Breaking

Showing posts with label Vacancies in Legal Aid Advocacy Organisation. Show all posts
Showing posts with label Vacancies in Legal Aid Advocacy Organisation. Show all posts

Sunday, March 19, 2023

March 19, 2023

சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு - 23-ஆம் தேதி கடைசி நாள்

சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் காலிப் பணியிடங்கள்: விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல், மார்ச் 16: நாமக்கல் மாவட்டத்தில் சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பில் நான்கு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானோர் மார்சத் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மை நீதிபதி என்.குணசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி,நாமக்கல் மாவட்டசட்டப்பணிகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்க உள்ள சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர் அமைப்பு என்ற அலுவலகத்தில் முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர்-1, துணை முதன்மை சட்ட உதவி எதிர்வாத வழக்குரைஞர்-1, உதவி எதிர்வாத சட்ட உதவி வழக்குரைஞர்-2 ஆகிய காலிப் பணியிடங்கள் தகுதியான வழக்குரைஞர்கள் மூலம் நிரப்பப்படஉள்ளன. இந்தக் காலிப் பணியிடங்கள் குறித்த அனைத்து விரிவான விவரங்கள், விண்ணப்பங்கள் மற்றும் இதர தகவல்களை https://districts.ecourts.gov.in/Namakkal மற்றும் (https://www.tnlegalservices.tn.gov.in/pdfs/Application_LADCS.pdf) என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள், செயலாளர், சார்பு நீதிபதி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், திருச்செங்கோடு சாலை, நாமக்கல் மாவட்டம் - 637 003 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total Pageviews

Search This Blog