Breaking

Showing posts with label Entrance Examination. Show all posts
Showing posts with label Entrance Examination. Show all posts

Wednesday, January 10, 2024

January 10, 2024

TAMILNADU COMMON ENTRANCE TEST (TANCET - 2024) - Procedure for Online Registration - PDF



TAMILNADU COMMON ENTRANCE TEST (TANCET - 2024) - Procedure for Online Registration - PDF FOR M.B.A. and M.C.A. DEGREE PROGRAMMES

Applications are invited for Tamil Nadu Common Entrance Test (TANCET - 2024) to be conducted by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu from the candidates who seek admission to M.B.A. and M.C.A. Degree Programmes for the academic year 2024-2025 offered at University Departments, Constituent colleges of Anna University, Annamalai University, Government and Government Aided Colleges (Engineering, Arts & Science Colleges) and Self-Financing Colleges (Engineering, Arts & Science Colleges including stand-alone Institutions) in Tamil Nadu.

TANCET EXAM DATES

M.C.A : 09-03-2024 (Saturday) [10.00 AM To 12.00 NOON]

M.B.A : 09-03-2024 (Saturday) [02.30 PM To 04.30 PM]
A single online application form for Common Engineering Entrance Test and Admissions

(CEETA-PG – 2024) for admission to M.E./M.Tech./M.Arch./M.Plan. degree programmes through single window counseling offered at

i. University Departments of Anna University, Chennai, Anna University Regional

Campuses and University Colleges of Engineering.

ii. Annamalai University and

iii. Government & Government Aided Engineering Colleges.

CLICK HERE TO DOWNLOAD Procedure for Online Registration PDF
January 10, 2024

MBA, MTech படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் - பிப்ரவரி 7-ம் தேதி கடைசி நாள்

What is the entrance exam for MTech in Tamil Nadu?

Tamil Nadu MTech Admission is done on the basis of a state-level entrance exam. Candidates can either qualify for the GATE exam or qualify for the CEETA PG exam. Tamil Nadu MTech Admission is conducted by Anna University and is done based on the CEETA PG 2023.

Which entrance exam is best for MBA in Tamil Nadu?

TANCET – Tamil Nadu Common Entrance Test (TANCET) is a state-level exam administered by Anna University for admission to MBA programmes in Tamil Nadu

Who is eligible for TANCET exam for MTech?

TANCET 2024 MCA Eligibility Criteria

Candidates must have obtained a minimum aggregate of 50 per cent in the qualifying exam (45 per cent for reserved category candidates). Candidates are eligible if they have completed their education in any of the following patterns: 10 + 2 + 3 / 4 / 5 years pattern

Is TANCET compulsory for MBA?

The TANCET eligibility criteria 2024 is also essential for admission to MBA, MCA, and ME/MTech/MArch/MPlan programs. Candidates not satisfying these criteria may be disqualified from the counselling and admission process.

Can I join MTech without GATE?

In order to get direct admission in Mtech without GATE, you must cover the other eligibility of the course: You must have a BTech degree with minimum qualifying marks. If you have a sponsored seat, you must have worked for at least 2 years. You must be granted a 2-year study leave by the employer.


எம்பிஏ, எம்.டெக் படிப்புகளுக்கான டான்செட், சீட்டா தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கு பட்டதாரிகள் இன்று (ஜனவரி 10) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட் ) கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும்.

இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவதும் அவசியமாகும். இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும் சீட்டா தேர்வு மார்ச் 10-ம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (ஜன. 10) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://tancet.annauniv.edu/tancet எனும் வலைத்தளம் வழியாக பிப்ரவரி 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு முடிவுகள் மார்ச் மாத இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். தேர்வுக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Tuesday, December 26, 2023

December 26, 2023

பி.ஆர்க். நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு

பி.ஆர்க். நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு

பி.ஆர்க். நுழைவுத் தேர்வுக்கு பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது.

பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடக்கலை படிப்பு, ஐந்தாண்டு படிப்பாகும். இதில் சேர விரும்புவோர் 'நாட்டா' நுழைவுத் தேர்வு எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறனறி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2024-25) பிஆர்க் நுழை வுத் தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘2024-25 கல்வி ஆண்டுக்கான 'நாட்டா' நுழைவுத் தேர்வு, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 1-ம் தேதி தொடங்குகிறது. நுழைவுத் தேர்வுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை உள்ளிட்ட விவரங்களை www.nata.in மற்றும் www.coa.gov.in என்றஇணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்’ என கூறப்பட்டுள்ளது.

Saturday, December 23, 2023

December 23, 2023

சி.இ.டி., தேர்வு ஜன., 10 முதல் விண்ணப்பம்

The Common Entrance Examination for Design (CEED) is a national-level entrance exam for post-graduate studies in technological design. The exam is conducted annually by IIT Bombay at all Indian Institutes of Technology (IITs) and the Indian Institute of Science (IISc).

The CEED exam evaluates candidates' aptitude and design skills. It is a qualifying exam for admission to Master of Design (MDes) programs and PhD programs at several IITs and design schools.

The 2024 CEED exam will have more than 302 seats available for the M. Des program and 205 seats for the B. Des program.

சி.இ.டி., தேர்வு ஜன., 10 முதல் விண்ணப்பம்

பெங்களூரு: கர்நாடகாவில், பொறியியல், ஆர்கிடெக்சர், பி.எஸ்சி., விவசாயம், பி.எஸ்சி., தோட்டக்கலை, ஹோமியேபதி, விவசாய பயோ தொழில்நுட்பம், பி.டெக்., - பி.பார்ம்., - டி.பார்ம் உட்பட உயர் படிப்புகளுக்கு, 1999 முதல் சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு படிப்பவர்கள், விண்ணப்பிக்கலாம்.

இந்த வகையில், 2024ல் நடக்க கூடிய சி.இ.டி., தேர்வு தேதியை, கர்நாடகா தேர்வு ஆணையம் நேற்று அறிவித்தது.

இதன்படி, 2024 ஏப்ரல் 20ம் தேதி காலை 10:30 மணிக்கு உயிரியியல்; மதியம் 2:30 மணிக்கு கணிதம்; 21ம் தேதி காலை 10:30 மணிக்கு இயற்பியல்; மதியம் 2:30 மணிக்கு ரசாயனம் தேர்வு நடத்தப்பட உள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 60 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடக்கும். மேலும், வெளி மாநிலம், வெளிநாடு மாணவர்களுக்கு, ஏப்ரல் 19ம் தேதி, கன்னட மொழி தேர்வு நடத்தப்பட உள்ளது.

சி.இ.டி., தேர்வுக்கு 2024 ஜனவரி 10ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Friday, November 10, 2023

November 10, 2023

CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க.



CLAT நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க.. இன்றே கடைசி நாள்...!!!

2024 ஆம் ஆண்டு தேசிய சட்டப் பல்கலைக்கழகங்களில் இணைவதற்கான CLAT நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 10 இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

CLAT அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் https://consortiumofnlus.ac.in/clat-2024/ மாணவர்கள் நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

இதற்கு முன்னதாக நவம்பர் மூன்றாம் தேதி கடைசி தேதியாக இருந்த நிலையில் அது தற்போது நவம்பர் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

விண்ணப்பித்தவர்கள் 120 மதிப்பெண் கொண்ட தேர்வினில் தேர்ச்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thursday, November 09, 2023

November 09, 2023

சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு - டிச.16-ம் தேதி கடைசி நாள்



சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு - டிச.16-ம் தேதி கடைசி நாள் Sainik School Admission - Entrance Test Notification - Dec 16 Last Date

சைனிக் பள்ளி சேர்க்கை - நுழைவுத் தேர்வு அறிவிப்பு

சைனிக் பள்ளிகளில் 6, 9-ம் வகுப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6, 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்தாண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://aissee.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாகடிச.16-ம் தேதிக்குள் விண்ணப் பிக்க வேண்டும். கட்டண விவரம்:

இதற்கு விண்ணப்ப கட்டண மாக எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.650-ம் இணையவழியில் செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தகுதிகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங் களை என்டிஏ வலைதளத்தில் (www.nta.ac.in) சென்று அறிந்து கொள்ளலாம்.

மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Wednesday, October 18, 2023

October 18, 2023

UCEED நுழைவுத் தேர்விற்கு மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது ?

UCEED நுழைவுத் தேர்விற்கு மாணவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது ?

This video briefly explains how to apply for the UCEED entrance exam application.Admissions to the Bachelor of Design (BDes) programmes at IIT Bombay, IIT Delhi, IIT Guwahati, IIT Hyderabad and IIITDM Jabalpur are done through the Undergraduate Common Entrance Examination for Design (UCEED). Students who have passed Class XII (or equivalent) in 2023, or appearing in 2024, in ANY STREAM (Science, Commerce, or Arts & Humanities) are eligible to appear for UCEED 2024.

