Choosing College
May 08, 2025
Showing posts with label Choosing College. Show all posts

Thursday, May 08, 2025
Wednesday, October 04, 2023
Government Autonomous Colleges
October 04, 2023
பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப் பயணம்: அக்.25-ம் தேதி தொடங்குகிறது

உயர்கல்வி குறித்த அறிமுகத்துக்காக பிளஸ் 2 மாணவர்களை கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லும் கல்லூரி களப் பயணம் நிகழ்வு வரும் 25-ம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் மா.ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
‘நான் முதல்வன்’ உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் கடந்த கல்வி ஆண்டில் (2022-23) மாவட்ட ஆட்சியர்களின் வழிகாட்டுதலில் கல்லூரி களப் பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதன்மூலம் 33,339 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அருகே உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்னர். உயர்கல்வி குறித்து மாணவர்களுக்கு இருக்கும் அச்சம், குழப்பங்கள் நீங்குவதற்கு இந்த பயண அனுபவம் வழிசெய்தது. அதேபோல, இந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 2 மாணவர்கள் பயனடைய கல்லூரி களப் பயணம் நிகழ்வை அக்.25 முதல் 28-ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பள்ளிக்கு 35 மாணவர்கள் வீதம் தேர்வு செய்யப்பட்டு, அருகில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.
Wednesday, December 14, 2022
EXAMS
December 14, 2022
கலை, அறிவியல் படிப்புக்கான பருவத்தேர்வு நடத்தக்கூடாது; கல்லூரிகளுக்கு உத்தரவு

கல்லூரிக் கல்வி இயக்குநர் ம.ஈஸ்வரமூர்த்தி, அனைத்து மண்டல இயக்குநர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில் இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியல் உதவியாளர் பணிக்கான தேர்வு டிசம்பர் 14 முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த தேர்வில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ள ஏதுவாக அந்த நாட்களில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு தேர்வுகள் ஏதும் நடத்தக்கூடாது. இதுசார்ந்து அரசு, நிதியுதவி மற்றும் தனியார் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனைத்து மண்டல இயக்குநர்களும் உரியஅறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேன்டூஸ் புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வுக்கான மாற்று தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிச. 9-ல்நடக்கவிருந்த தேர்வுகள் டிச.24-ம் தேதியும், டிச.10-ல் நடக்கவிருந்த தேர்வுகள்டிச.31-ம் தேதியும் நடக்கிறது

Friday, September 02, 2022
government arts and science colleges
September 02, 2022
கல்லூரிக் கல்வி - 2022-23 - ஆம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் தேவை உள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணாக்கர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன
G.O-213-அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்
அரசுக் கல்லூரிகளில் 20% வரை இடங்கள் அதிகரிப்பு அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம். அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% கூடுதல் மாணவர்களை சேர்த்துக்கொள்ளலாம் தனியார் கல்லூரிகள் 10% மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்
CLICK HERE TO DOWNLOAD

Thursday, August 11, 2022
Tuesday, August 09, 2022
மாணவர்கள்
August 09, 2022
கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்
தமிழகத்தில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளை விட கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
சமீப ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் அரசு, அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர மாணவர்கள் விரும்புகின்றனர். கலைப் பிரிவுவில் தலா ஒரு வகுப்பிற்கு 60 பேரும், அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு விண்ணப்பங்கள் வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை அடங்கிய மதுரை மண்டலத்திலுள்ள 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23-ம் கல்வியாண்டிற்கு பல இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 73,260 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14, 430 மட்டுமே. 5 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஐடி பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, திருமங்கலம் அரசு கல்லூரிகளில் தமிழ் இலக்கிய பாடத்தில் சேர போட்டி அதிகரித்துள்ளது. திருமங்கலம் அரசு கல்லூரியில் ஏ மற்றும் பி தமிழ் பாட பிரிவுகளுக்கு தலா 60 பேர் மட்டுமே சேர்க்க முடியும் என்றாலும், 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பிற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 3 மடங்கு அதிகமானோர் தமிழ் பாடப்பிரிவில் சேர விரும்பியுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம், எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பாடப்பிரிவை தேர்ந்தெடுகின்றனர் என, தமிழ்துறை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.
தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, போலீஸ் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து கூடுதல் வினாக்கள் இடம் பெறுகின்றன. அரசு வேலை வாய்ப்பிலும் தமிழுக்கான முக்கியம் கருதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியம், மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’என்றார்.

Tuesday, July 26, 2022
கலை
July 26, 2022
கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை; விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
இன்ஜினியரிங் கவுன்சிலிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் சேர, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்தும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். இதற்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கியது. கடந்த 19ம் தேதி பதிவு முடிவதாக இருந்தது. அதே போல, அரசின் 163 கலை, அறிவியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 20ல் துவங்கி, கடந்த 7ம் தேதி முடிவதாக இருந்தது. இந்நிலையில், சி.பி.எஸ்.இ., ரிசல்ட் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இம்மாதம் 22ம் தேதி சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு வெளியானதால், விண்ணப்ப பதிவுக்கு, வரும் 27ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப் பட்டது. இதன்படி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் மற்றும் கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள்.
இதையும் படிக்க | இந்த மாவட்டத்தில் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை
இதற்கு மேல் அவகாசம் நீட்டிக்கப்படாது என்பதால், மாணவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் இன்ஜினியரிங் விண்ணப்ப விபரங்களை, www.tngasa.in மற்றும் www.tneaonline.org என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

Thursday, June 16, 2022
Monday, May 23, 2022
Tuesday, April 05, 2022
Latest News
April 05, 2022
கல்லூரியை தேர்வு செய்தல் - குழப்பம் வேண்டாமே!
பெருந்தொற்று கால ஊரடங்கு பொதுவாக பலருக்கும் சவாலான காலமாக இருந்தாலும் கல்வி நிறுவனங்களையும், மாணவர்களையும் பொறுத்தவரை சாதக, பாதகங்கள் இரண்டும் கலந்த காலமாகவே அமைந்தது.
அனைத்தும் ஆன்லைனில் எளிதாக கிடைக்கும் இன்றைய சூழலில், பாடம் சார்ந்து மட்டுமின்றி பல பொதுவான தகவல்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை மாணவர்கள் பெற்றுள்ளனர். பெருந்தொற்று காலத்தில் ஆன்லைனை அதிகம் பயன்படுத்தி பழக்கப்பட்ட பிறகு, பெரும்பாலான மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்திற்கான பயனாளிகளாக மாறிவிட்டனர். ஆதலால், அத்தகைய மாணவர்களுக்கு ஆழ்ந்து கற்று, சிறப்பாக பாடம் நடத்தவேண்டிய கட்டாயம் இன்று பேராசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பெருந்தொற்று காலம் மாணவர்களுக்கு பல புதிய படிப்பினைகளை வழங்கிய அதேநேரம் சில பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பியும், கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகும், மாணவர்களை முறையாக ஆடை ஆணியச் செய்யவைப்பதில் இருந்து, பழைய பழக்க வழக்கத்திற்குள் திரும்ப கொண்டுவருவதில் சவால்கள் நிறைந்துள்ளன. ’மென்டார்ஷிப்&'
ஆன்லைன் வாயிலாக கல்வி கற்பிக்கப்படுவதோடு மட்டுமின்றி, ஆன்லைன் வாயிலாகவே மாணவர்களை மதிப்பீடு செய்யும் முறையையும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. ஆன்லைன் மதிப்பீடு எளிதாக இருப்பதோடு, மாணவரது அடுத்தகட்ட வளர்ச்சிக்கும் உதவுகிறது. எனினும், எங்கள் கல்வி நிறுவனத்தின் 10 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற முறையிலான &'மென்டார்ஷிப்’ திட்டத்தை ஆன்லைன் வாயிலாக பின்பற்றுவது சவாலாகவே அமைந்தது.
ஏனெனில், வகுப்பறை வாயிலான நேரடி கல்வி முறையில் மாணவர்களது கல்வி திறன் மட்டுமின்றி ஒட்டுமொத்த செயல்திறனையும் தொடர்ந்து கண்காணிப்பதோடு, மேம்படுத்தவும் இத்திட்டத்தில் சாத்தியமானது. இரண்டு ஆண்டுகாலமாக ‘மென்டார்ஷிப்’ முறையில் மாணவர்கள் மீதான நேரடி கண்காணிப்பு வெகுவாக குறைந்து இருந்தது. தற்போது, அத்தகைய திட்டத்தை மீண்டும் பின்பற்றுகிறோம். கல்லூரியை தேர்வு செய்தல்
இந்திய கல்வி நிறுவனங்கள் ஒவ்வொன்றின் தரத்தையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் ஆராய்ந்து ’நாக்’ அமைப்பு சான்று அளிக்கிறது. அதேபோல், என்.ஐ.ஆர்.எப்., தரவரிசையும் கல்வி நிறுவனங்களின் தரத்தை கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு படிப்பிற்கும் தரத்தின் அடிப்படையில் என்.பி.ஏ., சான்றும் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனங்களை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்கும்பட்சத்தில், அத்தகைய சான்றுகளின் அடிப்படையில் மாணவர்கள் தரமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம்.
-இந்து முருகேசன், துணை தலைவர், கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை