Breaking

Showing posts with label STUDENTS. Show all posts
Showing posts with label STUDENTS. Show all posts

Monday, November 27, 2023

November 27, 2023

மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்க குறைதீர் மன்றம்



மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்க குறைதீர் மன்றம் Grievance Redressal Forum to solve problems and grievances between students, teachers and parents கல்வி பிரச்னைகளை தீர்க்க குறைதீர் மன்றம்?

பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர், பெற்றோர் இடையிலான பிரச்னைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், மாநில, மாவட்ட அளவில் குறைதீர் மன்றம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்கள், மாணவர்கள் இடையிலான மோதல், பெற்றோர், ஆசிரியர் இடையிலான பிரச்னைகள் போன்றவை, சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கூறியதாவது: ஆசிரியர், மாணவர் இடையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த விவகாரங்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோரே விசாரிக்கும் நிலை உள்ளது.

இதில், இரு தரப்பினர் இடையே நடுநிலையான தீர்வுகள் கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைமையில், மாவட்ட, மாநில அளவில் கல்வித்துறை குறை தீர் மன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Thursday, February 09, 2023

February 09, 2023

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: கற்றல் திறன் குறைவான மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் சென்னை மாவட்ட கல்வித்துறை முயற்சி

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு: கற்றல் திறன் குறைவான மாணவர்களுக்கு பயிற்சி கையேடுகள் சென்னை மாவட்ட கல்வித்துறை முயற்சி

Class 10 General Examination: Study Guides for Students with Learning Disabilities Chennai District Education Department Initiative

Tuesday, September 20, 2022

September 20, 2022

மாணவர்களின் உயிரை 'காவு' வாங்கும் முன் போதிய பஸ் இயக்குமா அரசு?

சீர்காழி சுற்று வட்டார கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் ஆபத்தான முறையில் படியில் தொங்கிய படி பள்ளிக்குப் மாணவர்கள் செல்வதை தடுக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்டு 79 கிராமங்களும் 120-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் அமைந்துள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ மாணவிகள் வேலை வாய்ப்பு, கல்வி, மருத்துவம் என அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கும் சீர்காழி நகருக்கு வரவேண்டி உள்ளது.

இத்தனை கிராமங்களில் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் நகர் பகுதிக்கு பயணித்து வரும் நிலையில் சீர்காழி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து 19 நகர பஸ்களும், சில தனியார் பஸ்களும் மட்டுமே கிராம பகுதிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் பெருகிய நிலையில் கிராமபுற ஏழை எளிய மக்கள் பஸ்கலை மட்டுமே இன்றளவும் நம்பியுள்ளனர். குறிப்பாக காலை பள்ளி, கல்லூரி, வேலை வாய்புக்காக நகர்பகுதிக்கு செல்ல போதிய எண்ணிக்கையிலான பஸ்கள் இயக்கப்படாததால் பஸ்ஸின் படிகட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர். ஒரு நகர பஸ்ஸில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து செல்வதால் அதிக கூட்ட நெரிசலுடன் ஆபத்தும் தொடர்கிறது.

எனவே கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது கிராம புறங்களுக்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Friday, September 09, 2022

September 09, 2022

மாணவர்களே, கலந்தாய்வில் புதிய நடைமுறை.. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு..!

The Directorate of Medical Education has announced that it has introduced a new procedure for medical consultation. In a press release issued by the Directorate of Medical Education in this regard, 'NEET UG examination for admission to junior medical courses including MPBS, BDS in medical colleges has been conducted and the results have been announced.

After allotment of 757 seats for the 15% all-India quota of 5,050 seats in 35 government medical colleges in Tamil Nadu, the Directorate of Medical Education is going to conduct the counseling for the remaining 4,293 seats and government quota seats in other private colleges. Notification for medical consultation will be out in a day or two. Students can apply to participate in the counseling from next week.

First the All India Quota Seats Consultation will be held then the State Quota Seats will start. The Directorate of Medical Education has introduced a new procedure for medical consultation in the current year. Accordingly, at the time of medical consultation, after allotment of seats, students have to pay one year's tuition fees to the examination board.

By this, additional fees or denial of admissions will be completely prevented when students visit the colleges in person after the consultation. The examination committee will later release the tuition fees paid by the students to the concerned colleges,” it said.
மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் யு.ஜி தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், மீதமுள்ள 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்த உள்ளது.

மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும். மாணவர்கள் அடுத்த வாரம் முதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்.

முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும்.

நடப்பு ஆண்டில் மருத்துவக் கலந்தாய்வுக்கு புதிய நடைமுறையை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, மருத்துவக் கலந்தாய்வின்போதே, இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக் குழுவிடம் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

இதன் மூலம், கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும்.

மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும்’ என்று அதில் தெரிவித்துள்ளது.

Wednesday, August 31, 2022

August 31, 2022

தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள்

தேர்வில் Fail ஆக்கியதால் ஆசிரியர்களை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய மாணவர்கள்

"எங்களையே ஃபெயில் ஆக்குவியா" - ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த காலம் மலையேறி, தற்போது ஆசிரியர்களை மாணவர்கள் அடிக்கும் போதாத காலம் வந்திருக்கிறது. பெற்றோர்களின் அளவுக்கு மீறிய செல்லம், ரவுடிகளை ஹீரோக்களாக காட்டும் திரைப்படங்களின் போக்கு, எளிதாக கிடைக்கும் போதைப்பொருட்கள் ஆகியவையே இன்றைய மாணவர்களை தவறான திசைக்கு கொண்டு செல்கிறது.

அந்த வகையில், ஜார்க்கண்டில் நடந்திருக்கும் ஒரு சம்பவம் நம் சமூகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியையும், அச்சத்தையும் எழுப்புகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் டும்கா மாவட்டத்தில் பழங்குடியினர் அரசுப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே, கடந்த வாரம் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடத்தில் செய்முறைத் தேர்வு (பிராட்டிக்கல் எக்ஸாம்) நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி இருக்கின்றன. இதில் 20 மாணவர்கள் கிரேட் 'டி' மதிப்பெண்களை பெற்றுள்ளனர். அது ஃபெயிலுக்கு சமமான மதிப்பெண்கள் ஆகும்.

தங்களுக்கு ஃபெயில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த மாணவர்கள், கணித ஆசிரியர் உள்ளிட்ட சில ஆசிரியர்களை பழிவாங்க திட்டமிட்டனர். அதன்படி, நேற்று மதிய உணவு இடைவேளையின் போது அந்த 20 மாணவர்களும், அவர்களுடன் மேலும் சில மாணவர்களும் சேர்ந்து கொண்டு கணித ஆசிரியர்கள் இருவரை சட்டையை பிடித்து வெளியே இழுத்து வந்தனர். ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தேர்வு முடிவுகளை அரசு இணையதளத்தில் பதிவேற்றிய பள்ளியின் கிளார்க்கையும் மாணவர்கள் வெளியே இழுத்து வந்தனர்.

பின்னர் அவர்கள் மூவரையும் பள்ளி வளாகத்தில் இருந்த பெரிய மரத்தில் கட்டிய மாணவர்கள், அவர்களை சரமாரியாக அடித்து உதைத்தனர். பெல்ட், பிரம்பு ஆகியவற்றால் ஆசிரியர்களை மாணவர்கள் அடித்தனர். இதனால் வலி தாங்க முடியாமல் ஆசிரியர்கள் அலறினர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், அங்கு வந்து மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்களை விடுவித்தனர். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர்களை அடித்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸார் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், பள்ளி நிர்வாகம் மாணவர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை கருதி, தாக்கப்பட்ட ஆசிரியர்களும் கூட மாணவர்கள் மீது புகார் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் மாணவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்ய முடியவில்லை. இதையடுத்து, மாணவர்களை கடுமையாக எச்சரித்து போலீஸார் அனுப்பி வைத்தனர். ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து மாணவர்கள் தாக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைலராக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

