SPD PROCEEDINGS
July 25, 2022
Showing posts with label CEO/DEO/SPD. Show all posts

Monday, July 25, 2022
Thursday, December 30, 2021
Saturday, December 18, 2021
TEACHERS
December 18, 2021
பள்ளி வேலை நேரத்தில் ஜீன்ஸ் போட்ட ஆசிரியருக்கு மெமோ!
Monday, December 13, 2021
PROCEEDINGS
December 13, 2021
பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைக்க நிதி விடுவிப்பு.
இரண்டாம் கட்ட நிதி விடுவித்தல் - பள்ளிகளில் பாதுகாப்பு பெட்டி , விழிப்புணர்வு நெகிழ் பலகை வைத்தல் வழிகாட்டுதல்கள் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் :
அனைத்து பள்ளிகளிலும் மாணவ , மாணவியரின் பாதுகாப்பு கருதி மாணவர்களுக்கான பாதுகாப்பு பெட்டி ( Safety Box ) மற்றும் விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Awareness Flex Board ) வைப்பதற்காக மாவட்டங்களுக்கு நிதி விடுவிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது. தற்போது விழிப்புணர்வு நெகிழ் பலகையில் மாறுதல்கள் வேண்டி மாவட்டங்களிடமிருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பெறப்பட்டு வருவதால் மாநில திட்ட இயக்ககத்திலிருந்து திருத்திய விழிப்புணர்வு நெகிழ் பலகை ( Revised Awareness Flex Board ) அனுப்பப்படவுள்ளது.
எனவே அதன்பிறகு விழிப்புணர்வு நெகிழ் பலகை பற்றிய தகவல்களை பள்ளிகளுக்கு தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Friday, December 10, 2021
Tuesday, November 23, 2021
Monday, November 15, 2021
STUDENTS
November 15, 2021
மாணவர்கள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி - CEO Proceedings..
தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் :
தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை விதிகள் 2011 மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் வரைவு கட்டமைப்பில் கூறியுள்ளவாறு தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலையில் , பள்ளி வசதி இல்லாத 7 ஒன்றியங்களில் உள்ள தொலைதூர / அடர்ந்த காடு / மலைக் குடியிருப்புகள் மற்றும் நகர்புறத்தில் இடவசதி இன்மையால் பள்ளி தொடங்க இயலாத குடியிருப்புகளில் உள்ள 553 குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளி சென்றுவர போக்குவரத்து / பாதுகாவலர் வசதி வழங்க ரூ .16.59 / - இலட்சம் மாநில இயக்கத்தின் மூலம் அனுமதி பெறப்பட்டுள்ளது . 5 மாதங்களுக்கான மேற்காண் ( @ 3000 / - per child per months ) மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . போக்குவரத்து / பாதுகாவலர் வசதி 2021-22ம் ஆண்டில் வழங்க தகுதியுள்ள குடியிருப்புகளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றியம் வாரியாக 2021-22ல் இவ்வசதி கோரும் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கீடு செய்துள்ள நிதி பின்வருமாறு :
Transport and Escort Guidelines Proceeding -1.pdf

Wednesday, October 13, 2021
PROCEEDINGS
October 13, 2021
1 முதல் 8 ஆம் வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி- சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல் முறைகள்
தொடக்கக்கல்வி - ஆங்கில வழி பாடப்பிரிவு செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் அனுமதி வழங்க தெரிவித்தல் தொடர்பாக.
பார்வை.
1. அரசாணை எண்.101, பள்ளிக் கல்வித்(Budget-1) துறை, நாள்.18.05.2018,
2. அரசாணை எண்.148, பள்ளிக் கல்வித் துறைநாள்.20.07.2018.
ஆணை:
தொடக்கக் கல்வி துறையின் கீழ் செயல்படும் நிதியுதவி/ பகுதிநிதியுதவி/ சுயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கருத்துருக்கள் சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் சார்ந்த பள்ளியை பார்வையிட்டு அதன்படி கருத்துருக்கள் பரிந்துரையுடன் பெறப்பட்டு அவை பார்வை 2 ல் காணும் அரசாணைகளின்படி பரிசீலிக்கப்பட்டு உரிய அனுமதி இவ்வியக்ககத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
பார்வை 1-ல் காணும் அரசாணையில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சில அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகளில் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் 6-10 வகுப்புகளில் ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை உரிய அரசாணைகளின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் அனைத்து மாவட்டத்தில் செயல்படும் சுயநிதி/ நிதியுதவி/ பகுதிநிதியுதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்புகளில் ஆங்கில வழி பாடப்பிரிவு துவங்க அனுமதி கோரும் கோப்பின் தன்மையை கருதி கருத்துருக்களை பார்வை 2 ல் காணும்அரசாணையில் தெரிவித்துள்ள அனைத்து நிபந்தனைகளும் முழு அளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை நன்கு பரிசீலித்து, ஆங்கில வழிப்பிரிவு துவங்க அனுமதியினை 50% பிரிவுகள் கண்டிப்பாக தமிழ்வழிப் பிரிவுகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நிலையிலேயே வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. உதாரணமாக ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 2 பிரிவுகள் ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்." 3 பிரிவுகள் இருந்தால் 2 பிரிவுகள் தமிழ்வழி பிரிவாகவும், 1 பிரிவு ஆங்கில வழி பிரிவாகவும் செயல்பட அனுமதி வழங்கலாம்; 1 பிரிவு மட்டும் செயல்பட்டால் அது தமிழ்வழி பிரிவாகவே செயல்பட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படுகிறது.

Wednesday, October 06, 2021
Transfer
October 06, 2021
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதல் முறையாக மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
"தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதல் முறையாக பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித் துறை ஆணையா் க.நந்தக்குமாா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரியும் மாவட்டக் கல்வி அதிகாரி மற்றும் அதையொத்த அலுவலா்களுக்கு அக்.12-ஆம் தேதி இட மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. இந்த கலந்தாய்வு பணிமூப்பின் அடிப்படையில் நடத்தப்படும்.
அந்த நாளில் அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாக (Zero Vacancy) கருதப்படும்.

Tuesday, October 05, 2021
PROCEEDINGS
October 05, 2021
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 12.10.2021 அன்று சென்னையில் நடைபெறுதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் வருகின்ற 12.10.2021 அன்று டி.பிஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் , மாவட்ட கல்வி அலுவலர்களும் மற்றும் பயிற்சி மாவட்டக் கல்வி அலுவலர்களும் ( Training DEO's ) உரியவிவரங்களுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
Transfer
October 05, 2021
DEO TRANSFER COUNSELING DATE ANNOUNCED - தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி -- மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் - சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - நாள். 05.10.2021
தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை - 6 ந.க.எண்.52500/அ1/இ1/2021 நாள். 05.10.2021
பொருள்
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி -- மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணி நிலையில் பணிபுரியும் அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுதல் - சார்ந்து,
பார்வை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க.எண் 044696/அ3/இ1/2021 நாள் 31.08.2021
தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணி, வகுப்பு IV -ன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையாத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு 12.10.2021 அன்று பிற்பகல் 5.00 மணியளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்துப் பணியிடங்களும் காலிப் பணியிடமாகக் (Zero Vacancy) கருதப்பட்டு, அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணிமூப்பின் அடிப்படையில் (Station Seniority) மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

RTI
October 05, 2021
RTI மனுவிற்கு பதில் அளிக்காத 25 முதன்மைக் கல்வி அலுவலர்கள் - உரிய நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
ஆர்டிஐ மனுவுக்கு பதிலளிக்காத 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ’இளைய தலைமுறை’ என்னும் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் சங்கர் என்பவர் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்களில் எத்தனை பேர் பி.சி., எம்பிசி, எஸ்சி, எஸ்டி, பிசிஎம், ஓ.சி. உள்ளிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத ஊழியர்கள் அனைவரின் விவரத்தையும் அளிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் ஆர்டிஐ மனு மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு 25 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதிலளிக்கவில்லை.
இதுகுறித்துப் பள்ளிக் கல்வித்துறைக்கு சங்கர் மீண்டும் மேல்முறையீட்டு மனு அனுப்பி இருந்தார். அதையடுத்துப் பள்ளிக் கல்வித்துறை பொதுத் தகவல் அலுவலர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’மனுதாரரின் மனுவிற்கு உரிய காலக் கெடுவிற்குள் தகவல் வழங்குமாறு இந்தக் கடிதத்தின் மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் கீழ்க்காணும் மாவட்டங்களிலிருந்து தகவல் ஏதும் பெறப்படவில்லை என்றும், ஒருசில மாவட்டங்களிலிருந்து அரைகுறையான தகவல் மட்டுமே பெறப்பட்டுள்ளது எனவும் தெரிவித்து மனுதாரர் தனது மனுவில் மேல்முறையீடு செய்துள்ளார். ஆகவே, கீழ்க்காணும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகப் பொதுத் தகவல் அலுவலர், மனுதாரர் கோரும் தகவலைச் சார்நிலை அலுவலகங்களில் இருந்து பெற்றுத் தொகுத்து தங்கள் அலுவலகத்திலிருந்தே மனுதாரருக்கு நேரடியாக அனுப்பும் பொருட்டு மனுதாரரின் மேல்முறையீட்டு மனு இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி மனுதாரருக்கு உரிய காலத்திற்குள் தகவல் வழங்கிவிட்டு அதன் விவரத்தை இந்த அலுவலகத்திற்குத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
1. செங்கல்பட்டு
2. சென்னை
3. கடலூர்
4. தருமபுரி
5. திண்டுக்கல்
6. காஞ்சிபுரம்
7. ஈரோடு
8. கன்னியாகுமரி
9. கரூர்
10. கிருஷ்ணகிரி
11. மதுரை
12.மயிலாடுதுறை
13.பெரம்பலூர்
14.புதுக்கோட்டை
15.ராமநாதபுரம்
16. ராணிப்பேட்டை
17.சேலம்
18. சிவகங்கை
19. தென்காசி
20. திருச்சி
21. திருப்பத்தூர்
22.திருவாரூர்
23.திருவண்ணாமலை
24.வேலூர்
25.விருதுநகர்
ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மனுதாரர் கோரிய தகவல்களை அனுப்ப வேண்டும்’’.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, October 04, 2021
Tuesday, September 21, 2021
Friday, September 17, 2021
Saturday, September 11, 2021
SCHOOLS
September 11, 2021
தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்பு: முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுமதி வழங்கலாம்
தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும், அரசு நிதியுதவி மற்றும் தனியாா் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரை, ஆங்கில வழிப் பாடப்பிரிவைத் தொடங்கக் கருத்துருக்கள் பெறப்பட்டன. அரசாணைகளின்படி, தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு இயக்குநரகத்தால் வழங்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும், சில அதிகாரப் பகிா்வுகள் அளிக்கப்படும். அதாவது, தங்கள் மாவட்டங்களில் செயல்படும் அரசு நிதியுதவி மற்றும் தனியாா் பள்ளிகளில், 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழி வகுப்புகளைத் தொடங்க, அனைத்து நிபந்தனைகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பரிசீலித்து, தங்கள் நிலையில் அனுமதி வழங்கலாம் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.