Breaking

Showing posts with label Vote counting. Show all posts
Showing posts with label Vote counting. Show all posts

Thursday, November 03, 2022

November 03, 2022

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க 17 வயதிலேயே விண்ணப்பிக்கலாம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை, நவ. 3: தமிழகத்தில் 17 வயதுடைய இளை ஞர்கள், இளம் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி. இவர்களில், 55.37 சதவீதம், அதாவது 3.42 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலுடன் இணைக்க, தங்கள் ஆதார் எண்களை வழங்கி உள்ளனர். கள் ளக்குறிச்சி, அரியலுார், தர்மபுரி மாவட்டங்களில், 80 சதவீதத்துக்கும் அதிகமானோர், ஆதார் எண் வழங்கி உள்ளனர். மிகக் குறைவாக சென்னையில் 20 சதவீதம் பேர் மட்டுமே வழங்கி உள்ளனர். நகர்ப்புறங்களில் குறைவாகவும், ஊரகப் பகுதிகளில் அதிகமாகவும் வாக்காளர்கள் ஆதார் எண் வழங்கி உள்ளனர். மொத்தம் 31 மாவட்டங்களில் 50 சதவீ தத்துக்கும் அதிகமான வாக்காளர்கள், ஆதார் எண் அளித்துள்ளனர்.

வரும் 9ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாக உள்ளது. அன்று முதல் வாக்காளர் பட்டி யல் சுருக்க திருத்தப் பணி துவங்கும். இம்முறை 17 வயதுடைய இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பெயரை, வாக்காளர் பட்டியலில் சேர்க்க, விண்ணப் பம் அளிக்கலாம். அவர்களுக்கு 18 வயதானதும், அவர்கள் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்ப டும். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, September 02, 2022

September 02, 2022

வாக்காளர் அட்டை- ஆதார் இணைப்பு; வரும் 4ம் தேதி சிறப்பு முகாம்

சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1.8.2022 அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4.9.2022 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. எனவே, இந்தச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவையில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Monday, February 21, 2022

February 21, 2022

வாக்குகள் எண்ணும் பணி: நாளை (பிப்ரவரி 22) பள்ளிகள் இயங்குமா? பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் பதில்

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் பணி நாளை (பிப்ரவரி 22ஆம் தேதி) நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை பள்ளிகள் இயங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனைப்பற்றி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி:

இதையும் படிக்க | மத்திய கல்வி அமைச்சக கருத்தரங்கில் பிரதமர் மோடியின் உரை

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 22ஆம் தேதி எண்ணப்படுகின்றன வாக்கு எண்ணும் மையங்களில் பெரும்பாலும் கல்லூரிகளிலேயே அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில இடங்களில் பள்ளிகளில் அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் 22ஆம் தேதி பள்ளிகள் முழுமையான அளவில் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா.


இதையும் படிக்க | 2000 இந்திய மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் 99 விழுக்காடு வாக்கு எண்ணிக்கை மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருந்தால் மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog