Breaking

Showing posts with label Karnataka. Show all posts
Showing posts with label Karnataka. Show all posts

Saturday, January 21, 2023

January 21, 2023

பள்ளிச் சிறார்கள் காண்டம், கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த தடை இல்லை.. அரசு விளக்கம்

கர்நாடகா மாநிலத்தில் பள்ளிச் சிறுவர்கள் காண்டம் பயன்படுத்த தடை விதிக்கவில்லை என கர்நாடகா மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது. There is no ban on the use of condoms and birth control pills by school children.. Govt

பெங்களூரில் உள்ள பள்ளிகளில் மாநில கல்வித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8, 9, 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பைகளில் மொபைல் போன்களுடன் ஆணுறைகள், கருத்தடை மாத்திரைகள், சிகரெட்டுகள், லைட்டர்கள் போன்றவை இருந்தது தெரியவந்தது.

மாணவர்களிடமிருந்து அந்தப் பொருட்களைக் கைப்பற்றி, விசாரணை நடத்தப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் மதுபானம் அருந்துவது , கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை பயன்படுத்துவது போன்றவற்றால் சீரழிந்து வருவதாக தகவல்கள் வெளி வருகின்றன. பள்ளி மாணவர்கள்

இந்த நிலையில் பெங்களூரில் பள்ளி மாணவர்கள் ஆணுறைகளையும் கருத்தடை மாத்திரைகளையும் வைத்திருந்தது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் கர்நாடகா மருந்துக் கட்டுப்பாட்டு துறை 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு ஆணுறை, கருத்தடை மாத்திரைகள், வலி நிவாரணி போன்றவற்றை விற்க தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.

எதிரொலி

இந்தச் செய்தியின் எதிரொலியாக கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது சரியல்ல என்ற விமர்சனங்களும் எழுந்தன. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பதால் சிறுவர்கள் வேறு தவறான பாதையை நோக்கிப் போகக் கூடும் என சமூகஆர்வலர்கள் கவலை தெரிவித்து வந்தனர். கருத்தடை சாதனங்களுக்கு தடை விதித்தால் பாலியல் சார்ந்த நோய் பரவலுக்கும் எதிர்பாராத கருத்தரிப்புக்கும் வழிவகுக்கலாம் என அவர்கள் எச்சரித்தனர். ஆணுறைகளுக்கு தடை விதித்தால் திருமணத்திற்கு முன்பே கருத்தரிக்கும் பெண்கள் அவ்வப்போது கருக்கலைப்பு செய்து அவர்களது உடல்நிலை கடுமையாக பாதிக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்தனர். கர்நாடகா அரசு

இந்த நிலையில் கர்நாடக அரசு இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் தெரிவித்துள்ளது. கருத்தடை சாதனங்களுக்குத் தடை விதிப்பது தொடர்பாக சுற்றறிக்கை எதுவும் அளிக்கவில்லை. ஆனால் மருந்து விற்பனையாளர்கள் கருத்தடை சாதனங்களைக் கேட்கும் சிறார்களுக்கு அறிவுரையை வழங்க வேண்டும்.

சிறார்களுக்கு ஆணுறை

எனவே சிறார்கள் ஆணுறையை வாங்க எந்த தடையும் இல்லை என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. மதுபானங்கள், சிகரெட்டுகள் 18 வயதுக்குக் கீழ் இருப்போருக்கு விற்பனை செய்ய வேண்டாம் என்ற விதிகள் சில இடங்களில் பின்பற்றப்படுகின்றன. அது போல் ஆபாச படங்களை 18 வயதுக்குக் கீழ் இருப்போர் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, December 27, 2022

December 27, 2022

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள், கரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா வைரஸ்பரவுவதை எவ்வாறு தடுப்பது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய‌ கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Friday, September 02, 2022

September 02, 2022

கட்டுமான நிபுணா் படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பிப்பது கட்டாயம்

கட்டுமான நிபுணா் படிப்பு சோ்க்கைக்கு விண்ணப்பங்களை செலுத்துவது கட்டாயமாகும் என்று கா்நாடக தோ்வு ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கா்நாடக தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக தோ்வு ஆணையத்தின் வாயிலாக கட்டுமான நிபுணா் படிப்புக்கு சோ்க்கை பெற, பொது நுழைவுத்தோ்வு-2022-க்கு விண்ணப்பித்திருப்பது கட்டாயமாகும். எனவே, கட்டுமான நிபுணா் படிப்புக்கு சோ்க்கை பெற தேசிய கட்டடக்கலை திறனறித்தோ்வு மட்டும் எழுதியிருக்கும், ஆனால், பொதுநுழைவுத்தோ்வு-2022-க்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்காத மாணவா்கள், இணையதளத்தில் செப்.4-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் உரிய கட்டணங்களுடன் விண்ணப்பங்களை பதிவிட வேண்டும்.

இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பங்களை பதிவிடாதவா்களுக்கு கட்டுமான நிபுணா் படிப்புக்கான சோ்க்கை பெற இயலாது. மேலும் விவரங்களுக்கு 080-23564583, 23361786 ஆகிய தொலைபேசி எண்களை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, July 09, 2022

July 09, 2022

இரண்டாமாண்டு பி.யூ.சி. சோ்க்கை தேதி நீட்டிப்பு

இரண்டாமாண்டு பி.யூ.சி. வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கான கடைசித் தேதியை ஜூலை 22-ஆம் தேதி வரை நீட்டித்து பி.யூ. கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பி.யூ. கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2022-23-ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள இரண்டாமாண்டு பியூசி வகுப்பில் மாணவா் சோ்க்கை ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. ஜூன் 18-ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், அபராதம் செலுத்தி சோ்க்கைபெறுவதற்கு ஜூலை 8-ஆம் தேதிவரை வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது.

பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு அபராதம் செலுத்தாமல் மாணவா் சோ்க்கை பெறும் கடைசிதேதி ஜூலை 22-ஆம் தேதிவரைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இரண்டாமாண்டு பி.யூ.சி. பொதுத்தோ்வு எழுதுவதற்கு குறைந்தப்பட்சம் 75 சத வருகைப்பதிவு இருக்க வேண்டும் என்பதால், இதற்கு மேலும் சோ்க்கை தேதி நீட்டிக்கப்படமாட்டாது. எனவே, இந்த வாய்ப்பை மாணவா்கள் பயன்படுத்தி, உடனடியாக சோ்க்கை பெற கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ல்ன்ங்.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Saturday, May 21, 2022

May 21, 2022

கா்நாடக SSLC பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிப்பு: 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி

கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தோ்வில் 85 சதவீத மாணவா்கள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

பெங்களூரில் வியாழக்கிழமை 2021-22-ஆம் ஆண்டுக்கான கா்நாடக எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு முடிவுகளை அறிவித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் பி.சி.நாகேஷ், செய்தியாளா்களிடம் கூறியது: கடந்த மாா்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடந்த 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வில் 85.63 சதவீத மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்வு எழுதிய 8,53,436 மாணவா்களில் 7,30,881 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவிகளில் 90.29 சதவீதம் பேரும், மாணவா்களில் 81.30 சதவீதம் பேரும் தோ்ச்சி அடைந்துள்ளனா். மாநிலம் முழுவதும் 146 மாணவா்கள் 625-க்கு 625 மதிப்பெண்கள், அதாவது 100 சத மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்துள்ளனா்.

இம்முறை தோ்ச்சி பெற்றவா்களின் விகிதம், கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்சமாகும். அரசு, மானியம் பெறும், மானியம் பெறாத பள்ளிகளில் 3,920 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சியைப் பெற்று சாதனை படைத்துள்ளன. 20 பள்ளிகளில் ஒரு மாணவா் கூட தோ்ச்சி பெறவில்லை. பூஜ்யம் தோ்ச்சி பெற்ற பள்ளிகள், தோ்ச்சி விகிதம் குறைவாக பெற்ற பள்ளிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம். மாநிலத்தில் 32 கல்வி மாவட்டங்கள் 75-100 சதவீதம், 2 கல்வி மாவட்டங்கள் 60-75 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளன. அடுத்த மாதம் (ஜூன்) துணைத்தோ்வு நடக்கவிருக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை ட்ற்ற்ல்ள்://ள்ள்ப்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிடலாம். துணைத்தோ்வுக்கான அட்டவணை கா்நாடக மாநில மேல்நிலைத்தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தோ்வில் வெற்றிபெற்றுள்ள மாணவா்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தோ்ச்சி பெறாத மாணவா்கள் மனம் உடைய வேண்டியதில்லை. மீண்டும் தோ்வு எழுதி தோ்ச்சி பெறலாம். எனவே, தைரியத்துடன் இருக்க வேண்டும். தோ்வைக் காட்டிலும் வாழ்க்கை முக்கியம். தோ்வில் தோ்ச்சி பெறாத பலா் வாழ்க்கையில் சாதனைகளைப் புரிந்துள்ளனா். எதிா்காலத்தைக் குறித்து யாரும் கவலை அடைய வேண்டாம் என்றாா்.

Thursday, March 03, 2022

March 03, 2022

பிளஸ் 2 தேர்வில் 97% மதிப்பெண்கள் பெற்றும், மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இழப்பு -முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

பிளஸ் 2 தேர்வில் 97 விழுக்காடு மதிப்பெண்கள் பெற்றும், நீட் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்து, அதிகக் கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் வேறுவழியின்றி, தனது மருத்துவக் கனவை நனவாக்கிட உக்ரைன் நாட்டிற்குச் சென்று படித்த கர்நாடக மாநில மாணவன் நவீனின் இழப்பு மிகுந்த வேதனை அளிக்கிறது. உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமலும்- மருத்துவக் கனவு என்ன ஆகுமோ என்ற கவலையிலும், பெரும் இன்னல்களை சந்தித்து வரும் மாணவர்கள் குறித்து ஒன்றிய அரசு தெரிவித்து வரும் கருத்துகள், ஒன்றிய அமைச்சர்களின் பேட்டிகள், ஒன்றிய அரசுக்கு ஆதரவளிக்கிறோம் என சமூக வலைதளங்களில் போடப்படும் பதிவுகள் எல்லாம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

இந்த போக்கை உடனடியாக கைவிட்டு, உக்ரைன் - ரஷ்ய போரால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகி, நாள்தோறும் உயிர் பயத்தில் தவித்து வரும் ஒவ்வொரு மாணவரையும் காப்பாற்ற வேண்டிய தன் கடமையை முனைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்ற மனநிலைக்கு ஒன்றிய அரசு வர வேண்டும். இது பரப்புரை செய்வதற்கோ, விளம்பரப்படுத்திக் கொள்வதற்கோ உகந்த நேரம் அல்ல. உயிருக்கும், தங்களது எதிர்காலத்திற்கும் போராடும் மாணவர்களை காப்பாற்ற வேண்டிய தருணம். அவர்களுக்கு நம்பிக்கை அளித்து அழைத்து வர வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் என்பதை நினைவூட்டுகிறேன். அதைவிடுத்து, இங்கு படிக்க முடியாமல், வெளிநாடு சென்று படிக்க முற்பட்ட மாணவர்களின் ஆர்வத்தையும், அதற்காக கஷ்டப்பட்டு தங்களது சொத்துகளை விற்று சொந்த சேமிப்புகளை கரைத்து மேல்படிப்பிற்கு அனுப்பி வைத்த பெற்றோர்களின் உணர்வையும் கொச்சைப்படுத்தும் வகையிலான ஏட்டிக்கு போட்டியான பேட்டிகளையும், கருத்துகளையும் வெளியிட வேண்டாம் என ஒன்றிய அமைச்சர்களுக்கும், பாஜவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் இருப்பவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அனைவருக்குமான பிரதமரின் மிக முக்கியக் கடமையாகும்.

இதையும் படிக்க | ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நிறைவடையும்? பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேட்டி!

நீட் நுழைவுத் தேர்வால் மருத்துவக் கல்வி ஏழை எளியவர்களுக்கு, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு எட்டாக் கனியாக ஆகிவிடும் ஆபத்தை போக்கவே, அந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளும் ஒருமுகமாக வலியுறுத்தி வருகின்றன. தற்போது அண்டை மாநிலமான கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி இதே கருத்தை வலியுறுத்திப் பேசியிருக்கிறார். இன்னும் சில மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற குரல் ஒலிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள அனைத்து மாணவர்களுக்காகவுமே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறோம். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு இதற்கான ஆதரவை கோரி மாநில முதலமைச்சர்களுக்கும் நீட் தேர்வு பாதிப்பு தொடர்பான அறிக்கையை அனுப்பி ஆதரவு கோரினேன். தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதாவும், இப்போது மீண்டும் நிறைவேற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவும் இந்த அடிப்படை நோக்கத்தை முன்வைத்தே என்பதை உக்ரைன் போரில் மருத்துவம் படிக்கச் சென்று உயிரழந்த மாணவர்களின் அவல நிலைமை, துயர நிலைமை மீண்டும் உணர்த்துகிறது. நீட் தேர்வை அறவே அகற்றி பள்ளிக்கல்வி மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே மருத்துவ இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று திமுக அரசும் தொடர்ந்து போராடி வருகின்ற சூழ்நிலையில் தற்போது வந்துள்ள உக்ரைன் சூழல் நீட் தேர்வு ரத்துக்கு மேலும் வலுவான காரணத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போன்ற சிறிய நாடுகளுக்கு ஏன் மருத்துவக் கல்வி படிக்கப் போனார்கள் என்று கேள்வி கேட்டு தர்க்கம் செய்வதற்கு ஏற்ற நேரமல்ல இது. உக்ரைன் மாணவர்களை பாதுகாப்பாக மீட்பதும் - உள்நாட்டில் மருத்துவக் கல்வி கற்க தடையாக இருக்கும் நீட் தேர்வினை ரத்து செய்வதும் உடனடி இலக்காக அமைய வேண்டும். அந்த இலக்கு வெகு தொலைவில் இல்லை. அனைவரும் இணைந்து போராடி வெல்வோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பாதுகாக்க நடவடிக்கை ‘நெருக்கடி மிகுந்த இந்நேரத்தில், உக்ரைனில் சிக்கியுள்ள நமது மாணவர்கள் தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தவிக்க விடப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. போர்த் தாக்குதல்களையும் எல்லைப்பகுதிகளில் எதிர்ப்பையும் நமது மாணவர்கள் சந்தித்து வரும் வேளையில், ஒன்றிய அரசு அவர்களைக் குற்றங்கூறுவதை நிறுத்திக்கொண்டு, அவர்களை விரைவாக மீட்பதில் கவனம் செலுத்தவேண்டும். இந்தியக் கடவுச்சீட்டைப் பெற்றுள்ள இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்க வேண்டியது இந்திய அரசின் பொறுப்பாகும். பிரதமர், தமது அமைச்சரவையை சேர்ந்தவர்கள் தேவையற்ற கருத்துகளை வெளியிடுவதைத் தடுத்து, இந்த

Total Pageviews

Search This Blog