Breaking

Showing posts with label மாணவர்கள். Show all posts
Showing posts with label மாணவர்கள். Show all posts

Tuesday, August 09, 2022

August 09, 2022

கவனம் பெறும் கலைக் கல்லூரிகள்: தமிழ் இலக்கியத்தில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்

தமிழகத்தில் பொறியியல் போன்ற தொழில் படிப்புகளை விட கலை - அறிவியல் கல்லூரிகளில் சேர மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிக்கின்றனர்.

சமீப ஆண்டுகளாக கலை அறிவியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு கூடுதல் விண்ணப்பங்கள் வருகின்றன. குறைந்த கட்டணம் என்பதால் அரசு, அரசு உதவி பெறும் கலை கல்லூரிகளில் (காலை சுழற்சி வகுப்புகள்) சேர மாணவர்கள் விரும்புகின்றனர். கலைப் பிரிவுவில் தலா ஒரு வகுப்பிற்கு 60 பேரும், அறிவியல் பாடப்பிரிவுகளில் தலா 40 மாணவ, மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். ஒவ்வொரு பாடப்பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக 3 அல்லது 4 மடங்கு விண்ணப்பங்கள் வருவதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். மதுரை, திண்டுக்கல் , தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை அடங்கிய மதுரை மண்டலத்திலுள்ள 29 அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் 2022 - 23-ம் கல்வியாண்டிற்கு பல இளநிலை பாடப்பிரிவுகளுக்கு 73,260 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்கள் 14, 430 மட்டுமே. 5 மடங்கு அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு கல்லூரியிலும் தமிழ் இலக்கியம், ஆங்கிலம், வரலாறு, வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பிஎஸ்சி ஐடி பாடங்களில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அரசு கல்லூரி, மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, திருமங்கலம் அரசு கல்லூரிகளில் தமிழ் இலக்கிய பாடத்தில் சேர போட்டி அதிகரித்துள்ளது. திருமங்கலம் அரசு கல்லூரியில் ஏ மற்றும் பி தமிழ் பாட பிரிவுகளுக்கு தலா 60 பேர் மட்டுமே சேர்க்க முடியும் என்றாலும், 1,200 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பிற அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் 3 மடங்கு அதிகமானோர் தமிழ் பாடப்பிரிவில் சேர விரும்பியுள்ளனர். அரசு போட்டித் தேர்வில் தமிழுக்கு முக்கியத்துவம், எளிதில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில் இப்பாடப்பிரிவை தேர்ந்தெடுகின்றனர் என, தமிழ்துறை பேராசிரியர்கள் சிலர் தெரிவிக்கின்றனர்.

தமிழ் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், "தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி, போலீஸ் எழுத்துத் தேர்வுகளில் தமிழ் இலக்கியங்களில் இருந்து கூடுதல் வினாக்கள் இடம் பெறுகின்றன. அரசு வேலை வாய்ப்பிலும் தமிழுக்கான முக்கியம் கருதியே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக்கல்லுாரிகளில் பி.ஏ., தமிழ் இலக்கியம், மொழியியல் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்’’என்றார்.

