Breaking

Showing posts with label ஆசிரியர்கள். Show all posts
Showing posts with label ஆசிரியர்கள். Show all posts

Monday, August 29, 2022

August 29, 2022

செப்டம்பர் 10-ந் தேதி ஜாக்டோ-ஜியோ மாநாடு - 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் பங்கேற்பு

Jacto-Jeo conference on 10th September - 3 lakh government employees, teachers, civil servants to participate

சென்னையில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் 3 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பார்கள் என ஜாக்டோ-ஜியோ பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம், சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பகுதியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் செய்தி தொடர்பாளருமான கு.தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் அருள்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் தியாகராஜன் கூறியதாவது:-

10-ந்தேதி மாநாடு

ஜாக்டோ-ஜியோ பேரமைப்பு சார்பில் வருகிற 10-ந்தேதி சென்னையில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள இருக்கிறார். இதில் ஒட்டுமொத்த தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வது என இந்த செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏறத்தாழ 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்கள் குடும்பங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள்.

ஆணையர் பதவி ரத்து

பழைய ஓய்வூதியத் திட்டம், அரசாங்க 101, 108 ரத்து, ஆணையர் பணியிடத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட எங்களுடைய கோரிக்கைகளை எல்லாம் முதல்-அமைச்சர் பரிசீலிப்பார் என்ற நம்பிக்கையோடு வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டை நடத்துகிறோம்.

கல்வித்துறைக்கு தொடர்பு இல்லாத ஆணையர் பணியிடத்தை கொண்டு வந்த நாள் முதல் எங்கள் சங்கத்தையும், நிர்வாகிகளையும் எதுவும் கேட்பதில்லை. ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடுகளால்தான் கல்வித்துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் கெட்ட பெயர் வருகிறது. எனவே இந்த துறையில் நிபுணத்துவம் வாய்ந்த அந்த இயக்குனர் பணியிடத்தை பதவி உயர்வு மூலம் கொண்டுவர வேண்டும். ஆணையர் பதவியை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Monday, August 08, 2022

August 08, 2022

`தவறு செய்யும் மாணவர்களுக்கு இந்த தண்டனைகளை கொடுங்க’- ஆசிரியர்களுக்கு அரசு கொடுத்த ஐடியாஸ்

`தவறு செய்யும் மாணவர்களுக்கு இந்த தண்டனைகளை கொடுங்க’- ஆசிரியர்களுக்கு அரசு கொடுத்த ஐடியாஸ்

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிறார் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முடிவடைவதென்பது, `இந்தக் காலத்து பிள்ளைகளை யாராலுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுக்கு ஏமாற்றமென்பதே வாழ்வில் இருப்பதில்லை. எல்லாவற்றிலும் அவசரம்தான். தவறு செய்தார்கள் என சிறு தண்டனை கொடுத்தாலும், மிக மோசமான முடிவுகளை அவர்கள் எடுத்துவிடுகின்றனர்’ என்ற ஒற்றை புள்ளியில்தான். இதை முன்னிறுத்தி தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அணையம் பள்ளிக்கூடம் மற்றும் பொது இடங்களில் குழந்தைகளை, குறிப்பாக பள்ளி மாணவர்களை கையாளும் சில வழிமுறைகளை தமிழக அரசின் கல்வித்துறைக்கு வழங்கியுள்ளது.

அதன்படி, அனைத்து மாவட்ட சிஇஓ-க்களுக்கு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் `பொது போக்குவரத்தில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தல், ஆசிரியர்களை அவமதித்தல், புகைப்பிடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், மற்ற குழந்தைகளை அடித்தல், ஆசிரியர்களை உடல் ரீதியாக பயன்படுத்துதல், சாதி மத பொருளாதார ரீதியாக மற்றவர்களிடம் பாகுபாடு பார்த்தல், புண்படுத்துதல் உட்பட குழந்தைகள் செய்யும் பெரும்பாலான தவறுகளை பட்டியலிட்டுக்கொள்ளவும். இத்தகைய குற்றங்களில் மாணவர்கள் ஈடுபட்டால், பள்ளி ஆலோசகர் முதலில் தக்க ஆலோசனை வழங்கவேண்டும். இதே தவறை 2 -வது மற்றும் 3-வது முறை செய்தால், ஆசிரியர்கள் கையாளவும். ஆசிரியர்கள் கையாள வேண்டிய ஒழுங்குமுறை நுட்பங்கள்: அம்மாணவர்,

* 5 திருக்குறளை படித்து பொருளோடு ஆசிரியர்களிடம் எழுதிக்காட்டவேண்டும்

* 2 நீதிக்கதைகளை பெற்றோரிடம் இருந்து கற்று, வகுப்பறையில் சொல்ல வேண்டும்

* 5 செய்தி துணுக்குகளை சேகரித்து வகுப்பறையில் ஒரு வாரத்துக்கு படித்துக்காட்ட வேண்டும்

* வகுப்பு மாணவர்களை ஒழுங்குப்படுத்த ஒரு வாரத்துக்கு வகுப்பின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும்

* 5 வரலாற்று தலைவர்களைப்பற்றி அறிந்துக்கொண்டு வகுப்பறையில் எடுத்துரைக்க வேண்டும்.

* சிறந்த ஆளுமைகளின் உண்மைக்கதையை கற்றுக்கொண்டு வகுப்பறையில் மாணவர்களிடம் விளக்க வேண்டும்

* நல்ல பழக்க வழக்கங்கள் பற்றிய வரைபடம் எழுத வேண்டும்

* பாதுகாப்பு மற்றும் முதலுதவி பற்றிய வரைபடம் எழுதவேண்டும்

இவற்றுடன் 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம்.
3-வது எச்சரிக்கையிலும் திருந்தாவிட்டால், அருகிலுள்ள காவல் நிலையத்தில் இருந்து குழந்தைகள் நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை, ஆலோசனை மற்றும் ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் பிறகு 5-வது முறையாக தவறு செய்தால், சுற்றுச்சூழலின் மாற்றமும், நட்பு வட்டாரமும் குழந்தையை ஒழுங்குப்படுத்த உதவும் என்பதால், பள்ளி நிர்வாக குழு ஒப்புதலோடு அருகிலுள்ள அரசு பள்ளிக்கு மாற்றலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, August 04, 2022

August 04, 2022

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

அரசு பள்ளிக்குள் திடீரென நுழைந்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ஆடிப்போன ஆசிரியர்கள்..! நடந்தது என்ன..?

திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் இஸ்ரோ சாட்டிலைட் வடிவமைப்பு பணியில் ஈடுபட்டு சாதனை புரிந்தார்கள்.

இதனை அறிந்த மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் அப்பள்ளிக்கு சென்று மாணவிகளை ஆச்சர்யபட வைத்தார். மாணவிகளுக்கு பாராட்டு தெரிவித்து புத்தகங்களை பரிசளித்தார். இஸ்ரோவின் 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' சார்பில் இப்பள்ளியின் 10 மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 'ஆர்டினோ ஐ.இ.டி சாஃப்ட்வேர்' தொழில்நுட்பத்துடன் 'வான்வெளி உயரம், தட்பவெப்பம், ஈரப்பதம்' ஆகியவற்றை உள்ளடக்கிய புரோகிராமை இப்பள்ளி மாணவிகள் வெற்றிகரமாக செய்துமுடித்தார்கள். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் வேறொரு நிகழ்ச்சிக்காக மதுரை சென்றிருந்த நிலையில், இச்செய்தியினை அறிந்து அப்பள்ளிக்கு திடீரென சென்றார்.

அம்மாணவிகளையும், உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் சந்தித்து தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார். 10 மாணவிகளும் ஆகஸ்ட் மாதம் 7'ம் தேதி ஸ்ரீகரிகோட்டா இஸ்ரோ மையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்திக்க இருக்கிறார்கள். மேலும் பள்ளியை பார்வையிட்டு அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும், கற்றல் முறையினையும் ஆய்வுசெய்து பள்ளிக்குத் தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாக உறுதியளித்தார்.

Saturday, July 30, 2022

July 30, 2022

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப்பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:



மலைப்பகுதிகளில் உள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என முதலவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஏற்கனவே வால்பாறை, ஊட்டி பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக மலைவாழ் மக்களின் குழந்தைகளின் கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஏற்காடு மலைப்பகுதியில் உள்ள புளியங்கடை, செங்காடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன.



பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற பெயரில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 10,031 பள்ளிகளில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, ரூ.1300 கோடியில் இந்த திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2500 பள்ளிகளில் மாணவர்கள் வகுப்பறையின்றி மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. அதற்கு கணக்கீடு செய்யப்பட்டு கூடுதல் வகுப்பறைகள் அமைக்கப்படும். 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. கழிவறை வசதியும் ஏற்படுத்தப்படும்.

கள்ளக்குறிச்சி பிரச்னையில் மாணவ-மாணவியருக்காக இப்போதைக்கு ஆன்லைன் முறையில் பாடம் எடுக்கும் பணி கடந்த புதன்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 81 சதவீத மாணவர்கள் ஆன்லைனில் கல்வி பயின்று வருகின்றனர். எங்களுடைய கவனம் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மீது உள்ளது. விரைவில் தனியார் கல்லூரியில் இந்த மாணவர்களுக்காக நேரடியாக பயிற்றுவிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் இதனை கவனிக்க தனியாக நியமிக்கப்பட்டுள்ளார். பெற்றோரின் விருப்பத்திற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.



