Breaking

Showing posts with label omicron coronavirus. Show all posts
Showing posts with label omicron coronavirus. Show all posts

Sunday, January 07, 2024

January 07, 2024

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்



கொரோனா அதிகரிப்பு - மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க

உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியுள்ளது.

பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. காய்ச்சல், சளி, இருமல், பிரச்னைகள் இருந்தால் மாணவர்களை வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Sunday, March 05, 2023

March 05, 2023

தமிழகத்தில் பரவும் காய்ச்சல் அலை..!'H3N2' இன்புளூயன்சா.. எகிறும் கொரோனா பயம்..! | H3N2 Influenza

தமிழகத்தில் பரவும் காய்ச்சல் அலை..!'H3N2' இன்புளூயன்சா.. எகிறும் கொரோனா பயம்..! | H3N2 Influenza

Thursday, September 08, 2022

September 08, 2022

பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்று: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பருவ கால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.

எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.

மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, May 21, 2022

Wednesday, January 12, 2022

Wednesday, December 29, 2021

December 29, 2021

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா? - அன்பில் மகேஷ் பதில்.

பள்ளிகளை மூடுவது தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் கலந்தாலோசித்து முதல்வர் முடிவெடுப்பார்!

ஒமிக்ரான் அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்.

Sunday, December 26, 2021

Saturday, December 25, 2021

Wednesday, December 15, 2021

December 15, 2021

Breaking || தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Breaking || தமிழகத்தில் ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் நைஜீரியாவிலிருந்து வந்த 47 வயதுடையவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும், விமானத்தில் வந்தவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடைய 7 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு புதியவகை கரோனா இருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

Sunday, December 12, 2021

Monday, December 06, 2021

December 06, 2021

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு - மக்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசியை போடுவது பற்றி மத்திய அரசு முடிவு..!

ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதாலும், அதனால் மூன்றாவது அலை ஏற்படாமல் தடுக்கவும், மக்களுக்கு கூடுதலாக ஒரு டோஸ் தடுப்பூசியை போடுவது பற்றி மத்திய அரசின் தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்பக் குழு இன்று சந்தித்து முக்கிய முடிவை எடுக்க உள்ளது.

கூடுதல் டோசாக போடலாமா அல்லது பூஸ்டர் டோஸ் போடலாமா என்பது பற்றி இந்த குழுவின் நிபுணர்கள் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனர். அதே போன்று குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் துவங்குவது பற்றியும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூஸ்டர் டோஸ் என்பது முழுமையாக தடுப்பூசி போட்டவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தடுப்புத் திறன் குறைவதை சமாளிக்க போடப்படுவதாகும்.

ஆனால் கூடுதல் டோஸ் என்பது தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனாவுக்கு எதிரான நோய் தடுப்புத் திறனை வளர்த்துக் கொள்ளாதவர்களுக்கு போடப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஒமிக்ரான் பரவும் பின்னணியில் பூஸ்டர் வேண்டுமா அல்லது கூடுதல் டோஸ் போடலாமா என நிபுணர் குழு அரசுக்கு பரிந்துரைக்க உள்ளது.

Total Pageviews

Search This Blog