Primary Education Officer
December 08, 2025
Showing posts with label Primary Education. Show all posts

Monday, December 08, 2025
Monday, February 19, 2024
Primary Education
February 19, 2024
TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு.
TN Budget 2024 - Allocation of Rs.960 crore for primary education sector to educate students in modern technology. TN Budget 2024 - நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் கற்றிட தொடக்கக் கல்வித்துறைக்கு ரூ.960 கோடி ஓதுக்கீடு. நவீன தொழில்நுட்பத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் பொருத்தமான கற்றல் - கற்பித்தல் சூழலை உருவாக்கவும் , அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகளில் 525 கோடி ரூபாய் செலவில் 8,209 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - Tech lab ) மற்றும் 435 கோடி ரூபாய் செலவில் 22,931 தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Classroom ) அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளன . மேலும் , வரும் நிதியாண்டில் 15,000 திறன்மிகு வகுப்பறைகள் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் .
Wednesday, January 17, 2024
teachers news
January 17, 2024
தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல்
தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் One Lakh Teachers Agitate in Primary Education - Teachers Abandoned by Officials' Politics தொடக்க கல்வியில் ஒரு லட்சம் ஆசிரியர்கள் கொந்தளிப்பு - அதிகாரிகளின் அரசியலால் ஆசிரியர்கள் குமுறல் - சங்கங்களை முடக்கும் நடவடிக்கையா????
தமிழகத்தில் தொடக்க கல்வியில் ஆசிரியர் நியமனம் முன்னுரிமை பதவி உயர்வுக்கான தகுதி ஆகியன குறித்து வெளியான அரசு உத்தரவால் ( அரசாணை எண் : 243 ல் ) இடைநிலை ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேரின் பதவி உயர்வு கேள்விக்குறியாகி உள்ளது. இது ஆளும் சுட்சி மீதான ஆசிரியர்களின் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.
Thursday, January 11, 2024
SmartClass
January 11, 2024
ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை
ஸ்மார்ட் ஆக மாற இருக்கும் தொடக்கக் கல்வித்துறை Primary education to go smart
தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உயர்தர ஹைடெக் கணினி ஆய்வகங்களும், ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாநிலம் முழுவதும் உள்ள 22,418 தொடக்கப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வரப்பட உள்ளன. கரும்பலகை இல்லாமல் அகன்ற டிஜிட்டல் திரையில் ஒலி-ஒளி அமைப்புடன் கூடிய கற்றல் கற்பித்தல்கள் மேற்கொள்ளவும், கற்றலில் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இந்த நவீன வகுப்பறைகள் அமைக்கப்படும். இதுதவிர 6,992 நடுநிலைப் பள்ளிகளில் ஹைடெக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன.
இதற்கான ஒப்பந்த புள்ளிகள் தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக கோரப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த கணினி ஆய்வகத்தை மேற்பார்வையிடுவதற்கான பணியாளர்களும் தற்காலிகமாக ஒப்பந்த முறையில் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதன்மூலம் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ஒருவர் வீதம் 6,992 பேர் நியமிக்கப்படுவார்கள்.
இந்த நவீன ஸ்மார்ட் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள இரும்பு கேட் அமைக்கப்படும். மேலும் இடைநிலை, பட்டதாரிகளுக்கு டேப்லெட்(கையடக்கக் கணினி) வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு கூறினர்.

Wednesday, February 09, 2022
TEACHERS
February 09, 2022
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு இன்று முதல் மார்ச் 25 வரை எண்ணும் எழுத்தும் பயிற்சி தொடக்கம்: கல்வித்துறை அதிரடி
தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி இயக்கம் மூலம் இன்று முதல் மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தேர்வுகளில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தேர்ச்சி பெறாவிட்டால் தேர்ச்சி பெறும் வரை அதே பயிற்சியை ஆசிரியர்கள் பெறவேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | எண்ணும் எழுத்தும் அடிப்படைப் பயிற்சியில் ஆசிரியர்கள் பங்கேற்பது எப்படி?
முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வித்திட்ட மாநில இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டில் உள்ள 8 வயதிற்கு உட்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த வகுப்பு அளவில் படிக்கவும், எழுதவும் அடிப்படை கணக்குகளை செய்யவும் முடியும் என்பதை உறுதி செய்வதற்காக அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியானது, வீடியோ பாடமாகவும், ஆன்லைன் வழி மதிப்பீடாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை ஆசிரியர்கள் பெற்றால் மட்டுமே சான்றிதழ் பெற முடியும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெறும் வரை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்காக 12 புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு, இன்று முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. ஒவ்வொரு புத்தகத்திற்கும் தனித்தனியாக பயிற்சி அளிக்கப்பட்டு மார்ச் 25 ஆம் தேதி பயிற்சி நிறைவு பெறும் என்று கூறப்பட்டுள்ளது.