உடல்நலம் மற்றும் மன நலம் சார்ந்த பிரச்சினைகளை ஒவ்வொரு வட்டாரங்களிலும் 2 மருத்துவர்கள் கவனிக்க உள்ளனர். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவர்கள் பள்ளிக்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. kaninikkalvi.blogspot.com இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.



காலை சிற்றுண்டி திட்டத்திற்கான பணிகள் தொடங்கியுள்ளன. தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கபட்டுள்ளார். காலை 7.30 மணிக்குள் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி கிடைக்க திட்டமிட்டு வருகிறோம். விரைவில் அதற்கான அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். காலை சிற்றுண்டி திட்டம் எப்போது தொடங்கும் என்பதை முதல்வர் அறிவிப்பார்.



வார விடுமுறை நாள்களில் பள்ளிகளை நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். குழந்தைகளுக்கான 2 நாள்களை அவர்கள் அனுபவிக்க விட வேண்டும். தனியார் பள்ளிகள் அவர்களுக்கு பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் குழந்தைகளை துன்புறுத்தக் கூடாது. தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களில் வகுப்புகள் நடத்தி அழுத்தத்தைத் தரக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

தசைக்குறைபாடுள்ள மாணவர்களுக்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி ஏதாவது ஒரு வகையில் மாணவர்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்படும் பள்ளிக் குழந்தைகளிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது. இது மிகப்பெரிய முறைகேடு. சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.



தமிழகம் முழுவதும் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். அவர்களுக்கான வகுப்பறைகள் கூடுதலாக உருவாக்கப்படும். அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் புதிதாக 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சேர்ந்துள்ளனர். kaninikkalvi.blogspot.com 9 முதல் 12-ம் வகுப்புகளில் 9 லட்சம் பேர் வரை சேர்ந்துள்ளனர். உள்கட்டமைப்பு, போதுமான ஆசிரியர் நியமனம் என்பது அரசின் கடமையாகும். 9,494 ஆசிரியர்களை நியமிக்க திட்டமிட்டு இருந்தோம். கூடுதல் மாணவர் சேர்க்கையால் தற்போது 10,300-க்கும் அதிகமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய நிலை உள்ளது.



மடிக்கணினி கட்டாயம் வழங்கப்படும். கரோனா காலத்தில் உற்பத்தி குறைந்ததால் கொடுக்க முடியவில்லை. 11 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மடிக்கணினி கொடுக்க வேண்டியுள்ளது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

July 30, 2022

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க மாநகராட்சி ஒப்புதல் - சிபிஎம் எதிர்ப்பு

தமிழக அரசு போலவே சென்னை மாநகராட்சியும் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மாதாந்திர மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னைப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் கணினி உதவியாளர்கள், கணினி ஆசிரியர்கள், ஆசிரியர்கள், இளநிலை உதவியாளர்கள், பாதுகாவலர்கள், ஆயாக்களை நியமிப்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. kaninikkalvi.blogspot.com இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இது குறித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நான்காவது வார்டு உறுப்பினர் ஜெயராமன், "மாநகராட்சிப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர், கணினி ஆசிரியர் உள்ளிட்டோரை தலைமை ஆசிரியர்கள் நேரடியாக நியமிக்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து வெளிநடப்பு செய்து இருக்கிறோம். தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை நேரடியாக நியமிப்பதில் சில அரசியல் விளையாட்டு இருக்கக் கூடும். அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்த இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க வேண்டும் என்றால், தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை காலியான இருக்கும் இடத்திற்கு நியமிக்க வேண்டும்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இதேபோன்று தான் ஆசிரியர்களை நேரடியாக நியமிக்கப்பட்டார்கள். இதெல்லாம் நடக்கக் கூடாது என்றுதான் திமுக கூட்டணிக்கு வாக்களித்து தேர்வு செய்தார்கள். தற்போதும் இதுபோன்று நடைபெறுவது நல்லது அல்ல. அதுமட்டுமில்லாமல் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த 7 ஆண்டுகளாக ஒரே சம்பளம் பெற்று வருகிறார்கள். kaninikkalvi.blogspot.com அவர்களுக்கு தகுதிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல் அளித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த நியமனங்களை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, July 28, 2022

July 28, 2022

ஆசிரியர்கள் தேவை

ஆசிரியர்கள் தேவை

பிரைமரி ஆசிரியர்கள்

பட்டதாரி ஆசிரியர்கள்

முதுகலை ஆசிரியர்கள்

நேர்காணல் நாள் : 31.07.2022 ( ஞாயிற்றுக்கிழமை )

