Breaking

Showing posts with label Group 4 Exam. Show all posts
Showing posts with label Group 4 Exam. Show all posts

Wednesday, October 29, 2025

Monday, December 25, 2023

December 25, 2023

குரூப் 4 பணிக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: ஜன.3-ம் தேதி நடைபெறும்

குரூப் 4 பணிக்கு 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு: ஜன.3-ம் தேதி நடைபெறும்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குருப் 4 பணிகளுக்கான 2-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்றுவெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-4 பணிகளில் அடங்கிய இளநிலை உதவியாளர், வரி தண்டலர், பண்டக காப்பாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 2-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜனவரி 3-ம் தேதி சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தெரிவுப்பட்டியல், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அழைப்பாணை தனியாக தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது.

உறுதியளிக்க இயலாது: சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு, காலியிடங்கள் ஆகியவற்றுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு, பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday, December 20, 2023

December 20, 2023

TNPSC தேர்வு அட்டவணை 2024: குரூப் 4 எப்போது?



டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை 2024: குரூப் 4 எப்போது?

2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுத் துறைகளில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) தேர்வு செய்து வருகிறது.

நடப்பு ஆண்டில் அறிவிக்கப்படாமல் உள்ள குரூப் 1, குரூப் 4 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என அரசு தேர்வுக்காக தயாராகி வருபவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இந்த நிலையில், 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

அதன்படி, குரூப் - 4 தேர்வுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

குரூப் - 1 தேர்வுக்கான அறிவிக்கை அடுத்தாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலையில் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO DOWNLOAD TNPSC - Annual Planner PDF

Wednesday, October 11, 2023

October 11, 2023

குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு.



குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகள்: இன்று அறிக்கை தாக்கல் செய்யTNPSC-க்கு உத்தரவு. Answer Notes for Group 4 Question: Order to TNPSC to file report today.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வெளியிடுவது தொடா்பான அறிக்கையை புதன்கிழமை (அக். 11) தோ்வாணையச் செயலா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கண்மணி , கீதா ஆகியோா் தாக்கல் செய்த மனுக்கள்: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் கடந்த 2022, மாா்ச் 30-இல் குரூப் 4 தோ்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி, காலியாக உள்ள 7,301 இடங்களுக்கு ஜூலை 24-இல் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத சுமாா் 22 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் போ் தோ்வெழுதினா். இந்த நிலையில், காலிப் பணியிட எண்ணிக்கை 10,117 ஆக உயா்த்தப்பட்டது. இந்தத் தோ்வு முடிவுகள் கடந்த மாா்ச் மாதம் வெளியிடப்பட்டு, சான்றிதழ் சரிபாா்க்கும் பணிகளும் நடைபெற்றன. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் பட்டியலில், எங்களது பெயா்கள் இல்லை. இந்தத் தோ்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற அதிக வாய்ப்புள்ளது. ஆனால், விடைக் குறிப்புகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

எனவே, இந்தத் தோ்வுக்கான விடைக் குறிப்புகளை வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என அவா்கள் கோரியிருந்தனா்.

இந்த மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். விஜயகுமாா் பிறப்பித்த உத்தரவு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய குரூப் 4 தோ்வுக்கான இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டனவா? இல்லையெனில், உடனடியாக விடைக் குறிப்புகளை வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதை, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையச் செயலா் அறிக்கையாக புதன்கிழமை (அக். 11) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.
October 11, 2023

குருப் 4 தேர்வு முடிவு வினாத்தாள் குளறுபடி நீதிமன்றம் முக்கிய உத்தரவு



குருப் 4 தேர்வு முடிவு வினாத்தாள் குளறுபடி நீதிமன்றம் முக்கிய உத்தரவு

மதுரையைச் சேர்ந்த கண்மணி, கீதா ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: கடந்த 2022 மார்ச் 30ம் தேதி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியானது. மொத்தம் 7,301 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதற்கான எழுத்துத் தேர்வு 2022 ஜூலை 24ல் நடைபெற்றது. சுமார் 22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 18 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்நிலையில், குரூப்-4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த தேர்வுக்கு நாங்கள் இருவரும் விண்ணப்பித்து தேர்வு எழுதினோம். இதற்கான முடிவுகள் கடந்த மார்ச்சில் வெளியிடப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. தேர்வில் நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற வாய்ப்புள்ளது. தற்போது குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்று வருகிறது. குரூப்-4 தேர்வில் விடைத்தாள் (ஓஎம்ஆர்) மோசடியும், குழப்பமும் நடைபெற்றுள்ளது. எனவே, எங்களுடைய வினாத்தாளை (ஓஎம்ஆர்) எங்களுக்கு வழங்க வேண்டும் அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தனர். இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன்பு நேற்று மாலை விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘குரூப்-4 தேர்வுக்கான இறுதி விடைத்தாள் நகல் வெளியிடப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார். அவ்வாறு வெளியிடவில்லை என்றால் ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினார்.

இதனை தொடர்ந்து உடனடியாக குரூப்-4 தேர்வுக்கான இறுதி செய்யப்பட்ட விடைத்தாள் வெளியிட வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையை நாளை (அக்.11) சமர்பிக்க வேண்டும். மேலும், நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றியது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி வழக்கை நாளை ஒத்தி வைத்தார்.

Monday, July 31, 2023

July 31, 2023

TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)



TNPSC - COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (Counselling)

Counselling Schedule

COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV

GROUP-IV SERVICES

DOE : 24/07/2022 FN

COUNSELLING (I PHASE)



COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV (GROUP-IV SERVICES) (NOTIFICATION NO. 07/2022)

1. Certificate Verification / Counselling Schedule

2. Notice of CV/Counselling (JA/VAO/FA/BC/SK)

3. Post-wise vacancies at the end of 9th day Counselling

4. Dept/Unit-wise vacancies at the end of 9th day Counselling

Important Note:-

The candidate summoned for counselling is not assured of selection and he / she will be admitted for counselling subject to availability of vacancies in his / her category when he / she reaches his / her turn as per the rank position.

Hence Kindly refer daily updates regarding Community wise/Post wise vacancies available in the above link during counselling days. After confirming the vacancies, candidates are requested to come for Counselling on the communicated date.

CLICK HERE (GROUP-IV SERVICES) (Counselling)

Saturday, July 01, 2023

July 01, 2023

ஏற்கனவே தேர்வு நடத்தி முடிக்கப்பட்ட குரூப்-4 பதவிகளுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் எவ்வளவு? - டி.என்.பி.எஸ்.சி. புதிய பட்டியலை வெளியிட்டது

Thursday, March 23, 2023

March 23, 2023

குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Increase in number of Group 4 Vacancies - குரூப் 4 காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

சென்னை, மார்ச் 22: குரூப் 4 காலிப் பணியிடங்களின் எண் ணிக்கை அதிகரிக்கப்பட்டுள் ளது.

காலிப்பணியிடங்கள் 7 ஆயி ரத்து 381 ஆக இருந்த நிலை யில், தற்போது 10 ஆயிரத்து 117 ஆக உயர்த்தப்பட்டுள் ளது.

தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையம் (டிஎன் பிஎஸ்சி) மூலம் குரூப் 4 தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வை தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் எழுதினர்.

முன்னதாக இதற்கான காலிப்பணியிடங்கள் 7,381 எனடிஎன்பிஎஸ்சி அறிவித்தி ருந்தது. தற்போது காலிப்பணி யிடங்கள் மேலும் அதிகரிக்கப் பட்டு 10,117-ஆக உயர்த்தப் பட்டுள்ளதாகடிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

குரூப்-4 பிரிவில் கிராம நிர் வாக அலுவலர், இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச் சர் உள்ளிட்ட பதவியிடங்கள் வருகின்றன.