Thursday, August 25, 2022

August 25, 2022

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 72 லட்சமாக உயர்வு: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 72 லட்சமாக உயர்ந்துள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிமுக அரசு கடந்த 10 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் அரசு கையாண்ட முறையால் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்திருந்தது. இந்நிலையில், கொரோனா காலத்தில் இருந்த அச்சம் காரணமாக பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. அதே நேரத்தில் தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை நடத்துகிறேன் என்ற போர்வையில், தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதல் உயர் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களிடம் இருந்து கறாராக கட்டணம் வசூலித்தனர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியில் வரமுடியாத நிலை ஏற்பட்டதால், வருவாய் குறைந்த குடும்பங்களை சேர்ந்தவர்கள், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்கவைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டதும், எதிர்பார்த்த அளவுக்கு மாணவ மாணவியர் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து,பாதியில் படிப்பை நிறுத்தியவர்களின் கணக்கெடுப்பை பள்ளிக் கல்வித்துறை நடத்தியது. அதில் இனம் காணப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கவும் அவர்களுக்கு வேண்டிய வசதிகள், மற்றும் இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கி அவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்த்தனர்.

அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் படித்து கட்டண பாக்கி செலுத்த முடியாத நிலையில் இருந்தவர்களையும் அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கேற்ப பள்ளி மாணவர்களின் மாற்றுச் சான்று இல்லாவிட்டாலும் சேர்க்கை வழங்க அரசு உத்தரவிட்டது. அதனால் அதிக அளவில் மாணவர்கள் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிப்படியாக சேர்ந்தனர். கடந்த ஆண்டு வரை சுமார் 52 லட்சம் படித்து வந்த அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து சுமார் 72 லட்சமாக தற்போது படித்து வருகின்றனர்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பாடங்களை நல்ல முறையில் நடத்தி முடிக்க வசதியாக ஆசிரியர்களின் பணிகளை குறைக்கவும் அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதில் ஒரு அம்சமாக 11 பதிவேடுகளை நீக்கவும், 81 பதிவேடுகளை கல்வி தகவல் மேலாண்மை முறைமை வாயிலாக இணைய வழியில் மட்டும் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Saturday, August 20, 2022

August 20, 2022

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் அறிவிப்பு!

சென்னை: சென்னை கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022க்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 18 முதல் 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்தது. www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 10ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என தெரிவித்தது.

Tuesday, August 02, 2022

August 02, 2022

”இனியாவது கனிவுடன் இருங்களேன்..”- வைரலாகும் ஆசிரியருக்கு மாணவி அனுப்பிய வாட்ஸ்-அப் மேசேஜ்

பள்ளிக் காலங்களில் விருப்பமான ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்ட பள்ளியை விட்டுச் சென்றால் மாணவர்கள் பலரும் அந்த ஆசிரியரை சூழ்ந்து அழுது, கட்டியணைத்து பிரியா விடை கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அது போன்ற நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.

இப்படி இருக்கையில், தன்னுடைய பள்ளி காலத்தின் போது தன்னை மட்டம்தட்டி பேசிய ஆசிரியர் ஒருவருக்கு பெண் ஒருவர் வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் செய்து “நீங்கள் நினைத்தது போல, கூறியது போல இல்லாமல் நல்ல மதிப்பெண் பெற்று நல்ல கல்வி நிலையத்தில் எனக்கு பிடித்த படிப்பை படிக்கப்போகிறேன். இனிமேலாவது கனிவுடன் இருக்க பழகுங்கள். குறிப்பாக உங்களது உதவியை நாடும் மாணவர்களிடம் கனிவுடனும் இருங்கள்” எனக் குறிப்பிட்டிருந்த ஸ்க்ரீன்ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

அதில், இரண்டு ஆண்டுகளாக தன்னுடைய டீச்சருக்கு இப்படி ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என நானும் என்னுடைய தோழியும் நினைத்திருந்தோம். அதற்கான நாள் இப்போதுதான் வாய்த்திருக்கிறது என கேப்ஷனும் இட்டிருக்கிறார். இந்த பதிவு ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு நெட்டிசன்களிடையே படுவைரலாகியிருக்கிறது. மேலும், தங்களுடைய பள்ளி காலங்களின் போது ஆசிரியர்கள் தங்களை இழிவுபடுத்தி பேசியது பற்றியும் பகிர்ந்து பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், வைராலன பதிவில் உள்ள வாட்ஸ் அப் மெசேஜிற்கு அந்த ஆசிரியர் பதிலளித்துள்ளார் எனவும் இணையவாசிகள் கேட்டிருக்கிறார்கள். அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டையும் அப்பெண் ஷேர் செய்திருக்கிறார்.

அதில், “நீ இப்படி தேர்ச்சி பெறுவதற்கான பெருமையும் என்னைத்தான் சேரும்” என அந்த ஆசிரியர் பதிலளித்திருக்கிறார். அந்த பதிவும் பலரால் ஷேர் செய்யப்பட்டதோடு விமர்சன பதிவுகளும் இடப்பட்டிருக்கிறது.

Friday, April 22, 2022

April 22, 2022

மாணவர்கள் நாளை பள்ளி வரவேண்டியதில்லை - தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்!

நாளை SMC மறுகட்டமைப்பு நடைபெறும் நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்கள் வரவேண்டியதில்லை. தொடக்கக் கல்வி இயக்குநர் தகவல்

மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மட்டும் நாளை விடுமுறை

நடுநிலைப் பள்ளிகளில் நிர்வாகக்குழு அமைக்கப்பட இருப்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என்று கல்வித்துறை அறிவிப்பு.

Wednesday, April 20, 2022

April 20, 2022

மாணவர்கள் சேர ஆர்வம் குறைவு; பாலிடெக்னிக்குகளில் 1.10 லட்சம் இடங்கள் காலி

தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1.10 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன. பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரமாணவர்களின் ஆர்வம் குறைந்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பேசிய உதகமண்டலம் காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கணேஷ், தொகுதியில் உள்ள மஞ்சூர் பகுதியில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதேபோல, கூடலூர் தொகுதிஅதிமுக உறுப்பினர் பொன் ஜெயசீலன், தனது தொகுதியில் 2003-ம் ஆண்டு தொடக்கப்பட்ட கல்லூரி, 2019-ல் அரசுக் கல்லூரியாக மாற்றப்பட்டுள்ளதாகவும், அக்கல்லூரியில் தாவரவியல், விலங்கியல், தமிழ்உள்ளிட்ட பாடப்பிரிவுகள் தொடங்கவேண்டும் என்றும் கோரினார்.

பண்ருட்டி தொகுதியில், அரசுகலை, அறிவியல் கல்லூரி தொடங்குவது தொடர்பாக உறுப்பினர் தி.வேல்முருகன் (தவாக) கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியதாவது:

ஏற்கெனவே உதகமண்டலம் தொகுதியில் தலா ஒரு அரசுமற்றும் உதவி பெறும் பாலிடெக்னிக்குகள் உள்ளன. எனவே, மஞ்சூரில் தேவையில்லை. இதுதவிர,தமிழகத்தில் தற்போது பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர விரும்புவதில்லை. ஏற்கெனவே அங்கு இருக்கும் 2 கல்லூரிகளில் உள்ள 750 இடங்களில் 265 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. மேலும், தமிழகத்தில் உள்ள மொத்த பாலிடெக்னிக் இடங்கள் 1,67,616. இதில், 56,801 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. எஞ்சிய 1,10.815 இடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையை போக்கத்தான், ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை முதல்வர் தொடங்கியுள்ளார். இதன்மூலம் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்படும்.

இதுதவிர, தமிழகத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 16 கல்லூரிகள், இந்த ஆண்டு 10 கல்லூரிகள் என அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு கல்லூரி கூட இல்லாத தொகுதிக்கு கல்லூரியை வழங்க வேண்டும் என செயல்பட்டு வருகிறோம்.

கல்லூரிகளி்ல் தேவைக்கேற்ப புதிய பாடப்பிரிவுகள் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10 கல்லூரிகளில் புதிதாக பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பு தொடங்கப்பட உள்ளது. பல்வேறு கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளும் தொடங்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, April 11, 2022

April 11, 2022

மாணவரை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

In the award city, the teacher who scored the student, was ‘suspended’.

Virudhunagar District Principal Education Officer Gnanagauri said: Velmurugan, a postgraduate zoology teacher at Chattarettiyapatti Government High School, caused a stir at the March 3 public change consultation. Then, with the help of the police, the consultation was held. Insulted a fellow teacher, in the presence of students.

A memo was sent on March 22 to explain these. He did not give a proper answer. He did not respond to a request from his superiors. Thus he was ‘suspended ’.Thus he said விருதுநகரில், மாணவரை அடித்த ஆசிரியர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறியதாவது:சத்திரரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியரான வேல்முருகன் மார்ச் 3ல் நடந்த பொது மாறுதல் கலந்தாய்வில் குழப்பத்தை ஏற்படுத்தினார். பின், போலீஸ் உதவியுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டது.திருப்புதல் தேர்வில் வினாத்தாள் பற்றாக்குறையை, பொதுத்தேர்வு வினாத்தாள் பற்றாக்குறை எனக் கூறி பதற்றத்தை உருவாக்கினார்.

ஆசிரியர் 'சஸ்பெண்ட்'

சக ஆசிரியையை, மாணவர்கள் முன்னிலையில் அவமதித்துள்ளார். இவற்றுக்கு விளக்கம் அளிக்க மார்ச் 22ல் 'மெமோ' அனுப்பப்பட்டது. அவர் உரிய பதில் தரவில்லை.அவர், வகுப்பில் மாணவரை தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக மேலதிகாரிகள் கேட்டதற்கும் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இவ்வாறு அவர் கூறினார்

Thursday, March 31, 2022

March 31, 2022

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது 6-ஆக உயர்வு

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியது ஏன்? என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயதை 6-ஆக உயர்த்தியதில் இருக்கும் பின்புல காரணங்கள் என்ன எனவும் எல்கேஜி வகுப்பில் தேர்ச்சி பெற்ற லட்சக்கணக்கான சிறார்கள் பாதிக்கப்படுகிறார்களா எனவும் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1ம் வகுப்பு சேர்க்கை வயதை 6 ஆக உயர்த்தியது ஏன்? என்றும், அதற்கான பின்புல காரணம் என்ன என்றும் மாநிலங்களவையில் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். அதற்கு அமைச்சர் அளித்த விளக்கத்தையும் வைகோ வெளியிட்டுள்ளார். மாநிலங்களவையில் வைகோ எழுப்பிய கேள்வி , “ கீழ்காணும் கேள்விகளுக்கு, கல்வி அமைச்சர் விளக்கம் தருவாரா?

1. 2022 கல்வி ஆண்டிற்கான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை, ஐந்தில் இருந்து 6ஆக உயர்த்தி இருக்கின்றீர்களா?



2. அவ்வாறு இருப்பின், தன்னிச்சையான இந்த நடவடிக்கைக்கான பின்புலக் காரணங்கள் என்ன?

3. எல்கேஜி வகுப்புகளை முடித்த இலட்சக்கணக்கான குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றார்களா?

4. அவ்வாறு இருப்பின், அரசு தன் நிலையை மாற்றிக்கொள்ளுமா? முந்தைய வழமை போல் சேர்க்கை நடைபெறுமா?

