Breaking

Showing posts with label Adi Dravidar and Tribal Welfare Department - Prematric scholarship for SC and Others New guidelines - PDF. Show all posts
Showing posts with label Adi Dravidar and Tribal Welfare Department - Prematric scholarship for SC and Others New guidelines - PDF. Show all posts

Wednesday, February 01, 2023

February 01, 2023

ஆதிதிராவிட பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட-பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவா்கள் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ மதம் மாறிய ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு பல்வேறு உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மத்திய அரசின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டமும் முக்கியமானது. இந்தத் திட்டத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்து ஆதிதிராவிடா் மாணவா்கள் https://scholarships.gov.in என்ற இணையதளத்திலும், பழங்குடியினா் மாணவா்கள் https://tribal.nic.in என்ற இணையதளம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம்.

இதனிடையே, போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசின் சாா்பில் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://tnadtwscholarship.tn.gov.in என்ற அந்த இணையதளம் மூலம் மாணவா்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதாா் எண், இணையவழியில் பெறப்பட்ட வருமானச் சான்று, ஜாதிச் சான்று உள்ளிட்ட பிற ஆவணங்களுடன் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

Tuesday, June 28, 2022

June 28, 2022

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - எஸ்சி மற்றும் பிறர்களுக்கான பிரீமெட்ரிக் உதவித்தொகை புதிய வழிகாட்டுதல்கள் - Adi Dravidar and Tribal Welfare Department - Prematric scholarship for SC and Others New guidelines - PDF

Total Pageviews

Search This Blog