Breaking

Showing posts with label Implementation of the old pension scheme. Show all posts
Showing posts with label Implementation of the old pension scheme. Show all posts

Thursday, February 23, 2023

February 23, 2023

old pension scheme - பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல் - Video

பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல் - Video

பழைய பென்ஷன் திட்டம் வேண்டுமென முதலமைச்சர் செல்லும் வழியில் உரைத்த குரல்... வீடியோ


Tuesday, February 21, 2023

February 21, 2023

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அரசு ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில் குழு அமைப்பு...

ஹரியானா: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி அம்மாநில அரசு ஊழியர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்திய நிலையில் கண் துடைப்புக்காக குழு அமைப்பு...

Tuesday, February 07, 2023

February 07, 2023

Old Pension Scheme: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, அரசு தரப்பில் லேட்டஸ்ட் அப்டேட்

Old Pension Scheme: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, அரசு தரப்பில் லேட்டஸ்ட் அப்டேட் - Old Pension Scheme: Super News for Employees, Latest Update from Govt

📚பழைய ஓய்வூதியத் திட்டம் 2023: மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

👉இப்போது நாட்டின் அனைத்து மாநில மற்றும் மத்திய ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்களும் சில அமைப்புகளும் கோரி வருகின்றனர். வரும் நாட்களில் நாட்டின் பல மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும், 2024 ஆம் ஆண்டில் மக்களவைத் தேர்தலும் நடக்க உள்ளன.

👉இந்த நிலையில் ஊழியர்களை மகிழ்விக்க அரசு மீண்டும் இந்த திட்டத்தை அமல்படுத்தக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

👉எனினும், இது குறித்த நிலையான தகவல் எதுவும் அரசு தரப்பிலிருந்து இன்னும் வரவில்லை.

👉இதற்கிடையில், இனி பல அரசியல் கட்சிகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக்கி, தாங்கள் ஆட்சி அமைந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்து வருகின்றன.

👉இதனால் உஷாரான மத்திய அரசு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த புதிய திட்டங்களைத் தயார் செய்து வருகிறது. 👉பழைய ஓய்வூதியத்திட்டம் குறித்த ஆலோசனைகள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பல வித ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகின்றது. இதற்காக ஏற்பட்ட பேச்சுவார்த்தைகளில் அரசும், ஓய்வூதிய ஒழுங்குமுறை அதிகாரிகளும் 3 வகையான தீர்வுகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

👉முதல் தீர்வு:

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில் பாதி சம்பளம் ஓய்வூதியமாகப் பெறப்படும். ஆனால் இதற்கு ஊழியர்கள் பங்களிக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு திட்டத்தை ஆந்திர அரசு செயல்படுத்தி வருகிறது..

👉இரண்டாவது தீர்வு:

இரண்டாவது தீர்வு என்னவென்றால், புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும். இதில் ஊழியர்களின் பங்களிப்பு உள்ளது, ஆனால், அதற்கு நிகரான ரிட்டர்ண் இல்லை என ஊழியர்கள் புகார் கூறுகிறார்கள். NPSல் இருக்கும் ஊழியர்களின் குறையை நீக்கும் வகையில், குறைந்தபட்ச வருமானம் 4 முதல் 5 சதவிகிதம் வரை இருக்கலாம் என்று அறிகுறிகள் தென்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர, என்பிஎஸ்-ல் முதிர்வு நேரத்தில் ஊழியர்களுக்கு 60 சதவீதம் தொகை வழங்கப்படுகிறது. இதையும் ஓய்வூதியத்தில் சேர்த்தால், ஓய்வூதியத்தின் அளவு அதிகரிக்கலாம். 👉மூன்றாவது தீர்வு:

அடல் ஓய்வூதியத் திட்டத்தைப் போல, (அடல் பென்ஷன் யோஜனா) குறைந்தபட்ச ஓய்வூதியம் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்பது மூன்றாவது தீர்வாக உள்ளது. தற்போது இதில் ரூ.1000 முதல் ரூ.5000 வரை ஓய்வூதியம் உள்ளது. அடல் பென்ஷன் யோஜனாவை PFRDA கவனித்து வருகிறது. ரூ.5000 என்ற வரம்பை ரத்து செய்ய முடியும் என்று PFRDA கூறுகிறது. ஆனால் இதற்கு நிதி பற்றாக்குறை சூழ்நிலையை சமாளிக்க உதவும் பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும்..

👉இந்த மூன்று தீர்வுகளும் பிஎஃப்ஆர்டிஏ மூலம் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன. இதில் என்ன முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதில் இன்னும் சந்தேகம் உள்ளது.

👉பிஎஃப்ஆர்டிஏவில் புதிய தலைவர் நியமனத்திற்காக காத்திருப்பது இதற்கு மிகப்பெரிய காரணமாக கருதப்படுகிறது..

Monday, January 23, 2023

January 23, 2023

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது: முதல்வர் தகவல்!

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து அரசு ஆலோசித்து வருகிறது: ஏக்நாத் ஷிண்டே தகவல் The government is considering the old pension scheme: Chief Minister informs!

மும்பை: ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என மகாராஷ்ரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

மகாராஷ்ரா மாநிலத்தில் வர இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கலந்து கொண்டார்.

பின் அவர் பேசியதாவது:

கல்வித்துறை பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து, ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும். இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் கிடைக்கும்.

