திருக்குறள் :
பழமொழி :
Measure thrice before you cut once
ஒரு செயலை செய்யும் முன் பலமுறை யோசி.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தனக்கென்று நீர் வைத்துக் கொள்ளாத ஆறு, கல்லெறி பட்டாலும் பழம் தரும் மரங்கள்.
2. இவை எனக்கு கற்றுத் தருவது சுயநலமில்லாத வாழ்க்கை
பொன்மொழி :
முன்பின் அறியாத இடத்திற்கு செல்வதற்கு பலர் சொல்கிறபடி கேட்டுச் சென்றால் வழி தடுமாறிப் போவோம்.------ராமகிருஷ்ண பரமஹம்சர்
பொது அறிவு :
1.மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது?
சென்னை மாவட்டம்.
2.பரப்பளவு அடிப்படையில் தமிழகத்தின் பெரிய மாவட்டம் எது?
விழுப்புரம்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
பாதவெடிப்பு நீங்க சில டிப்ஸ்
1)வாழைப்பழம்: வைட்டமின் ஏ உள்ள வாழைப்பழம் சருமத்தின் நீளும் தன்மையை மற்றும் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும். வாழைப்பழத்தை மசித்து பாதங்களில் தடவி 20 நிமிடங்கள் விட்டு கழுவலாம்.
2)தேன்: இயற்கையான கிருமிநாசினியாக தேன் செயல்படுகிறது. பாதவெடிப்பை குணமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு புத்துணர்ச்சி ஊட்டுகிறது. தேன் கலந்த வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஊறவைத்து 20 நிமிடங்கள் கழித்து அலம்பவும்.
3)வாஸ்லின், எலுமிச்சை: வறண்ட சருமத்திற்கு ஈரப்பதம் கூட்ட வாஸ்லின் உதவும். புதிய சரும அணுக்கள் உற்பத்தியாக எலுமிச்சை சாறு உதவும். இரவில் வாஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து பாதங்களில் தடவி, உடற்சூடு வெளியேறாமல் தடுக்க கம்பளியால் ஆன காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்தவுடன் பாதங்களை கழுவி விடவும்.
4)கற்றாழை: இரவில் கற்றாழையைப் பாதங்களில் தடவி, காலுறை அணிந்து தூங்கவும். காலை எழுந்து பாதங்களை கழுவவும். தொடர்ந்து 4-5 நாட்கள் இப்படி செய்து வர, வறண்ட பாதங்கள் மிருதுவாகும்.
5)மவுத்வாஷ்: ஆல்கஹால் இருப்பதால் கால்நகங்களை சுத்தப்படுத்த மவுத்வாஷ் உதவும். வறண்ட சருமத்தை மிருதுவாக்கவும் உதவும். நீரில் மவுத்வாஷை கலந்து, அக்கலவையில் 15-20 நிமிடங்கள் பாதங்களை ஊறவைக்கவும். பிறகு pumice stone எனப்படும் நுரைக்கல் கொண்டு இறந்த சரும அணுக்களை அகற்றலாம்.
கணினி யுகம் :
Ctrl + M - Indent the paragraph.
Ctrl + T - Hanging indent
செப்டம்பர் 18 :
ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்
ரொனால்டோ லூயிஸ் நசாரியோ டே லிமா (பிறப்பு: 22 செப்டம்பர் 1976), பொதுவாக ரொனால்டோ (Ronaldo) என அழைக்கப்படுகிறார், இவர் பிரேசிலைச் சேர்ந்த முழுநேரக் காற்பந்தாட்ட வீரர் ஆவார். ரொனால்டோ 1996, 1997 மற்றும் 2002 ஆகிய மூன்று ஆண்டுகளில் அந்தந்த ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான FIFA விருதை வென்றார்.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
