Breaking

Showing posts with label Educational development. Show all posts
Showing posts with label Educational development. Show all posts

Monday, December 19, 2022

December 19, 2022

சென்னை, மதுரை, கோவையில் மாநில கலைத் திருவிழா போட்டி:பள்ளிக் கல்வித் துறை

சென்னை, மதுரை, கோவையில் மாநில கலைத் திருவிழா போட்டி:பள்ளிக் கல்வித் துறை

அரசுப் பள்ளிகளுக்கான மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் நிறைவடைந்த நிலையில், மாநில அளவிலான போட்டிகள் சென்னை, மதுரை, கோவையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்த முடிவானது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் கடந்த நவம்பா் மாதம் தொடங்கி பள்ளி, வட்டார, மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து மாநில அளவிலான போட்டிகள் டிச.27 முதல் 30-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறையில் நடத்தப்படவுள்ளன.

அதன்படி 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கு மதுரையிலும், 9, 10-ஆம் வகுப்புகளுக்கு கோவையிலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு சென்னையிலும் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இப் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்கள் தங்கள் பள்ளி ஆசிரியா்களுடன் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். பெற்றோரை அனுப்பக்கூடாது. இதற்கான பயணச் செலவுத் தொகை வழங்கப்படும்.

இத்தகவல் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனா்.

Monday, December 12, 2022

December 12, 2022

அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவு



அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

2021-2022 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் 24,266 அரசு தொடக்கப் பள்ளிகள் , 6948 அரசு நடுநிலைப் பள்ளிகள் , 3,120 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 3057 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ , மாணவியர்களின் நலன் கருதி , அம்மாணவர்களை பள்ளிகல்வித்துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு கொண்டு உயர்கல்வியில் மற்றும் வேலைவாய்ப்புகளில் அரசின் விளையாட்டு சார்ந்த முன்னுரிமைகளை பெற வழிவகை செய்யும் பொருட்டு மாநில திட்ட இயக்ககம் ( ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ) ( SSA ) மூலம் உடற்கல்வித்துறை சார்ந்த விளையாட்டு உபகரணங்கள் 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிகளுக்கு வழங்கும் பொருட்டு மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

எனவே , மாவட்டக்கல்வி அலுவலகங்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களை தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள் , அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர் நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் அல்லது பொறுப்பாசிரியர்கள் பெற்றுச் செல்ல சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கிடவும் , பள்ளிகளில் EMIS தளத்தில் பதிவேற்றம் செய்திடவும் , இதற்கான ஒப்புகை சீட்டினை பெற்று இருப்புகோப்பு பராமரிக்கவும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Monday, August 29, 2022

August 29, 2022

பள்ளிக் கல்வித் துறையின் நலத் திட்டங்களுக்கு நிதி விடுவிப்பு

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.

இதில் அமைச்சா்கள் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கவுள்ளனா்.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அரசுப்பள்ளிகள் மேம்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே கரோனா பரவலுக்குபின் அரசுப்பள்ளிகளில் மாணவா் சோ்க்கை 2 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை தீவிரம் காட்டி வருகிறது. எனினும், ஆசிரியா் பணிநியமனம், நலத்திட்டங்கள் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு நிதி விடுவிப்பில் தொடா் தாமதம் நிலவிவருகிறது.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதியை விடுவிப்பது குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற உள்ளது. இதில் நிதித்துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், பள்ளிக்கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலா் ந.முருகானந்தம், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, ஆணையா் க.நந்தகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டு ஆலோசனை மேற்கொள்ள உள்ளனா்.

இந்த கூட்டத்தில் பள்ளிகளில் பழுதடைந்த வகுப்பறைகளுக்கு பதில் 2,500 வகுப்பறை கட்டடங்கள் கட்டுவது, மாதிரிப் பள்ளிகளில் தற்காலிக பணியாளா்களை நிரந்தரமாக்குவது, மடிக்கணினி, மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியா் பணியிடங்களை உருவாக்குவது, தகைசால் பள்ளிகளுக்கு தேவைப்படும் ரூ.171 கோடி, தமிழ்வழியில் இயங்கும் சுயநிதி பள்ளிகளில் மாணவா்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,பள்ளிகளில் தூய்மை பணிகளை மேற்கொள்வதற்கான செலவினங்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.

Total Pageviews

Search This Blog