Workshop
June 28, 2026
Showing posts with label Press Release. Show all posts
Showing posts with label Press Release. Show all posts
Sunday, June 28, 2026
Thursday, June 04, 2026
Monday, May 25, 2026
Sunday, May 10, 2026
Sunday, March 15, 2026
Monday, February 09, 2026
Tuesday, December 02, 2025
Friday, January 03, 2025
Tuesday, December 10, 2024
Saturday, November 09, 2024
Thursday, September 26, 2024
Saturday, July 13, 2024
Friday, July 05, 2024
Friday, June 28, 2024
Monday, May 20, 2024
Tuesday, March 12, 2024
Friday, February 16, 2024
Press Release
February 16, 2024
வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!
Madras High Court Interim Stay on Ban on Guideline Value Increase - Tamil Nadu Government Press Release!!! - வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
கடந்த 01.04.2012 முதல் 08.06.2017 வரை நடைமுறையில் இருந்து வந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 09.06.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 33 % குறைக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் கடந்த 01.04.2023 அன்று வழிகாட்டி மதிப்பானது 08.06.2017 வரை பின்பற்றப்பட்டு வந்த அதே மதிப்பிற்கு மீள மாற்றப்பட்டது. 5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது.
மேலும் , இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையை இரத்து செய்து ஆணையிடப்பட்டது.
மேற்படி உத்திரவினை எதிர்த்து தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது . மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் மேற்படி ஆணைக்கு 15.02.2024 அன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.
Monday, January 29, 2024
Press Release
January 29, 2024
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி (Gold Appraiser Training) - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு
செய்தி வெளியீடு எண்: 187
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
: 29.01.2024
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வரும் 05.02.2024 முதல் 14.02.2024 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தங்கம், செம்பு. வெள்ளி பிளாட்டினம் ஆகிய உலேக தரம் அறிதல் உரைகல் பயன்படுத்தும் முறை. கேரட் & கேரட் (Carat & Carat) தங்கம் விலை நிர்ணயிக்கும் முறை (Board rate), ஆசிட் பயன்படுத்துதல் எடை அளவு இணைப்பான். தங்கம் 999% 916% 85% 80% 75% தரம் அறிதல் ஆபரணக் கடனுக்கான கணக்கீட்டு முறை இரத்தினங்கள் மதிப்பீட்டு முறைகள் ஹால் மார்க் தங்க அணிகளன்கள், ஆபரண வகைகள், மற்றும் போலியான நகைகளை அடையாளம் காணுதல் அதற்காண வழிமுறைகள் ஆகியன கற்றுத்தரப்படும். மேலும், இப்பயிற்சியில் பொதுத்துறை வங்கிகள், கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகளில் நகை மதிப்பீட்டாளர் பணிக்கு பற்றியும் அவைகளை பெறும் முறைகளை பற்றியும் ஆலோசனைகளும், அரசு வழங்கும் உதவிகள் மற்றும் மானியங்கள் ஆகியவையும் விவாதிக்கப்படும்.. இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, பார்த்தசாரதி கோயில் தெரு, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல், சென்னை -600 032.
44-22252081/22252082, 8668102600/86681 00181/7010143022.
Press Release No: 187 Date: 29.01.2024 Programme on “Gold Appraiser Training”
Entrepreneurship Development and Innovation Institute (EDII), Chennai is organizing an training program on Ten days “Gold Appraiser Training” from 05.02.2024 to 14.02.2024 (Time: 10.00 am to 2.00pm) at Entrepreneurship Development and Innovation Institute (EDII-TN), Metro Centre, opp. Guindy Railway Station, Guindy, Chennai-32, Chennai – 600 032. Subjects covered under the topics on basic metallurgy of gold, silver and copper, difference between Karat & Carat, calculation for purity of gold, jewel loan calculation, casting and filigree items, open and closed setting stone jewels, Hallmark procedures, types of assaying, touch stone practices will be covered by expert assessors and specialists. The trained candidates can find part-time employment in commercial and cooperative banks where loans are given on mortgaging of gold. The participants will also be taught the procedures of establishing a business enterprise to deal in gem & jewellery trade. Interested candidates (Male/Female) above 18 years of age with a minimum educational qualification of 10th Std may apply.
For further information, please visit website www.editn.in. Please contact the following telephone / mobile numbers on working days (Monday - Friday) between 10 A.M. to 05.45 P.M for further information.
Government certificate will be issued Pre- registration compulsory
Contact details:
Entrepreneurship Development and Innovation Institute, SIDCO Industrial Estate, EDII Office Road, Guindy, Chennai-600032.
8668102600 / 86681 00181 /
7010143022
044-22252081, 22252082

