Breaking

Showing posts with label NET/SET. Show all posts
Showing posts with label NET/SET. Show all posts

Saturday, December 11, 2021

December 11, 2021

CSIR NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் - NTA அறிவிப்பு

தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அறிவியல் பாடப்பிரிவுகளுக் கான (இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணிதம்போன்ற பாடங்கள்) சிஎஸ்ஐஆர் நெட் தகுதித்தேர்வு ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி 5, 6 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெற உள்ளது.

ஷிப்ட்-1 தேர்வு காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் ஷிப்ட்-2 தேர்வு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் நடைபெறும். தேர்வு கொள்குறிவகை (அப்ஜெக்டிவ்) தேர்வாக இருக்கும். இதற்கான ஆன்லைன் பதிவுடிசம்பர் 3-ம் தேதி தொடங்கியுள்ளது. அறிவியல், கணிதம் தொடர்புடைய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களும் தற்போது இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் என்றஇணையதளத்தை பயன்படுத்திஜனவரி 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதிகள், வினாத்தாள் முறை, தேர்வுக்கட்டணம் உள்ளிட்டவிவரங்களை https://csirnet.nta.nic.in, www.nta.ac.in இணையதள முகவரிகளில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.

தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முன்பு உரிய கல்வித்தகுதி இருப்பதை உறுதிசெய்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப் படுகிறார்கள். வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே இருக்கும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, November 13, 2021

November 13, 2021

யுஜிசி நெட் தேர்வு நுழைவுச்சீட்டு 2021 வெளியீடு – தேர்வு தேதி & முக்கிய விவரங்கள்

தேசிய சோதனை நிறுவனம் (NTA) ஆனது தற்போது UGC NET தேர்விற்குரிய தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. தேர்வர்கள் தேர்வு தேதி மற்றும் தேர்வு ஹால் டிக்கெட்டினை எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவிறக்கிக் கொள்ளலாம்.

நிறுவனம் NTA

Exam பெயர் UGC NET

தேர்வு தேதி November 20, 21, 22, 24, 25, 26, 29, 30 & December 01, 03, 04 & 05

Admit Card Download Below

UGC NET Admit Card 2021:

National Testing Agency ஆனது பல்கலைக்கழக மானியக் குழு (UGC) ஆனது National Eligibility Test (NET) தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை தற்போது வெளியிட்டு உள்ளது. வருடந்தோறும் Assistant Professor அல்லது Junior Research Fellowship ஆகிய பயணிகளுக்கு நடத்தப்படும் இந்த தேர்வு இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20, 21, 22, 24, 25, 26, 29, 30 தேகளிலும், டிசம்பர் மாதத்தில் 01, 03, 04 & 05 ஆகிய தேதிகளிலும் நடைப்பெறவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் வாயிலாக தேவரு குறித்த விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

UGC NET Admit Card 2021 Link

Exam Date


Official Site

Tuesday, October 19, 2021

Monday, October 11, 2021

October 11, 2021

NET தோ்வு ஒத்திவைப்பு. - NTA அறிவிப்பு

வரும் அக்.17 முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த யுஜிசி நெட் தகுதித் தோ்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிய நெட் தகுதித்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். தேசிய தோ்வு முகமை (என்டிஏ) சாா்பில் ஆண்டுக்கு 2 முறை இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே நிகழாண்டுக்கான நெட் தோ்வானது அக்டோபா் 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என்று என்டிஏ அறிவித்தது.

இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி செப்.5-ஆம் தேதி நிறைவு பெற்றது.

இந்தநிலையில் நெட் தோ்வு நடத்தப்படும் நாள்களில் வேறு சில போட்டித் தோ்வுகளும் நடைபெறவுள்ளன. இதனால் தோ்வு தேதியை மாற்ற மேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்தனா். அதையேற்று நெட் தோ்வை தேதி குறிப்பிடாமல் என்டிஏ தற்போது ஒத்திவைத்துள்ளது.

