Private Schools
April 28, 2026
Showing posts with label PRIVATE. Show all posts

Tuesday, April 28, 2026
Friday, April 21, 2023
Private Schools
April 21, 2023
தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை முறைப்படுத்தும் விவகாரத்தில் ஜூன் 15வரை தற்போதைய நிலையே நீடிக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசு பதில்தர உத்தரவிட்டு கிறிஸ்தவ திருச்சபைகள் தொடர்ந்த வழக்கை ஜூன் 5க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tuesday, August 30, 2022
RTE
August 30, 2022
இலவச கல்வி திட்டத்தில் கட்டணம் குறைப்பு: தனியார் பள்ளிகள் அதிருப்தி
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், இலவச சேர்க்கைக்கான மாணவர் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எல்.கே.ஜி., முதல் 8ம் வகுப்பு வரை, கல்வி கட்டணமின்றி மாணவர்கள் படிக்கலாம்.எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படும் மாணவர்கள், ஒரே பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும்போது, இந்த சலுகையை பெற முடியும். இதற்காக, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்து, அந்த கட்டணம் அரசின் சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணம் புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன்படி, எல்.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு வரை, ஒவ்வொரு மாணவருக்கும், 12 ஆயிரத்து 76 ரூபாய்; 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, 15 ஆயிரத்து 711 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொகையானது, கடந்த முறை நிர்ணயித்த தொகையை விட குறைவு. கடந்த ஆண்டைவிட, 382 ரூபாயில் இருந்து 1,395 ரூபாய் வரை கல்வி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதனால், இலவச திட்டத்தில் மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகள் அதிருப்தி அடைந்துள்ளன.

Thursday, August 11, 2022
VIDEOS
August 11, 2022
"729 தனியார் பள்ளிகளுக்கு.." - கல்வித்துறை உத்தரவு
அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு!
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு.
ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை அங்கீகாரம் வழங்கல்.
”உரிய கட்டட அனுமதி பெறாமல் இயங்கும் 729 தனியார் & அரசு உதவி பெறும் பள்ளிகள் அடுத்த 6 மாதங்களுக்குள் உரிய அனுமதியைப் பெற வேண்டும்;
6 மாதங்களில் அனுமதி பெற்றால் மட்டுமே அடுத்த ஓராண்டுக்கு அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படும்”
- பள்ளிக்கல்வித்துறை

Wednesday, April 20, 2022
RTE
April 20, 2022
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை - இன்று முதல் விண்ணப்பம்
தமிழகத்தில் 2022-23 ம் கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச, கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் படி, சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் இலவசமாக ஏழை மற்றும் சிறுபான்மையினரின் குழந்தைகள் பயிலுவதற்கான சட்டமானது அமலில் உள்ளது. எனவே அதன்படி நடப்பாண்டில் இன்று முதல் மாணவர் சேர்க்கையானது இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
எல்.கே.ஜி. அல்லது 1-ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம் என்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும். குழந்தைகள் அனைவரும் கல்வி அறிவை பெறவேண்டும், அரசு பள்ளி இல்லாத பகுதிகளில் தனியார் பள்ளிகள் இருப்பின், அப்பள்ளியில் சேர்ந்து பயில வேண்டும்; கட்டணம் காரணமாக படிக்கச் இயலாத சூழ்நிலை உருவாக கூடாது என்பதை அடிப்படியாக கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பயன்படுத்த வரைமுறைக்குள் உள்ள பெற்றோர்கள், இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மே மாதம் 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது. rte.thschools.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பெற்றோர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. சிறுபான்மையினர் அந்தஸ்தை பெறாத அனைத்து விதமான நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,ICE மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளிலும் இலவசமாக மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சாரிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் முன்னுரிமை என்பதை வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், ஆதரவற்றோரின் பிள்ளைகள், எச்ஐவி-யால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 3-ம் பாலினத்தவர் உட்பட துப்புரவு தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முன்னரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, April 19, 2022
RTE
April 19, 2022
தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்ப பதிவு நாளை துவக்கம்
Under the Compulsory Right to Education Act, application registration for non-tuition-free student admission in government-allocated places in private schools is set to begin tomorrow. Under the Right to Compulsory and Free Education Act, the government must provide 25 percent of seats in private self-funded schools that do not have minority status, in the LKG, or first grade entry level class.
In these places, children from economically disadvantaged families are enrolled through the state's online registration system. Instead, tuition will be paid directly to schools on behalf of the government. Under this scheme, the Department of School Education has announced an online registration system for student admission for the coming academic year. Parents who want to enroll their children in this scheme can apply from tomorrow at https://rte.tnschools.gov.in/ The deadline to apply is May 18. Parents can apply through their computer. Arrangements have also been made for application registration at the Office of Primary Education, District, Regional Education Offices and Integrated School Education Regional Resource Centers, according to the Matric Directorate of the Department of School Education.
கட்டாய கல்வி உரிமை
கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், கல்வி கட்டணமில்லாத மாணவர் சேர்க்கைக்கு, நாளை முதல் விண்ணப்ப பதிவு துவங்க உள்ளது. கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், சிறுபான்மை அந்தஸ்து பெறாத தனியார் சுயநிதி பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பு ஆகிய நுழைவு நிலை வகுப்பில், 25 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் சேர விண்ணப்ப பதிவு
இந்த இடங்களில், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த குடும்பத்தினரின் குழந்தைகள், அரசின் ஆன்லைன் பதிவு முறை வழியாக சேர்க்கப்படுகின்றனர்.இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கு, 8ம் வகுப்பு வரை படிக்க, பெற்றோரிடம் இருந்து கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. மாறாக, அரசு சார்பில் பள்ளிகளுக்கு நேரடியாக கல்வி கட்டணம் வழங்கப்படும். இந்த திட்டத்தில், வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் பதிவு முறையை பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
மே 18 வரை அவகாசம்
இந்த திட்டத்தில், தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர், https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மே 18 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெற்றோர் தங்கள் கணினி வழியாக விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டார வள மைய அலுவலகங்களிலும், விண்ணப்ப பதிவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி துறையின் மெட்ரிக் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Wednesday, March 30, 2022
Saturday, March 12, 2022
Saturday, February 12, 2022
PRIVATE
February 12, 2022
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம்
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணம்: ராமதாஸ் வரவேற்பு
தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரிகளில் நிா்ணயிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சேரும் மாணவா்களில் 50 சதவீதத்தினரிடம் அரசு கல்லூரிகளில் நிா்ணயிக்கப்படும் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
தனியாா் கல்லூரிகளில் 50 சதவீதம் முதல் 65 சதவீதம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. கடந்த காலங்களில் தனியாா் கல்லூரிகளில் சேர இடம் கிடைத்தும் கட்டணம் செலுத்த முடியாததால் ஏழை மாணவா்களால் சேர முடியவில்லை. இனி தனியாா் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களுக்கு அரசு கல்லூரி கட்டணமான ரூ.13,610 மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் ஏழை நடுத்தர மாணவா்களும் எளிதாக மருத்துவப் படிப்பில் சேர முடியும். ஆனால், தனியாா் நிகா்நிலை பல்கலைகளைப் பொருத்தவரை, அவற்றின் மருத்துவ மாணவா் சோ்க்கை கலந்தாய்வையும் மத்திய அரசு தான் நடத்துகிறது. கட்டணத்தையும் மத்திய அரசே நிா்ணயிக்கிறது. இத்தகைய சூழலில், அவற்றில் உள்ள 50 சதவீத இடங்களுக்கு அரசு கட்டணத்தை யாா் நிா்ணயிப்பது என்ற வினா எழுகிறது. மத்திய அரசுடன் தமிழக அரசு பேசி தனியாா் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 சதவீத இடங்களுக்கான கட்டணம் குறித்த தெளிவான ஆணைகளையும் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

Sunday, February 06, 2022
Wednesday, January 05, 2022
Tuesday, November 23, 2021
PRIVATE
November 23, 2021
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - நாள்: 26.11.2021
மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உயர்திரு.கே.என்.நேரு அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது
இடம் : தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், சேலம் - 5. நாள்: 26.11.2021, வெள்ளிக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பம்சங்கள்
* 200 க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள்
* 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
* தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அன்றே பணிநியமன ஆணை
* அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டுதல்கள்
* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்
* மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள்
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio-Data) ஆகியவற்றை முகாம் அன்று நேரில் கொண்டு வர வேண்டும்.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: நாள் 28.11.2021
திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை திண்டுக்கல் MVM மகளிர் அரசு கலைக்கல்லூரியில் நடைபெற உள்ளது.
இவ்வேலைவாய்ப்பு மேளாவில் 50-க்கும் மேற்பட்ட தனியார் துறை சார்ந்த சேவை மற்றும் தொழில் நிறுவனங்கள் சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் போன்ற பெருநகரங்களிலிருந்து டெக்ஸ்டைல்ஸ், ரெடிமேட் மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களிலிருந்து கார்மெண்ட்ஸ், மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி மற்றும் கட்டுமானத்துறை சார்ந்த நிறுவனம் போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுடைய இளைஞர்களை (ஆண் பெண்) தேர்வு செய்து வேலை வாய்ப்புகள் வழங்கவுள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம மற்றும் நகராட்சி / பேரூராட்சிப் பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் (ஆண் / பெண்) கலந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், இம்முகாமில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் பட்டயப்படிப்பு (Diploma), பட்டப்படிப்பு (Degree), ஐ.டி.ஐ (ITI), பொறியியல் படிப்பு (Engg) படித்தவர்களும் கலந்து கொள்ளலாம். மூலம் தகுதியான இயைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, இம்முகாமின் அவரவர் தகுதிக்கேற்ப தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்கள்) சுயவிபரக்குறிப்பு (BIO -DATA) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இம்முாகமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Thursday, November 18, 2021
SCHOOLS
November 18, 2021
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியீடு
தமிழகத்திலுள்ள தனியார் பள்ளிகளுக்கு மேலும் 3 ஆண்டுகள் அங்கீகாரம் நீட்டித்து அரசாணை வௌியிடப்பட்டுள்ளது. கட்டட சான்று, தடையில்லா சான்று, நிரந்தர உள்கட்டமைப்பு சான்று ஆகியவை சமர்பிக்க தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சான்றுகளை சமர்பிக்க தவறினால் அங்கீகாரம் ரத்தாகும் என பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா கூறியுள்ளார்.
Saturday, November 13, 2021
SCHOOLS
November 13, 2021
தனியார் பள்ளிகளுக்கு கல்வித் துறையின் புதிய உத்தரவு
தொடர் கனமழையால் சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட கடலோரமாவட்டங்களில் மின்தடை, வீடுகளில் வெள்ளநீர் புகுதல் போன்றசிக்கல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஆன்லைன்வகுப்புகளில் பங்கேற்க சில தனியார் பள்ளிகள், மாணவர்களை நிர்பந்திப்பதாக கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து மழைக்காலங்களின்போது ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க மாணவர்களை, பள்ளிகள் கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: பருவமழை தீவிரத்தால் கடலோர மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, நடைமுறைசிக்கல்களைக் கருத்தில் கொண்டு மழை பாதிப்புள்ள பகுதிகளில் இயங்கும் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக விடுமுறை வழங்க வேண்டும். ஆன்லைனில் பாடம்,தேர்வுகள் நடத்தினாலும் மாணவர்கள் பங்கேற்க நிர்பந்திக்க கூடாது.
வீட்டுப்பாடம் உட்பட இதர கற்றல் பணிகளையும் வழங்கக்கூடாது. இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் வாயிலாகதனியார் பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday, October 09, 2021
SCHOOLS
October 09, 2021
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் சொத்து வரி வசூலிக்க கடந்த 2018ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராக தனியார் பளிகள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், இது அரசு கொள்கை சார்ந்தது எனக்கூறி கடந்த 2019ம் ஆண்டு தள்ளுபடி செய்திருந்தது.
இதையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தனியார் பள்ளிகள் சங்கத்தின் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி சஞ்ஜீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலமுருகன் வாதத்தில், ‘அரசு பள்ளிகளுக்கு வழங்குவது போன்று தனியார் பள்ளிகளுக்கும் அனைத்து சலுகைகளும் வழங்க வேண்டும். மேலும் இதில் குறிப்பாக சொத்துவரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்,’ என தெரிவித்தார். வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இது குறித்து தமிழக அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.
Monday, October 04, 2021
Sunday, October 03, 2021
SCHOOLS
October 03, 2021
தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: 6 வாரங்களில் முடிவெடுக்க உயா் நீதிமன்றம் உத்தரவு
"தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியாா் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, ஆண்டுதோறும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதை எதிா்த்தும், பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கவும் அரசுக்கு உத்தரவிடக்கோரி, அகில இந்திய தனியாா் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளா் கே.பழனியப்பன் உள்பட 50 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா்.
இதுதொடா்பான மனுக்களில், தனியாா் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தில் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் மட்டுமே வழங்க வேண்டுமென கூறப்படவில்லை என்றும், சட்டத்தை மீறி தற்காலிக அங்கீகாரம் என்ற கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தனா். இந்த மனுக்கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த 1994-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க உத்தரவிட வேண்டுமென மனுதாரா்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத்தொடா்ந்து தமிழக அரசு தரப்பில், கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணைக்குப் பின்னா் பல அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை செயலற்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களுக்குப் பின்னா் கடந்த 1994-ஆம் ஆண்டுக்கு பின் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ஆய்வு செய்தாா். இதையடுத்து பின்னாளில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளில் கடந்த 1994-ஆம் ஆண்டு அரசாணை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனவே மேற்குறிப்பிட்ட அரசாணையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாா் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்குவது தொடா்பாக ஆறு வாரங்களில் முடிவெடுக்க வேண்டுமென மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தாா்."

தமிழக தனியார் பள்ளிகள் கல்வி கட்டணம் – சுற்றறிக்கை வெளியீடு!
தேனி மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை வெளியிட வேண்டும் என, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் விபரம்:
தமிழகத்தில் தனியார் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக். பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகள் பல இயங்கி வருகின்றன. இந்நிலையில் பெற்றோர்கள் பலர் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் விரும்பி சேர்த்து வருகின்றனர். அதே சமயம் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக வும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை, பள்ளி தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என, மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் தனியார் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கல்வி கட்டண விவரத்தை பள்ளிகளில் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் என்று மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.