Breaking

Showing posts with label App's. Show all posts
Showing posts with label App's. Show all posts

Tuesday, September 20, 2022

September 20, 2022

special app to monitor morning feeding - பள்ளிகளில் காலையில் உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம்

பள்ளிகளில் காலையில் உணவு வழங்கும் திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் - Introduction of special app to monitor morning feeding program in schools

பள்ளிகளில் காலையில் வழங்கும் உணவு திட்டத்தை கண்காணிக்க சிறப்பு செயலி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், காலை உணவு வழங்க தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தார். மதுரையில் உள்ள அரசு பள்ளியில் அவரே நேரடியாக சென்று பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த நிலையில் காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காலை உணவு திட்டம் முறையாக செயல்படுத்த படுகிறதா என்பதை கண்காணிக்க சிறப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரே இந்த செயலியை நேரடியாக கண்காணிப்பார் என்றும் உணவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNEB - Bill Easy Calculator - New Software

TNEB - Calculator- Software

TANGEDGO புதிய கட்டண விகிதத்தை வெளியிடப்பட்டது.

எளிய முறையில் எத்தனை அலகு (யூனிட்) என்று பதிவு செய்து மின் கட்டணத் தொகையை கணக்கிடும் ஒரு முறையை இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் கௌதம் உருவாக்கியுள்ளார்.

Click here TNEB calculator software

Friday, August 26, 2022

August 26, 2022

TNSED Parents Mobile APP - SMC கூட்ட உறுப்பினர்கள் வருகையினை எவ்வாறு பதிவு செய்வது?



SMC- Mobile App

TNSED Parent App New

🟡SMC கூட்டம் - 26.08.2022

🔊இன்று நடைபெறும் SMC கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்களின் வருகையை TNSED parent App-யில் பதிவு செய்ய வேண்டும்.

பதிவு செய்ய .....

🔊USER NAME:
▪️HM or SMC தலைவர் Mobile Number

🔒PASSWORD:

▪️Smc@Last 4 digit of HM or SMC தலைவர் Mobile number

S only Capital letter

🔴TNSED Parents App 

👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼

Sunday, August 14, 2022

August 14, 2022

பிறதுறை பணிகளால் திணறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்; சர்வர் கோளாறு எமீஸ் பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

பிறதுறை பணிகளால் திணறும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள்; சர்வர் கோளாறு எமீஸ் பதிவேற்றம் செய்வதில் சிக்கல்

Sunday, July 31, 2022

July 31, 2022

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே ஆசிரியர்களின் Leave / CL / SL / Permission, மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு - பள்ளிக்கல்வித்துறை

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு செய்யப்பட வேண்டும்

Leave / CL / SL / Permission உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ளலாம்

- பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் ஆகஸ்ட் -1 முதல் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு - வழக்கமான வருகை பதிவேட்டில் பதிவு செய்ய கூடாது

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

CLICK HERE TO DOWNLOAD

Friday, June 24, 2022

June 24, 2022

இல்லம் தேடிக் கல்வி APP NEW UPDATE Date 24.6.2022 - ஊக்க ஊதியம் வந்துவிட்டதா? தங்களே தெரிந்து கொள்ளலாம்.

இல்லம் தேடி கல்வி APP NEW UPDATE -0. 37-- Date---24.6.2022

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஊக்க ஊதியம் வந்துவிட்டதா? இனி அவர்களே ITK APP மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

ITK APP Update செய்து பயன்படுத்துங்கள்...

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.itk

Wednesday, May 11, 2022

May 11, 2022

அரசு போட்டித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு கைபேசி செயலி

அரசு போட்டித் தேர்வு விண்ணப்பதாரர்களுக்கு கைபேசி செயலி - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சட்ட சிக்கல்கள் இருப்பதாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், அனைத்து விதமான அரசுப் பணியிட போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்போருக்காக ஒருங்கிணைந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்த செயலி மூலம், தேர்வுகளுக்கான அறிவிக்கைகள், தேர்வின் முடிவுகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரையிலான புறநகர் ரயில்களில் குளிர்பதன ரயில்பெட்டிகளை அறிமுகம் செய்ய, தெற்கு ரயில்வேயுடன் இணைந்து சாத்தியக் கூறு ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

Wednesday, April 06, 2022

April 06, 2022

ILLAM THEDI KALVI APP NEW UPDATE (VERSION 0.0.26) - Updated April 5, 2022



இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ILLAM THEDI KALVI is a volunteering initiative. In order to cater to the needs of the learning gap caused because of lockdowns due to the COVID outbreak, this initiative is being carried out by the School Education Department, Government of Tamil Nadu. All the volunteers can make use of the mobile application to access the features available for all the volunteers. CLICK HERE TO DOWNLOAD

Friday, April 01, 2022

Thursday, March 31, 2022

March 31, 2022

WhatsApp: இடைநிறுத்தம் செய்து ஒலிப்பதிவு செய்யும் புதிய வசதி அறிமுகம்

வாட்ஸ்ஆப்பில் ஒலி வாயிலான தகவல்களை அனுப்பும்போது இடைநிறுத்தம் செய்து ஒலிப்பதிவு செய்யும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்ஆப் பயனர்களை தக்கவைக்கும் வகையில் மெட்டா நிறுவனம் பல புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் இதுவரை 100 எம்பி வரையிலான வீடியோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்ற நிலையை மாற்றி தற்போது 2 ஜி.பி. வரையிலான விடியோக்களை அனுப்பும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வாட்ஸ்ஆப்பில் ஒலி வாயிலாக அனுப்பும் குறுஞ்செய்திகளை இடைநிறுத்தம் (Pause) செய்து மீண்டும் பதிவு செய்து (Resume) அனுப்பும் வசதியை மெட்டா அறிமுகம் செய்துள்ளது.

