Breaking

Showing posts with label அமைச்சர். Show all posts
Showing posts with label அமைச்சர். Show all posts

Tuesday, August 09, 2022

August 09, 2022

ஆசிரியர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி

ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளும் படிப்படியாக தீர்த்து வைக்கப்படும் என்று கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்ற "ஆசிரியர்களுடன் அன்பில்" என்ற நி்கழ்வில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதிபட தெரிவித்தார்.

கடந்த 24-ம் தேதி கோயம்புத்தூரில் கே.பி.ஆர் கல்லூரியில் கல்வியாளர்கள் சங்கமம் நடத்திய “ஆசிரியர்களுடன் அன்பில்” என்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது: எனக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்பது கல்வித்துறை அமைச்சராவதற்கு பின்னர் ஏற்பட்டதல்ல, எனது பள்ளிப் பருவத்தில் இருந்தே எனக்கு ஆசிரியர்களுடனான தொடர்பும், மரியாதையும் இருந்து வருகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக நான் இருந்தபோதே, ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொண்ட இதே கல்வியாளர் சங்கமம் நிகழ்ச்சியில், வரும் தேர்தலில் ‘‘காட்சி மாறும், ஆட்சியும் மாறும்” அப்போது எங்கள் துறைக்கு நீங்கள் அமைச்சராக வருவீர்கள்" என்று சொன்ன சிகரம் சதிஷ் ஓர் ஆசிரியர்.

ஆசிரியர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தொகுத்து பட்டியலிட்டுள்ளோம். கடந்த பத்தாண்டுகளில் ஆட்சியில் மட்டுமல்லாமல், கல்வித்துறையிலும் ஏற்பட்ட குழப்பங்களையும், சீர்கேடுகளையும் சரிசெய்து கொண்டிருக்கிறோம், அவை அனைத்தும் சரிசெய்யப்பட்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக விரைவில் நிறைவேற்றப்படும். கண்டிப்பாக அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். மாதத்திற்கு இரண்டு மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து உங்களைத் தேடித் தேடி உங்களது குறைகளைக் கேட்டு அவற்றைக் களைவதற்கு உரிய நடவடிக்கை எடுப்பேன். எல்லாவித சவால்களையும் கடந்து, மகிழ்வுடன் ஆசிரியர்கள் கற்பித்தல் செயல் பாடுகளில் மட்டும் ஈடுபடும் சூழல் விரைவில் ஏற்படும். அதில் ஏற்படும் பிரச்சினைகளை அறிய மாவட்டம்தோறும் ஆசிரியர்களை நோக்கி நானே செல்லப்போகிறேன். அங்கு அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உடனுக்குடன் சரிசெய்வேன்.

எனது அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ என்னை பார்ப்பதற்காக எந்த ஆசிரியர்களும் வந்து காத்துக் கொண்டிருக்க வேண்டாம். நாம் ஒன்றினைந்து செயல்பட்டால் தமிழகத்தின் வருங்கால தலைமுறைகளை சிறந்தவர்களாக உருவாக்க முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Monday, July 25, 2022

July 25, 2022

ஆசிரியர் நியமன முறைகேடு: கைது குறித்து தெரிவிக்க நள்ளிரவில் போன் செய்த அமைச்சர்!

சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் நான்கு முறை போனில் தொடர்புகொள்ள முயன்றதாக அமலாக்கத்துறையின் `அரெஸ்ட் மெமோ'-வில் கூறப்பட்டிருக்கிறது.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, அந்த மாநிலத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பார்த்தா சாட்டர்ஜி, அமலாக்கத்துறையால் கடந்த சனிக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார்.

இதையும் படிக்க | 10-ம் வகுப்பு துணைத்தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு

இந்த நிலையில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அவர் நான்கு முறை போனில் தொடர்புகொள்ள முயன்றதாக அமலாக்கத்துறையின் `அரெஸ்ட் மெமோ'-வில் கூறப்பட்டிருக்கிறது. அரெஸ்ட் மெமோ என்பது, கைதுசெய்யப்படும் நபரைக் காவலில் வைக்க பின்பற்றப்படும் ஒரு பொதுவான நடைமுறை. அதன்படி குற்றம்சாட்டப்பட்ட எந்தவொரு நபரும் அவர்கள், கைதுசெய்யப்பட்டதைத் தெரிவிக்க உறவினர் அல்லது நண்பரை போனில் அழைக்கலாம்.

அந்த நடைமுறையின் கீழ்தான் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, சட்டர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார். இதில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்டப் பிறகு, மம்தா பானர்ஜிக்கு மொத்தம் மூன்று முறை அழைப்பு விடுத்திருக்கிறார். சரியாக அதிகாலை 1:55 மணியளவில் சாட்டர்ஜி கைதுசெய்யப்பட்ட போதும், அதிகாலை 2:33 மணிக்கும், 3.37 மணிக்கும்... பின்னர் காலை 9:35 மணிக்கும் என நான்கு முறை மம்தா பானர்ஜியை போனில் அழைத்திருக்கிறார். ஆனால் மம்தா, நான்கு முறையும் சாட்டர்ஜியின் அழைப்பை ஏற்கவில்லை. இருப்பினும் திரிணாமுல் காங்கிரஸ் இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துவிட்டது.

இதையும் படிக்க | வகுப்பு 12|நுண்ணுயிரியல்|பாடம் 10|மருத்துவ வைரலாஜி| பகுதி 2

கைதுசெய்யப்பட்ட அன்றே, மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சாட்டர்ஜி, நீதிமன்ற உத்தரவின்பேரில் புவனேஸ்வரிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று காலை மாற்றப்பட்டார். மேலும் சிகிச்சை முடிந்த பின்னர் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

முன்னதாக இந்த விவகாரத்தில் சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 20 கோடி ரூபாய் ரொக்கம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Monday, July 18, 2022

July 18, 2022

இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்

கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கண்டித்து இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று வன்முறை ஏற்பட்டது. பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.



இதையும் படிக்க | தனியார் பள்ளியில் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு...

கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில், பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது.



இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.



இதையும் படிக்க | COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS - PDF

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். கனியாமூர் தனியார் பள்ளி தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் அளித்து அதன்பிறகான ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் எனத் தெரிவிய்த்தார்.

Tuesday, July 12, 2022

July 12, 2022

தன்னார்வலர்கள் மூலம் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தன்னார்வலர்கள் மூலம் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது: 15 வயதிற்கும் மேற்பட்ட பள்ளி செல்ல வாய்பில்லாதவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 3.10 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்க இலக்கு நிர்ணயம் செய்தோம். ஆனால் இலக்கை தாண்டி 3.19 லட்சம் பேருக்கு எழுத்தறிவு அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் 4.80 லட்சம் பேர் என்ற இலக்கு தாண்டி முடிக்கப்படும். இத்திட்டத்திற்கு ரூ.9.83 கோடியை முதல்வர் ஒதுக்கி உள்ளார் என்றார்.

Total Pageviews

Search This Blog