Breaking

Showing posts with label 12th Std. Show all posts
Showing posts with label 12th Std. Show all posts

Friday, March 15, 2024

Monday, May 08, 2023

Monday, April 24, 2023

April 24, 2023

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!



பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு !!!

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவது தள்ளி போக வாய்ப்பு என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் புது தகவல் வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவை வெளியிடலாமா என பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.

Wednesday, April 05, 2023

April 05, 2023

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்ததும் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள்-மறுபக்கம் வகுப்பறையில் கலாம் படம்

12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்த உடன் பள்ளிக்கே வேட்டு வைத்த மாணவர்கள் ஒருபக்கம், வகுப்பறையை சொந்த செலவில் சுத்தம் செய்த மாணவர்கள் மறுபக்கம் என இருவேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

சேலம் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்த மாணவர்கள் பள்ளியின் கேட்டில் பிரமாண்ட வெடிகளை தோரணமாக கட்டி வைத்து, அதை வெடிக்கச் செய்த காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது.

அதே சமயம், பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த மாணவர்கள், தங்களின் சொந்த செலவில் வகுப்பறையை சுத்தம் செய்து கரும்பலகைக்கு பெயின்ட் அடித்து அடுத்து வரும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக அலங்கரித்து கொடுத்துள்ளனர். தாங்கள் பயின்றதன் நினைவாக வகுப்பறையில் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் உருவப்படத்தை அவர்கள் மாட்டி விட்டு சென்றது அனைவரையும் வியக்கவைத்தது. எல்லாம் நம்மூர்தான் ஆனால், ஓரிடத்தில் மாணவர்கள் அதிர்ச்சியடைய வைக்க ஒன்னொரு புறம் மாணவர்கள் நெகிழ்ச்சியடைய வைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.

Monday, April 03, 2023

April 03, 2023

பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10ம் தேதி தொடக்கம்!

தமிழ்நாட்டில் 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு; விடைத்தாள் திருத்தும் பணி வரும் 10ம் தேதி தொடக்கம்! - Plus-2 General Examination ends today; The work of correcting the answer sheet will start on the 10th!

பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கி, மே மாதம் முடிவுகள் வெளியாக உள்ளன. பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கியது. இதில், தமிழ்நாடு, புதுச்சேரியை சேர்ந்த 4 லட்சத்து 3 ஆயிரத்து 156 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவியர். மூன்றாம் பாலினத்தவர் 1. இவர்களுக்காக 3185 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. புதுச்சேரியை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 6 ஆயிரத்து 982 மாணவ, மாணவியர், 7728 மாணவியர் என 14 ஆயிரத்து 710 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இவர்களை தவிர தனித் தேர்வர்களாக 14 ஆயிரத்து 966 பேர் 134 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். இந்நிலையில், முதல் நாள் தேர்வான மொழிப்பாடம்(தமிழ்) தேர்வில் 49 ஆயிரம் மாணவ மாணவியரும், ஆங்கிலப் பாடத் தேர்வில் 50 ஆயிரம் மாணவ மாணவியரும் பங்கேற்கவில்லை. இறுதி நாளான இன்று வேதியியல், புவியியல், கணக்குப்பதிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்க இருக்கின்றன. இதுவரை நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வுகளில் கணக்கு மற்றும் இயற்பியல் பாடத் தேர்வுகளில் கடினமான கேள்விகள் இடம் பெற்றதால் மாணவர்கள் அந்த பாடத் தேர்வுகளில் செண்டம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மேற்கண்ட தேர்வுகள் முடிந்ததும் ஒவ்வொரு நாளும், அந்த விடைத்தாள்கள் கட்டுகளாக கட்டப்பட்டு அந்தந்த மண்டலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அவை 7ம் தேதி அனுப்பி வைக்கப்படும். அதற்கு பிறகு 10ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கும். முதன்மைத் தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்கள் விடைத்தாள் திருத்துவர். அதற்கு பிறகு ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதையடுத்து தமிழ்நாட்டில் 44 திருத்தும் மையங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்த உள்ளனர். இந்த பணி 24ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மே மாதம் 5ம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.

Tuesday, March 28, 2023

March 28, 2023

பிளஸ் 2 கணிதத்தில் சதம் குறைய வாய்ப்பு - ஆசிரியர்களுக்கு அதிர்ச்சி!!

பிளஸ் 2 கணிதம் கேள்விகள் கடினம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் கணித கேள்விகள் கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே.பழனிசாமி மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் ராஜ் கூறியதாவது:

பத்தாம் வகுப்பில் 'ஆல் பாஸ்' பெற்று, தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, கொஞ்சம் எளிமையான வினாக்களை வைத்திருக்கலாம்.

கட்டாய வினா பகுதி கடினமாக இருந்ததால், மாணவர்கள் அதை பார்த்து பயந்திருந்தால், மற்ற கேள்விகளுக்கு பதில் எழுத சிரமப்பட நேரிட்டிருக்கும்.

ஒரு மதிப்பெண்ணில், 13 கேள்விகள் பயிற்சி பகுதியில் இருந்தும், ஏழு கேள்விகள், பாடத்தின் உள்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டுள்ளன. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறையாது. ஆனால், 'சென்டம்' மதிப்பெண் எடுப்போர் குறைய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இது குறித்து அரசு மற்றும் தனி யார் பள்ளி கணித ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,

இது போன்ற வினாத்தாள்கள் மாணவர்களுக்கு கணிதபாடத்தின் மீது அச்சத்தை ஏற்படுத்தும். இத னாவ் எதிர் காலத்தில் கல்லூரியில் பி.எஸ்சி கணிதம் பயில மாணவர் கனே இருக்க மாட்டார்கள்.

இந்த ஆண்டு கணிதத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக வும் குறைவாகவே இருக்க வாய்ப் புள்ளது. அதேபோல கணிதப் பாடத்தில் நேர்ச்சி விகிதமும் சற்று குறையலாம் என்றனர்.

Wednesday, March 02, 2022

March 02, 2022

பொதுத்தேர்வுக்கு பிறகு 10,11,12-ஆம் மாணவர்களுக்கு 2022-23 கல்வியாண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும்

2022-23 கல்வியாண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கு ஜூன் 13 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் +1 மாணவர்களுக்கு ஜூன் 24 முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
March 02, 2022

10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது அட்டவணை

10, பிளஸ் 2 தேர்வு எப்போது? இன்று வெளியாகிறது

சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கான பொதுத் தேர்வு அட்டவணையை, பள்ளிக் கல்வி அமைச்சர் இன்று காலை வெளியிடுகிறார். தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, கொரோனா காரணமாக கடந்த கல்வி ஆண்டில் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக மேற்கண்ட வகுப்புகளில் படித்து தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த மாணவ, மாணவியர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

இதையும் படிக்க | குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் - 31ம் தேதி கடைசி

இந்த கல்வி ஆண்டிலும் கொரோனா பரவல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொற்றின் தீவிரம் குறைந்து கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்ததின் பேரில், பொதுத் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முன்வந்துள்ளது. முன்னதாக திருப்புதல் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தி முடிக்கவும் திட்டமிட்டு அதற்கான அட்டவணைகளையும் கடந்த மாதம் வெளியிட்டு அதன்படி முதல் திருப்புதல் தேர்வு நடந்து வருகிறது. மார்ச் 28ம் தேதி இரண்டாம் திருப்புதல் தேர்வு நடக்க உள்ளது. இந்நிலையில், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணைகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் தற்போது சுமார் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். அவர்களுக்கான தேர்வுகளை மே மாதம் நடத்துவோம் என்று ஏற்கனவே கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் திருப்புதல் தேர்வும் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத் தேர்வு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரம் பொதுத் தேர்வுக்கான அட்டவணைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று காலை 10 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு அட்டவணைகளை வெளியிட உள்ளார்.

Friday, February 25, 2022

February 25, 2022

துளிர் திறனறித் தேர்வு - தமிழ்நாடு அறிவியல் இயக்கம் - 6 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பங்கு கொள்ளுதல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - 25/02/2022

Wednesday, February 16, 2022

February 16, 2022

10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது

தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வரும் நிலையில் 10,12-ம் வகுப்பு திருப்புதல் தேர்வுக்கு முக்கியத்துவம் கிடையாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. திருப்புதல் தேர்வு மதிப்பெண் கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது, மாணவர்களை பொதுத்தேர்வு எழுத தயார்படுத்தவே திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க | 2-வது கட்டகம் - எண்ணும் எழுத்தும் பயிற்சி தகவல்.

கொரோனா தொற்று அதிகரிக்கும் சூழலில் 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, தேர்வுகள் நடைபெறவில்லை. இதனால் திருப்புதல் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடந்து வந்தது. வரக்கூடிய மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில், ஒருவேளை கொரோனா பரவல் அதிகரித்தல் அந்த நேரத்தில் திருப்புதல் தேர்வு மதிப்பெண்களையே பொது தேர்வு மதிப்பெண்களாக வழங்கலாம் என்ற திட்டம் முதலில் தேர்வுத்துறைக்கும், கல்வித்துறைக்கும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த திருப்புதல் தேர்வு தொடங்கியது முதல் ஒவ்வொரு கேள்வித்தாள்களும் முன்கூட்டியே வெளியானதன் காரணமாக தற்போது அந்த முடிவை தேர்வுத்துறை கைவிட்டுள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகளும் தெளிவான சில விளக்கங்களை தெரிவித்துள்ளானர். எந்த காரணம் கொண்டும் இந்த திருப்புதல் தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படாது, இந்த தேர்வு எந்த காரணம் கொண்டும் முக்கிய பொது தேர்காக கருத்த படமாட்டாது, இந்த மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக்கொள்ளமாட்டோம் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் எவ்வளவு? - பட்டியல்கள் வெளியீடு

இதனால் மாணவர்கள், பெற்றோர்கள், எந்தவிதத்திலும் கவலையடைய வேண்டாம், சமூக வலைத்தளங்களில் வெளியாகக்கூடிய கேள்வித்தாள்களை பெறுவதற்கு போட்டி போடா வேண்டாம் என வலிறுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களை பொதுத்தேர்வு எழுத ஒரு அடைப்படை பயிற்சியாக மட்டுமே இந்த திருப்புதல் தேர்வு நடத்தப்படுகிறது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 2-ம் கட்ட திருப்புதல் தேர்வும், பொது தேர்வும் கட்டாயம் நடைபெறும் என்றும், திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் கட்டாயம் கணக்கில் கொள்ளப்படமாட்டாது என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் திட்டவட்டமாகா தெரிவித்துள்ளார்.

Monday, February 14, 2022

February 14, 2022

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

'பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்' எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரண மாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா

பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.

இந்த மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ் ௨ பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ௧௫ மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் பிளஸ் ௨ பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது.

இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் பிளஸ் ௨ பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog