School News
April 07, 2026
Showing posts with label Puducherry Government. Show all posts

Tuesday, April 07, 2026
Sunday, October 26, 2025
Wednesday, March 12, 2025
Monday, November 18, 2024
Saturday, August 03, 2024
Tuesday, July 30, 2024
Tuesday, July 09, 2024
Thursday, May 30, 2024
Thursday, March 07, 2024
Friday, February 16, 2024
Puducherry Government
February 16, 2024
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டம் தொடக்கம்

புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ரங்கசாமி இன்று மாலை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாலை வேளையில் சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு எடுத்தது. இதற்காக பள்ளிக்கல்வித்துறை மூலம் கோப்பு தயாரிக்கப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதற்கான கோப்புக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கடந்தாண்டு நவம்பர் 25-ம் தேதி ஒப்புதல் அளித்தார்.
இத்திட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம்) பயிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் திணை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் மிட்டாய் வழங்கப்படுகிறது. 486 பள்ளிகளில் அமல்படுத்தப்பட உள்ளது. 86 ஆயிரம் மாணவர்கள் பயனடைய இருக்கிறார்கள். இத்திட்டத்தின் தொடக்க விழா திருக்கனூர் அடுத்த காட்டேரிக்குப்பம் இந்திரா காந்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று மாலை நடைபெற்றது. புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாலை நேர சிறுதானிய சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வித்துறை செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: “எங்களுடைய அரசு சொன்னதை செய்கின்ற அரசாகத்தான் இருக்கும் என்று அடிக்கடி சொல்வேன். அதன்படி, சொன்னதை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் ஒன்றாக சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளோம். கரோனா வந்த பிறகு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலிருந்து படிக்கும் சூழல் ஏற்பட்டதால், செல்போன், மடிக்கணினியை மாணவர்கள் பயன்படுத்தி படித்தார்கள். இதனால் மடிக்கணினி அவசியமான ஒன்றாக உள்ளது. எனவே, 11, 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு அறிவித்தப்படி மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கும் நிச்சயமாக மடிக்கணினி வழங்கப்படும். கடந்த ஆட்சியில் உள்ளாட்சி துறை மூலம் சாலை போடவில்லை. எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கொடுக்கவில்லை என்று அப்போது நமச்சிவாயத்திடம் கேட்டபோது, நிதி எதுவும் கொடுக்கவில்லை. எதையும் செய்ய முடியவில்லை என்று புலம்புவார். இதனால்தான் ஒருசில முடிவுகளை அமைச்சர் நமச்சிவாயம் எடுத்தார். இந்தாண்டை பிரதமர் மோடி சிறுதானிய ஆண்டாக அறிவித்து, சிறுதானியங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தி வருகிறார். சத்துணவு மிகவும் அவசியமான ஒன்று. அது பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். கரோனா வந்த பிறகுதான் சத்துணவின் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரிந்தது. பிள்ளைகள் சத்தான உணவு சாப்பிடும்போது எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய் வராது.
ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். அதனால், சிறுதானியங்களை பிள்ளைகளுக்கு கொடுக்கலாம் என்று எண்ணி இந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். மடிக்கணினி, புத்தகங்கள் வைத்து எடுத்து செல்லும் வகையில் பேக் கொடுக்க வேண்டும் என்ற கல்வி அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
நிச்சயமாக மாணவர்களுக்கு ஸ்கூல் பேக் வழங்கப்படும். அரசு கல்வித்துறைக்கு நிறைய நிதி ஒதுக்கி செலவு செய்து வருகிறது. சிபிஎஸ்இ பாடத்தை அமல்படுத்தி உள்ளோம். எனவே, மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிக்க 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கல்வி கட்டணத்தையும் அரசே செலுத்தி விடுகிறது. இதுபோன்ற வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். 1500 தொழிற்சாலைகள் புதுச்சேரியில் இருக்கிறது. 85 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது. விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய தொகையையும் அரசு கொடுத்து வருகிறது.
புதுச்சேரியில் உள்ள ஒரே ஒரு கூட்டறவு சர்க்கரை ஆலையை தொடர்ந்து நடத்த வேண்டியது மிக அவசியமான ஒன்று. இந்த கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரைவில் திறக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆலையை திறந்து நடத்துவதில் அரசு உறுதியாக உள்ளது. விரைவில் திறந்து நடத்தப்படும். அரசு திட்டங்கள் உரிய நேரத்தில் சரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று அவர் பேசினார்.

Friday, September 29, 2023
WhatsApp QR
September 29, 2023
மாணவர்களுக்கு உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை!
வாட்ஸ்அப்பில் அறிமுகம் இல்லாத நபர்களின் வீடியோ அழைப்பை கல்லூரி மாணவர்கள் ஏற்க வேண்டாம் என புதுச்சேரி மாநில உயர்கல்வித்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரித்து வரும் சைபர் கிரைம் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் விதமாக புதுச்சேரி உயர்கல்வித்துறை இயக்குநர் அமன் சர்மா கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். அதில் கல்லூரி மாணவர்கள் தேவையில்லாத, அவர்களது செல்போன்களுக்கு வரும் அறிமுகம் இல்லாதா வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். சமூக வலைத்தளத்தில் தங்களின் புகைப்படங்களை பதிவிடவோ, பகிரவோ வேண்டாம் என்றும் தேவையில்லாத இணையதள முகவரிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சைபர் கிரைம் தொடர்பான புகார்களுக்கு (0413-2276144) கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Friday, September 22, 2023
Puducherry Government
September 22, 2023
மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!
மிலாது நபி: அரசு விடுமுறை மாற்றம்!
புதுச்சேரியில் மிலாது நபியையொட்டி அரசு விடுமுறை செப்.27-க்கு பதில் செப்.28-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மிலாது நபி புதுச்சேரியில் செப்.28-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினமே அரசு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்.27-ல் அரசு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது செப்.28-க்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.
Thursday, September 21, 2023
Puducherry Government
September 21, 2023
அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
அரசு பள்ளி மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்
"புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த, 10% இடஒதுக்கீட்டில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும்"
- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
“மருத்துவ படிப்பு கல்வி கட்டணம் - அரசே ஏற்கும்“
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10% இட ஒதுக்கீடு
அரசு பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்கும் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் 10% ஒதுக்கீட்டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% ஒதுக்கீடு தரப்பட்ட நிலையில் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

Monday, September 04, 2023
students news
September 04, 2023
மருத்துவ படிப்பு - அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக் கல்வி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஓப்புதல்
அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு இந்த இட ஒதுக்கீட்டால் நனவாகும். அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
மருத்துவப் படிப்பு - 10% இடஒதுக்கீடு
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடைபெறும் மருத்துவக்கல்விச் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு - மத்திய அரசு ஒப்புதல் “10% இட ஒதுக்கீடு - அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும்”
புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஓப்புதல் வழங்கியுள்ளது
புதுச்சேரி மக்கள் சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த 10 % இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவு நனவாகும்
இதற்காக பணியாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்
-புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
Monday, August 28, 2023
Puducherry Government
August 28, 2023
தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவையில் ஒருவர் கூட இல்லை

நடப்பாண்டு தேசிய நல்லாசிரியர் விருது பட்டியலில் புதுவைக்கு ஒரு விருது கூட இல்லை.
மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நாடு முழுவதும் பணிபுரியும் சிறந்த ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, 2023-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆனால் புதுவை மாநிலத்தில் இருந்து இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு 5 ஆசிரியர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் விண்ணப்பித்த ஒரு ஆசிரியர் பெயர் கூட விருது பட்டியலில் இல்லை. கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதம் சரிந்திருந்த சூழலில் தற்போது தேசிய நல்லாசிரியர் விருதிலும் விண்ணப்பித்த யாரும் விருதுக்கு தேர்வாகாதது கல்வித் துறை வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thursday, July 27, 2023
Puducherry Government
July 27, 2023
அரசுப் பள்ளிகளில் ஒரே நாளுடன் முடிவடைந்த காலை உணவுத் திட்டம் - மீண்டும் வருமா?
புதுச்சேரியில் உள்ள அரசுப் பள்ளி மாண வர்கள் பயன்பெறும் வகையில், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் தொடங்கப்பட்ட காலை உணவுத் திட்டம் தொடரப்படாமல் ஒரே நாளுடன் முடிவடைந்த நிலையில் உள்ளது. தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மதிய உணவை கல்வித்துறை வழங்கி வந்தது. இதற்கிடையே, பெங்களூருவைச் சேர்ந்த ‘அட்சய பாத்ரா’ அறக்கட்டளையுடன் கடந்த 2018-ல் புதுச்சேரி கல்வித்துறை ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. அதன்படி, இந்த ‘அட்சய பாத்ரா’ தன்னார்வ அமைப்பு புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவை வழங்கி வருகிறது. இதற்காக, லாஸ்பேட்டை மைய சமையல் கூடத்தை ரூ. 13 கோடியில் ‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் நவீனப்படுத்தி, மதிய உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர்.
இந்த மதிய உணவுத் திட்டத்துக்காக, மத்திய அரசு அளிக்கும் மானியத்துடன் புதுச்சேரி அரசு அளிக்க வேண்டிய பங்கில் பாதியளவு மட்டுமே ‘அட்சய பாத்ரா’ அறக்கட்டளைக்கு அளிக்கப்படுகிறது. இதனால், ஆண்டுக்கு ரூ. 2 கோடி வரை புதுச்சேரி அரசுக்கு சேமிப்பாகிறது.
‘அட்சய பாத்ரா’ அமைப்பினர் சைவ உணவு மட்டுமே தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். அதனால், ஏற்கெனவே புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பணியில் இருக்கும் ரொட்டி- பால் வழங்கும் ஊழியர்கள் மூலம் பள்ளிமாணவர்களுக்கான முட்டை வழங்கப்படுகிறது.
இந்தச் சூழலில், ‘அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் வழங்கப்பட வேண்டும்’ என்று கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, “மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில், புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டித் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று கடந்த காங்கிரஸ் ஆட்சியில், அப்போதைய முதல்வர் நாராயணசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி, கடந்த 2020 நவம்பர் 12-ம் தேதி இத்திட்டத்தை நாராயணசாமி தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று தடபுடலாக தொடங்கிய திட்டம் ஒரே ஒரு நாள் மட்டுமே நடைமுறையில் இருந்தது. அதன் பிறகு பள்ளி விடுமுறை நாட்கள் வர, “பள்ளி திறக்கும்போது செயல்படுத்தப்படும்” என்றார்கள். இப்படிச் சொல்லி இரண்டரை ஆண்டுகள் கடந்து விட்டன. திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
இதுபற்றி கல்வியாளர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரி மற்றும் காரைக்காலையொட்டி தமிழக அரசுப் பள்ளிகள் பல உள்ளன. அங்கு காலை உணவுத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், புதுச்சேரியில் இல்லை. தற்போது, புதுச்சேரியில் மதிய உணவை ‘அட்சயா பாத்ரா’ அமைப்பே தருகிறது. அதனால் மிச்சமாகும் நிதியை வைத்து, மாணவர்களுக்கு இந்த காலை உணவைத் தரலாம்” என்று தெரிவித்தனர்.
“கருணாநிதி பெயரால் அறிவிக்கப்பட்ட காலை உணவுத்திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சியான திமுக எவ்வித கேள்வியும் எழுப்பாமல் மவுனம் காக்கிறது. அவர்களும் இதில் அழுத்தம் தரலாம். அப்படி தரும்பட்சத்தில் இதை நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு உருவாகும்" என்ற கருத்தும் நிலவுகிறது.
இதுபற்றி கல்வித்துறை தரப்பில் கேட்டதற்கு, "புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலையில் பால் தருகிறோம். அதேபோல் முட்டை தருகிறோம். விரைவில் மாலையில் சிறுதானிய சிற்றுண்டியும் தரவுள்ளோம். அதனால் காலை உணவு தர வாய்ப்பில்லை. எனினும் இதுதொடர்பான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறோம்" என்று தெரிவித்தனர