Tuesday, October 17, 2023

October 17, 2023

தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு



தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் - தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அக்டோபர் மாதத்தில் விண்ணப்பிக்க வேண்டிய தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்து விண்ணப்பிப்பதற்கான ஆலோசனைகளைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12ஆம் வகுப்பு படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக நடப்பு ஆண்டில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் 2023 முதல் இக்கல்வியாண்டிற்கான உயர்கல்வி நுழைவுத் தேர்வுகள் குறித்த தகவல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 2023 அக்டோபர் மாதத்தில், பொது சட்ட நுழைவுத் தேர்வு (CLAT- Common Law Admission Test) மற்றும் அனைத்திந்திய சட்ட நுழைவுத் தேர்வு (AILET – All India Law Entrance Test), தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் வடிவமைப்பு திறன் தேர்வு (NID – National Institute of Design – Design Aptitude Test ) மற்றும் வடிவமைப்பிற்கான இளங்கலை பொது நுழைவுத் தேர்வு (UCEED Undergraduate Common Entrance Examination for Design ஆகிய தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியின் விவரங்கள். வகுப்பு வாரியான கட்டண விவரங்கள் (Communal wise fee details). தகுதி வரம்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைய முகவரி ஆகியவை இணைப்பு 1 இல் இணைக்கப்பட்டுள்ளன.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள நுழைவுத் தேர்வுகளுக்கான தகவல்களை அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் வாயிலாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அறியச் செய்து விருப்பமுள்ள மாணவர்களை விண்ணப்பிக்க செய்வதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - CLICK HERE TO DOWNLOAD PDF

Sunday, October 08, 2023

October 08, 2023

M.Phil., Ph.D,க்கு இன்று நுழைவுத்தேர்வு

எம்.பில்., பி.எச்டி.,க்கு இன்று நுழைவுத்தேர்வு

மதுரை காமராஜ் பல்கலையில் எம்.பில்., பி.எச்டி., படிப்பு சேர்க்கை நுழைவுத் தேர்வு மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள காமராஜ் பல்கலை கல்லுாரி மற்றும் சமூக அறிவியல் கல்லுாரியில் அக்., 8 இன்று நடக்கிறது.ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான பல்கலை லிங்க் விண்ணப்பதாரர்களின் இ-மெயிலுக்கு தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் விபரங்களை www.mkuniversity.ac.in என்ற இணையத்தில் தெரிந்துகொள்ளலாம் என பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Thursday, September 07, 2023

September 07, 2023

சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு - நவம்பர் 3 விண்ணப்பிக்க கடைசி நாள்

சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு - நவம்பர் 3 விண்ணப்பிக்க கடைசி நாள்



சட்டப்படிப்புக்கான தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு

இள படிப்பு சேர்க்கைக்கு 22 தேசிய சட் டப் பல்கலைக்கழகங்கள் இணைந்து நடத்தும் தேசிய அளவிலான பிர தானநுழைவுத்தேர்வு காமன் லா அட் மிஷன் டெஸ்ட்-கிளாட் 2024க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நுழைவுத்தேர்விற்கு தகுதியானவர் கள் விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் ஒருங்கிணைந்த இள நிலைப்பட்டப்படிப்பு - எல்.எல்.பி.. முதுநிலை பட்டப்படிப்பு - எல்.எல். எம்.. ஆகிய பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தகுதிகள்: 5 ஆண்டு ஒருங்கி ணைந்த சட்டப் படிப்பிற்கு, 12ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்வில் குறைந்தது 45 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது. வயது வரம்பு இல்லை. மார்ச்/ஏப்ரல் 2024ல் நடைபெறும் கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

எல்.எல்.எம்., அல்லது அதற்கு இணையான சட்டப் படிப்பில் சேர, இளநிலைச்சட்ட பட்டப்படிப்பில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களு டன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமா னது ஏப்ரல் /மே 2024ல் நடைபெறும் இளநிலை பட்டப்படிப்பிற்கான இறு தித்தேர்வு எழுதும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை: இளநிலைப் பட் டப்படிப்பிற்கான தேர்வில் ஆங்கி லம். பொது அறிவு. லீகல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், குவாண்டிடேட் டிவ் டெக்னிக்ஸ் ஆகிய பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இளநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வில், முன்பு 150 கேள் விகள் கேட்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேர்வில் 120 கேள்விகளாக குறைக் முதுநிலைப்பட்டப்பிடிப்பிற்கான தேர்வில் அரசியலமைப்பு சட்டம், நிர் வாக சட்டம், குடும்ப சட்டம். குற்றவியல் சட்டம், கம்பெனி சட்டம். சுற்றுச்சூழல் சட்டம். லா ஆப் கான்ட்ராக்ட் உட்பட பல்வேறு பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். டிசம் பர் 3ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது.

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https:// consortiumofnlus.ac.in/clat-2024/ எனும் இணையதளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.நவம்பர் 3 விண்ணப் பிக்க கடைசி நாள்.

Tuesday, August 15, 2023

August 15, 2023

Inviting Online Applications for Ph.D. Entrance Test for DU, JNU, BHU and BBAU - 2023 - Last date 08.09.2023



Inviting Online Applications for Ph.D. Entrance Test for DU, JNU, BHU and BBAU - 2023 - Last date 08.09.2023

Inviting Online Applications for Ph.D. Entrance Test for DU, JNU, BHU and BBAU - 2023 Ph.D. Entrance Test for DU, JNU, BHU and BBAU - 2023 is a National Level Entrance Test for Ph.D.

The schedule of Examination activities is as follows

The candidates are requested to undertake the correction(s) very carefully as no further chance of correction will be provided.

Information about the eligibility, scheme of exam, exam centers, exam timings, exam fee, procedure for applying etc. are contained in the Information Bulletin hosted on the website of NTA https://phd-entrance.samarth.ac.in/. Candidates who are desirous of applying for the exam may go through the Information Bulletin and apply online at https://phd-entrance.samarth.ac.in/ only during the period from 09.08.2023 to 08.09.2023 and also pay the applicable fee, online, through the payment gateway using debit/credit cards, net banking, UPI.

The candidates are advised to keep visiting the NTA website for latest updates.

For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011 4075 9000 or write to NTA at phd@nta.ac.in.

CLICK HERE TO DOWNLOAD Inviting Online Applications for Ph.D. Entrance Test PDF

Tuesday, April 18, 2023

April 18, 2023

பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் தேர்வு முடிவு மற்றும் கலந்தாய்வு

பி.டெக். படிப்பு நுழைவு தேர்வு தொடக்கம்: ஏப்.26-ல் முடிவு வெளியாகி அன்றே ஆன்லைன் கலந்தாய்வு

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக். பொறியியல் படிப்புக்கான கணினி வழி நுழைவுத் தேர்வு தொடங்கியுள்ள நிலையில் வரும் 26-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கவுள்ளது. விஐடியில் பி.டெக். பொறியியல் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ‘விஐடிஇஇஇ-2023’ நேற்று தொடங்கி வரும் 22-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெறுகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாடுகள் என மொத்தம் 125 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. விஐடி வேலூர் வளாகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை வேந்தர் கோ.விசுவநாதன், பெங்களூரு மையத்தில் நடைபெற்ற தேர்வை விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் பார்வையிட்டனர்.

இதன் முடிவுகள் ஏப்.26-ம் தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு தொடங்குகிறது.

முதற் கட்ட கலந்தாய்வு (26-4-2023 முதல் 30-4-2023) தரவரிசை 1 முதல் 20,000 வரையும், இரண்டாம் கட்ட கலந்தாய்வு (9-5-2023 முதல் 11-5-2023) தரவரிசை 20,001 முதல் 45,000 வரையும், மூன்றாம் கட்ட கலந்தாய்வு (20-5-2023 முதல் 22-5-2023) தரவரிசை 45,001 முதல் 70,000 வரையும், நான்காம் கட்ட கலந்தாய்வு (31-5-2023 முதல் 2-6-2023) தரவரிசை 70,001 முதல் 1 லட்சம் வரையும் நடைபெறும். ஐந்தாம் கட்ட கலந்தாய்வு (12-6-2023 முதல் 14-6-2023) தரவரிசை 1 லட்சத்துக்கு மேல் நடைபெறும். தரவரிசை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விஐடி ஆந்திரபிரதேசம் மற்றும் விஐடி போபால் வளாகத்தில் மட்டுமே படிக்க இடம் கிடைக்கும். கல்வி கட்டண சலுகை: ஜி.வி. பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு விஐடி பல்கலையில் பி.டெக். படிப்பு காலம் முழுவதும் 100 சதவீதம் கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும், விஐடி நுழைவுத்தேர்வில் தரவரிசையில் முதல் 50 இடங்களில் தகுதி பெறுபவர்களுக்கு 75 சதவீதம், தரவரிசை 51 முதல் 100-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 50 சதவீதம், தரவரிசை 101 முதல் 1,000-க்குள் தகுதி பெறும் மாணவர்களுக்கு 25 சதவீதம் கல்வி கட்டண சலுகை 4 ஆண்டு காலம் முழுவதும் வழங்கப்படும்.

அதேபோல், தமிழ்நாடு, ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேச மாநிலங்களில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்கள் விஐடியில் உயர்கல்வி படிக்கும் வகையில் ‘ஸ்டார்ஸ்’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு கட்டணத்தில் முழு சலுகை, உணவு, விடுதி வசதியுடன் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.

Total Pageviews

Search This Blog