Tuesday, March 29, 2022

March 29, 2022

TNEMIS APP-ல் தொழில்நுட்பக் கோளாறு!

Teacher and Student Attendance Registration (Tnemis app) is currently unable to register due to a technical problem. Thanks for being notified when the issue work is done on its behalf. Sorry for the inconveniences. State EMIS team

இதையும் படிக்க | 10th தமிழ் இரண்டாம் திருப்புதல் தேர்வு விடைக்குறிப்பு - PDF

ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப் பதிவு (Tnemis app) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தற்போது பதிவு செய்ய முடியவில்லை. அதன் சார்பாக சிக்கல் வேலை முடிந்ததும் அறிவிக்கப்படும் நன்றி. இடையூறுக்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறோம். மாநில EMIS குழு

Monday, March 14, 2022

Sunday, January 09, 2022

January 09, 2022

EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன?

EMIS புதிய செயலியில் தலைமை ஆசிரியரின் பணி என்ன?

State EMIS team வெளியிட்ட வழிகாட்டுதல் வீடியோவின் முக்கிய அம்சங்கள்:

1. புதிய Emis செயலியில், பள்ளியின் 11 இலக்க DISE எண் மற்றும் EMIS Password மூலம் தலைமை ஆசிரியர் Login செய்ய வேண்டும்.

2. Today's status ல் fully not working என போட வேண்டும்.
 (மாணவர்களுக்கு கொரோனா விடுப்பு என்பதால்)

3. காரணம் Covid என தேர்வு செய்ய வேண்டும்.

4. பிறகு ஆசிரியர் வருகையை பதிவு செய்ய வேண்டும். LO பயிற்சிக்கு சென்றிருந்தால் training என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

5. பள்ளி துப்புரவு பணியாளர் எண்ணிக்கை & பணி புரிந்த நேரம் பதிவு செய்ய வேண்டும்.

6. மாணவர்களுக்கு விடுமுறை என்பதால், Today's status ல் fully not working என தந்துள்ளோம். எனவே மாணவர் வருகையை எந்த வகுப்பு ஆசிரியரும் பதிவு செய்ய இயலாது. 

7. Today's status ல் fully not working என தந்திருந்தாலும், ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு / பயிற்சிக்கு வருகை புரிவதால், ஆசிரியர் வருகை தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்பட வேண்டும்.

8. கொரோனா காலம் முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு வரும் போது, Today's status ல், Full working day என தலைமை ஆசிரியரால் பதிவு செய்யப் பட வேண்டும்.

9. வகுப்பாசிரியர்கள் அவர்களுக்கான 8 இலக்க username and password ஐ பயன் படுத்தி மாணவர் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

10. ஏதேனும் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்திருப்பின், தலைமை ஆசிரியர் பள்ளி Login வழியாக சென்று, விடுப்பு எடுத்த ஆசிரியருக்கான வகுப்பு மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

Sunday, December 19, 2021

December 19, 2021

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் செயலி வெளியீடு

இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

தன்னார்வலர் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து கொள்வது, எவ்வாறு மாணவர்களை கல்வி மையத்தில் இணைப்பது, மாணவர்கள் வருகை பதிவு மற்றும் கருத்து வளங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது குறித்து இந்த காணொளியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 
App பதிவிறக்கம் செய்து Open செய்யும் போது User id மற்றும் Password கேட்கும். அதில் தன்னார்வலர்களில் User id என்பது அவர்கள் தன்னார்வலராக பதிவு செய்த போது பயன்படுத்திய 10 இலக்க மொபைல் எண்ணை ( 9864276542)  பயன்படுத்தவும். 
Password என்பது மொபைல் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் @ உங்களது பிறந்த வருடம் ( 6542@1981) என்று பயன்படுத்தி Submit கொடுக்கவும்.
மாணவர்களை இல்லம் தேடிக் கல்வி மையத்தில் இணைப்பதற்கு மாணவர்களின் EMIS ID தன்னார்வலர்கள் தெரியவேண்டும்.

மாணவர்களின் பெயர், EMIS ID, ஆகியவற்றை வகுப்பாசிரியர்கள் மாணவர்களின் நோட்டுப் புத்தகத்தில் குறித்து அனுப்புக. இதை தலைமையாசிரியர்கள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தச் செயலியை அனைத்து தன்னார்வலர்களும்  பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள தகவல் தெரிவிக்கவும்.
Link:

சிறப்புப் பணி அலுவலர்,
இல்லம் தேடிக் கல்வி.

Total Pageviews

Search This Blog