Tourism Department
May 17, 2025
Showing posts with label Educational tour. Show all posts

Saturday, May 17, 2025
Friday, February 10, 2023
Opportunity for students to go abroad
February 10, 2023
கல்வி இணைச் செயல்பாடுகள்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை
கல்வி இணைச் செயல்பாடுகள்: வெளிநாடு சுற்றுலா செல்ல மாணவா்களுக்கு வாய்ப்பு Co-curricular activities: Opportunity for students to travel abroad
அரசுப் பள்ளிகளில் இலக்கிய மன்றம், வானவில் மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்ற செயல்பாடுகளின் கீழ் நடைபெறும் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.
இதுகுறித்து பள்ளிக் கல்வி ஆணையரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வானவில் மன்றம், இலக்கிய மன்றம், விநாடி - வி னா மன்றம், சிறாா் திரைப்படம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்.13 முதல் பள்ளி, வட்டாரம், மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும். மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநிலப் போட்டிகள் மற்றும் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.
மாநிலப் போட்டிகளில் வெற்றி பெறுபவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.
எனவே, அரசுப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவா்களும் பங்கேற்கும் வகையிலும், எந்தவொரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் அனைத்துப் போட்டிகளிலும் ஒரு சில குறிப்பிட்ட மாணவா்களே வெற்றி பெறும் வகையில் அல்லாமல் ஒவ்வொரு போட்டியிலும் வெவ்வேறு மாணவா்கள் வெற்றி பெறும் வகையில் அனைத்து மாணவா்களும் பங்கேற்றும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, February 09, 2023
students news
February 09, 2023
மாணவர்களுக்கு வெளிநாடு சுற்றுலா
Sunday, February 05, 2023
teachers news
February 05, 2023
“விமானத்தில் பறந்து கல்வி சுற்றுலா... ஆனால் ஒரு கண்டிஷன்” - மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ஆஃபர்
“விமானத்தில் பறந்து கல்வி சுற்றுலா... ஆனால் ஒரு கண்டிஷன்” - மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கொடுத்த ஆஃபர் “Educational tour by flying in a plane... but with a condition” - the offer given by the teachers to the students
தற்போது மாணவர்களிடையே விமானத்த்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையுடன் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் வருவதும் போட்டி போட்டு படிப்பதும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்
தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முற்றிலும் இலவசமாக விமானம் மூலம் சென்னைக்கு கல்விச் சுற்றுலா சென்று வந்தனர்.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் 150 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியை திருமதி. ரமா தனது வகுப்பில் படிக்கும் மாணவர்கள் அடிக்கடி கோவிலுக்கு செல்வதற்கும் உறவினர் வீட்டு சடங்குகளுக்கு செல்வதற்கும் பள்ளிக்கு விடுமுறை எடுப்பதைக் கண்டார். இதனை தொடர்ந்து மாணவர்களின் வருகையை உறுதி செய்யவும், நன்றாக படிக்க வைக்கவும் முடிவு செய்தார் ஆசிரியர் ரமா. இதனை தொடர்ந்து இப்பள்ளியில் பயின்று வரும் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவர்களிடையே பள்ளிக்கு விடுப்பு எடுக்காமலும் நன்றாக படிக்க வேண்டும் அவ்வாறு படிக்கும் விடுப்பு எடுக்காமல் வரும் மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்வேன் என பள்ளியின் டீச்சர் ரமா கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வகுப்பறையில் தெரிவித்து உள்ளார்.
இதற்கு கைமேல் பலன் கிடைத்து மாணவர்கள் விடுமுறை எடுப்பது குறைந்தது. இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக விடுமுறை எடுக்காமலும் நன்றாக படிக்கவும் ஆரம்பித்த 12 மாணவ மாணவிகளை தேர்வு செய்தார். வகுப்பில் உள்ள 12 மாணவர்களையும் விமானத்தில் முற்றிலும் இலவசமாக சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்தார்கள். எனவே மாணவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதென முடிவு எடுத்து பள்ளி செயலர் ஏபிசிவீ. சண்முகம் அவர்களிடம் ஆலோசித்ததில் மகிழ்ச்சியுடன் அனுமதி தந்ததுடன் பயணச்செலவில் பள்ளி நிர்வாகமும் பங்களிப்பதாக கூறினார்கள். மேலும் ஒரு நன்கொடையாளர் உதவி அளிக்க முன்வந்தார்.
