Breaking

Showing posts with label ceo Notice. Show all posts
Showing posts with label ceo Notice. Show all posts

Friday, February 17, 2023

February 17, 2023

சிவராத்திரியை முன்னிட்டு நாளை 18.02.2023 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO அறிவிப்பு

நாளை 18.02.2023 பள்ளிகளுக்கு விடுமுறை - CEO அறிவிப்பு

சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

Thursday, December 29, 2022

December 29, 2022

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல் முறைகள்

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி நுழைவு தேர்வு குறித்து அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவித்தல் தொடர்பாக,

பார்வையில் காணும் செயல்முறைகளின்படி ஆர்வமுள்ள அரசு பள்ளி மாணவர்கள் சரியான நேரத்திற்கு உயர்கல்வியில் சேர்ந்து படிக்க வசதியாக வரவிருக்கும் நுழைவுத் தேர்வுகளின் விவரங்கள் இத்துடன் இணைத்து பகிரப்படுகிறது. ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை தற்போதைய நிலை மற்றும் விண்ணப்பம் திறக்கும் தேதி, விண்ணப்பிக்கும் கடைசி தேதி நுழைவுத் தேர்வு கட்டணம் மற்றும் தகுதிகள் போன்றவற்றை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 15 நுழைவுத் தேர்வுகளின் இரண்டாவது புதுப்பிப்பு இணைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு விவரங்களை தெரிவித்து அதில் பங்கேற்க ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தலைமையாசிரியர்கள் மற்றும் உயர்கல்வி ஆலோசக ஆசிரியர்கள் தகுதியான மாணவர்களை நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தயார்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Monday, October 03, 2022

October 03, 2022

காலாண்டு தேர்வு - ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு CEO உத்தரவு - Quarterly Examination – CEO orders asking teacher for explanation

காலாண்டு தேர்வு - ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு CEO உத்தரவு - Quarterly Examination – CEO orders asking teacher for explanation

கலெக்டர் ஆய்வின்போது அம்பலம் கணிதத்தேர்வு விடைகளை போர்டில் எழுதிய ஆசிரியர் - விளக்கம் கேட்டு சிஇஓ உத்தரவு



தர்மபுரி, அக்.3: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளியில் மாவட்ட கலெக்டர் சாந்தி கடந்த 28ம் தேதி ஆய்வுக்கு சென்றார். அப்போது மல்லுப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி யில் காலாண்டு தேர்வு நடந்து வந்தது. அன்றைய தினம் கணித தேர்வை எழுதிவிட்டு வெளியே வந்த மாணவர்களிடம் தேர்வு நன்றாக எழுதினீர்களா என கலெக்டர் சாந்தி கேட்டார். நன்றாக எழுதினோம் என கூறிய மாணவர்களிடம் இருந்து வினாத்தாளை வாங்கி கலெக்டர் சாந்தி பார்த்தார்.

அப்போது அதில் இருந்த கேள்விகளுக்கான பதிலை கலெக்டர் கேட்டபோது மாணவர்கள் பதில் சொல்லாமல் விழித்துக்கொண்டி ருந்தனர். பதில் தெரியாமல் எவ்வாறு தேர்வை எழு தினீர்கள் என கேட்டபோது. எங்கள் கணித ஆசிரியர் விடைகளை போர்டில் எழுதிப்போட்டார், அதனை பார்த்து நாங்கள் பதில் எழுதினோம் என மாணவர்கள்

தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கலெக்டர் சாந்தி, உடனடியாக இதுகுறித்து விசாரிக்கும்படி சிஇஓ குணசேகருக்கு உத்தரவிட்டார். அதன்படி சிஇஓ பள்ளி தலைமையாசிரியரிடம் ஒரு வாரத்தில் விளக்க கடிதம் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Saturday, September 24, 2022

September 24, 2022

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! - 4th & 5th Class 1st Term Paper Issue - Trichy District Primary Education Officer's Circular!

Monday, September 19, 2022

September 19, 2022

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை - சுற்றறிக்கை - முதன்மைக்கல்வி அலுவலகம், விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் பொதுத்தேர்வு தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்தும் நோக்கத்தை இலக்காகக்கொண்டு, அந்த இலக்கை அடையும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பை நல்கி காலாண்டுத் தேர்வை நன்முறையில் நடத்தி மதிப்பீடு செய்து மாணவர்களின் நிலை அறிந்து தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க முழு முயற்சியோடு காலம் கருதாது கற்பித்தல் பணியை மேற்கொண்டுள்ள தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டை உயர்த்திட திட்டமிட்டு செயல்படும் வகையில் காலாண்டுத் தேர்வை கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடத்தி மதிப்பீடு செய்திட வேண்டுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

1. மாணவர்களிடம் பொதுத்தேர்வு தொடர்பான அச்சத்தை போக்கிடும் வகையில் காலாண்டுத் தேர்வை எவ்வித புகாருக்கும் இடமின்றி ஒரு முன்மாதிரி பொதுத்தேர்வாக நடத்தி விழுப்புரம் மாவட்ட தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்திட தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2. 6,7,8,9 காலாண்டுத் தேர்வு வினாத்தாட்கள் மாவட்ட தேர்வு குழுவால் வடிவமைக்கப்பட்டு அதன் அடிப்படையிலேயே 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெற இருக்கிறது. எனவே, மிகுந்த கவனத்துடன் தேர்வுகள் நடத்தவேண்டும்.

3. காலாண்டுத்தேர்வுக்கு மாணவர்களுக்கு தேர்வு அறை ஒதுக்கீடு, ஆசிரியர்களுக்கு தேர்வுஅறை ஒதுக்கீடு, தேர்வுக்கு வருகை தராதோர், விடைத்தாள் கட்டுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விவரம் போன்றவை தொடர்பாக உரிய பதிவேடு பராமரிக்க வேண்டும்.

4. தேர்வு நாளன்று காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை அவரவர் வினாத்தாள் கட்டுக் காப்பக மையத்தில் வினாத்தாள் கட்டுகள் வழங்கப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வினாத்தாட்களை பாதுகாப்பான முறையில் பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

5.காலாண்டுத்தேர்வுக்குரிய பாடத்திட்டம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

6. சுயநிதி/மெட்ரிக் பள்ளிகள் மாவட்ட அளவில் வழங்கப்படும் வினாத்தாட்களை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். தன்னிச்சையாக செயல்பட்டால் துறை நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்பதை அறிவிக்கலாகிறது.

7. 6,7,8,9 வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆண்டு பொதுத் தேர்வைப்போல வகுப்பறைக்கு மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப தேர்வு அறைகளை அமைக்கவேண்டும்.

8. பொதுத் தேர்வைப்போல தேர்வு தொடங்குவது முதல் முடியும் வரை மணி அடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

9. தேர்வுகால அட்டவணையை அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பறைகளிலும், அறிவிப்பு பலகைகளிலும் கண்டிப்பாக தகவல் பலகையில் ஒட்டப்பட வேண்டும்.

எனவே அனைத்து தலைமை ஆசிரியர்களும் தேர்வினை நன்முறையில் நடத்தி மாணவர்கள் கற்றல் திறன் அறிந்து அதற்கேற்ப பயிற்சியளித்து நமது மாவட்டத்தின் தேர்ச்சி விழுக்காட்டினை உயர்த்த ஆசிரியர்களுடன் இணைந்து பாடுபட வேண்டுமென அனைத்து வகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இணைப்பு (1)6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான தேர்வு கால அட்டவணை

(2) பாடத்திட்டம்

Monday, September 12, 2022

September 12, 2022

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள் - நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022



பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி 16.09.2022 மற்றும் 17.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , மடிக்கணினியுடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( பொறுப்பு மாவட்ட கல்வி அலுவலர்களை தவிர்த்து ) உரிய விவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கூட்டப் பொருள்

நாள் : 16.09.2022 மற்றும் 17.09.2022

CEO meeting agenda September

CLICK HERE TO DOWNLOAD

Friday, August 12, 2022

August 12, 2022

மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை - அறிக்கை அனுப்ப CEO உத்தரவ

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதற்கு தடை - அறிக்கை அனுப்ப CEO உத்தரவு.

ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுப்பதை தடை செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியது சார்பாக வட்டார கல்வி அலுவலர்களிடம் அறிக்கை அனுப்பக் கோருதல் சார்பான அரியலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை கடிதம்

Wednesday, July 20, 2022

July 20, 2022

அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: CEO தகவல்

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: முதன்மைக் கல்வி அலுவலா் தகவல்

மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி இயங்கி வரும் 46 மழலையா் பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா தெரிவித்துள்ளாா்.

மதுரை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மழலையா் பள்ளிகள் இயங்கி வரும் நிலையில் இதில் பல பள்ளிகள் கல்வித்துறையின் உரிய அங்கீகாரம் இன்றி இயங்கி வருவதாக தொடா்ச்சியாக புகாா் எழுந்தது. அரசின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி அங்கீகாரத்துடன் செயல்படுவதற்காக சில பள்ளிகள் விண்ணப்பித்துள்ள நிலையில் அனுமதிக் கடிதம் வருவதற்கு முன்பாகவே பல மழலையா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடத்தி இயங்கி வருவதாகவும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக ஆய்வு மேற்கொள்ளும்படி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலா்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் மதுரை மாவட்டம் முழுவதும் அங்கீகாரம் இன்றி செயல்படும் மழலையா் பள்ளிகள் தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனா்.

இதையும் படிக்க | அரசு பள்ளியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த ஆசிரியர்: மாவட்ட கல்வி அலுவலர் புகார்

இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா் கா.காா்த்திகா கூறியது: மதுரை மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 46 மழலையா் பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுவது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பள்ளிகள் அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

Total Pageviews

Search This Blog