Wednesday, August 11, 2021

August 11, 2021

NET தேர்வுக்கு இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம்: தேசிய தேர்வு வாாியம்

NET தேர்வுக்கு http://ugcnet.nta.nic.in என்ற இணையத்தில் செப்.5 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு வாாியம் முகமை தெரிவித்துள்ளது. அக்டோபர் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை NET தேர்வு நடைபெறுகிறது எனவும் கூறியுள்ளது.

Monday, July 26, 2021

July 26, 2021

நெட், செட் மற்றும் பிஎச்டி தகுதியுடன் உதவி பேராசிரியர் பணிக்காக காத்திருக்கும் 2 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

ஜூலை 26: தமிழக அரசுப்பள்ளிகளில் நெட், செட் மற்றும் பிஎச்டி தகு தியுடன் பணிபுரிந்து வரும் 2,000 ஆசிரியர்களை, அரசுக் கல்லூரிகளுக்கு உதவிபேரா சிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக உயர்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 7 கல்வியி யல் கல்லூரிகளும் செயல் பட்டு வருகின்றன. இதுத விர, பல்கலைக்கழகங்கள் மற்றும் பொறியியல் கல் லூரிகளும் உள்ளன. மாநி லம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிக மான உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு, அரசு கலைக்கல் லூரிகளில் உள்ள 2,331 பணியிடங்களை நிரப்ப வெளியிடப்பட்ட அறி விப்பு, இன்னமும் கிடப் பில் உள்ளது.

Thursday, June 10, 2021

June 10, 2021

TN SET தேர்வில் ஹோம் சயின்ஸ் இல்லை மாணவர்கள் அதிர்ச்சி

மூன்றாண்டுகள் கழித்து மாநில அளவிலான &'செட்&' தேர்வுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவு விடுபட்டுள்ளதால் அப்பாடம் படித்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாநில அளவில் உதவி பேராசிரியர்களுக்கான தகுதி நிலைத் தேர்வு அறிவிப்பு 2018 ல் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலை நோடல் மையமாக செயல்பட்ட போது வெளியானது. அந்த அறிவிப்பில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, ஹோம் சயின்ஸ், லைப் சயின்ஸ் உட்பட 26 வகை பாடப்பிரிவுகளில் முதுநிலை பயின்றவர்கள் தேர்வெழுதலாம் என வெளியிடப்பட்டிருந்தது.
இடையில் மூன்றாண்டுகளாக உதவி பேராசிரியர்களுக்கான செட் தேர்வு நடத்தப்படவில்லை.2021 க்கான விண்ணப்ப அறிவிப்பை சிதம்பரம் அண்ணாமலை பல்கலை வெளியிட்டுள்ளது. இதில் ஹோம் சயின்ஸ் பாடப்பிரிவு சேர்க்கப்படவில்லை. இதுகுறித்து மதுரை காமராஜ் பல்கலையின் யு.சி.ஜி. போர்டு ஆப் ஸ்டடீஸ் தலைவர் வசந்தா எஸ்தர் ராணி கூறுகையில், &'&'தமிழகத்தில் 25 க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் ேஹாம் சயின்ஸ் பாடம் நடத்தப்படுகிறது.
முதன்முறையாக இந்த பாடம் நீக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் தேர்வெழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது&'&' என்றார்

Sunday, June 06, 2021

June 06, 2021

TNSET Notification 2021 (Out) – Check Eligibility, Exam Date, Syllabus

TNSET Notification 2021- Released. தமிழ்நாடு மாநில அரசு சார்பாக, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பதவிக்கு தகுதியானவர்களை நியமிக்க தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSET Syllabus:

Subject CodeSubjectMedium of Question Paper*Subject
01GeographyEnglish / TamilGeography
02Chemical SciencesEnglishChemical Sciences

(which includes): Analytical Chemistry Inorganic Chemistry Organic Chemistry Physical Chemistry Medicinal Chemistry Polymer Chemistry Applied Chemistry Nuclear Chemistry

Environmental Chemistry

Subject CodeSubjectMedium of Question Paper*Subject
   Marine Chemistry Pharmaceutical Chemistry Bio-inorganic Chemistry Nanoscience
03CommerceEnglish / TamilCommerce
04Computer Science and ApplicationsEnglishComputer Science and Applications
05EconomicsEnglish / TamilEconomics
06EducationEnglish / TamilEducation
07EnglishEnglishEnglish
08Earth SciencesEnglishEarth Sciences (which includes): Geology

Applied Geology Geology Geophysics Marine Geology

Petroleum Geology Geo-Informatics Applied Geochemistry Oceanography

Subject CodeSubjectMedium of Question Paper*Subject
09Life SciencesEnglishLife Sciences (which includes): Botany/Plant Science Biochemistry/Biomedical Biotechnology

Genetics Microbiology Zoology

Fishery Science Animal Biology Marine Biology Applied Genetics Herbal Sciences

10Journalism and Mass CommunicationsEnglish / TamilJournalism and Mass Communications
11ManagementEnglish / TamilManagement
12HindiHindiHindi
13HistoryEnglish / TamilHistory
14LawEnglish / TamilLaw
15Mathematical SciencesEnglishMathematical Sciences (which Includes) Mathematics

Applied Mathematics Statistics

Applied Statistics

Mathematics with Computer Science.

Subject CodeSubjectMedium of Question Paper*Subject
16Physical SciencesEnglishPhysical Sciences

(which includes):

Applied and Molecular Physics Classical Dynamics Condensed Matter Physics Electromagnetics Experimental Design Electronics

Nuclear, Space and Particle Physics

Quantum Physics Thermodynamics Astronomy Astrophysics Biophysics

Nanoscience

17Physical EducationEnglish / TamilPhysical Education
18PhilosophyEnglish / TamilPhilosophy
19Political ScienceEnglish / TamilPolitical Science
20PsychologyEnglishPsychology
21Public AdministrationEnglish / TamilPublic Administration
22SociologyEnglish / TamilSociology
23TamilTamilTamil
Subject CodeSubjectMedium of Question Paper*Subject
24Library and Information ScienceEnglishLibrary and Information Science
25SanskritSanskritSanskrit
26Social WorkEnglish / TamilSocial Work
:
TN SET வயது வரம்பு: டி.என்-செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க உயர் வயது வரம்பு (Upper Age Limit ) இல்லை.
TN SET Eligibility:
முதுகலை பட்ட படிப்பில் 55% மதிப்பெண் பெற்றவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். A minimum of 55% marks without rounding off (or an equivalent grade in a point-scale, wherever the grading system is followed) at the Masters level shall be the essential qualification for direct recruitment of teachers and other equivalent cadres at any level.
தேர்வு செயல் முறை:
இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் MCQ வடிவில் இருக்கும். முதல் தாள் 100 மதிப்பெண்களுக்கும், இரண்டாம் தாள் 200 மதிப்பெண்களுக்கும் நடைபெறும். TNSET தேர்வுக் கட்டணம்:
பொது விண்ணப்பத்தார்கள் – ரூ.1,500 / –
BC / BCM / MBC / DNC – ரூ.1,250 / –
SC / SCA / ST / PwD / திருநங்கைகள் – ரூ.500/ –
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.tnsetau.in/ என்ற இணைய முகவரி மூலம் 07.06.2021 முதல் 07.07.2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf
Apply Online
June 06, 2021

TNSET - உதவிப் பேராசிரியராக பணிக்கான தகுதித் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியீடு.

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிக்கான தகுதித் தேர்வு TNSET குறித்த அறிவிப்பு வெளியீடு.
12 நகரங்களில் தேர்விற்கு
நாளை முதல் ஜூலை 7ஆம் தேதி வரை tnsetau.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

TNSET 2021 - Notification for Assistant Professorship - Full Details - Download here
https://kaninikkalvi.blogspot.com/2021/06/tnset-2021-notification-for-assistant.html

Tuesday, April 20, 2021

April 20, 2021

கொரோனா காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைப்பு

கொரோனா காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு 3-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யுஜிசி நெட் தேர்வு மே 2 முதல் 17-தேதி வரை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக யுஜிசி நெட் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 2ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நெட் தேர்வுகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்லூரி உதவி பேராசிரியர்களுக்காக நடத்தப்படும் இந்த நெட் தேர்வு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தொடர்ச்சியாக நாடு கொரோனா தொற்று உச்சத்தை எட்டி வருகிறது. இதன் காரணமாகவும் மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு யுஜிசி சார்பில் நடத்தப்படும் நெட் தேர்வை இம்முறை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெட் தேர்வானது மே மாதம் 2ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தொடர்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே 2 முறை ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்றாவது முறை ஒத்திவைக்கப்படுகிறது. இந்த தேர்வு மீண்டும் நடத்தப்படுவதற்கான தேதி 15 நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு தினமும் உச்சத்தை எட்டி வருகிறது. நிலைமையை ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்த பின்பு தான் அனைத்து தேர்வுகளையும் நடத்துவதற்கு மத்திய கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்ச்சியாக காணொலி வாயிலாக ரமேஷ் பொக்ரியால் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாணவர்களின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல்வேறு மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் அடிப்படையில் தான் ஒவ்வொரு தேர்வுகளையும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தொடர்ச்சியாக ஒத்திவைத்து வருகிறது. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகே இந்த தேர்வுகளை நடத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்தால் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Monday, March 08, 2021

March 08, 2021

NET EXAM - விண்ணப்பிக்க நாளை (மார்ச் 9) கடைசி நாள்!

உயர்கல்வி நிறுவனங்களில் உதவி பேராசிரியர் ஆக பணிபுரிவதற்கான தகுதி பெறவும், &'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்’ பெறவும், ‘நேஷனல் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ எனும் தேசிய அளவிலான தகுதி தேர்வை எழுத வேண்டியது அவசியம்!
பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) சார்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் ஏற்படுத்தப்பட்ட &'நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி’ நடத்தும் இத்தேர்வை ஆண்டுக்கு இரண்டு முறை எழுதலாம். பாடப்பிரிவுகள்:
அடல்ட் எஜுகேஷன், ஆந்த்ரோபாலஜி, அரபிக், ஆர்கியாலஜி, காமர்ஸ், கிரிமினாலஜி, எக்னாமிக்ஸ், எஜுகேஷன், எலக்ட்ரானிக் சயின்ஸ், இங்கிலிஷ், என்விரான்மென்டல் சயின்சஸ், பாரின்சிக் சயின்ஸ், பிரெஞ்ச், ஜியாகிரபி, ஹிந்தி, ஹிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ், மாஸ்கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், மியூசிக், பிலாசபி, பிசிக்கல் எஜுகேஷன், பொலிட்டிக்கல் சயின்ஸ், சைக்காலஜி, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன், சோசியல் மெடிசின் அண்ட் கம்யூனிட்டி ஹெல்த், சோசியல் வொர்க், சோசியாலஜி, தமிழ், தெலுங்கு, வுமன் ஸ்டடீஸ், யோகா, சட்டம் உட்பட 81 பாடப்பிரிவுகளுக்கு இத்தேர்வு நடத்தப்படுகிறது. தகுதிகள்:
துறை சார்ந்த பாடப்பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் உரிய முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். &'ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப்’ எனும் ஜே.ஆர்.எப்., உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது 30. எனினும் விதிமுறைப்படி, சிறப்பு பிரிவினர்களுக்கு வயது வரம்பு மற்றும் குறைந்தபட்ச மதிப்பெண்களில் தளர்வு உண்டு. உதவி பேராசிரியர் தகுதிபெற விண்ணப்பிப்பவர்களுக்கு வயதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. தேர்வு முறை:
மொத்தம் இரண்டு தாள்களைக் கொண்ட இத்தேர்வு, 300 மதிப்பெண்களுக்காக நடத்தப்படுகிறது. முதல் தாளில் 50 கேள்விகளும், இரண்டாம் தாளில் 100 கேள்விகளும் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தவறான பதிலுக்கு ‘நெகட்டிவ்’ மதிப்பெண் கிடையாது.
ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்
முதல் தாளில் ஆசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்த மாணவரது அறித்திறனை பரிசோதிக்கும் வகையில், கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் தாளில் அவரவர் பாடப்பிரிவு சார்ந்த கேள்விகள் இடம்பெறும்.
தேர்வு நேரம்: மொத்தம் 3 மணிநேரம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 9

விபரங்களுக்கு: https://www.nta.ac.in/ , https://ugcnet.nta.nic.in

Wednesday, March 03, 2021

March 03, 2021

UGC-NET Exam 2021 தேர்வு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு !

தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM 2021 தேர்வுக்கான அறிவிப்பு முன்னதாக வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது அதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட இறுதி தேதி ஆனது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) - 2020-21 ஆம் கல்வியாண்டு - அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் பற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுந்துதல் - சார்பு UGC-NET தேர்வு :
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்காக இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மேலும் இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 31 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், அதில் SC, ST, OBC & PWD பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) - 2020-21 ஆம் கல்வியாண்டு - அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் பற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுந்துதல் - சார்பு விருப்பமுள்ளவர்கள் கல்வித்தகுதியாக கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறைகளில் 55% மதிப்பெண்ணுடன் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு முறைகள்:
இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடத்தப்படுகின்றன. NET தேர்வுகள் இரண்டு தாள்களை கொண்டதாக உள்ளது. அதில் ஒரு தாளில் 100 மதிப்பெண்களுக்கு 50 வினாக்கள் கேட்கப்படும். விண்ணப்பதாரர்களின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் விதத்தில் இந்த தேர்வு கேள்விகள் இருக்கும். இந்த தேர்வுகள் 1 மணி நேரம் நடைபெறும். இரண்டாம் தாள் தேர்வுகள் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் அதில் 100 வினாக்கள் இருக்கும் இந்த தேர்வு 2 மணி நேரம் நடத்தப்படும்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) - 2020-21 ஆம் கல்வியாண்டு - அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் - வழிகாட்டு நெறிமுறைகள் பற்றும் பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்க அறிவுறுந்துதல் - சார்பு விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் ஆன்லைன் பதிவு முகவரி மூலம் 09.03.2021 அன்று வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Monday, March 01, 2021

March 01, 2021

Display of result of the Joint CSIR-UGC National Eligibility Test (NET) June 2020 on CSIR-NET

March 01, 2021

உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான நெட் தேர்வு அறிவிப்பு

இந்திய அரசின் மனிதவளத் துறையின்கீழ் செயல்படும் தேசிய தேர்வாணையத்தால் நடத்தப்படும் UGC-NET EXAM-2021 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து மார்ச் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆல் பாஸ் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

தேர்வு: UGC-NET EXAM-2021 தகுதி: கலை, அறிவியல், மேலாண்மையியல், பொருளாதாரம், மானுடவியல் போன்ற துறையைச் சேர்ந்த ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளை இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். தேர்வு நடைபெறும் தேதியில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். SC, ST, OBC, Non-Creamy Layer பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் NET தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: NET தேர்வு எழுதி கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரிய விரும்புபவர்களுக்கு உச்ச வயதுவரம்பில்லை. இளநிலை ஆராய்ச்சியாளராக விரும்புபவர்கள்(JRF) 31 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, ST,OBC, PWD, Transgender பிரிவினருக்கு 5 ஆண்டு சலுகை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு முறை: NET தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. முதல் தாள் 100 மதிப்பெண்கள் கொண்டது. விண்ணப்பத்தாரரின் கற்பிக்கும் திறனை சோதிக்கும் வகையில் 50 வினாக்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு 1 மணி நேரம் கொண்டதாக இருக்கும். இரண்டாம் தாள் 200 மதிப்பெண்கள் கொண்டது. 100 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். தேர்வு 2 மணி நேரம் கொண்டதாக இருக்கும். தேர்வு கணினி வழி ஆன்லைன் தேர்வாக இருக்கும்.
தமிழகத்தில் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, கோவை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகர்கோவில், மதுரை, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குசி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், விருதுநகர்
விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.1000, OBC,EWS பிரிவினர் ரூ.500, SC,ST,PWD,Transgender பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை: www.ntanet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 பொது தேர்வுக்கு தனி தேர்வர்கள் எப்போது விண்ணப்பிக்கலாம்?
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.03.2021
மேலும் விவரங்கள் அறிய www.ntanet.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Total Pageviews

Search This Blog