Breaking

Showing posts with label Teachers Association. Show all posts
Showing posts with label Teachers Association. Show all posts

Friday, January 12, 2024

January 12, 2024

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி



Computer Lab + Instructors in 6992 Govt Middle Schools! Computer Teachers Association thanks Tamil Nadu Govt - 6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் +பயிற்றுநர்கள்! தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சங்கம் நன்றி

6992 அரசு நடுநிலைப் பள்ளிகளில் கணினி ஆய்வகம் அமைத்து அதற்கான பயிற்றுநர்களையும் நியமிக்க உள்ள தமிழக அரசுக்கு கணினி ஆசிரியர்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் மாநிலப் பொதுச் செயலாளர் குமரேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முத்தமிழறிஞர் கலைஞரின் கனவுத்திட்டமான பள்ளிக் கல்வித் துறையில் ஆறாம் வகுப்பு முதல் 10 வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் கணினி பாடத்தை அரசுப் பள்ளியில் பயிலும் கிராமப்புற ஏழை எளிய மாணவர்களும் கணினி அறிவு பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு 2011 ஆம் ஆண்டு கலைத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கணினி கல்வி கிடைக்கச் செய்தார். 2006 -2011ஆம் ஆண்டு 6 முதல் 10-ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்து, அதற்கான தனிப் புத்தகங்களும் அச்சிடப்பட்டன. ஆனால், அதன்பின் வந்த அதிமுக ஆட்சியில், கணினி அறிவியல் பாடத்தை கைவிட்டு, அறிவியல் புத்தகத்திலேயே கணினி அறிவியலுக்கு 3 பக்கங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது வரை பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டுமே கணினி அறிவியல் விருப்ப பாடமாக உள்ளது.

பத்து ஆண்டுகள் போராடியும் பயனற்று போனது. 2016 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி இயக்கத்தில் போராட்டம் செய்த பொழுது மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் "கணினி ஆசிரியர்களை போராட விடாதீர்கள்" அவர்களுக்கான பணி வாய்ப்பை வழங்குங்கள் என்று பத்திரிக்கை வாயிலாக அறிக்கை வெளியிட்டார்.

கடந்த மாதம் கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அமல்படுத்தக் கோரி, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் மகத்துவ திட்டமான , ஆசிரியர் மனசு திட்டத்தின் வழியே பணிநாடும் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு வைத்தோம். தற்போது தொடக்கக் கல்வி இணை இயக்குனர் 6992 அரசு நடுநிலைப்பள்ளி தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் வாயிலாக கணினி ஆய்வகங்கள் அமைத்து அதற்கான கணினி பயிற்றுநர்களையும் நியமிப்பதாக உள்ளனர். தமிழகத்தில் கணினி அறிவியல் பாடத்தில் பி.எட் பட்டம் பெற்று 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் உள்ளனர். இந்த அறிவிப்பின் வாயிலாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிபுரிய வாய்ப்பும் கிடைக்கப் பெற்றுள்ளது.

திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,

தொடர்பு எண்: 8248922685,

9626545446.

தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.

Tuesday, March 21, 2023

March 21, 2023

போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்

போராட்டம் தீவிரமாகும் ஆசிரியர் கூட்டணி தகவல்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் என்.ரங்கராஜன் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ரூ.40,299 கோடி ஒதுக்கீடு செய்துள்ளனர். இது கடந்தாண்டை விட ரூ.3,400 கோடி கூடுதலாகும். இதன் மூலம் கூடுதல் பள்ளி கட்டடங்கள், காலை சிற்றுண்டி திட்டம் போன்றவற்றை வரவேற்கிறோம். ஆனால் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ஆசிரியர் நலன் சார்ந்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் அறிவிப்பு, இடைநிலை ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு களையும் அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் வாக்குறுதி, பொது மேடைகளில் பேசும் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படும் என பேசுகின்றனர். இந்த அரசின் 3 வது பட்ஜெட்டில் கூட ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணவில்லை. இது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லை என காட்டுகிறது. இதற்கு தீர்வு காணும் விதத்தில் அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆசிரியர்கள் தீவிரப்படுத்துவதை தவிர வழியில்லை என்றார்.

Saturday, December 31, 2022

December 31, 2022

இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு

நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்

13 ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் தராமல் இழுத்தடித்து வரும் அரசு அதனை மீட்டெடுப்பதற்காக தொடர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம். 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்க கோரி வரும் டிசம்பர் 27-ஆம் தேதி முதல் இடைநிலை பதிவுமூப்பு இயக்கம் (SSTA ) மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து நடத்தி வருகின்றார்கள். இன்று இளையவர்களுக்கு தானே பாதிப்பு என்றால், நாளை மூத்தவர்களுக்கும் இதே போன்ற பாதிப்புகளை அரசு தைரியமாக ஏற்படுத்தும். ஆட்சி தான் மாறி உள்ளது. காட்சி இன்னும் மாறவில்லை. வலிமை மிக்க போராட்டங்களால் மட்டுமே இழந்த உரிமைகளை மீட்டெடுக்க முடியும், என்பதில் எந்தவித ஐயமும் இல்லாமல் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் வாழ்வாதாரமான அடிப்படை ஊதியத்தை இழந்து தவிக்கும் 20,000 இடைநிலை ஆசிரியர்கள் இனத்திற்கான போராட்டம் இது. அந்த ஒரு சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டும் போராடும் போர்க்களம் அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆசிரிய இயக்கங்களிலும் உள்ள பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து களம் காணும் போராட்டமாகவே தெரிகிறது. இதற்கு முன்னர் வரலாறு காணாத பல்வேறு போராட்டங்களை இவர்கள் நடத்தி உள்ளார்கள். இப்போதும் உயிரை துச்சமென மதித்து கடும் குளிரிலும், மழையிலும் பலருக்கு உடல்நல குறைபாடு உள்ளபோதும் உதிரத்தை உரமாக்கும் கடுமையான தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

13 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை... எங்களுக்கும் வழங்கப்படவில்லை. ஆம். 01.06.2009 க்குப் பின் பணியில் சேர்ந்த எமது நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தான்... எங்களுக்கும் போராட்ட வழியைக் காட்டி இருக்கிறீர்கள்.... ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களும் உங்கள் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாட்சப் குழுக்களிலும் சமூக வலைதளங்களிலும் காண முடிகிறது. உங்கள் போராட்டம் வெற்றி அடைய மனமார்ந்த நல் வாழ்த்துக்களை எழுச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் இந்த போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்து நடத்தி வரும் அன்பு நண்பர் ஜே.இராபர்ட், மாநில பொதுச்செயலாளர், SSTA-இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் அவர்களுக்கும், ஏனைய மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், 2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருங்கிணைப்புக் குழுவுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், உண்ணாவிரதத்தில் பங்கு பெற்று வரும் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் களம் கண்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் எழுச்சி கலந்த போராட்ட வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Tuesday, December 27, 2022

December 27, 2022

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (27.12.2022, செவ்வாய்க்கிழமை) பள்ளிக்கல்வித்துறையை பாதுகாக்கக்கோரி தமிழக அரசை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் *திரிலோகசந்திரன்* தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் *கந்தசாமி*, மாநில துணைத்தலைவர் *விஜய்* ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் *முருகன்* வரவேற்புரை வழங்கினார்.
*பணி நிறைவு பெற்ற பின் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் வாழ்வாதாரம் காக்க திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பழக்கம் உள்ளிட்ட ஒழுங்கீனச் செயல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்க தகுந்த வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிடவும், ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றக் கோரியும், தமிழக முழுவதும் கடந்த 2012ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்ட அனைத்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,* ஆசிரியர்களை கல்வி சார்ந்த நிர்வாக ரீதியான பணிகளில் ஈடுபடுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து, கற்றல், கற்பித்தல் பணிகளில் மட்டும் ஈடுபடுத்துவதை உறுதிசெய்ய வேண்டும், பணியில் சேர்ந்த சிறுபான்மையற்ற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவும், அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு வழங்கியது போல் ஜூலை 2022 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க வேண்டும் எனவும், 01.06.2009க்கு பிறகு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு சரி செய்யப்பட வேண்டும்,
மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப மும்மொழிக் கல்வித்திட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தி, விருப்பப்படும் மூன்றாவது மொழியை கற்கும் வாய்ப்பை தனியார் பள்ளி மாணவர்களைப் போல அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் வழங்க வேண்டும், அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு குழு காப்பீடு திட்டம் வழங்க வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. மாநில, கோட்ட மற்றும் மாவட்டப் பொறுப்பாளர்கள் பலர் இதனை வலியுறுத்தி பேசினார்கள்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலிருந்து சுமார் 1000க்கும் மேற்பட்ட தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆசிரியைகள், கல்வித்துறை அலுவலர்கள், அரசுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநில இணைச்செயலாளர் *ராகவன்* நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை மாநில இணைச்செயலாளர் *ராஜகோபால்*, மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் *பூங்குழலி*, மாநில ஊடகப்பிரிவு செயலாளர் *யுகபதி* ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

Saturday, October 01, 2022

October 01, 2022

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம்: ஆசிரியா்கள் சங்கம் நன்றி - Appointment of Lecturers in Polytechnic Colleges: Thanks to Teachers Association

தமிழகத்தில் காலியாக இருந்த 1,024 விரிவுரையாளா் பணியிடங்களை நிரப்பிய தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் விரிவுரையாளா் காலி பணியிடங்களுக்கு உரிய நபா்களை தோ்வு செய்ய ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் கடந்த 2019 நவ. 27-இல் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து கடந்த ஆண்டு டிச.8 முதல் 13 வரை கணினி வழித் தோ்வுகள் நடத்தப்பட்டு 1,024 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக தலைமை செயலகத்தில் 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் ஸ்டாலின் கடந்த புதன்கிழமை வழங்கினாா்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நடு அரசு பாலிடெகனிக் கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் ப.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலிடெக்னிக் கல்லூரிகளில் நீண்ட நெடுங்காலமாக விரிவுரையாளா்கள் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. இதையடுத்து தமிழக அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 1,024 பணியிடங்களை நிரப்பியுள்ளது. இதற்காக உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா், தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wednesday, September 21, 2022

September 21, 2022

151 இடங்களில் பிரசார கூட்டம்: ஆசிரியர் கூட்டணி தகவல் - Campaign meeting in 151 locations: Teacher's Alliance information

151 இடங்களில் பிரசார கூட்டம்: ஆசிரியர் கூட்டணி தகவல் - Campaign meeting in 151 locations: Teacher's Alliance information

'தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையை வரவேற்று 151 பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்' என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் தாஸ் கூறினார்.தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் கடலுாரில் நடந்தது.

மாவட்டத் தலைவர் குமரவேல் தலைமை தாங்கினார். செயலாளர் முருகன், மகளிரணி மாவட்ட செயலாளர்கள் செல்வி, அமுதா முன்னிலை வகித்தனர்.பொருளாளர் பாலா வரவேற்றார். மாநிலத் தலைவர் லட்சுமிபதி, மாநில பொதுச் செயலாளர் தாஸ் பேசினர். வட்டார செயலாளர் துளசிதாஸ் நன்றி கூறினார்.கூட்டத்தை தொடர்ந்து, ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் தாஸ் அளித்த பேட்டி:அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ மாநாடு சென்னையில் நடந்தது. மாநாட்டில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், அரசாணை எண் 101யை ரத்து செய்து, தொடக்கக் கல்வித் துறை தனியாக இயங்கும் வகையில் அரசாணை எண் 151யை வெளியிட்டார்.

இது, தொடக்கக் கல்வித்துறையை சுதந்திரமாக செயல்பட வழி வகுக்கிறது. இதனை வரவேற்று மாநிலம் முழுதும் 151 இடங்களில் பிரசார கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த கூட்டங்களில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இடை நிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்படும்' என்றார்.

Wednesday, July 13, 2022

July 13, 2022

CEO அலுவலகம் முன்பு ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை முதன்மை கல்வி அலு வலகம் (சிஇஓ) முன்பு ஓய்வூதியம், புதிய கல்வி கொள்கை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.

இதில், புதிய ஓய்வூ திய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

தேசிய கல்வி கொள்கையை ஒன்றிய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். அரசு ஊழி யர்களுக்கு 3 சதவீத அக விலைப்படியை உயர்த்த வேண்டும். 13,331 காலி பணி டங்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை காலமுறை ஊதியத்தில் நிரத்திர பணி யிடத்தில் நியமனம் செய்ய வேண்டும். உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Tuesday, July 05, 2022

July 05, 2022

நாளை பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாவது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்.

05.07.2022
தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

பெறுநர்:

மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,

 தலைமைச் செயலகம், சென்னை- 600009.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்...

தந்தி தொலைக்காட்சிக்கு நேற்று தாங்கள் அளித்துள்ள பேட்டியினை முழுவதும் கேட்டறிந்தோம். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதில் எப்போதும் போல சமயோசிதமும், சாதுர்யமும் நேற்றைய பேட்டியிலும் அமைந்திருந்தது... மகிழ்ச்சியை தருகிறது. சட்டப்பேரவையிலும் எல்லோரும் ரசிக்க கூடிய அளவில்  ஆற்றொழுக்கான நடையில் தாங்கள் உரையாற்றி வருவது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 6 ஆம் தேதி முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று தெரிவித்து உள்ளீர்கள். பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையில் முந்தைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி நிர்வாக கட்டமைப்பை மாற்ற இயலாத சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம், என்பதை எண்ணி நெஞ்சம் பொறுக்கமுடியாமல் ஒவ்வொரு ஆசிரியர்களும் இருந்து வருகிறார்கள். உ.பி மாடல் நிர்வாக கட்டமைப்பு நமக்கு தேவையில்லை. தமிழ்நாட்டினுடைய கல்வி நிர்வாக கட்டமைப்பினை தொடர்ந்து நாம் அமல்படுத்த வேண்டும். என்று தாங்கள் மூன்று முறை உறுதி அளித்து விட்டீர்கள்!.. தடையாக இருப்பது யார்?.. யார்?..

 கல்வித்துறையில் யோகி அரசின் கொள்கை கட்டமைப்பை தான் நாம் இன்னமும் நிறைவேற்றிக் கொண்டு இருக்க வேண்டுமா?..  தாய் தமிழுக்கு மறைந்த பின்னரும் பெருமையை தந்து கொண்டிப்பவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்...  அவரின் பெருமைக்குரிய பிள்ளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர்கள் எங்கிருந்தாலும் அனைவரும் தமிழால்    ஒன்று சேர முடியும் என்கிறார். வடவர் ஆதிக்கம் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழின் பெருமையை  உணர்ந்த தாங்கள் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி த்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறீர்கள்...  ஏன் அந்த நிதி ஆதாரம் இல்லாத கோரிக்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழாய்ந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 அவர்கள் தமிழின்பால் ஆழ்ந்த பற்று உடையவர்.  மாநில பெருமையினை பாதுகாக்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர்.  பள்ளிக்கல்வி ஆணையரை பொருத்தவரையில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர். வட்டார கல்வி அலுவலர்களுக்கு   தண்டனையினைப் பிறப்பித்து ஆணை வழங்குவதும்,  பணிநிறைவு பெற்றவர்களை   பணியில் இருந்து விடுவிடுப்பதும் இவரது கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளார். தொடக்கக் கல்வித் துறையை எப்படி நடத்துவது?.. திண்டுக்கல் மாவட்டத்திற்கு நோடல் அலுவலராக உள்ள இணை இயக்குனர் திரு வெ.ஜெயக்குமார் அவர்கள் ஆணையரை கேட்காமல் தொடக்கக்கல்வித்துறையில் ஏதும் செய்யக்கூடாது என மாவட்டக் கல்வி அலௌவலரிடம்  எச்சரிக்கிறார்.  மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை இணை இயக்குனர் வெ.ஜெயக்குமார் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஏற்கனவே இரண்டு பேர் மனமொத்த மாறுதல் விண்ணப்பத்தினை அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவரின் பெயரை நீக்கிவிட்டு இன்னொருவரின் பெயரை சேர்த்து இன்றைக்கே மனமொத்த மாறுதல் ஆணை வழங்கவேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளார். இதுவரையில் எந்த ஆட்சியிலும் எந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலத்திலும் நடைபெறாத விதிமீறல்கள், அத்துமீறல்கள் தற்போது நடைபெற்று வருகிறது. என்பதை உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். தேர்வுத் துறை உட்பட அனைத்து துறைகளையும் இவர் நிம்மதியாக  விடவில்லை. உறங்குகிற நேரத்தைத் தவிர மற்ற எந்த நேரமும் ஆசிரியர்களுக்கு எப்படியெல்லாம் பணிச்சுமை கொடுக்கலாம்?   என எண்ணி செயல்பட்டு வரும்  பள்ளிக்கல்வி  ஆணையர்..  அமைச்சர் கட்டுப்பாட்டில் வராத  இந்திய ஆட்சிப் பணித் துறை அலுவலர்கள், இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் எவராக இருப்பினும் பணியிட மாற்றம் செய்வதுதான் இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.  என்பதை எனது நீண்டகால பொதுவாழ்வில் பெற்ற அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


6 ஆம் தேதி வெளியிடும் அறிவிப்பில் அரசாணை 101,108 ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை தனியாகவும், தொடக்கக் கல்வித்துறை தனியாகவும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். என்ற அறிவிப்பினை தாங்கள் வெளியிட்டால்  ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் தங்கள் மீது கொண்டுள்ள  அன்பும், பற்றுதலும் பன்மடங்கு பெருகுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதையும்  உள்ளத்து உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்..


புலனத்தில் இந்த ஆட்சியில் ஆசிரியர்கள் அடிமை வம்சமாக  மாறி விட்டார்கள்... சரண்டர் ஆகிவிட்டார்கள்...  என்றெல்லாம் தொடர்ந்து பதிவுகள் வருவதை  எங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?...  பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல.. "எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும்".. இதையெல்லாம் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே?...

 1985 ஜாக்டீ போராட்டத்தில் 41 நாட்கள் சிறையில் இருந்த போது பெற்ற தாய் தந்தையர்  இறந்தபோது கூட ஜாமினில் வெளி வராத வீரவரலாறுக்கு சொந்தக்காரர்கள்   ஆசிரியர் பேரினம்...



அதேபோல 1988 நடைபெற்ற ஜாக்டீ ஜியோ  போராட்டத்தில்  சென்னை மவுண்ட் ரோட்டில் அமர்ந்து கொண்டு குதிரைப் படையை  எதிர்கொண்டவர்கள் எங்கள் மகளிர் அணியினர் ஆவார்கள்..



2003 டெஸ்மா போராட்டத்தை எதிர்கொண்டு போர்க்குணமிக்க வரலாறு படைத்த   வீரமிக்க ஆசிரியர்கள்- அரசுப்பணியாளர் சங்கங்கள்..

இந்த வரலாற்று நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமா?.. எவராலும் மறுக்கத்தான் முடியுமா?..

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை மட்டும் மீண்டும் ஒருமுறை தனியாக அழைத்து நடைமுறை சம்பவங்களை கேட்டறிய வேண்டுகிறோம்... வடமாநிலங்களில் தொடக்கக் கல்வித் துறைக்கு என தனி அமைச்சர்கள்  இருக்கிறார்கள் என்பதை எல்லாம்  தாங்களும் அறியாதவர்கள் அல்லர்; பள்ளிக் கல்வித்துறையில் முந்தைய ஆட்சியில் இழந்த உரிமையினை  மீண்டும் நிலைநாட்டி தருவீர்கள்... என்ற நம்பிக்கை உணர்வில் பயணித்து வருகிறோம்..

ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் அதிக அக்கறை கொண்டவர்கள் என்ற உணர்வில் இதனை வெளிப்படுத்த வேண்டிய  கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்...

இதயப்பற்றுதலுடன்..

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

Thursday, June 30, 2022

June 30, 2022

3 கட்ட போராட்டம்: ஆசிரியர்கள் அறிவிப்பு

'பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று கட்ட போராட்டம் நடத்தப்படும்' என, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் வெளியிட்ட அறிக்கை:

Tuesday, May 17, 2022

May 17, 2022

பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

பள்ளி திறப்பு தேதி

ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு, ஆண்டு இறுதி தேர்வு கடந்த, 13ம் தேதி நிறைவுற்றது. அவர்களுக்கு இம்மாதம் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை. விடுமுறை முடிந்து, ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை

தமிழக பாடத் திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. ஜூன் 1ல் விடைத்தாள் திருத்தம் துவங்கி, ஜூன் 17 வரை நடத்தப்படுகிறது. பொதுத் தேர்வு பணி முடிந்ததும், மீண்டும் விடை திருத்தும் பணிகளும் உள்ளதால், உயர்நிலைப் மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை கிடைக்காத சூழல் உள்ளது.

எனவே, பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம், தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், அதன் மாநில பொதுச் செயலர் பிரபாகரன் மனு அளித்துள்ளார்.அதில், 'வரும் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள் மன அழுத்தம் இன்றி பணியாற்றும் வகையில், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்கும் வகையில், பள்ளி திறப்பு தேதியை தள்ளி வைக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Tuesday, April 12, 2022

April 12, 2022

ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளி இறுதித் தோ்வுகளை நடத்த வலியுறுத்தல்

ஏப்ரல் மாதத்துக்குள் பள்ளி இறுதித் தோ்வுகளை நடத்த வலியுறுத்தல்

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை வெயிலை கருத்தில் கொண்டு பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாத இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் கூட்டணி வலியுறுத்தியது.

