Tamil Nadu News
August 10, 2026
Showing posts with label EDUCATION. Show all posts

Monday, August 10, 2026
Tuesday, September 20, 2022
Teachers dissatisfied
September 20, 2022
Teachers are dissatisfied with the merger of education offices! - கல்வி அலுவலகங்கள் இணைப்புக்கு ஆசிரியர்கள் அதிருப்தி!
கல்வி அலுவலகங்கள் இணைப்புக்கு ஆசிரியர்கள் அதிருப்தி! - Teachers are dissatisfied with the merger of education offices!
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் கீழ் செயல்படும் பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகங்கள் மூடப்பட்டு ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவால் உயர்நிலை பள்ளி ஆசிரியர்கள் இனி ராமநாதபுரத்திற்கு அலைந்து திரியும் நிலை ஏற்படுவதால் கால விரயம், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும், என ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.பரமக்குடி கல்வி மாவட்ட அலுவலகம் 1976 இல் துவக்கப்பட்டு 45 ஆண்டுகளை கடந்துள்ளது. இங்கு பரமக்குடி, போகலூர், முதுகுளத்தூர் ஒன்றியங்களை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும், மெட்ரிக் பள்ளிகள் இதன் கீழ் இயங்குகின்றன. இதேபோல் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்தின் கீழ் அதிக பள்ளிகள் இருந்ததால் 2018-19ல் மண்டபம் கல்வி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது.
இந்நிலையில், அனைத்து பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்டங்களையும் ஒருங்கிணைத்தால் 250 க்கும் மேற்பட்ட பள்ளிகளை ஒரே மாவட்ட கல்வி அலுவலர் நிர்வகிக்கும் நிலை ஏற்படும். நிர்வாக காரணங்களுக்காக ஒருங்கிணைக்க அரசு உத்தரவிடும் நிலையில் அலுவலக பணிகளை கையாள்வதில் சிக்கல் ஏற்படும். மேலும் கமுதி, சாயல்குடி, கடலாடி, முதுகுளத்தூர், பார்த்திபனூர் என கடை கோடியில் உள்ள அரசு பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் இல்லை.இதனால் ஒவ்வொரு முறையும் மாவட்ட கல்வி அலுவலர் கேட்கும் ஆவணங்களை கொண்டு செல்ல தலைமை ஆசிரியரே நேரடியாக ராமநாதபுரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
மேலும் பள்ளி தேர்வுகள், அரசு பொது தேர்வுகளின் போது வினாத்தாள்கள் பெறுவதில் தொடங்கி அனைத்திற்கும் இக்கட்டான நிலை ஏற்படும்.ஒரே அலுவலகத்தில் ஆசிரியர்களின் சம்பளம் முதல், பணி பதிவேடுகளை கையாள்வதிலும் காலதாமதம் ஏற்படும். முக்கியமாக தனித் தேர்வர்கள் தொலைதூரத்தில் இருந்து ராமநாதபுரம் செல்ல நேரிடும் என்பதால் அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் ஆசிரியர்கள் அரசின் உத்தரவால் அதிருப்தியில் உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க இணை செயலாளர் நுாருல் அமீன் கூறுகையில், ராமநாதபுரம், பரமக்குடி, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பரமக்குடி சுற்று வட்டாரத்தில் உள்ள நீராவி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செல்லும் அலுவலர்கள் 100 கி.மீ.,க்கு மேல் ராமநாதபுரம் செல்லும் நிலை ஏற்படும். இதனால் கால விரயம் ஏற்படும். வழக்கம் போல் பரமக்குடியில் கல்வி மாவட்ட அலுவலகம் செயல்பட வேண்டும், என்றார்.

Tuesday, August 02, 2022
சென்னை ஐஐடி
August 02, 2022
சென்னை ஐஐடியில் புதிதாக 4 ஆண்டு படிப்பு அறிமுகம்

சென்னை: கல்வி மற்றும் தொழில் துறையில் சிறந்த வாய்ப்புகளுக்கு வழி வகுக்கும் வகையில் 3 ஆண்டு படிப்பாக இருந்த பி.எஸ்.புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் பாடத்தை ஐஐடி மெட்ராஸ் தற்ேபாது 4 வருட படிப்பாக மாற்றியுள்ளது. சென்னை ஐஐடியில் பி.எஸ்சி. புரோகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ் என்ற 3 வருட படிப்பை, பி.எஸ். டேட்டா சயின்ஸ் அண்ட் அப்ளிகேஷன்ஸ் என மாற்றி 4 ஆண்டு பட்டப் படிப்பாக தற்போது அறிமுகப்படுத்தி உள்ளது. பி.எஸ். பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனங்கள் அல்லது ஆராய்ச்சிக் கல்வி நிலையங்களில் மாணவர்கள் 8 மாத கால பணி பயிற்சியோ, ஆய்வுத் திட்டமோ மேற்கொள்ள முடியும். மாணவர்களுக்கு அவரவர் படிப்பிற்கு ஏற்ப சான்றிதழ், டிப்ளமோ, பட்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இதில், தற்போது 12ம் வகுப்பு படித்துவரும் மாணவர்களும் விண்ணப்பங்களை அனுப்பி மாணவர் சேர்க்கையை உறுதிசெய்து கொள்ளலாம். வயது வரம்பு ஏதும் இல்லை என்பதால் பத்தாம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். பெருவாரியான தமிழக மாணவர்கள், அதற்கடுத்து மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என தற்போதுவரை 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடத்திட்டத்தில் சேர்ந்துள்ளனர்.
இந்தியாவின் 111 நகரங்களில் உள்ள 115 தேர்வு மையங்களில் நேரடியாகத் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஐக்கிய அரபு அமீரகம் பஹ்ரைன், குவைத், இலங்கை ஆகிய நாடுகளிலும் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. செப்டம்பர் 2022ல் ஆரம்பமாகும் டேட்டா சயின்ஸ் பாடத்திட்ட வகுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 19ம் தேதி கடைசி நாளாகும். விருப்பமுள்ள மாணவர்கள் https://onlinedegree.itm.ac.in என்ற இணையமுகவரியில் விண்ணப்ப பதிவு செய்யலாம்.

Sunday, April 03, 2022
Saturday, April 02, 2022
Latest News
April 02, 2022
தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை - 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Breaking News: 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும்
தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதித்தேர்வு இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, ஆண்டு இறுதித் தேர்வு கிடையாது
6-9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 5 முதல் 13-ம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்
- பள்ளிக்கல்வித்துறை
1-5 ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதிதேர்வு கிடையாது என்றும் 6-9 ம் வகுப்புகளுக்கு மே 5-13 வரையில் தேர்வுகள் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து இருப்பதாவது:
ஒன்று முதல் 5 -ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதி தேர்வு கிடையாது. அதே போல் 6-9-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு வரும் மே மாதம் 5 ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30 ம் தேதி வெளியிடப்படும்.
9-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2-4 ம் தேதி வரை நடைபெறும்.
2022-23 ம் ஆண்டு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 24 ம் தேதி துவங்குகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் மாதம் 13 ம் தேதி துவங்கும் என தெரிவித்துள்ளது.

Friday, April 01, 2022
EDUCATION
April 01, 2022
கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம்: மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும், மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து மாதிரிப் பள்ளிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வரின் கோரிக்கையை ஏற்று அரசுப் பள்ளியைப் பார்வையிட்டேன். தில்லியில் அமைக்கப்பட்டுள்ளதைப்போன்று தமிழகத்திலும் மாதிரிப் (மாடர்ன்) பள்ளிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடக்க விழாவிற்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்படும். அதில் தில்லி மக்கள் சார்பாக கேஜரிவால் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கல்விக்கும் மருத்துவத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Thursday, March 24, 2022
EDUCATION
March 24, 2022
கல்வி துறைக்கு பட்ஜெட்டில் முதல் முறையாக ரூ.1 லட்சம் கோடி
கல்வி துறைக்கு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடானது முதல்முறையாக ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என கல்வி துறை இணையமைச்சா் சுபாஷ் சா்காா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மாநிலங்களவையில் மேலும் கூறியது:
பட்ஜெட்டில் கல்வி துறைக்கு ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளது இதுவே முதல்முறை.
மேலும், ஆன்லைன் வழியாக மாணவா்கள் கல்வி கற்பதற்கு 15-ஆவது நிதிக் குழு ரூ.6,143 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. தொழில்முறை படிப்புகளுக்கான வளா்ச்சிக்கும் இந்த தொகை செலவிடப்படும் என்றாா் அவா்.

Monday, March 21, 2022
Saturday, March 12, 2022
School Education
March 12, 2022
ஏப்ரல் வரை மாணவர் சேரலாம் - பள்ளி கல்வி துறை அனுமதி!

'ஒன்பதாம் வகுப்பு வரையிலும், ஏப்ரல் மாதம் வரை பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம்' என, பள்ளி கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பருடன் மாணவர் சேர்க்கை நிறுத்தி கொள்ளப்படும். அதன்பின், மாணவர்கள் சேர்க்கப்பட மாட்டார்கள். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு விதி விலக்கு காரணமாக, டிசம்பர் வரையிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் வரையிலும் ஒன்பதாம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால், பல தனியார்பள்ளிகளில் கட்டணம் செலுத்தாத மாணவர்கள், அரசு பள்ளிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர்.

Tuesday, March 01, 2022
Tuesday, February 22, 2022
INFORMATION
February 22, 2022
அறிவோம் எப்.டி.டி.ஐ., - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 28
அறிவோம் எப்.டி.டி.ஐ.,
இவற்றில் சேர்க்கை பெற, ஆல் இந்தியா செலக்சன் டெஸ்ட் (ஏ.ஐ.எஸ்.டி.,) எனப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
கல்வி வளாகங்கள்: நொய்டா, பர்சத்கஞ்ச், சென்னை, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா, குணா, அங்கலேஷ்வர், பாட்னா, ஹைதராபாத், சண்டிகர் ஆகிய 12 நகரங்களில் இக்கல்வி நிறுவனத்திற்கான கல்வி வளாகங்கள் செயல்படுகின்றன
இளநிலை பட்டப்படிப்புகள்:பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ஷன்பி.டெஸ்., - லெதர் கூட்ஸ் அண்டு ஆக்சசெரிஸ் டிசைன்பி.டெஸ்., - பேஷன் டிசைன்படிப்பு காலம்: 4 ஆண்டுகள்
பி.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்சன்டைஸ்படிப்பு காலம்: 3 ஆண்டுகள்
முதுநிலை பட்டப்படிப்புகள்:எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்ஷன்எம்.பி.ஏ., - ரீடெய்ல் அண்டு பேஷன் மெர்சன்டைஸ்படிப்பு காலம்: 2 ஆண்டுகள்
கல்வித்தகுதி:இளநிலை பட்டப்படிப்புகளுக்கு, 12ம் வகுப்பில் தேர்ச்சி வேண்டும். உரிய அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் கொண்ட டிப்ளமா படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
எம்.டெஸ்., படிப்பில் சேர்க்கை பெற, புட்வேர், லெதர், டிசைன், பேஷன், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்ஷர், டெக்னாலஜி, கவின்கலை போன்றவற்றில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.ஏ., படிப்பிற்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சேர்க்கை முறை: https://applyadmission.net/fddi2022 எனும் இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி வழி தேர்வாக மட்டுமே நடைபெறும் ஏ.ஐ.எஸ்.டி., தேர்வில் ஒரு மதிப்பெண் கொண்ட மல்டிப்பிள் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஏப்ரல் 28
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: ஜூன் 19
விபரங்களுக்கு: www.fddiindia.com
Wednesday, February 09, 2022
Politicians
February 09, 2022
‘கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி’
‘கே.ஜி. முதல் பி.ஜி. வரை இலவசக் கல்வி’: காங்கிரஸின் உ.பி. தேர்தல் அறிக்கை
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் கே.ஜி. முதல் முதுநிலைப் பட்டப் படிப்பு வரை பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | 10, பிளஸ் 2 வகுப்புகளுக்கான ஆங்கில திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு - தேர்வுகள் இயக்குனரகம் அறிவிப்பு
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், நேற்றுடன் முதல்கட்ட தொகுதிகளுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
இந்நிலையில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா பேசியதாவது: “பள்ளிக் கட்டணம் கட்டுக்குள் கொண்டுவரப்படும். 2 லட்சம் ஆசிரியர்கள் காலியிடம் நிரப்பப்படும். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு மழலை வகுப்பு முதல் முதுநிலை வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்.
ஆட்சிக்கு வந்து 10 நாள்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம். மின்சாரக் கட்டணத்தை தள்ளுபடி செய்வோம். கரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 வழங்கப்படும். 20 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.
இதையும் படிக்க | தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதல் கலந்தாய்வு
நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ. 10 லட்சம் வரை உதவி வழங்கப்படும். மாட்டின் சாணத்தை ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு அரசால் பெற்றுக் கொள்ளப்படும்.”

TEACHERS
February 09, 2022
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று முதல் மார்ச் 25 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்: கல்வித்துறை அதிரடி
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இயக்கம் மூலம் இன்று முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தேர்ச்சி பெறாவிட்டால் தேர்ச்சி பெறும் வரை அதே பயிற்சியை ஆசிரியர்கள் பெறவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்பது எப்படி?
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித்திட்ட மாநில இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியானது, வீடியோ பாடமாகவும், ஆன்லைன் வழி மதிப்பீடாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை ஆசிரியர்கள் பெற்றால் மட்டுமே சான்றிதழ் பெற முடியும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெறும் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு மார்ச் 25 ஆம் தேதி பயிற்சி நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Monday, February 07, 2022
EDUCATION
February 07, 2022
மின்சக்தி படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 11
மின்சக்தி படிப்புகள்
வழங்கப்படும் படிப்புகள்:பி.ஜி.டி.சி., - பவர்பிளான்ட் இன்ஜினியரிங்பி.ஜி.டி.சி., - பவர் சிஸ்டம் ஆப்ரேஷன்பி.ஜி.டி.சி., - ரினீவபிள் எனர்ஜி மற்றும் கிரிட் இன்டர்பேஸ் டெக்னாலஜிஸ்பி.ஜி.டி.சி., - ஸ்மார்ட் கிரிட் டெக்னாலஜிஸ்
பயிற்சி நிறுவன வளாகங்கள்: பரிதாபாத், புதுடில்லி, நாக்பூர், பெங்களூரு, நெய்வேலி, ஆலப்புழா, ஷிவ்புரி ஆகிய நகரங்களில் என்.பி.டி.ஐ., வளாகங்கள் உள்ளன.
நெய்வேலி பயிற்சி நிறுவனத்தில் போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமா கோர்ஸ் இன் பவர் பிளான்ட் இன்ஜினியரிங் படிப்பு மட்டும் வழங்கப்படுகிறது. இங்கு மொத்தம் 60 மாணவர்கள் சேர்க்கைப்படுகின்றனர். கல்வித்தகுதி: மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ், சி அண்டு ஐ., பவர் இன்ஜினியரிங் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.டெக்., அல்லது பி.இ., அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 11
விபரங்களுக்கு: https://npti.gov.in/

Thursday, February 03, 2022
Union Ministry of Education
February 03, 2022
பிள்ளைகள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் ஒப்புதல் தேவையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்
பிள்ளைகள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் ஒப்புதல் தேவையா என்பதை மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிகள் திறப்பு தொடர்பாக ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் இத்தகவல் வெளியாகியுள்ளது.
கூடுதல் கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு உரிய உதவிகளை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

Wednesday, February 02, 2022
School Education Department
February 02, 2022
பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்: கல்வித்துறை அறிவுறுத்தல்

பள்ளி மாணவா்களுக்கு பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குவதற்குத் தேவையான வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுபிபுய சுற்றறிக்கை:
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் கோரி அதிகளவிலான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் பிழையில்லா மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வழங்குவதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அடுத்த கல்வியாண்டு முதல் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையின்போது பிறப்பு சான்றிதழின்படி மாணவா், பெற்றோா் பெயா் (தமிழ், ஆங்கிலம் 2 மொழிகளிலும்), பிறந்த தேதி ஆகியவற்றை பதிவேட்டில் கட்டாயம் பதிவுசெய்ய வேண்டும். கல்வி தகவல் மேலாண்மை முகமை தளத்தில் (எமிஸ்) உள்ள விவரங்களின் அடிப்படையில்தான் மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்கப்படுகின்றன. எனவே, எமிஸ் தளத்தில் மாணவா்களின் சுய தகவல்களை பிழையின்றி பதிவுசெய்வதை உறுதிசெய்தல் வேண்டும். அதற்கேற்ப எமிஸ் தளத்திலும் பல்வேறு அம்சங்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக பள்ளி தலைமையாசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை முதன்மைக்கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும்.

Tuesday, February 01, 2022
MBBS
February 01, 2022
மருத்துவ படிப்பிற்கு நாளை முதல் விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம்

சென்னை,
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 27-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்கள், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் ஆகியோருக்கான கலந்தாய்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்துவிட்டது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மீதமிருக்கும் 3 இடங்கள் 2-ம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடத்தப்பட உள்ளது. அதன்படி நேற்று முன்தினம் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஆன்-லைனில் கலந்தாய்வு தொடங்கியது. முதலில் பதிவு கட்டணம் செலுத்த இன்று (செவ்வாய்க்கிழமை) வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில் கடந்த 2 நாட்களில் பொதுப்பிரிவில் விண்ணப்பித்திருந்த 10 ஆயிரத்து 456 பேரில் 8 ஆயிரத்து 736 பேர் பதிவு செய்து இருப்பதாக மருத்துவ மாணவர் சேர்க்கை குழு அறிவித்துள்ளது. பதிவு செய்தவர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 5-ந் தேதி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Monday, January 31, 2022
RESULTS
January 31, 2022
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியாகும் தேதி அறிவிப்பு
பிப்.2ம் தேதி வெளியாகிறது கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு
கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26,459 விண்ணப்பங்கள் தகுதியானவை.
தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் tanuvas.ac.in / http://www2.tanuvas.ac.in இணையதளங்களில், காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

Wednesday, January 26, 2022
TAMILNADU
January 26, 2022
ஆராய்ச்சிக் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும்
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயா் கல்வியில் - ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயா்கல்வித் துறை செயல்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா்.
அண்ணா பல்கலை.யில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழக தொடக்க விழாவில் அவா் பேசியது: கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனக் குழுமத்தின் நிதி உதவியுடன் மதுரை காமராஜா் பல்கலைக் கழகத்தில் ரூ. 7.25 கோடி மதிப்பீட்டில் சூரிய சக்தி மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகமாகி வரும் மின் தேவையைப் பூா்த்தி செய்ய சூரிய ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். அனைத்து பல்கலைக் கழகங்களும் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்தின் விண்வெளி ஆராய்ச்சி மையம் சாா்பில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா வான்வழி சிறிய ரக விமானத்தின் வடிவமைப்பையும், அதற்கான மாதிரிகளையும் தயாரித்துள்ளனா். இதற்கு காரணமாக ஆசிரியா்கள், மாணவா்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். தமிழகத்தின் தொழில்நுட்ப முயற்சிகளுக்கு இது முன்மாதிரியாக அமைகிறது. அனைத்துப் பல்கலைக் கழகங்களும், வெறுமனே பட்டம் வழங்குவதாக இல்லாமல் ஆராய்ச்சி நிறுவனங்களாக மாற வேண்டும், ஏராளமான கண்டுபிடிப்புகளைச் செய்து நாட்டுக்கு அா்ப்பணிக்க வேண்டும். தமிழகத்தில்தான் ஆற்றல்மிக்க இளைஞா் சக்தி அதிகம். இந்தியாவில் இருக்கும் மிக முக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தைச் சோ்ந்தவை என்பதை அண்மைக்கால தரவரிசை முடிவுகள் சொல்கின்றன.
புதிய படிப்புகளை கற்க வேண்டும்: செயற்கை நுண்ணறிவு குறித்த படிப்புகள் இன்று முக்கியமானதாகச் சொல்லப்படுகிறது. ‘சைபா் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்’, ‘சோஷியல் இன்ஜினியரிங்’, பொருளாதாரத்தின் வரலாறு என பல படிப்புகள் புதிதாக வந்து கொண்டே இருக்கின்றன. அவை அனைத்தையும் கற்க, இன்றைய மாணவா்களை உயா்கல்வி துறையானது அவா்களுக்கு ஊக்கமாக, தூண்டப்படக்கூடிய நிலையில் இருக்க வேண்டும்.
இது குறித்து உயா் கல்வித்துறை நிபுணா்கள் கூடி மாணவா்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும். கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டம் நமக்கு போதாது. உயா் கல்வியில் - ஆராய்ச்சிக் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற பட்டத்தை நாம் பெற்றாக வேண்டும். அதை நோக்கி உயா்கல்வித் துறை செயல்பட வேண்டும் என்றாா் அவா். உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், உயா்கல்வித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன், தொழில்நுட்ப கல்வி இயக்குநா் க.லட்சுமிபிரியா, கல்லூரிக் கல்வி இயக்குநா் சி.பூரணசந்திரன், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தா் ஆா். வேல்ராஜ், திருவள்ளுவா் பல்கலைக்கழக துணை வேந்தா் தாமரைச்செல்வி சோமசுந்தரம், இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
-அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.10 கோடியில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம்.
- மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடியில் 1 மெகாவாட் சூரிய மின்சக்தி மையம்.
-தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பணிக்காலத்தில் காலமான 21 பேரின் வாரிசுதாரா்கள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 15 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணா அடிப்படையில் பணி நியமன உத்தரவுகள்.

Thursday, January 20, 2022
Today Kalviseithi
January 20, 2022
கல்வி தொலைக்காட்சி, செயலி மூலமாக 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் பணி: தொடர்ந்து வழங்க பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தல்
கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் வழியாக 10, 12-ம்வகுப்பு மாணவர்களுக்கு கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து, கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம், பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்புமாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.
அதற்கேற்ப, அந்தந்த மாவட்டமுதன்மை கல்வி அலுவலகங்கள் வாயிலாக 10. 12-ம் வகுப்பு மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்செய்யும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் இணைய வழியில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தி துரிதமாக பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பிறகு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகதளங்கள் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் பெறும் பகுதிகளை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.