தேர்வுக்கான முடிவுகள் மாத இறுதியில் வெளியிடப்ப டும் என தேர்வாணையம் ஏற் கெனவே அறிவித்துள்ளது

Thursday, March 09, 2023

March 09, 2023

Group 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - TNPSC செய்திக்குறிப்பு

Group 4 தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - TNPSC செய்திக்குறிப்பு Group 4 Exam Results will be published by the end of this month - TNPSC Press Release

செய்திக்குறிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு -IV (தொகுதி - IV) இல் அடங்கிய பணிகளுக்கான தேர்வினை கடந்த 24.07.2022 அன்று நடத்தியது. இத்தேர்வின் முடிவுகள் குறித்து தேர்வாணையத்தால் 14.02.2023 அன்று வெளியிடப்பட்ட விரிவான செய்திக்குறிப்பில் தெரிவித்ததன்படி தேர்வு முடிவுகள் தொடர்பான பணிகள் தற்போது தேர்வாணையத்தில் துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், இத்தேர்வின் முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும்

Monday, February 13, 2023

February 13, 2023

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட கோரிக்கை TNPSC Group 4 Exam Result Release Request

குரூப் 4 தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி உடனே வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். கடந்தாண்டு நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் 7மாதங்கள் ஆகியும் வெளியிடப்படவில்லை என ராமதாஸ் கூறியுள்ளார். மாணவர்களின் எதிர்காலத்தில் தேர்வாணையம் இவ்வளவு அலட்சியமாக நடந்துகொள்வது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறையில் மட்டும் 31 மாவட்ட வருவாய் அலுவலர் பணியிடங்களும், 117 துணை ஆட்சியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. இதனால் வருவாய் நிர்வாகம் சார்ந்த பணிகள் முடங்கிக் கிடக்கின்றன

தமிழ்நாடு அரசிற்கு முதுகெலும்பாக திகழ்வது வருவாய்த் துறை தான். அத்துறையில் சுமார் 150 உயர்பதவிகள் காலியாக இருப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தமிழகத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்

காலியிடங்களில் சுமார் 100 துணை ஆட்சியர் பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி முதல் தொகுதி தேர்வு மூலம் தான் நிரப்ப முடியும் என்பதால், உடனடியாக அத்தேர்வை அறிவிக்க வேண்டும். அதேபோல், தகுதியான வட்டாட்சியர், துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்!(

Monday, August 22, 2022

August 22, 2022

TNPSC Group 4 தேர்வு; கட் ஆஃப் எப்படி இருக்கும்? ரிசல்ட் எப்போது?

TNPSC Group 4 VAO exam expected cut off and result date: டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், பிரிவு வாரியாக கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு வரும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது.

இந்த குரூப் 4 தேர்வு ஆவரேஜ் என்ற அளவில் இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் தெரிவித்தனர். இதனால் கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறைவாக இருக்கும் என கூறப்பட்டது. அதேநேரம், தமிழில் 87-91 வினாக்களுக்கும், கணிதத்தில் 20-23 வினாக்களுக்கும் 56-61 வினாக்களுக்கும் விடையளித்திருப்பது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில், சில நாட்களுக்கு முன்னர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைகளை வெளியிட்டது. இதனையடுத்து, நிபுணர்கள், உத்தேச விடைகள் மற்றும் மாணவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிட்டுள்ளனர். அதன்படி, குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மேலும் குறையலாம் என தெரிகிறது. மேலும் காலியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட உள்ளதால், கட் ஆஃப் இன்னும் குறையாலாம் என கூறப்படுகிறது.

தற்போது இந்த குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம். இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

முதலில் இளநிலை உதவியாளர் மற்றும் வி.ஏ.ஓ பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பார்ப்போம். இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 164 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 161 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 158க்கு மேலும், SC பிரிவினருக்கு 155க்கு மேலும், BCM பிரிவினருக்கு 158க்கு மேலும், SCA பிரிவினருக்கு 150க்கு மேலும், ST பிரிவினருக்கு 145 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பெண்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களைப் பொறுத்தவரை, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 163 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 160 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 154க்கு மேலும், SCA பிரிவினருக்கு 147க்கு மேலும், ST பிரிவினருக்கு 141 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 158 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 154 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 152க்கு மேலும், SC பிரிவினருக்கு 147க்கு மேலும், BCM பிரிவினருக்கு 150க்கு மேலும், SCA பிரிவினருக்கு 142க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 148 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 144 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 145க்கு மேலும், SC பிரிவினருக்கு 132க்கு மேலும், BCM பிரிவினருக்கு 142க்கு மேலும், SCA பிரிவினருக்கு 128க்கு மேலும், ST பிரிவினருக்கு 120 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தப் பணியிடங்களில் ஒவ்வொரு பிரிவிலும் பெண்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்த கட் ஆஃப் மதிப்பெண்களில் 3-4 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 4-5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதனிடையே, குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் அக்டோபர் 2 ஆவது வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tuesday, July 26, 2022

July 26, 2022

TNPSC குரூப் 4 தேர்வு; கட் ஆஃப் மதிப்பெண் எவ்வளவு?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு; பொது அறிவு பகுதி சற்று கடினம்; கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும்? முக்கிய தகவல்கள் இங்கே

TNPSC Group 4 Exam 2022 cut off mark details here: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்த தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஒரே ஒரு எழுத்து தேர்வு மட்டும் என்பதால், இந்த தேர்வுக்கு இளைஞர்களிடையே அதிக மவுசு இருந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வில் தமிழ் பாட வினாக்கள் எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பகுதி வினாக்கள் சற்று கடினமாக இருந்ததாகவும் சில தேர்வர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க நேரம் போதவில்லை என சில தேர்வர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தமிழ் பகுதி எளிதாக இருந்தது. இந்த ஆண்டு தமிழ் கட்டாய பாடமாக மாற்றியுள்ளதால், இதற்கு முன்னர் வரை ஆங்கிலம் படித்தவர்களும் எளிதாக பதில் அளிக்கும் வகையில் தமிழ் எளிதாக கேட்கப்பட்டிருந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

கணிதப் பகுதியில் 25 வினாக்களில் ஒரு சில வினாக்களைத் தவிர அனைத்து வினாக்களும் எளிதாக இருந்தது. சில வினாக்கள் கணித அடிப்படை பண்புகளை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே விடையளிக்கும் வகையில் இருந்தது. அதாவது தேர்வர்களை குழப்பும் வகையில், ஆனால் எளிதாக இருந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொது அறிவு பகுதி சற்று கடினமாக இருந்தது. சில கேள்விகளுக்கு பதில் அளிக்க சற்று கடினமாக இருந்து. அதிக நேரம் தேவைப்பட்டது. சில கேள்விகளை நன்கு புரிந்த கொண்ட பின்னரே பதில் அளிக்கும் வகையில் இருந்தது. நேரடியாக பதில் அளிக்கும் கேள்விகள் அதிகமாக இருந்தாலும், இந்த முறை புதிய முறையாக விடைகளை பார்த்து புரிந்துக் கொண்டப் பின்னரே விடையளிக்கும் வகையில் இருந்தது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, தேர்வு ஆவரேஜ் ஆக இருந்ததாக தேர்வர்களும், நிபுணர்களும் கூறுகின்றனர். இந்தநிலையில், குரூப் 4 தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எப்படி இருக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.

பொது பிரிவினருக்கான கட் ஆஃப் 160 க்கும் மேலும், BC பிரிவினருக்கு 157 க்கும் மேலும், MBC பிரிவினருக்கு 155க்கு மேலும், SC பிரிவினருக்கு 151க்கு மேலும், BCM பிரிவினருக்கு 148க்கு மேலும், SCA பிரிவினருக்கு 145க்கு மேலும், ST பிரிவினருக்கு 135 க்கும் மேலும் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் 5 மதிப்பெண்கள் வரை கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு 140 – 145 என்ற அளவிலும், முன்னாள் ராணுவத்தினருக்கு 130-140 என்ற அளவிலும் கட் ஆஃப் வரலாம்.

இங்கு கட் ஆஃப் மதிப்பெண்கள் என குறிப்பிடப்படுவது, கேள்விகளின் எண்ணிக்கையே, தேர்வுக்கான மதிப்பெண்கள் அளவு அல்ல. மொத்தம் 200 கேள்விகளுக்கு எத்தனை வினாக்கள் சரி என்பதையே, நாம் இங்கு கட் ஆஃப் மதிப்பெண்களாக குறிப்பிட்டு இருக்கிறோம்.

அதேநேரம், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அனைத்து பிரிவுகளிலும் 5 வினாக்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது. மேலும், பெண்களுக்கு 3 முதல் 4 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்பு உள்ளது.

இதேபோல், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் 5 மதிப்பெண்கள் வரை குறைய வாய்ப்புள்ளது.

Total Pageviews

Search This Blog