Monday, August 08, 2022

August 08, 2022

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு நூதன தண்டனை; பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப்பள்ளிகளில் தொடர்ந்து தவறு செய்யும் மாணவர்களுக்கு, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்தபடி நூதன தண்டனைகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அரசுப்பள்ளி மாணவர்களின் நடத்தையில் பல்வேறு எதிர்மறை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கற்றல் நடவடிக்கைகளில் இருந்து திசை திருப்பப்பட்டு, தவறான நடத்தை மற்றும் குறும்பு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆசிரியர்கள் முழுமையாக கவனிக்க முடியாத சூழல் உள்ளது. அதேசமயம் மாணவர்களிடம் கோபம், வன்முறை மற்றும் கவனம் ஈர்க்கும் முறைகள் அதிகமாக காணப்படுகின்றன. பள்ளி மற்றும் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுடன், ஆசிரியர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகின்றனர். இதுபோன்ற மாணவர்களை கவனமுடன் கையாள வேண்டும் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, தொடர்ந்து தவறான செயல்களில் ஈடுபடும் மாணவர்களுக்கு, நூதன தண்டனை அளிக்க பள்ளிக்கல்வி இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சிஇஓக்களுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில், `பள்ளி மாணவர்கள் கற்றல் குறைபாடு உள்ள குழந்தையாக இருந்தால், சிறப்பு கல்வியாளரிடம் அனுப்பி குழந்தைக்கு உதவி செய்யலாம். தற்போதுள்ள குழந்தைகள் ஆசிரியர்களை அவமதித்தல், பொது இடங்களில் இடையூறு ஏற்படுத்துதல், சக மாணவர்களை ராகிங் செய்து அடித்தல், போதை பொருட்களை பயன்படுத்துதல், வகுப்பு நேரங்களில் வீடியோ ரீல்களை உருவாக்குதல், பள்ளி சுவர்களில் தவறான வார்த்தை, படங்களை எழுதுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற நேர்வுகளில் முதலில் பள்ளி ஆலோசகர் ஆலோசனைகளை வழங்க வேண்டும். அதே மாணவர் தொடர்ந்து தவறு செய்தால், திருக்குறளை படித்து பொருளுடன் எழுதுதல், நீதிக்கதை கூறுதல், செய்தி துணுக்குகளை படித்தல், வரலாற்று தலைவர்களை பற்றி எடுத்துரைத்தல், நல்ல பழக்க வழக்கங்கள், பாதுகாப்பு மற்றும் முதலுதவி, 1098 பற்றிய விழிப்புணர்வு வரைபடம் வரைதல், காய்கறி தோட்டம் அமைத்தல், கைவினை பொருட்கள் செய்தல் உள்ளிட்ட ஒழுங்குமுறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாளலாம். அதன் பின்னரும் தவறு செய்யும் பட்சத்தில் குழந்தை நேய காவல் அதிகாரி மூலம் அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கவும், தொடர்ந்து அருகில் உள்ள வேறு அரசுப்பள்ளிக்கு மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’என இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

Friday, August 05, 2022

August 05, 2022

மாணவர்களின் கல்வி நலன் கருதி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

மாணவர்களின் கல்வி நலன் கருதி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டின் கடைசி வேலை நாள் வரை மறு நியமனம் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

தொடக்கக் கல்வித்துறை யக்குனர், அனைத்து மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:

Thursday, August 04, 2022

August 04, 2022

ஒதுக்கிவைத்த பேராசிரியர்கள், மாணவர்கள்: உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற இரு மாணவிகள்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் இரு மாணவிகள் மெர்குரிக் சல்பைடு குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் மதுரையைச் சேர்ந்த மதி மற்றும் வேலூரைச் சேர்ந்த அஷ்மத் பாத்திமா ஆகிய இரு மாணவிகள் இரண்டாம் ஆண்டு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வருகிறார்கள். இருவரும் நெருக்கமான தோழிகள் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரையும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள், சக மாணவர்கள் பேசாமால் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இருவரும் கால்நடை மருத்துவக் கல்லூரியின் லேபில் உள்ள மெர்குரிக் சல்பைடை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இரு மாணவிகளும் விடுதியில் மயக்க நிலையில் இருந்ததைப் பார்த்த மாணவி ஒருவர் இதுகுறித்து விடுதி நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இரு மாணவிகளையும் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வேப்பேரி போலீஸாருக்கு தெரியவர தற்கொலைக்கு முயற்சித்த மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் எனக் கூறியதாக தெரியவருகிறது.