அதனை தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் உற்சாகமாக பறந்த மாணவர்கள்,அங்கு வண்டலூர் உயிரியல் பூங்கா, வள்ளுவர் கோட்டம், மெரீனா கடற்கரை , தமிழ்நாடு முதல்வர் அவர்களின் நலத்திட்ட புகைப்படக் கண்காட்சியையும் கண்டு களித்தனர். சென்னையில் வசிக்கும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மாரியப்பன், ஆவுடையப்பன், ரகுபதி,ஆறுமுகசாமி , திருமதி ஆறுமுகசாமி,சங்கரபாகம், கெளரி சங்கர், ரவீந்திரன் , திருமதி ரவீந்திரன் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு , பரிசுப் பொருட்கள் கொடுத்து வாழ்த்தி என அன்பில் திக்குமுக்காட வைக்க உற்சாகத்தில் கரைபுரண்டனர் பள்ளி மாணவர்கள். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து முத்து நகர் விரைவு ரயிலில் தூத்துக்குடி திரும்பினர். மாணவ, மாணவிகளும் அவர்களின் பெற்றோர்களும் பெருமகிழ்ச்சி அடைந்து ஆசிரியருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்தனர்.
சுற்றுலாவில் மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, ஆசிரியைகள் ரமா, சரஸ்வதி மற்றும் அந்தோணி ஆஸ்மின் ஆகியோர் சென்றிருந்தனர்.இப்பள்ளியில் தற்போது மாணவர்களிடையே விமானத்தில் பறக்க வேண்டும் என்ற ஆசையுடன் மாணவர்கள் விடுப்பு எடுக்காமல் வருவதும் போட்டி போட்டு படிப்பதும் அதிகரித்து வருகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்

Saturday, February 04, 2023
Latest News
February 04, 2023
பள்ளி மாணவர்கள் 8 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா
The Greater Chennai Corporation will be sending eight students to Dubai this year for an educa- tional trip.
பள்ளி மாணவர்கள் 8 பேர் துபாய்க்கு கல்வி சுற்றுலா
சென்னை, பிப், 4 சென்னை மாநகராட்சி கல்வித்துறை மற் றும் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் கிழக்கு இணைந்து, 'விங்க்ஸ் டூ பிளே அமைப்பிள் வாயிலாக, ஏழு ஆண்டுகளாக பல்வேறு நிலை களில் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, சுல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதன் தொடர்ச்சியாக, 2022 - 20ம் கல்வி யாண்டில், விங்க்ஸ் டூ பிளே' அமைப்பின்வாயி லாக, 'தொழில் முனைவோர் திறன் மேம்பாடு' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களிடையே, மூன்று நிலைகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் சுற்றில் பள்ளி அளவில் தேர்ந்தெடுக் சுப்பட்ட 478 மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 32 மாணவர்களுக்கு இறுதி சுற்றுக்கான போட்டி கள் நடத்தப்பட்டன. இதில், எட்டு மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர் கள் கல்வி சுற்றுலாவாக ஐக்கிய அரபு எமிரேட் சில் உள்ள துபாய் நகருக்கு வரும் மே மாதம் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
இந்நிலையில், வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விஷால், மைதிலி, லோக் பிரியன், வர்ஷினி, திவ்யதர்ஷினி, முகேஷ், கிஷோர், பிரத்யங்கா ஆகிய எட்டு பேருக்கு, சிப் பன் மாளிகையில் மேயர் பிரியா பாராட்டு சான் றிதழ் வழங்கினார். உடன், மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், சுமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.