Thursday, August 04, 2022
கனமழை காரணமாக இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்
கனமழை தொடர்வதால் இன்று ( 04.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம் :
திருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தேனி - மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை திண்டுக்கல் - கொடைக்கானல் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.
சிறுமலை பகுதி பள்ளிகளுக்கும் விடுமுறை
கோவை - வால்பாறை வட்டார பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
உத்தரவை மீறி பள்ளி, கல்லூரி இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
Friday, July 29, 2022
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது : பள்ளிக்கல்வித்துறை
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளி நாட்கள் தவிர விடுமுறை நாட்களில் மாணவர்களை வகுப்புகளுக்கு வரச்சொல்லக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணப்பாக்கத்தில் பிரீமியம் 2 & 3 படுக்கையறை குடியிருப்புகள் @ 83 லட்சம்* முதல் தமிழகத்தில் 2022- 23ஆம் கல்வியாண்டில் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை விடப்படும் என பள்ளி கல்வி துறை ஏற்கனவே அறிவித்தது. கடந்த ஜூன் மாதம் நடப்பு கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட்டது.
நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்த நிலையில், சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்றும் தெரிவித்தது. பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைக்க கூடாது. பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஒரு குழந்தை சரியாகப் படிக்கவில்லை எனில், கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால், சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால், அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று, மாற்றித் தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமெனவும் தொடர்ந்து தவறு செய்து கொண்டே இருந்தால், அருகே உள்ள வேறு பள்ளிக்கு மாற்றவேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்ளுதல், சாலை விபத்து, உள்ளிட்ட பிற அசம்பாவித சம்பவம் எதுவென்றாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அனுமதியின் பேரில் தான் ஊடகங்களுக்கு செய்தி தர வேண்டும். பேருந்தில் வரும் மாணவர்கள் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வருவதை தவிர்க்க காலை இறை வணக்ககூட்டத்தில் தக்க அறிவுரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல் நெறிமுறைகள் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, July 26, 2022
Monday, July 18, 2022
இன்று விடுமுறை அறிவித்த பள்ளிகளுக்கு நோட்டீஸ்: அமைச்சர்
கள்ளக்குறிச்சி கலவரத்தைக் கண்டித்து இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் வன்முறை நிகழ்ந்த தனியார் பள்ளியில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று வன்முறை ஏற்பட்டது. பிளஸ் 2 மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடத்தவும், பள்ளி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடைபெற்றது.
இதையும் படிக்க | தனியார் பள்ளியில் அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆய்வு...
கடந்த 5 நாள்களாக நடைபெற்று வந்த போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. காவல் துறையினர் போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. இதில், பேருந்துகள், காவல் துறை வாகனங்கள் தீக்கிரையாகின. பள்ளி வளாகமும் சூறையாடப்பட்டது.
இந்நிலையில், வன்முறை நிகழ்ந்த பள்ளியில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதையும் படிக்க | COMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF CLERKS - PDF
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரிக்க குழு அமைக்கப்படும். இன்று விடுமுறை அறிவித்த தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். கனியாமூர் தனியார் பள்ளி தொடர்பான ஆய்வறிக்கையை முதல்வரிடம் அளித்து அதன்பிறகான ஆலோசனைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கப்படும் எனத் தெரிவிய்த்தார்.