Wednesday, August 03, 2022

August 03, 2022

மாணவர்கள் கல்லூரி மாறினால் முழு ஃபீஸ் திரும்ப தர வேண்டும்

மாணவர்கள் கல்லூரி மாறினால் முழு ஃபீஸ் திரும்ப தர வேண்டும்
August 03, 2022

அரசு கல்லூரிகளில் நன்கொடை மாணவர்கள், பெற்றோர் புகார்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை, அந்தந்த கல்லுாரிகளால் நடத்தப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை கல்லுாரி கல்வி இயக்குனரகம் ஆன்லைன்' வழியில் பெற்றுள்ளது. விண்ணப்பங்களை, கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை கமிட்டி பரிசீலனை செய்து, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும். தரவரிசையின்படி, மாணவர்களுக்கான பாட பிரிவுகள் ஒதுக்கப்படும். இதில், 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், சில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை சேர்க்கைக்கு இடம் வாங்கி தருவதாகக் கூறி, இடைத்தரகர்கள் மாணவர்களின் பெற்றோரிடம் நன்கொடை வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் குழு, மாணவர், ஆசிரியர் ஒருங்கிணைப்பு குழு என்ற பெயர்களில், இந்த வசூல்வேட்டை நடக்கிறது.

இதுகுறித்து, உயர்கல்வி துறை விசாரணை நடத்தி, நன்கொடை வசூலிப்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Monday, August 01, 2022

August 01, 2022

TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் உள்ளது

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை, செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் உறுதி செய்வது செயல்பாட்டில் இருந்தாலும், அது கட்டாயமாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் செல்போன் செயலி மூலமான வருகைப்பதிவேடு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, TNSED எனப்படும் செயலியை கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த செயலியில், தலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் செயலி மூலம் வருகை பதிவேடு எடுக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்கு வராமல் வருகைப் பதிவேட்டை பதிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TNSED செயலி:

TNSED எனப்படும் அந்த செயலியில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே வருகையை குறிக்கும் P எனும் எழுத்தும், விடுப்பை குறிக்கும் A எனும் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை உறுதி செய்துகொண்டு அதில் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தி விட்டு, திரையின் அடியில் தோன்றும் SAVE AND SYNCHRONIZE எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திரையில் ஆரஞ்சு நிறம் தோன்றி அது பச்சை நிறத்திற்கு மாறி, வருகைப்பதிவேடு முற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

இதேமுறையிலேயே, ஆசிரியர்களும் தங்களது வருகையை தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sunday, July 31, 2022

July 31, 2022

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே ஆசிரியர்களின் Leave / CL / SL / Permission, மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு - பள்ளிக்கல்வித்துறை

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் Attendance பதிவு செய்யப்பட வேண்டும்

Leave / CL / SL / Permission உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ளலாம்

- பள்ளிக்கல்வித்துறை

பள்ளிகளில் ஆகஸ்ட் -1 முதல் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்வித்துறை செயலி மூலமாக வருகைப்பதிவு மேற்கொள்ள உத்தரவு - வழக்கமான வருகை பதிவேட்டில் பதிவு செய்ய கூடாது

ஆகஸ்ட் 1 முதல் ஆசிரியர் மற்றும் மாணவர் வருகைப்பதிவு செயலியில் மட்டும் பதிவு செய்தால் போதுமானது வருகை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் - CEOs ஆய்வுக் கூட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

CLICK HERE TO DOWNLOAD

Friday, July 29, 2022

July 29, 2022

“நுழைவுத் தேர்வு ரத்தால் கிராமப்புற மாணவர்கள் சேர்க்கை உயர்ந்தது” - பொன்முடி

“கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25,000 ஆக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77,000 ஆக உயர்ந்தது" என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சுட்டிக்காட்டினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வரவேற்புரை ஆற்றிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசியது:

"பட்டம் பெறும் நீங்கள் வேலை தேடுபவராக மட்டும் இல்லாமல், வேலை தருகின்ற நிறுவன அதிபர்களாகவும் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு பாடத்திட்டங்களை உருவாக்க வேண்டுமென முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

இந்தியாவிலேயே உயர் கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில், தமிழகம்தான் முதல் இடம். 53 சதவீதம் பேர் உயர் கல்வி பெறுகின்றனர். அதிலும் தற்போது ஆண்களைவிட பெண்களே அதிகம் பயில்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில்கூட பதக்கம் பெறுபவர்களில் பெண்களே அதிகம். 56.5 சதவீதம் பெண்கள் பதக்கங்களைப் பெறுகின்றனர். பதக்கம் பெறும் 69 பேரில் 39 பெண்கள், 30 ஆண்கள்.இதுதான் தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிற மாற்றம் வளர்ச்சி. பெண்களின் உயர் கல்வியை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடுதான், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் சேர்ந்தால், அவர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ள ஒரே முதல்வர், தமிழக முதல்வர். இந்தியாவிலேயே முதல்முறையாக மாணவிகளுக்கு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

