Breaking

Showing posts with label monthly scholarship scheme. Show all posts
Showing posts with label monthly scholarship scheme. Show all posts

Sunday, March 17, 2024

Sunday, December 10, 2023

December 10, 2023

பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?



பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு விண்ணப்பிப்பது எப்படி?

நாடு முழுவதும் இதர பிற்படுத்தப் பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர், ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கு https://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கான பெற் றோரது உச்சகட்ட வருமான வரம்பு ரூ.2.5 லட்சம் ஆகும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.12.2023. கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரிபார்க்க கடைசி நாள்:15.01.2024. இத்திட்டத்தின்கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணைப்பில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுசெய்து 2023-24ம் ஆண்டுக்கான விண்ணப்பித்தை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தின்கீழ் நடப்பாண்டில் புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 8 மற்றும் 10ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப் படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு இக்கல்வி உதவித் தொகையானது வழங்கப் படும். எனவே, 60 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக 8 மற்றும் 10ம் வகுப்புகளில் மதிப்பெண் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் சென்று தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல் பதிவுகளை Fresh Application என்ற இணைப்பின்கீழ் பதிவுசெய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Thursday, September 08, 2022

September 08, 2022

மாணவா்களுக்கான சிறப்பு ஊக்கத் தொகை: விண்ணப்பங்களை அனுப்ப அறிவுறுத்தல்

பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத் தொகையைப் பெற மாணவா்கள் துரிதமாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குநா்(தொழிற்கல்வி) வெ.ஜெயக்குமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவா்களின் இடைநிற்றலை தவிா்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி 2020-21-ஆம் கல்வியாண்டில் படித்த மாணவா்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவதற்காக தகுதிபெற்றவா்களின் வங்கிக்கணக்கு விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அதேநேரம் அரியலூா், கள்ளக்குறிச்சி உள்பட சில மாவட்டங்களில் மாணவா் தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவேற்றப்படவில்லை. இதனால் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாணவா்களின் வங்கிக்கணக்கு விவரம் உள்பட தகவல்களை மின்னஞ்சல் வழியாக துரிதமாக சமா்பிக்க வேண்டும்.

மேலும், அந்த தகவல்களை எமிஸ் தளத்திலும் பிழையின்றி பதிவுசெய்ய வேண்டும். இதில் ஏதேனும் தவறுகள் நடைபெற்றால் சாா்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியா்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக்கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

Thursday, August 25, 2022

August 25, 2022

உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம்: உயர்கல்வித்துறை

நடப்பாண்டில் உயர்கல்வி சேர்ந்த மாணவர்கள் ஒன்றிய அரசின் திறன் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. www.scholarships.gov.in என்ற தளத்தில் ஆகஸ்ட் 31க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.

Sunday, August 21, 2022

August 21, 2022

சிறுபான்மையின மாணவியருக்கு புதிய ஊக்கத்தொகை திட்டம்

கிராமப்புறப் பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் மாணவியருக்கு, ஊக்கத்தொகை வழங்க, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவியர், இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்க, மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஊக்கத் தொகையாக, ஆண்டுக்கு 500 ரூபாய்; ஆறாம் வகுப்பு மாணவியருக்கு, 1,000 ரூபாய் வழங்க, சிறுபான்மையினர் நலத் துறை இயக்குனர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

அதை பரிசீலனை செய்த அரசு, 'கிராமப்புற பள்ளிகளில் சிறுபான்மையின சமுதாய பெண் குழந்தைகள் கல்வி கற்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்' என்ற பெயரில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த, 2.75 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளுடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிராமப்புறப் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வழியாக வழங்கப்படும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள், இந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்

ஊக்கத்தொகை பெற, சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின், பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மாணவியரின் பெற்றோர் வருமான வரம்பு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

Total Pageviews

Search This Blog