Breaking

Showing posts with label BJP. Show all posts
Showing posts with label BJP. Show all posts

Monday, December 08, 2025

Thursday, December 14, 2023

December 14, 2023

தமிழகத்தில் அரசு பள்ளிகளின் கட்டடம் சீர்கேடு: பாஜக விமர்சனம்



பள்ளிகளின் கட்டடம் சீர்கேடு: பாஜக விமர்சனம்

திருவள்ளூர்மாவட்டம், சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தைகள் மதிய உணவு அருந்தும் போது  கட்டிடத்தின் ஓடுகள் இடிந்து விழுந்ததில் 5 குழந்தைகளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளின் சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 21 ஆயிரத்து 136 ஒன்றிய மற்றும் நடுநிலை தொடக்கப்பள்ளிகளின் வகுப்பறைகளை கட்ட/மேம்படுத்த கடந்த ஆண்டே  240 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நடப்பாண்டில் 800 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், சென்ற ஆண்டே சிறுவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மேம்படுத்தாதது ஏன்? இந்த ஆண்டும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை விளக்க வேண்டும். கட்டிடங்களின் உறுதி தன்மையை கண்காணிக்காதது ஏன்? யார் காரணம்? குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகள் யார்? இந்த அலட்சியத்திற்கு காரணம் யார்?ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் இந்த மெத்தன போக்குக்கு காரணம் என்ன? ஊரக வளர்ச்சி துறை அமைச்சரும், கல்வி துறை அமைச்சரும் இதற்கு பொறுப்பேற்பார்களா? உடனடியாக அந்த பள்ளியின் கட்டிடம் மேம்படுத்தப்பட வேண்டும். படுகாயமடைந்த குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தரமான கல்வியை வழங்குவதில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது என்று ஜூன் 26 அன்று பெருமை பொங்க பேசினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள். ஒரு ஒன்றிய தொடக்கப்பள்ளியை கூட ஒழுங்காக வைத்துக்கொள்ள முடியாது, குழந்தைகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும்  அரசு, கல்வியில் நாங்கள் சாதித்து விட்டோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது வெட்கக்கேடு.

நாராயணன் திருப்பதி, பாஜக

Tuesday, August 08, 2023

August 08, 2023

பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வலியுறுத்தல்!

மாணவர்களுக்கான உபகரணங்கள் தரப்படவில்லை - பாஜக

பள்ளிகள் திறந்து ஒருமாதமாகியும் மாணவர்களுக்கான உபகரணங்கள் வழங்கப்படவில்லை

எது எதற்கோ வீணாக நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். ஆனால், மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கவில்லை; மாணவர்களுக்கு சீருடை, காலணிகள் உள்ளிட்டவற்றை குறித்த நேரத்தில் வழங்குவது அரசின் கடமை

- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

பள்ளி மாணவர்களுக்கு காலணி, சீருடையை உடனடியாக வழங்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

சென்னை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் திறந்து ஒரு மாதம் கடந்த நிலையில், மாணவர்களுக்கு புத்தகப் பை, காலணி மற்றும் சீருடைகளை இன்னும் முழுமையாக வழங்காததால், மாணவ, மாணவிகள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சில பள்ளிகளில் வழங்கப்பட்ட காலணிகள், மாணவர்களுக்கு பொருந்தும் அளவில் இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.பள்ளி மாணவர்களுக்கான உபகரணங்களை குறித்த நேரத்தில் வழங்குவதை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஏன் உறுதி செய்யவில்லை?

கடந்த ஆண்டும் இதேபோல காலதாமதமாக வழங்கப்பட்டதால், அவற்றை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஆண்டாவது, பாடநூல் கழகமும், பள்ளிக்கல்வித் துறையும் மீண்டும் அதே குற்றச்சாட்டு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நூறாவது பிறந்த நாளைக்கொண்டாட, அமைச்சர்கள் தலைமையில் 12 கமிட்டி அமைத்து, ஒவ்வொரு கமிட்டிக்கும் ரூ.3 முதல் ரூ.4 கோடிசெலவிடப்படுவதாக தெரிய வந்துள்ளது. பெருமளவு நிதி இதற்கு ஒதுக்கப்படுவதால், மாணவர்களுக்கு வழங்கவேண்டிய உபகரணங்களை வழங்காமல் தமிழக அரசு அலைக்கழிக்கிறதா? திமுக ஆட்சிக்கு வந்ததும்,பத்தாயிரம் சிதிலமடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, புதியகட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இதுவரை எத்தனை பள்ளிக்கட்டிடங்களைக் கட்டியுள்ளார்கள்?கோடிக்கணக்கில் வீணாக செலவு செய்யும் திமுக அரசுக்கு, நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்க மனமில்லை.

மாணவர்களைக் காக்க வைப்பதை அனுமதிக்க முடியாது. உடனடியாக, தமிழகம் முழுவதும் மாணவ,மாணவிகளுக்கு சீருடை, காலணிகள்உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tuesday, July 25, 2023

July 25, 2023

மருத்துவ கவுன்சிலிங்: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை



மருத்துவ கவுன்சிலிங்: தமிழக அரசுக்கு பாஜக கோரிக்கை

இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக  எண்ணிக்கையில் தமிழக மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் மாணவ‌ர்களு‌க்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கான அனுமதி கிடைக்கவுள்ள நிலையில்,  அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் நடைபெறும் அதே நாளில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலிங்கும் நடத்துவது தவறானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங்கிற்கு பின்னர் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால் மேலும் நூற்றுக்கும் அதிகமான தமிழக மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

அகில இந்திய கவுன்சிலிங் நடைபெறும் அதே நேரத்தில் மாநில கவுன்சிலிங் நடைபெற்றால், அகில இந்திய கவுன்சிலிங்குக்கு தமிழ் மாணவர்கள் விண்ணப்பிக்க மாட்டார்கள். அதனால், தமிழக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய மருத்துவ படிப்புக்கான வாய்ப்பு பிற மாநில மாணவர்களை சென்றடையும். மற்ற மாநிலங்கள் இதை பின்பற்றும் போது, தமிழகம் மட்டும் அதே நாளில் நடத்துவது ஏன்? நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை மேற்கொள்வதை திமுக அரசு தடுப்பது ஏன்? திமுக வின் தமிழர் விரோத போக்கு ஏன்?

நாராயணன் திருப்பதி, பாஜக துணைத் தலைவர்

Wednesday, October 12, 2022

October 12, 2022

மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்றுமொழி: பாஜக திட்டவட்டம்

மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்றுமொழி: பாஜக திட்டவட்டம்

ஹிந்தி பேசாத மாநிலங்களில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் மாநில மொழிகளே பயிற்று மொழியாக இடம் பெற மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளதாக தமிழக பாஜக துணைத் தலைவா் நாராயணன் திருப்பதி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இது குறித்து அவா் சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் ஹிந்தி பேசும் மாநிலங்களில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற வேண்டும் என்றுதான் மத்திய அலுவலா் மொழி ஆய்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

இதன்படி, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெற வேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதல்வா் மு.க.ஸ்டாலின் எதிா்ப்பது ஏன்? நாடு முழுவதும் ஹிந்தியை பொது மொழியாக்க வேண்டும் என்ற பரிந்துரை ஏதும் இடம்பெறவில்லை. மத்திய அரசுப் பணிக்கான போட்டித் தோ்விலிருந்து ஆங்கில கட்டாய பாடத்தை மட்டுமே நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்தில் இனி ஆங்கிலத்துக்கு பதில் தமிழ் இடம் பெறும்.

அலுவல் ஆய்வுக்குழுவின் பரிந்துரைபடி தமிழகத்தில் தமிழ் மொழியே இனி கட்டாயமாகும். ஹிந்தியை கட்டாயமாக்கவில்லை. மாறாக, அனைத்து இந்திய மொழிகளையும் கட்டாயமாக்கும் முயற்சியின் முதல் படியே இது. அதை ஏன் திமுக எதிா்க்கிறது என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

மேலும், மத்திய அரசு, மாநில அரசோடு இது நாள் வரை ஹிந்தி, ஆங்கிலத்தில் தகவல் பரிமாற்றம் செய்து கொண்டிருந்த நிலையில், இனி தாய் மொழியான தமிழ் மொழியில் செய்தி பரிமாற்றம் செய்ய வேண்டும் என்ற இக்குழுவின் பரிந்துரையை ஸ்டாலின் ஏன் எதிா்க்கிறாா்? இதுபோன்ற கேள்விகளுக்கு முதல்வா் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றாா் நாராயணன் திருப்பதி.

Total Pageviews

Search This Blog