NTA
July 16, 2023
Showing posts with label CUET (UG) 2023. Show all posts
Showing posts with label CUET (UG) 2023. Show all posts
Sunday, July 16, 2023
Wednesday, April 05, 2023
CUET (UG) 2023
April 05, 2023
இளநிலை CUET தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள்
இளநிலை க்யூட் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் - 14 lakh applications for junior CUET examination
மத்திய பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக,யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
மத்திய பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழுவின் தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:
இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, அடுத்த மாதம் 21 - 31ம் தேதிகளில் நடக்கவுள்ளது.
இந்த தேர்வுக்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, 41 சதவீதம் அதிகரித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் புதுடில்லி, பீஹார் மாநிலங்கள் உள்ளன. டில்லி பல்கலை, பனாரஸ் ஹிந்து, அலகாபாத் ஆகிய பல்கலைகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். க்யூட் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரித்துள்ளது.
கடந்தாண்டு 90 கல்லுாரிகள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்றன. தற்போது, இதில் 242 கல்லுாரிகள் இணைந்துள்ளன. இந்தாண்டு, 74 வெளிநாடுகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, March 19, 2023
UGC
March 19, 2023
200 பல்கலை.களில் இளங்கலை படிப்புகளுக்கான CUET தேர்வு: UGC தகவல்
200 பல்கலை.களில் இளங்கலை படிப்புகளுக்கான கியூட் தேர்வு: யுஜிசி தகவல்
இளங்கலை படிப்புகளுக்கான பல்கலை பொது நுழைவு தேர்வை 200க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் தெரிவு செய்திருப்பதாக யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கழகங்களுக்கான பொதுநுழைவு தேர்வை (கியூட்) தேசிய முகமை அமைப்பு நடத்தி வருகிறது. இந்நிலையில், 44 ஒன்றிய பல்கலைக்கழகங்கள், 33 மாநில பல்கலைக் கழகங்கள் உட்பட 206 பல்கலைக்கழகங்கள் கியூட் தேர்வை தேர்வு செய்துள்ளன.
கடந்தாண்டு 90 ஆக மட்டுமே இருந்தது என யுஜிசி அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பல பல்கலைக்கழகங்கள் சேர்க்கைக்கான கியூட் தேர்வை தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மார்ச் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யுஜிசி மூத்த அதிகாரி கூறுகையில், ‘‘கியூட் தேர்வில் பங்கேற்கும் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை தற்போது 200ஐ கடந்துள்ளது. இளங்கலை படிப்புகளுக்கான சேர்க்கை ஜூலை மாதத்துக்குள் முடிவடையும். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும்,’’ என்று தெரிவித்தார்.

Saturday, March 11, 2023
CUET (UG) 2023
March 11, 2023
CUET - கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
இளநிலை பட்டப் படிப்புகளுக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய பல்கலைக் கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேருவதற்கான கியூட் நுழைவுத் தேர்வு மே மாதம் 21 முதல் 31ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி இம்மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக் கழக மானியக் குழு தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Sunday, February 26, 2023
Help Centres
February 26, 2023
Opening of CUET (UG) - 2023 Examination Help Centres– reg
Opening of CUET (UG) - 2023 Examination Help Centres– reg
Subject: Opening of CUET (UG) - 2023 Examination Help Centres– reg. The National Testing Agency has initiated the process of inviting online Application Forms for Common University Entrance Test [CUET (UG) – 2023] as per the Public Notice dated: 09 February 2023.
In order to ensure more participation from the candidates throughout India and to facilitate them, it has been decided to open CUET (UG) - 2023 Examination Help Centres so that awareness is generated among aspiring applicants. This will help providing equal opportunities to the candidates, especially those from rural and remote areas.
The key objective of this is to ensure that candidates who want to appear for CUET (UG) – 2023 should be able to apply for the same without any difficulty and get the necessary guidance, if required. The candidates need not go to any Cyber Cafe for filling their Application Form of CUET (UG) – 2023. The details of these Help Centres are given below:
CLICK HERE TO DOWNLOAD PDF Each Centre will have one dedicated Technical Person in-charge who will be helping the candidates in filling of the Application Form online. The candidates can go to their nearby Help Centre with the required documents and fill the form. This Helpline service is being provided free of cost.
In case any candidate faces difficulty in applying for CUET (UG) – 2023, he/she may contact 011-40759000 / 011 – 69227700 or e-mail at cuet-ug@nta.ac.in.
The candidates are also advised to be in touch with the NTA website(s) www.nta.ac.in and https://cuet.samarth.ac.in/ for the latest updates regarding the exam.
Thursday, February 23, 2023
CUET exam
February 23, 2023
CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்
CUET 2023 - Entrance Test: 15-20 minutes extra for Maths, Accounts Papers
CUET 2023 - நுழைவுத் தோ்வு: கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு 15-20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தோ்வில் (க்யூட்) கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தோ்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாணவா்கள் மற்றும் பெற்றோரிடமிருந்து எழுந்த கோரிக்கைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். யுஜிசி கடந்த ஆண்டு மாா்ச் மாதம் அறிவித்ததன் அடிப்படையில், அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் பட்டப் படிப்புகளில் மாணவா் சோ்க்கை பிளஸ்-2 மதிப்பெண்அடிப்படையில் அல்லாமல், க்யூட் நுழைவுத் தோ்வு மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் இந்தத் தோ்வு நடத்தப்படுகிறது. நிகழாண்டுக்கான க்யூட்-யுஜி தோ்வு வரும் மே 21 முதல் 31-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கு மாா்ச் 12-ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
இந்த நிலையில், க்யூட்-யுஜி தோ்வில் கணிதம், கணக்குப் பதிவியல் தாள்களுக்கு கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. க்யூட் தோ்வில் கணிதம் மற்றும் கணக்குப்பதிவியல் தாள்களை எழுதும் மாணவா்களுக்கு 15 முதல் 20 நிமிஷங்கள் கூடுதல் அவகாசம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தோ்வில் மொழிப் பாடம் உள்பட ஓா் மாணவா் தெரிவு செய்யும் அதிபட்ச பாடங்களின் எண்ணிக்கை 10-ஆக உயா்த்தப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
Wednesday, February 15, 2023
CUET (UG) 2023
February 15, 2023
சிக்கல் தீர்ந்தது!: CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்
சிக்கல் தீர்ந்தது!: CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்
CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கப்பட்டது. படிவத்தில் மாணவர்கள் மற்ற பகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதே நடைமுறை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான CUET-UG நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 12ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. CUET தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. 2021ல் கொரோனா காரணமாக தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று தரப்படவில்லை. இதனிடையே, மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கட்டாயம் என்பதால் CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது. மார்ச் 12ம் தேதி வரை இணையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் இருப்பதால் தமிழ்நாடு அரசு தலையிட்டு விலக்கு பெற்று தர மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், CUET நுழைவுத் தேர்வு விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மூலம் மத்திய பல்கலைக்கழகத்தில் சேர CUET நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு மாணவர்கள் விண்ணப்பிப்பதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.

Tuesday, February 14, 2023
CUET exam
February 14, 2023
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வு - மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள் Last date for admission to Central Universities and Colleges is March 12
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்...
CLICK HERE TO DOWNLOAD
மத்திய பல்கலைக்கழகங்கள் , கல்லூரிகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் மார்ச் 12 - ந் தேதி கடைசிநாள்...
CLICK HERE TO DOWNLOAD
Friday, February 10, 2023
CUET exam
February 10, 2023
CUET நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்!
CUET நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்! CUET Entrance Test: Apply From Tonight!
கியூட் நுழைவுத் தேர்வு: இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம்!
பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான (கியூட்) இளங்களை இரண்டாம் பதிப்புக்கான விண்ணப்ப செயல்முறை இன்று இரவு முதல் தொடங்கி மார்ச் 12 வரை நடைபெறும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். மே 21 முதல் 31ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்பட உள்ளது.
நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்க்க மத்திய மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு எனப்படும் (கியூட்) தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்பப் படிவ விநியோகம் இன்றிரவு முதல் இணைய வழியில் தொடங்கும். விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மாணவர்கள் என்.டி.ஏ. இணையதளத்திலிருந்து அட்மிட் கார்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படாது என்றும் அறிவித்தது.
அதே வேளையில் பல்கலைக்கழகங்களில் இளங்கலை சேர்க்கை செயல்முறை ஜூலை 2023க்குள் முடிக்கப்பட்டு புதிய கல்வி அமர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தொடங்கும் என்றார்.
விண்ணப்பதாரர்கள் 2023ல் நடைபெறும் இளங்களை கியூட் தேர்வுக்கு https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023 கியூட் இளங்களைத் தேர்வு 13 மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படும் என்றார்.