5. இல்லை என்றால், அதற்கான காரணம் என்ன? கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூர்ணா தேவி விளக்கம் 1 முதல் 3 கேள்விகளுக்கு விளக்கம் : ஆம். 2022/23 கல்வி ஆண்டில், 1.04.2022 முதல், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பு, 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2. 2020 ஆம் ஆண்டு புதிய கல்விக் கொள்கையின்படி, 5+3+3+4 என்ற கற்பித்தல் முறை வகுக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி, அங்கன்வாடி, பாலவாடிகா மற்றும் 3 ஆண்டுகள் முன்பள்ளிக் கல்வி ஆகியவை, 3 முதல் 6 வயது வரையிலும், 1,2 ஆம் வகுப்புகள் இரண்டு ஆண்டுகளும் என வகுக்கப்பட்டு இருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு, குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமை வழங்கப்பட்டு இருக்கின்றது.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ளது. நாட்டில் பெரும்பாலான பள்ளிகள், மாநில அரசுகள், ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப் பகுதிகளின் அதிகாரத்தில் உள்ளன. எனவே, முதலாம் வகுப்பு சேர்க்கைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து, மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதி அரசுகளிடம் கருத்து கேட்கப்பட்டது. அவற்றுள் 14 அரசுகள், வயது வரம்பு 5 ஆக இருக்க வேண்டும் என்றும், 22 அரசுகள் வயது வரம்பு 6ஆக இருக்க வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்து உள்ளன. இந்த ஒழுங்கு இன்மை, பதிவு செய்தல் பற்றிய தவறான அறிக்கைகளால் விளைகின்றது. இதனால், வெவ்வேறு மாநிலங்களில் நிகர சேர்க்கை விகிதம் பாதிக்கப்படுகின்றது. அதன்பின்னர், தேசிய அளவில் நடைபெறுகின்ற போட்டித் தேர்வுகளிலும், இந்த சிரமங்கள் எதிரொலிக்கின்றன. 2020 புதிய கல்விக்கொள்கை, 2009 குழந்தைகள் கல்வி உரிமைச்சட்ட விதிகளின் பார்வையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிப்பகுதிகள், மார்ச் மற்றும் அக்டோபர் சேர்க்கை நாள்களில், முதலாம் வகுப்பில் சேருவதற்கான வயது வரம்பை, நாடு முழுமையும் ஒன்றுபோல, 6ஆக ஆக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேள்வி 4 க்கு விளக்கம். இந்தப் பிரச்சினை, நீதிமன்றத்தின் ஆய்வில் உள்ளது. “ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, March 29, 2022

March 29, 2022

ஸ்ட்ரெஸ் ஸ்டூடண்ட்ஸ்.. வெடிக்கும் வன்முறை!

Friday, March 25, 2022

March 25, 2022

முதல் மதிப்பெண் பெற பள்ளியின் முதன்மை மாணவிக்கு டிசி வழங்கியதால் தற்கொலை

ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரில் பிரம்மர்ஷி பள்ளியில் மாணவி மிஸ்பா 10ம் வகுப்பு படித்து வந்தார். இவர் படிப்பில் முதல் மாணவியாக இருந்தார். ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுனில் மகள் பூஜிதா. இவர் அனைத்து தேர்விலும் 2ம் இடத்திற்கு சென்றார். இதனால், மிஸ்பாவை பள்ளியை விட்டு நீக்க முடிவு செய்து தலைமை ஆசிரியர் ரமேஷ் மூலம் டிசி வழங்கி உள்ளார். இதனால், மனமுடைந்த மிஸ்பா, உருக்கமான கடிதம் எழுதி வைத்து நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்திற்கு பள்ளி நிர்வாகமே பொறுப்பு எனக் கூறி மிஸ்பாவின் பெற்றோர்கள் உறவினர்கள், மாணவர் சங்கத்தினர் பள்ளியை நேற்று முற்றுகையிட்டனர். மிஸ்பா தனது தந்தைக்கு ஆங்கிலத்தில் எழுதியுள்ள கடிதத்தில், ‘அப்பா மன்னிக்கவும். என்னால் உங்களுக்கு பல பிரச்னைகள். எனது நெருங்கிய தோழியே எனது மரணத்திற்கு காரணம். அனைத்திற்கும் நீ தான் காரணம் பூஜிதா.... என்னை மன்னிக்கவும் அப்பா. உன்னை விட்டு போக முடியாது. ஆனால், இன்று உன்னை விட்டு மீண்டும் வர முடியாத இடத்திற்கு செல்கிறேன். என் மரணத்திற்கு ஒரே காரணம் பூஜிதா, பூஜிதா, பூஜிதா. இப்படிக்கு உங்கள் மகள் மிஸ்பா. விடைபெறுகிறேன்,’ என்று கூறியுள்ளார்.

Friday, March 18, 2022

March 18, 2022

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி எல்கேஜி மாணவன் பலி

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அடுத்த கொருக்காத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. நெசவு தொழிலாளி. இவரது மனைவி ராணி. இவர்களின் மகன் விக்னேஷ் (8) வாழைப்பந்தல் பகுதியில் உள்ள தனியார் நர்சரி பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கிறான்.

இதையும் படிக்க | திருக்குறள் ஒப்பித்தல் போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

2வது மகன் சர்வேசை (4) நேற்று மதியம் அதே பள்ளியில் எல்கேஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். பள்ளியில் இருந்து நேற்று மாலை 3.30 மணிக்கு குழந்தைகளை வேனில் அனுப்பியுள்ளனர். வேனை பள்ளி உரிமையாளரே ஓட்டி சென்றுள்ளார். வீட்டு அருகே வேனை விட்டு கீழே இறங்கிய சர்வேஷ் முன் பக்கம் சென்றுள்ளான். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கவே, விக்னேஷ் கத்தினான். அதை கவனிக்காமல் தமிழ்ச்செல்வன் வேனை ஓட்டியதில் சர்வேஷின் தலையில் முன்சக்கரம் ஏறியதில் மூளை சிதறி பலியானான். அக்கம் பக்கத்தினர் சத்தம் போடவே தமிழ்ச்செல்வன் வேனை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
March 18, 2022

இஸ்ரோவின் 'இளம் விஞ்ஞானி' பயிற்சிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள் ஏப்.10

பள்ளி மாணவர்களுக்கான ‘யுவிகா’ இளம் விஞ்ஞானி திட்டப் பயிற்சி முகாம் மே 16 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை உருவாக்கும் நோக்கில் ‘யுவிகா’ என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சிகள் வழங்கப்படும். விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இதற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் தலா 3 அல்லது 4 பேர் என மொத்தம் 150 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதையும் படிக்க | ‘டெட்’ தேர்வு அறிவிப்பு குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

இதற்கிடையே, கரோனா பரவல்காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகயுவிகா பயிற்சி முகாம் நடத்தப்படவில்லை. தற்போது கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் இந்த ஆண்டில் யுவிகா பயிற்சி முகாம் நடத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. கடைசி நாள் ஏப்.10
அதன்படி, இஸ்ரோவின் 4 மையங்களில் மே 16 முதல் 28-ம் தேதி வரை மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பம் உள்ளவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் மூலமாக ஏப்.10-ம்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்கள் பட்டியல் ஏப்.20-ம் தேதி வெளியிடப்படும். இதுதொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் 080 2217 2119 என்ற தொலைபேசி எண் அல்லது yuvika@isro.gov.in மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொள்ளலாம் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tuesday, March 15, 2022

March 15, 2022

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் கலைச்செல்வன் வயது 16 தற்கொலை செய்து கொண்டார்.

கலைச்செல்வன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவர் தேர்வில் பார்த்து எழுதியதாக ஆசிரியர் அவரை திட்டி உள்ளார் இதனால் மன உளைச்சல் அடைந்த கலைச்செல்வன் பள்ளி மொட்டை மாடியில் சென்று கீழே குதித்தார். எதில் கலைச்செல்வன் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கி வருகின்றனர் மேலும் ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒருபுறம் கருத்து எழுந்துள்ளது.

Total Pageviews

Search This Blog