இந்தச் சங்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் லட்சுமிபதி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் தியாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலா் ரமேஷ், மாநில நிா்வாகிகள் கிருஷ்ணகுமாரி, சண்முகவடிவு, முனியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் மாவட்டச் செயலா் அறிவழகன் வரவேற்றாா்.

மாநில பொதுச் செயலா் தாஸ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினாா். மாநில துணை பொதுச் செயலா்கள் கமலநாதன், அசோக்குமாா், புருஷோத்தமன், மாநில கூடுதல் தலைவா் திருமலை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். விழுப்புரம் மாவட்ட கட்டடப் பிரிவுச் செயலா் ஜெயானந்தம் நன்றி கூறினாா். கூட்டத்தில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 2009-ஆம் ஆண்டுக்கு முன்னா் பணியில் சோ்ந்தவா்களுக்கும், 2009-க்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்களுக்கும் இடைநிலை ஆசிரியா்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பள்ளி இறுதித் தோ்வுகளை ஏப்ரல் மாதத்துக்குள் முடித்து, மே மாதத்தில் விடுமுறை விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
April 12, 2022

பள்ளி ஆய்வக உதவியாளர்களை பணி நிரவல் செய்ய தெளிவுரை வேண்டி கோரிக்கை

வருவாய் மாவட்ட அளவில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஆய்வக உதவியாளர் பணியிடத்தை நிரப்பவும் , இப்பணியிடமே இதுநாள் வரை அனுமதக்கப்படாத மேல்நிலைப்பள்ளிகளுக்கு , ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு ஆய்வக உதவியாளர் பணியிடம் வீதம் அரசு உயர்நிலைப்பள்ளிகளிலிருந்து பணியாளருடன் பணியிடத்தை மாற்றம் செய்யவும் , அரசு உயர்நிலப்பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கைக்கேற்ப 9 ஆம் வகுப்பு 40 க்கும் குறையாமல் , 10 ஆம் வகுப்பு -40 க்கும் குறையாமல் , அல்லது 9 மற்றும் 10 ஆம் வகுப்பு -80 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும் அவ்வகைப் பள்ளிகளில் மட்டும் ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சார்பாக 13.04.2022 க்குள் ஆய்வக உதவியாளர் பணியிட நிரவலை முடித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி சுற்றறிக்கையின்படி ஆய்வக உதவியாளர் பணிநிரவல் செய்யும்பொழுது , பணியாளர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி பணிநிரவல் செய்திட வேண்டும் எனவும் , சில மாவட்டங்களில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளர் பணியிடம் அனுமதிக்கப்பட்டு பணியாளர்கள் பணிபுரிந்துவரும் சூழ்நிலையில் உயர்நிலைப்பள்ளிகளில் உள்ள பணியாளர்களை எவ்வாறு நிரவல் செய்வது என்பதற்கான தெளிவுரையினை வழங்கிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Friday, April 08, 2022

April 08, 2022

மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் சார்பாக ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை

மதிப்பிற்குரிய ஆணையர் அவர்களுக்கு வணக்கம்

பொருள்: மாத ஊதியம் பெற்று வழங்கிட வேண்டுதல் - சார்பாக,

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட பணி நிரவல் கலந்தாய்வில் பணி இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு இதுநாள் வரை ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை.

அவர்களது பணியிடம் IFHRMS மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். எனவே கால தாமதம் ஆகிறது என்றும் அதற்கான சரியான வழிகாட்டுதல்கள் ஏதுமின்றி ஆசிரியர்கள் ஊதியம் பெற இயலாத சூழல் நிலவுகிறது. மேலும் சில பள்ளிளுக்கு காலிப்பணியிடங்களுக்கு சென்றவர்களுக்கும் அந்த பணியிடம் பள்ளியின் அளவை பதிவேட்டில் (Scale Register)-ல் இருந்தும் IFHRM-ல் இல்லை என்பதால் ஊதியம் பெற்று வழங்கப்படாமல் உள்ளது. எனவே இவைசார்ந்து உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதியம் பெற ஆவண செய்யுமாறு தங்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்

Wednesday, April 06, 2022

April 06, 2022

பணி நிரவலில் மாறுதலான ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் - தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

April 06, 2022

பொதுத் தேர்வுக்கான பாடப் பகுதி எது? குழப்பம் தீர்க்க ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

National Teachers Union Tamil Nadu demand to resolve the mess

It was announced last year that this year's priority course for 10th, 11th and 12th class students would be the same as for the general examination. Demands for further reduction in the syllabus have continued to be made to the Hon'ble Minister of Education, the Principal Secretary, the Commissioner of School Education and the Director of Examinations.

This has caused confusion among the teacher-student without delay in considering the opinion of most students that only the two-turn examination subject should be asked for the general examination as there is less time for examination as there is a clear explanation as to whether the already declared priority course is for the general examination or only the subject area asked for the diversion examination is for the general examination. Tamil Nadu National Teachers Union requests the Department of Examinations to announce குழப்பம் தீர்க்க தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை

10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கு உரிய பாடப் பகுதியாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட முன்னுரிமை பாடப் பகுதியே இவ்வாண்டிற்கும் என அறிவிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி வந்தனர் கொரானா நோய்த்தொற்றால் நேரடி வகுப்புகள் நடை பெறாததால் மாணவர் மத்தியில் கற்றல் அடைவை அடைவதில் பெரும் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது ஆகவே முன்னுரிமை பாடத்திட்டத்தை நடத்தி முடிப்பதே சிரமமான சூழ்நிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது தேர்வுக்கான பாடத்திட்ட அளவை மேலும் குறைக்க வேண்டும் என்பது குறித்த கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வி ஆணையர், தேர்வுத்துறை இயக்குநர் ஆகியோருக்கு தொடர்ந்து சென்ற வண்ணம் இருந்தது இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடத்தப்படாத பாட ங்களிலிருந்து தேர்வுக்கு வினாக்கள் கேட்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். இது ஆசிரியர் மாணவர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட முன்னுரிமை பாடப் பகுதி முழுவதும் பொதுத்தேர்வுக்கு உள்ளதா அல்லது திருப்புதல் தேர்வுக்கு கேட்கப்பட்ட பாடப் பகுதி மட்டும் பொதுத்தேர்வுக்கு உள்ளதா என்பது குறித்து தெளிவான விளக்கத்தையும் தேர்வுக்கான கால அவகாசம் குறைவாக உள்ளதால் இரு திருப்புதல் தேர்வு பாடப் பகுதி மட்டுமே பொதுத்தேர்வுக்கு கேட்கப்பட வேண்டும் என்ற பெரும்பாலான மாணவர்களின் கருத்தை பரிசீலனை செய்து காலம் தாழ்த்தாமல் தேர்வுத்துறை அறிவிக்க வேண்டும் என தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கேட்டுக் கொள்கிறது

Tuesday, April 05, 2022

April 05, 2022

10 ஆண்டுக் கோரிக்கையை நிறைவேற்ற கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தல்

10 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பி.எட். கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் மாநில தலைவா் டி. அகிலன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு : தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சாா்பில் நடத்தப்படும் எந்தவொரு தோ்விலும் கணினி அறிவியல் பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தோ்வு எழுத தகுதியில்லாத ஒரு படிப்பாக கணினி அறிவியல் பாடப்பிரிவு அமைந்துள்ளது. தற்போது ஆசிரியா் தோ்வு வாரியம் அறிவித்திருக்கும் ஆசிரியா் தகுதித்தோ்வில் கூட பி.எட்., முடித்த கணினி பட்டதாரிகளுக்கு தோ்வெழுத வாய்ப்பு வழங்கப்படவில்லை. பிஎஸ்சி, பிஎட், பிசிஏ, பி.எட். உள்ளிட்ட இளநிலை படிப்புகள் அரசு அறிவிக்கும் எந்தவொரு தோ்வையும் எழுத தகுதியில்லாத படிப்புகளாக உள்ளன. 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை தனி ஒரு பாடமாகக் கொண்டு வர மீண்டும் தமிழக அரசும், பள்ளி கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலேயே முதன் முறையாக 2011-ஆம் ஆண்டில் சமச்சீா் பாடத்திட்டத்தில் முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியால் கணினி அறிவியல் பாடம் கொண்டு வரப்பட்டது. அந்த திட்டம் ஆட்சி மாற்றத்தினால் கைவிடப்பட்டது. அதனை தற்போதைய அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என 65,000 பி.எட்., கணினி பட்டதாரிகளின் சாா்பாக கேட்டுக்கொள்கின்றோம் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog