Breaking

Showing posts with label Eng.. Show all posts
Showing posts with label Eng.. Show all posts

Wednesday, September 21, 2022

September 21, 2022

Eng., First Round: 'Admission' ends tomorrow - இன்ஜி., முதல் சுற்று: 'அட்மிஷன்' நாளை கடைசி

Tomorrow is the last day for the first round allotted students in engineering counseling to join colleges.

Engineering General Counseling started on 10th. Out of a total of four rounds, 12,591 candidates were allotted seats in the first round. 6,277 confirmed this allotment and got the final allotment. Also, 4,430 people have got their allotment and are on the waiting list to get allotment if desired seats are available.

In this case, all those who have got quota have been given a week's time to confirm their admission. Accordingly, the concerned students will submit their original certificates, pay the tuition fee and accept the provisional allotment tomorrow to confirm the admission and the final allotment order will be issued on 25th.

Accordingly, it has been announced that the 'Choice Billing' registrations for the second round will start on the 25th. For more information, visit www.tnea online.org.

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், முதல் சுற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள், கல்லுாரிகளில் சேர்வதற்கு நாளை கடைசி நாளாகும்.

இன்ஜினியரிங் பொது கவுன்சிலிங், 10ம் தேதி துவங்கியது. மொத்தம் நான்கு சுற்றுகளில், முதல் சுற்றில் 12 ஆயிரத்து, 591 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த ஒதுக்கீட்டை, 6,277 பேர் உறுதி செய்து, இறுதி ஒதுக்கீடு பெற்றனர். மேலும், 4,430 பேர் தங்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றதுடன், விரும்பிய இடங்கள் கிடைத்தால் ஒதுக்குமாறு, காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

இந்நிலையில், ஒதுக்கீடு பெற்ற அனைவரும் சேர்க்கையை உறுதி செய்வதற்கு, ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை அளித்து, கல்வி கட்டணம் செலுத்தி, சேர்க்கையை உறுதி செய்வதற்கு நாளை கடைசி.தற்காலிக ஒதுக்கீட்டை ஏற்று, முன்னிலை இடங்களுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு, வரும், 25ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்படும்.

இதையடுத்து, இரண்டாம் சுற்றில் உள்ளவர்களுக்கு, விருப்ப கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு தேர்வுக்கான 'சாய்ஸ் பில்லிங்' பதிவுகள், 25ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnea online.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Wednesday, June 22, 2022

June 22, 2022

இன்ஜி., கவுன்சிலிங்: 5 ஆண்டுகளின்கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு

Eng., Counseling: Over 5 years - App score release

The Department of Higher Education, Tamil Nadu has released the 'Cut-Off' Score of Five Years, to help select colleges in Engineering Counseling. Following the release of Plus 2 results in Tamil Nadu, the recruitment process for Engineering students has begun. On behalf of the Tamil Nadu Department of Higher Education, the Tamil Nadu Directorate of Technical Education has started online application registration. Has been notified to register.

The website also contains information about the colleges, courses and reservation rules for which students can participate in counseling to choose a degree course.

The Department of Higher Education has released the cut-off score scores for the previous five years to find out which colleges and courses are available for them in engineering. Accordingly, students can proactively prepare their college and course list, officials said. இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், கல்லுாரிகளை தேர்வு செய்ய உதவியாக, ஐந்தாண்டுகளின், 'கட் - ஆப்' மதிப்பெண் விபரங்களை, தமிழக உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இன்ஜினியரிங் மாணவர்சேர்க்கைப் பணிகள் துவங்கியுள்ளன.தமிழக உயர்கல்வித் துறை சார்பில், தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வழியே, 'ஆன்லைன்' வழியில் விண்ணப்பப் பதிவு துவங்கியுள்ளது.

இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவர்கள், www.tneaonline.org என்ற இணையதளத்தில், ஜூலை 19க்குள் தங்களின் விண்ணப்ப விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பட்டப் படிப்பை தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள கல்லுாரிகள், பாடப்பிரிவுகள் ஆகியவை குறித்தும், இட ஒதுக்கீட்டு விதிகள் குறித்தும், இந்த இணையதளத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தங்களின் கட் - ஆப் மதிப்பெண்ணை கணக்கிட வேண்டும்.

இன்ஜினியரிங்கில் தங்களுக்கு எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவு கிடைக்கும் என்ற உத்தேச நிலையை தெரிந்து கொள்ள, முந்தைய ஐந்தாண்டுகளின் கட் - ஆப் மதிப்பெண் விபரங்களை, உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதற்கேற்ப, தங்களின் கல்லுாரி மற்றும் பாடப்பிரிவு பட்டியலை மாணவர்கள் உத்தேசமாக தயாரிக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Total Pageviews

Search This Blog