கிராமப்புற மாணவர்களின் நலனுக்காக முன்னாள் முதல்வர் கருணாநிதி நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். இதனால், 25 ஆயிரமாக இருந்த கிராமப்புற மாணவர்களின் சேர்க்கை 77 ஆயிரமாக உயர்ந்தது" என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
July 29, 2022

ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரே ஊசி மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தொற்று உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. தடுப்பூசிகள் வந்த பின்னரும் கூட அதன் தாக்கமானது குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் இருந்து மக்கள் பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரிலுள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரெ சிரஞ்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா என்ற நபர், இதுகுறித்து விளக்கம் அளித்த போது, பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தினேன் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?" என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை அதை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ஜிதேந்திரா செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

பள்ளி சொத்துக்களை மாணவர்கள் சேதப்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு - பள்ளிக் கல்வித்துறை

பள்ளிச் சொத்துகளுக்கு ஒரு குழந்தை சேதம் விளைவித்தால் பெற்றோர்,பாதுகாவலரே பொறுப்பு என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பொருளை குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மாற்றி அமைத்து தர வேண்டும். பள்ளிக் குழந்தைகள் தவறான செயல்களில் ஈடுபட்டால் முதலில் தக்க ஆலோசனை வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் பொது இடங்களில் குழந்தைகளின் செயல்கள் மற்றும் குழந்தைகளை கையாளும் பரிந்துரைகள் தொடர்பாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் கடிதம்!

பள்ளிகளில் மாணவர்களால் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டால் அதற்கு, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களே முழுப் பொறுப்பு என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சேதமடைந்த பொருளை பெற்றோர்களோ அல்லது பாதுகாவலரோதான் மாற்றித் தரவேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான செயல்களில் குழந்தைகள் ஈடுபட்டால், முதலில் அவர்களுக்கு தக்க அலோசனை வழங்க வேண்டும். அடுத்தடுத்து தவறான செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை நல்வழிப்படுத்த ஒழுங்கு முறை நுட்பங்களை ஆசிரியர்கள் கையாலலாம் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது

CLICK HERE TO DOWNLOAD(Choose Telegram App)
July 27, 2022

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணையில் நேற்றே கையெழுத்திட்டுள்ளேன் - மு.க.ஸ்டாலின்.

மாணவர்கள் படிப்பை தவிர வேறு எதிலும் கவனத்தை சிதற விட வேண்டாம்.

நல்ல செயல்களும், உடற்பயிற்சியும் ஆரோக்கியமான மனநிலையை தரும்.

மாணவர்கள் காலை உணவை தவிர்க்க கூடாது - மாணவர்கள் மனநலம், உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

மாணவர்கள் காலை உணவை தவிர்க்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 5 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இலவச காலை சிற்றுண்டி திட்டம்!

இலவச காலை சிற்றுண்டி திட்ட அரசாணைக்கு நேற்று கையொப்பமிட்டுள்ளேன்.

மாணவர்கள் அனைவரும் காலை உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

காலையில்தான் அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை வந்தால் போதும், படிப்பு தானாக வரும்;

உடல்நலனை மாணவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். உங்கள் அப்பாவாக, அம்மாவாக இருந்து சொல்கிறேன்.

- பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Tuesday, July 26, 2022

July 26, 2022

மாணவர்கள் மத்தியில் அதிகரிக்கும் தற்கொலைகள் - குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கூறுவது என்ன?

மாணவர்களிடம் அதிகரிக்கும் தற்கொலைகளைத் தடுப்பதற்கு, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சில முக்கியக் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

சென்னை: கரோனா தொற்றுத்தாக்குதலுக்குப் பின்னர், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. பள்ளிகளில் ஏற்படும் தற்கொலைச்சம்பவங்களை குறைப்பதற்குத் தேவையான ஆலேசானைகளை வழங்கினாலும், கல்வித்துறை அலுவலர்கள் அதனை முழுமையாகப் பின்பற்றாமல் இருக்கின்றனர்.

