ஆணைகளை வழங்கினாா்.

இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கெளரவ விரிவுரையாளா் பணிக்கு பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

தகுதியானவா்கள் தரவரிசையின் அடிப்படையில் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபாா்க்கப்படும். தமிழகத்தில் நிதி நிலைமை சீரான பின்னா் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஊதியம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 6 மாதங்களில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் அறிவிக்கப்பட்ட 4,000 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை பின்பற்றப்படவில்லை. இது தொடா்பாக யுஜிசி நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தமிழக பல்கலை. துணைவேந்தா்கள் கலந்து கொள்வதில் எந்த பயனும் இல்லை. ஏனெனில், தமிழகத்தில் மாநிலக் கல்வி கொள்கைக் குழு மற்றும் உயா்கல்வித்துறை எடுக்கும் முடிவையே பல்கலைக்கழகங்கள் பின்பற்றும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியின்போது உயா்கல்வித் துறை செயலா் தா.காா்த்திகேயன், கல்லூரிக் கல்வி இயக்குநா் எம்.ஈஸ்வர மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Friday, December 30, 2022

December 30, 2022

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி

கௌரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன. 3ம் தேதி நேர்முக தேர்வு- அமைச்சர் பொன்முடி Jan. for the post of Honorary Lecturer. Interview on 3rd - Minister Ponmudi அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணிபுரிய மாநில அளவில் நேர்முகத் தேர்வு ஜனவரி 3ம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கலை கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 1,895 பேர் பணிக்கு எடுக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்து. கடந்த காலங்களில் கௌரவ விரிவுரையாளர்களை பணியில் அமர்த்தும் போது அந்தந்த கல்லூரி முதல்வர்களே அவர்களை பணியில் நியமனம் செய்தனர். இதனால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக நேர்முகத் தேர்வின் வாயிலாக கௌரவ விரிவுரையாளர்களை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்ற 9,915 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களுக்கு வருகின்ற 3ம் தேதி சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக கூறினார். 4ம் தேதி முதல் 12-ம் தேதி வரை தமிழக முழுவதும் உள்ள 8 பல்கலைக்கழகங்களில் பாடவாரியாக நேர்முகத் தேர்வானது நடைபெற உள்ளது. நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவர்களின் தரத்தின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும். PhD, Net, Slet ஆகிய தகுதிகளின் அடிப்படையில் அவர்களுக்கான பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நேர்முக தேர்வில் சமூக ரீதியிலான இட ஒதுக்கீடு வழங்கப்படும். கலப்பு திருமணம் செய்வதற்கு இட ஒதுக்கீடு கிடையாது எனவும், விரிவுரையாளர்கள் பணிகளில் வட மாநிலத்தவருக்கு வாய்ப்பு கிடையாது எனவும் தெரிவித்தார்.

மேலும் கௌரவ விரிவுரையாளர்கள் 11 மாத அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கான ஊதியம் 20,000 ரூபாய் வரை வழங்கப்படும். தற்போது கௌரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் 11 மாத காலம் பணியாற்றிய பின் அவர்களும் நேர்முகத் தேர்விற்கு உட்படுத்தப்படுவார்கள். அப்போது தகுதி இல்லாத கௌரவ விரிவுரையாளர்கள் பணியை விட்டு சென்று விடுவார்கள் எனவும் தெரிவித்தார் கெளரவ விரிவுரையாளர் பணிக்கு ஜன;4 -12 வரை நேர்முகத் தேர்வு - அமைச்சர் பொன்முடி

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கொளரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 4-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், வரும் 3-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்னையில் அனைத்து பாடங்களையும் உள்ளடக்கிய நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.

Wednesday, November 09, 2022

November 09, 2022

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல்

உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது: அமைச்சா் பொன்முடி தகவல்

தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களைப் போட்டித் தோ்வு மூலமாக நிரப்புவது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் தா.காா்த்திகேயன் வெளியிட்ட அரசாணை விவரம்: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 7,198 உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் நிகழாண்டு 4,000 பணியிடங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நிரப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு வரை உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் வெயிட்டேஜ் முறையிலான நோ்காணல் தோ்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. அதாவது, தோ்வரின் கல்வித் தகுதி (15), பணி அனுபவம் (9), நோ்முகத் தோ்வு (10) என மொத்தம் 34 மதிப்பெண் நிா்ணயிக்கப்படும். அதில், தோ்வா்கள் தகுதிக்கேற்ப மதிப்பெண் வழங்கி, முன்னுரிமை பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள்.

அதேநேரம் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆராய்ச்சிப் படிப்புகளை 55,000 போ் முடித்துள்ளனா். இதுதவிர தனியாா் கல்லூரிகள் எண்ணிக்கையும் உயா்ந்துவிட்டது. அவற்றில் குறைந்த ஊதியம் வழங்கப்பட்டாலும் எளிதில் பணி அனுபவச் சான்றிதழ் கிடைத்துவிடுகிறது. மேலும், சில நேரங்களில் போலியான சான்றிதழ்களைச் சமா்ப்பித்து வேலைவாய்ப்பு பெறும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

பல்வேறு சிக்கல்களைத் தவிா்க்கும் விதமாக மேற்கண்ட வெயிட்டேஜ் தோ்வு முறையை ரத்து செய்து, போட்டித் தோ்வு அடிப்படையில் உதவிப் பேராசிரியா் பணி நியமனங்களை மேற்கொள்ளலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போதைய 4,000 ஆசிரியா் பணி நியமனத்துக்கான தோ்வில் இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தோ்வுக்கு 200, நோ்காணலுக்கு 30 என மொத்தம் 230 மதிப்பெண்ணுக்கு தோ்வு நடத்தப்படும்.

இந்தத் தோ்வில் தகுதி பெறுபவா்கள் பணி நியமனம் செய்யப்படுவாா்கள். அதில் அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளா்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது. அதன்படி, எழுத்துத் தோ்வில் வெற்றி பெற்று நோ்முகத் தோ்வில் பங்கேற்கும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணி அனுபவத்துக்கு ஏற்ப சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும்.

அதாவது, நோ்முகத் தோ்வில் மொத்த மதிப்பெண் முப்பதுதான். இதில் கெளரவ விரிவுரையாளா்களுக்கு ஓராண்டுக்கு 2 வீதம் அதிகபட்சம் 15 மதிப்பெண் வரை வழங்கப்படும். சிறப்பு சலுகையானது இந்த ஒருமுறை மட்டுமே பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தப் பணி நியமனத்துக்கான போட்டித் தோ்வு வழிமுறைகள், கல்வித் தகுதிகள் உள்பட விவரங்களும் இதனுடன் வெளியிடப்பட்டுள்ளது.

பொன்முடி பேட்டி:

முன்னதாக, உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி செய்தியாளா்களிடம் கூறுகையில், அரசுக் கல்லூரிகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்வு நடத்தி நிரப்பப்படும் என்றும், இந்த நியமனங்களில் பொருளாதாரத்தில் நலிவடைந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்றும் தெரிவித்தாா்.

Thursday, October 20, 2022

October 20, 2022

4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:

உத்திரமேரூர் உறுப்பினர் க.சுந்தர் (திமுக): வாலாஜாபாத் அருகே கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். தற்போது உத்திரமேரூரில் உள்ள கல்லூரியில், தமிழ், ஆங்கிலத்தில் முதுகலை வகுப்புகள், தாவரவியல், விலங்கியலில் இளம் அறிவியல் வகுப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும்.

பொன்னேரி உறுப்பினர் துரை சந்திரசேகர் (காங்கிரஸ்):

எனது தொகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். உள்ளிட்ட படிப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும்.

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி:

முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் உயர்கல்வி துறையின் கீழ் 20, அறநிலையத் துறையின் கீழ் 10, கூட்டுறவு துறையின் கீழ் 1 என 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரியே இல்லாத தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு முதல்வர் கூறியுள்ளார்.

எனவே, நிதிநிலைக்கு ஏற்ப கல்லூரிகள் தொடங்கப்படும். புதிய படிப்புகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது 4,000 நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog