Breaking

Showing posts with label High Court orders. Show all posts
Showing posts with label High Court orders. Show all posts

Friday, December 15, 2023

December 15, 2023

Appointment of Permanent Teachers High Court Order



நிரந்தர ஆசிரியர்கள் நியமனம் உயர்நீதிமன்றம் உத்தரவு Appointment of Permanent Teachers High Court Order

பல்கலைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவில் பதிவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலை மாதிரிக் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணிபுரிபவர் ரமேஷ். பணியை வரன்முறைப்படுத்தி, பணப்பலன்கள் வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி பட்டு தேவானந்த் விசாரித்தார். அரசு தரப்பு:

விதிகளை பின்பற்றி மனுதாரர் நியமிக்கப்படவில்லை. கவுரவ விரிவுரையாளராக தற்காலிக அடிப்படையில் பணிபுரிகிறார். வரன்முறைப்படுத்துமாறு கோர உரிமை இல்லை. இவ்வாறு தெரிவித்தது.

நிலையற்ற தன்மை நீதிபதி: பல்கலைகளில் ஒப்பந்த அடிப்படையில் கவுரவ பேராசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், உதவி பேராசிரியர்களை தற்காலிகமாக நியமிக்கின்றனர். இதனால் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டிலுள்ள பல பல்கலைகளில் இம்மனுதாரரைப் போல் 10 முதல் 20 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவது இந்நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. எந்த ஒரு பொருளாதார பாதுகாப்பும் இல்லாமல் முழு வாழ்க்கையும் வீணாகிறது. கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்படுவோர் நிரந்தர பேராசிரியர்களுக்கு இணையான பணியை மேற்கொள்வர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது. கவுரவ பேராசிரியர்களாக நியமிக்கப்படுவோர் 22 முதல் 25 ஆண்டுகள் பணிபுரிந்த பின்பும், குறைந்த சம்பளத்தில் தற்காலிக ஊழியர்களாக கருதப்படுவர்.

இவர்களுக்கு நிலையற்ற தன்மையால் வேதனை ஏற்படுகிறது.கொள்கை முடிவு தேவைஇச்சிரமங்களை தவிர்க்க அரசுகள் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும். அதற்கான நிலையில் அரசு இல்லை எனில் சம வேலைக்கு சம ஊதியம், என்பதைப் பின்பற்றி குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அனுமதித்த பணியிடங்களை பல ஆண்டுகளாக காலியாக வைத்து, தற்காலிக அடிப்படையில் நியமனம் மேற்கொள்வது படித்த தகுதியுள்ள நபர்களை சுரண்டுவதற்கு சமம். அது சட்டவிரோதமானது.முதன்மை பொறுப்புதுவக்கநிலை, இடைநிலை, உயர்நிலை என அனைத்து நிலைகளிலும் கல்வித்துறைக்கு வசதிகளை வழங்க வேண்டிய முதன்மையான பொறுப்பு அரசிற்கு உள்ளது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பல பல்கலைகள் போதிய நல்ல ஆசிரியர்கள் கிடைக்காமல் தரமான கல்வியை வழங்குவதில் சிக்கல்களை எதிர்கொள்கின்றன. தற்போது பல பல்கலைகள்/உயர்கல்வி நிறுவனங்கள் தற்காலிக மற்றும் கவுரவ பேராசிரியர்கள் மூலம் உயர் கல்வியை வழங்குகின்றன என்ற உண்மையை புறக்கணிக்க முடியாது.பல்கலைகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர அடிப்படையில் நிரப்ப மத்திய, மாநில அரசுகள், பல்கலை மானியக்குழு, உயர்கல்வி தொடர்புடைய அனைத்து சட்டப்பூர்வ அமைப்புகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

இவ்வழக்கில் மனுதாரர் அனுப்பிய மனுவை பாரதிதாசன் பல்கலை பரிசீலித்து நீதியின் நலன் கருதி நியாயமான முடிவை உத்தரவாக பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Tuesday, December 05, 2023

December 05, 2023

மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.



மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு விவகாரம் சென்னை ஹை கோர்ட் தீர்ப்பு.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் கே.ராஜசேகர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், சீர்காழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1986-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2006-ம் ஆண்டு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று சட்டநாதபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்.

1987-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்த பாபு என்பவர் தற்போது புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் என்னைவிட பணியில் இளையவர். ஆனால், என்னை விட ரூ.4,400 அதிகமாக ஊதியம் பெற்று வருகிறார். ஊதியம் அதிகம்

எனவே, எனக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோரி மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரிடம் மனு கொடுத்தேன். ஆனால் அந்த மனுவை நிராகரித்து விட்டார். என்னை விட இளையவரான பாபுவுக்கு நிகராக ஊதியம் வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் வி. காசிநாத பாரதி ஆஜராகி, பணி விதிகளின்படியும், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு பிறப்பித்த தீர்ப்புகளின் படியும், பணியில் இளையவரை விட மூத்தவர் குறைவான சம்பளம் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அதை அரசு சரி செய்ய வேண்டும்" என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர் கோரிக்கையை நிராகரித்த மயிலாடுதுறை மாவட்ட தொடக்கப்பள்ளி அலுவலரின் உத்தரவை ரத்து செய்கிறேன். பணியில் இளையவரான பாபு பெறும் ஊதியத்தை மனுதாரருக்கும் 8 வாரத்திற்குள் அரசு வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Wednesday, November 08, 2023

November 08, 2023

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பு 'Jaihind' at the end of the paper in TNPSC examination - Maduraiklai High Court verdict

TNPSC தேர்வில் கட்டுரை முடிவில் ‘ஜெய்ஹிந்த்’ என எழுதியதால் விடைத்தாள் செல்லாது என்று கூறியது ஏற்புடையதல்ல என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

2014ம் ஆண்டு நடந்த TNPSC குரூப் 2 மெயின்ஸ் தேர்வில், இயற்கை வளங்களை காப்பதற்கான முக்கியத்துவம் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் முடிவில், 'ஜெய் ஹிந்த்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்' என எழுதியதற்காக, திண்டுக்கல்லைச் சேர்ந்த கல்பனா என்பவரது விடைத்தாள் செல்லுபடியாகாது என கூறியது ஏற்புடையதல்ல - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தீர்ப்பு.


விடைத்தாளை மீண்டும் திருத்தி, அவரது கட் ஆஃப் குரூப் 2 பணிக்கு தகுதியுடையதா என பரிசீலிக்கவும் TNPSC-க்கு உத்தரவு!

இயற்கை வளங்களை பாதுகாப்பது தொடர்பாக ஒரு கட்டுரையை எழுதும்போது, ஒருவர் திடீரென உணர்ச்சிவசப்பட்டு, தேச பக்தியை உணர்வது இயல்புதான்.

ஜெய்ஹிந்த்' என்றால் இந்தியாவுக்கு வெற்றி என்று பொருள். அவ்வாறு எழுதியதற்காகவே விடைத்தாள் செல்லாது என்பது ஏற்கத்தக்கது அல்ல - நீதிபதி பட்டு தேவானந்த் கருத்து

Wednesday, October 11, 2023

October 11, 2023

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு.



குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு. Answer Notes for Group 4 Question: Order to TNPSC to file report today.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிடுவது தொடா்பான அறிக்கையை புதன்கிழமை (அக். 11) தோ்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்மணி , கீதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, மாா்ச் 30-இல் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, காலியாக உள்ள 7,301 இடங்களுக்கு ஜூலை 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்த நிலையில், காலிப் பணியிட எண்ணிக்கை 10,117 ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியலில், எங்களது பெயா்கள் இல்லை. இந்தத் தோ்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், விடைக் குறிப்புகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டனவா? இல்லையெனில், உடனடியாக விடைக் குறிப்புகளை வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் அறிக்கையாக புதன்கிழமை (அக். 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.

Monday, October 09, 2023

October 09, 2023

அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!

Pension benefits for government employees within six months - Madras High Court! - அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்- சென்னை உயர் நீதிமன்றம்!



அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்குள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையில் மாம்பலம் – கிண்டி தாசில்தார் அலுவலகத்தில் தலையாரியாக பணியாற்றியவர் டி.வி.எஸ் பெருமாள். இவர் கடந்த 1987 -ம் ஆண்டு பணியில் இருக்கும்போது மரணம் அடைந்தார்.

இதனால், அவரது மனைவி ஜெயா, குடும்ப ஓய்வூதியம் கேட்டு சப் – கலெக்டரிடம் மனு அளித்தார். ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கும் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக 2004 -ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயா வழக்கு தொடர்ந்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 2017 -ம் ஆண்டு ஜெயா பெருமாளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனு நிலுவையில் இருக்கும் போதே ஜெயா இறந்துவிட்டார். இதனால் இந்த வழக்கில் அவரது மகன் பாபு சேர்க்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தலையாரியாக பணியாற்றிய பெருமாள் இறந்த பின்பு, அவரது மனைவிக்கு ஓய்வூதிய பலன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், அப்படி கிடைக்கவில்லை. அதற்குள் அவரும் இறந்து விட்டார்.

எனவே, அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அதிகபட்சமாக ஆறு மாதங்களுக்குள் கிடைக்க வேண்டும். அதுக்கு தமிழக அரசு உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Wednesday, September 27, 2023

September 27, 2023

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய நேரிடும்

நீதிமன்ற உத்தரவுகளைத் தொடா்ந்து அமல்படுத்த மறுக்கும் அரசு அதிகாரிகளை பணி நீக்கம் செய்யப் பரிந்துரைக்க நேரிடும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

பாளையங்கோட்டையைச் சோ்ந்த சிவஞானம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனு:

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நான் இளநிலை உதவியாளராகப் பணியாற்றினேன். கடந்த 2014-ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். இதற்கான மருத்துவச் செலவு ரூ. 9 லட்சத்தை காப்பீட்டுத் தொகை மூலம் எனக்கு வழங்குமாறு மாவட்ட மருத்துவ இணை இயக்குநருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் எனக்கு வழங்க வேண்டிய மருத்துவக் காப்பீட்டுத் தொகையை வழங்க உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தொகை இதுவரை எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, தொடா்புடைய அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கோரியிருந்தார்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே திருநெல்வேலி மாவட்ட மருத்துவ இணை இயக்குநராகப் பணியாற்றிய நெடுமாறன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது, மனுதாரரின் கோரிக்கை அடங்கிய ஆவணங்கள் தொலைந்துவிட்டதால் காலதாமதம் ஏற்பட்டுவிட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

அரசுப் பேருந்தில் செல்லும் பயணி தனது பயணச் சீட்டை தொலைத்துவிட்டால், அவருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல, ஒரு நடத்துநா் தனது பயண சீட்டுக் கட்டை தொலைத்துவிட்டால் அவரை பணியிலிருந்து நீக்கக் கூடிய நிலை உள்ளது.

எனவே, மருத்துவத் துறையில் ஓா் உயரதிகாரி ஆவணங்களை தொலைத்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது. இனி வரும் காலங்களில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அதுதான் பிற அதிகாரிகளுக்கு பாடமாக அமையும். கடமை தவறும் அரசு உயரதிகாரிகளைச் சரி செய்ய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதையே இது உணா்த்துகிறது.

நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால், அதைச் செயல்படுத்த அரசு அதிகாரிகள், தங்களது சொந்த பணத்தை செலவழிப்பது போல நினைத்துக் கொள்கின்றனா். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் ஆவணங்கள் தொலைந்துவிட்டதாகப் பதிலளிக்கின்றனா்.

எனவே, ஆவணங்களை தொலைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதால், வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

Tuesday, September 26, 2023

September 26, 2023

பட்டதாரி உபரி ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்றுநர்களாக மாற்றுப் பணியில் நியமிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை?



பட்டதாரி உபரி ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்றுநர்களாக மாற்றுப் பணியில் நியமிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது என தகவல்.

பட்டதாரி உபரி ஆசிரியர்களைஆசிரியர் பயிற்றுநர்களாக மாற்றுப் பணியில் நியமிப்பதற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது

Friday, September 22, 2023

September 22, 2023

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!



High School Headmaster's Promotion Appeal Case Dismissed - Madras High Court Judgment Copy! - உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல்!

CLICK HERE TO DOWNLOAD உயர் நீதிமன்ற தீர்ப்பு நகல் PDF
September 22, 2023

கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய தடை - STAY ORDER - PDF



கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ய தடை

கணினி பயிற்றுநர் நிலை-2 லிருந்து கணினி பயிற்றுநர் நிலை-1 ஆக பதவி உயர்வு பெற்றதற்காக ஊதியம் நிர்ணயம் செய்ததற்கு (3% ஊதிய உயர்வு ) சென்னை பள்ளி கல்வி ஆணையரக தணிக்கையில் தடை விதித்ததன் காரணமாக , தலைமை ஆசிரியரால் ஊதியத்தில் பிடித்தம் செய்ய இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஊதியத்தில் பிடித்தம் செய்ய இடைக்கால தடை ஆணை ( INTERIM STAY ORDER ) பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

STAY ORDER FOR AUDIT RECOVERY
CLICK HERE TO DOWNLOAD PDF

Tuesday, August 15, 2023

August 15, 2023

B.Ed படித்தவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராக தகுதியற்றவர்கள் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



பி.எட் படித்தவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராக தகுதியற்றவர்கள் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD உச்சநீதிமன்ற உத்தரவு PDF
தொடக்க கல்வியில் டிப்ளமோ படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், பி.எட். பட்டம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவிக்கு நியமனம் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என்று கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதையும் படிக்க | B.Ed ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு Court Order

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி உரிமை சட்டம் என்பது இலவசம் மற்றும் கட்டாயம் என்பது மட்டுமின்றி தரமான கல்வியையும் உள்ளடக்கியது என்று கருத்து தெரிவித்தனர்.

பி.எட் பட்டதாரிகள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான பயிற்சியை பெறாத நிலையில், அவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது தரமான கல்வியை வழங்குவதில் சமரசம் செய்ததாக மாறிவிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்

எனவே, தொடக்க கல்வியில் டிப்ளமோ படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் 2018 ஆம் ஆண்டு அறிவிப்பாணையையும் ரத்து செய்தனர்.

Friday, April 07, 2023

April 07, 2023

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் புதிய சட்டவிதிகளை எதிர்த்து வழக்கு - தமிழ்நாடு அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு

தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத் தும் புதிய சட்ட விதிகளை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்தும் சட்ட விதிகளை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அதில், பள்ளிகளுக்கு அங் கீகாரம் பெறுவது, அங்கீகா ரத்தை புதுப்பிப்பது, மாண வர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, ஆசிரியர்கள் நிய மனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு வகையான விதி கள் வகுக்கப்பட்டுள்ளன. இதனால், சிறுபான்மை பள்ளிகளுக்கு சிக்கல் ஏற் பட்டுள்ளது. இதையடுத்து இந்த புதிய விதிமுறைகளை எதிர்த்து திருச்சியைசேர்ந்த கன்னியாஸ்திரிகள் சபை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

Total Pageviews

Search This Blog