தற்கொலை, பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பாலியல் குற்றச்சாட்டுகள், தற்கொலைகள் குறித்தும் விசாரணை நடத்தி, அதன் மீதான அறிக்கையை தமிழ்நாடு அரசிற்கும் அளித்து வருகிறது.அடுத்தடுத்த உயிரிழப்புகள்: தமிழ்நாட்டில் சமீபகாலமாக பள்ளியின் விடுதியில் தங்கிப்பயிலும் மாணவிகளின் இறப்பைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை உளவியலாளரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து நடைபெற்ற வன்முறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.தற்கொலை தவிர்தற்கொலை தவிர்அதேபோல் செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்திலும், விருத்தாசலத்திலும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னை குருநானக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கிறபோது, எனக்கு உள்ளபடியே மனவேதனையாக இருக்கிறது.

கல்வி நிறுவனங்களை நடத்துபவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்களை தொழிலாக, வர்த்தகமாக நினைக்காமல் தொண்டாக, கல்விச்சேவையாகக் கருத வேண்டும். மாணவர்கள் பட்டங்கள் வாங்குவதற்காக மட்டும் கல்வி நிறுவனங்களுக்கு வரவில்லை. முதலில் தன்னம்பிக்கை, தைரியம், மன உறுதி ஆகியவற்றை அவர்களுக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.அரசு வேடிக்கை பார்க்காது: எத்தகைய சோதனைகளையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் வளர வேண்டும். உங்களுக்கு ஏற்படும் தொல்லைகள், அவமானங்கள், இடையூறுகள் ஆகியவற்றை மாணவர்கள், அதிலும் குறிப்பாக மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். மாணவிகளுக்குப் பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ தொல்லை தரும் எத்தகைய இழிசெயல் நடந்தாலும், தமிழ்நாடு அரசு நிச்சயமாக சொல்கிறேன், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது. உறுதியான நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உடனடியாக அதற்குரிய தண்டனை பெற்றுத் தரப்படும்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுஎந்தச் சூழலிலும் தற்கொலை எண்ணத்துக்கு மாணவிகள் தள்ளப்படக்கூடாது. இந்த இடத்திற்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்றால், எத்தனையோ சோதனைகளைக்கடந்துதான் இங்கே நீங்கள் வந்திருக்கிறீர்கள். சோதனைகளைச் சாதனைகள் ஆக்கி வளர்ந்தாக வேண்டும். தமிழ்நாட்டு மாணவ-மாணவியர் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்லாமல், உடலுறுதியும் மனதைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும்.

இதுதான் என்னுடைய ஆசை; என்னுடைய கனவு. அத்தகைய கல்வியை, அறிவை, ஆற்றலை கல்வி நிறுவனங்கள் வழங்க வேண்டும். படிப்போடு கல்வி நிறுவனங்களின் பணி முடிந்துவிடவில்லை. பாடம் நடத்துவதோடு ஆசிரியர்களின் பணியும் முடிந்துவிடுவதில்லை. குழந்தைகளைப்பெற்றதோடு பெற்றோரின் பணி எப்படி முடியாததோ, அதுபோல படிப்போடு ஆசிரியர் பணி முடிந்துவிடாது.மாணவர்களுக்கு, தற்கொலை எண்ணம் கூடவே கூடாது. தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும். உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை கூடாது. உயிர்ப்பிக்கும் சிந்தனையே தேவை. ஆசிரியர்களாக இருந்தாலும், பெற்றோர்களாக இருந்தாலும் மாணவ, மாணவியரிடம் மனம் விட்டுப்பேசுங்கள்.

மாணவர்களும், உங்களுடைய பிரச்னைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடமும், ஆசிரியரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்” எனக் கூறினார்.பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை: தொடர்ந்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூட்டம், அதன் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை உளவியலாளர் நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்யவுள்ளனர். மேலும் இது குறித்து தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கூறுகையில், “கள்ளக்குறிச்சி சம்பவத்தைத் தொடர்ந்து ஆணையத்தின் உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் குழந்தைகளுக்கு எழும் பிரச்னைகளை பள்ளியின் ஆசிரியர்களிடம் கூற முடியாத நிலை இருக்கிறது.எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆலேசானை உளவியலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். முறையாக உளவியல் கூறித்து படித்தவர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. உளவியல் ஆலோசகர்தான் முழுமையாக மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசனை வழங்க முடியும்.

தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி பேட்டிகள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை செய்ய தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் நாளையும் ஆய்வு செய்ய உள்ளோம்” எனத்தெரிவித்தார். அதேபோல் தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், கல்வி உளவியல் ஆலோசகருமான சரண்யா ஜெயக்குமார், “பள்ளிகளில் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு முதல் காரணம், 14 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு மன அழுத்தம் அதிகமாக இருக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் ஏற்படுகிறது. அடுத்ததாக பெற்றோர் தங்களின் விருப்பங்களை குழந்தைகளிடம் திணிப்பது காரணம் ஆகிறது. குழந்தைகளை டாக்டர் ஆக்க வேண்டும், ஐஏஎஸ் ஆக்க வேண்டும் என திணிப்பதுடன், தங்களின் உறவினர்கள் மற்றும் சமுதாயத்தில் மதிப்பு இருக்காது எனக் கூறுவதும் அவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மனம் விட்டுப்பேச வேண்டும்:

பள்ளியில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையில் மாணவர்கள் தொடர்ந்து படிக்க வைப்பதால், மன அழுத்தம் ஏற்படுகிறது. அவர்கள் வேறு எந்த மகிழ்ச்சியான செயலிலும் ஈடுபட அனுமதிக்கப்படுவதில்லை. மாணவர்களிடையே ஒரு மாணவரை சரியாகப் படிக்காமல் இருப்பதால், ஒதுக்கி வைப்பதாலும், மாணவர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுகிறது.மாணவர்களை எக்ஸாம் நோக்கி கொடுக்கப்படும் அழுத்தமும் காரணமாக அமைகிறது. பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது தேவையில்லாமல் அழுத்தம் தரக் கூடாது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்துப் பள்ளிகளில் உள்ள விடுதிகளையும் 2014ஆம் ஆண்டு முதல் பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். தனியார் பள்ளிகளில் செயல்படும் விடுதிகளைப் பதிவு செய்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. தற்போது ஒரு சில பள்ளிகளில் ஏற்பட்ட பிரச்னையால் விடுதிகளை நடத்தும் பள்ளிகள், மாவட்ட ஆட்சியரிடம் பதிவு செய்ய முன்வந்துள்ளது.தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார் பேட்டிமாணவிகள் மட்டும் இல்லாமல் மாணவர்களும் மன அழுத்தத்தில்தான் இருக்கின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் போக்குவதற்கு பெற்றோர், தங்களின் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேச வேண்டும். குழந்தைகளிடம் பெற்றோர் வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்பட்ட தோல்விகள் குறித்தும், அவற்றில் இருந்து எவ்வாறு வெற்றி பெற்றோம் என்பது குறித்தும் எடுத்துக்கூற வேண்டும். வெற்றி அடைந்த கதைகளை மட்டும் கூறாமல், தோல்வி அடைந்த கதைகளையும் கூறி தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். கரோனா தொற்றுப் பாதிப்பிற்குப்பின்னர் மனதளவிலும், பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் கரோனா தொற்றின்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக பாடங்களை படிக்காமல் இருந்ததால், மறந்து இருக்கின்றனர்.7ஆம் வகுப்பு படித்த மாணவர்கள் தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுகின்றனர். இதனாலும் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. பள்ளிகளில் மாணவர்கள் தங்கிப்படிப்பதற்கு ஏற்படுத்தப்படும் விடுதிகளில், பெற்றோர்களைப்போல் மாணவர்களை பாதுகாக்கும் வகையில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமித்து, பராமரிக்க வேண்டும்” எனக் கூறினார்.

Total Pageviews

Search This Blog