Tuesday, July 26, 2022

July 26, 2022

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முதல்வரின் அறிவுரை

பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

மாணவிகளுக்கு மன, உடல் ரீதியாக இழி செயல் நடந்தால் தமிழக அரசு வேடிக்கை பார்க்காது

மாணவர்கள் அவமானத்தை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்

இதையும் படிக்க | பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு

மாணவர்களுக்கு தற்கொலை எண்ணம் கூடவேக்கூடாது; தலைநிமிரும் எண்ணமே வேண்டும்

மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருடன் மனம் விட்டு பேச வேண்டும்

படிப்போடு கல்வி முடிவதில்லை; பாடம் நடத்திய பிறகு ஆசிரியர் பணி முடிந்துவிடாது

கல்வி நிறுவனம் நடத்துவோர் தொழில் வர்த்தகமாக இல்லாமல் தொண்டாக நினைக்க வேண்டும்

- சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

Monday, July 25, 2022

July 25, 2022

ஆசிரியர்கள் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்களின் வருகை பதிவேடு - தமிழக அரசு விளக்கம்

ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் பள்ளிக்கு வரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் என வெளியான தகவல் தவறானது என தமிழக அரசு விளக்கம்

இதையும் படிக்க | Tamil Nadu Government M.G.R. Film and Television Institute - Admission Notification for the year 2022-2023 - Application and Prospectus - PDF

ஆசிரியர்களின் வருகை பதிவேடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை

July 25, 2022

"மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் வேதனை

மாணவர்களை பார்த்தாலே ஆசிரியர்கள் பயப்படும் அளவுக்கு நிலை மாறிவிட்டது" ஆசிரியர்கள் சங்க நிர்வாகி வேதனை

Thursday, July 21, 2022

July 21, 2022

72 மாணவர்கள் காயம்: ஆசிரியர் பணியிடை நீக்கம்

விழுப் புரம் மாவட்டம், செஞ்சி அரசுப் பள்ளியில் ஆசிரி யர் சரமாரியாக அடித்த தில், 72 மாணவர்கள் காயமடைந்தனர். அவர்களது பெற்றோர் பள்ளியை முற் றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு இயற்பியல் ஆசிரியரும் உதவித் தலைமையாசிரியருமான நந்தகோ பால் செவ்வாய்க்கிழமை தேர்வு நடத்தினார். பள்ளி மரத்தடியில் பிற்பகல் 12.30 மணியளவில்மாண வர்கள் தேர்வெழுதிக் கொண்டிருந்தனர்.

இதில், பெரும்பாலான மாணவர்கள் சரியாக விடையளிக்க வில்லை எனத் தெரிகிறது.

இதனால், கோபமடைந்த ஆசிரியர் நந்தகோபால் தேர்வெழுதிய மாணவர்களை மூங்கில் பிரம்பால் சரமாரியாக அடித்தாராம். இதில் சில மாணவர் களுக்கு ரத்தக்கசிவு ஏற்பட்டது. பலருக்கு முதுகு, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற மாண வர்கள், இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்தனராம்.

இதையும் படிக்க | முழுநேர பிஎச்.டி பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை - G.O Ms. No. 57 Dt: July 14, 2022

இதையடுத்து, பள்ளிக்கு புதன்கிழமை காலை வந்த பிளஸ் 2 மாண வர்களின் பெற்றோர், தலைமையாசிரியர் அறையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக தலைமையாசிரியரிடம் பெற்றோர் மனுக்களை அளித் தனர். இதைத் தொடர்ந்து, விழுப் புரம் மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவுறுத்தலின் பேரில், ஆசிரியர் நந்தகோபாலை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உத்தரவிட்டார்.
July 21, 2022

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர்

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒவ்வொருவக்கொருவர் கலந்தாலோசனை செய்யவேண்டும் - மாவட்ட உதவி திட்ட அலுவலர் பேச்சு

கற்றல் கற்பித்தலில் உள்ள சவால்களை தீர்க்க ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் கலந்தாலோசனை செய்ய வேண்டும் என மாவட்ட உதவி திட்ட அலுவலர் எஸ்.தங்கமணி பேசினார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மற்றும் ஒருங் கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் மாவட் டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும்போது கற்றல் கற்பித்தலுள்ள பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள்,பட்டதாரி ஆசிரியர்கள்,முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாடு கலந்தா லோசனை கூட்டம் நடை பெற்றது.

இதையும் படிக்க | Ph.D. பயிலும், மதம் மாறிய SC/ST இனத்தவருக்கு ஊக்கத்தொகை - திருத்திய வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு

July 21, 2022

ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு

பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:

இதையும் படிக்க | வகுப்பு 12|பொருளாதார தாவரவியல்|பாடம் 9|பயிர் பெருக்கம்|பகுதி 1 தனியார் பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Total Pageviews

Search This Blog