இதன் கீழ், ஒரு ஊழியருக்கு கடைசியாக எடுக்கப்பட்ட சம்பளத்தில் 50 சதவீத தொகையை ஓய்வூதியமாக பெற உரிமை உண்டு. முந்தைய மகா விகாஸ் அகாதி (எம்.வி.ஏ) அரசு கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன?. இவ்வாறு அவர் பேசினார்.

சில மாநிலங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும்போது, அவற்றின் நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது

Friday, December 30, 2022

December 30, 2022

பழைய பென்ஷன் திட்டத்துக்கு கைவிரிப்பு: மேலவையில் காங்கிரசார் வெளிநடப்பு... Old pension scheme waved: Congress walk out in upper house...

பழைய பென்ஷன் திட்டத்துக்கு கைவிரிப்பு: மேலவையில் காங்கிரசார் வெளிநடப்பு... Old pension scheme waved: Congress walk out in upper house...

பெலகாவி,-''கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் மீண்டும் அமல்படுத்தும் நோக்கம் தற்போதைக்கு இல்லை,'' என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.

பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில், சட்ட மேலவை காங்கிரஸ் உறுப்பினர் தளவார் சாபண்ணா, அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் முறை அமல்படுத்தும்படி கோரினார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை தரப்பில், சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி பதிலளித்து பேசியதாவது:

பழைய பென்ஷன் வழங்கும் திட்டத்தை, 2004ல் அப்போதைய காங்கிரஸ் அரசு தான் நிறுத்தியது.

கடந்த, 2006 முதல் அனைத்து மாநிலங்களும் அதை அமல்படுத்தின. அதன் பின் புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டது.

அப்போது முதல் புதிதாக அரசு வேலைக்கு சேருபவர்களுக்கும், மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அதை மறந்து விட்டு மீண்டும் பழைய முறை கேட்பது சரியில்லை. கர்நாடக அரசு, ஆண்டுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதல், 80 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊதியம், பென்ஷனுக்கு செலவு செய்யப்படுகிறது.

மாதந்தோறும் பென்ஷனுக்கு மட்டுமே 24 கோடி ரூபாய் செலவாகிறது.

எனவே தற்போதைக்கு பழைய திட்டம் மீண்டும் அமல்படுத்தும் நோக்கம் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் பதிலை ஏற்க மறுத்த காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் கூச்சல், குழப்பம் நிலவியது.

அப்போது அரசின் பதிலை ஏற்க மாட்டோம் என்று கூறி, காங்கிரசார் வெளிநடப்பு செய்தனர்.

இதன் பின், அமைச்சர் மாதுசாமி மீண்டும் பேசுகையில், ''நிதித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து பழைய பென்ஷன் முறை அமல்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்கப்படும்,'' என்றார்.

Saturday, November 19, 2022

November 19, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே!!! நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமே!!! நடைமுறையாவது எப்போது? - ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பாமக நிறுவனம் ராம்தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழ்நாடு அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

சண்டிகரில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 1.75 லட்சம் பஞ்சாப் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள். அவர்களிடமிருந்து புதிய ஓய்வூதியத் திட்டத்திற்காக வசூலிக்கப்பட்ட ரூ.16,746 கோடியை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தியுள்ளது.

அண்மைக்காலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதன்முதலில் செயல்படுத்தியது இராஜஸ்தான் மாநிலம் தான். அப்போது ராஜஸ்தான் அரசால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது இது வெற்று அறிவிப்பாகவே இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறினார்கள். ஆனால், அனைத்து எதிர்மறை கருத்துகளையும் முறியடித்து ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. அதுமட்டுமின்றி, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும், பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக நீதிக்கு பெயர்பெற்ற தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தியாவில் 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதன் மூலம், இந்தியாவில் இனி பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தவே முடியாது என்ற மாயை தகர்க்கப்பட்டிருக்கிறது. இது தான் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் உண்மையாகும். இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்தும், தமிழ்நாட்டில் 2003ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியிலிருந்தும் புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அரசு ஊழியர்களின் ஓய்வுக்குப் பிந்தைய சமூக பொருளாதார பாதுகாப்பை அழித்து விடும் என்பதால் இத்திட்டத்தை கைவிட வேண்டும் என்று கடந்த 20 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது மிகவும் எளிதாகும். பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் இந்த தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்கிற்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு முன்பாகவே தமிழகத்தில் பழைய ஒய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. அதன்பின்னர் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அறிக்கையை அளித்தது. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமானது தான் என்று என்பது பல்வேறு மாநிலங்களில் அத்திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்தே உறுதியாகியுள்ளது. எனவே, இனியும் ஏதேனும் காரணங்களைக் கூறி பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் மூலம் உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Monday, October 31, 2022

October 31, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் வரும்: ராகுல்

பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயம் வரும்: ராகுல்

‘குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டம் நிச்சயமாக அமல்படுத்தப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா்.

குஜராத்தில் 1995-ஆம் ஆண்டு பாஜகவிடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாத நிலையே தொடா்கிறது. எனினும், பிரதான எதிா்க்கட்சியாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த சுமாா் 13 ஆண்டு காலகட்டத்தில் அந்த மாநிலத்தில் பாஜக மிகவும் வேகமாக வளா்ந்தது. மோடிக்குப் பிறகு பாஜக சாா்பில் 3 முதல்வா்கள் மாற்றப்பட்டுள்ளனா்.

எனவே, இந்த முறை குஜராத் சட்டப் பேரவைத் தோ்தலில் எப்படியும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் களமிறங்கியுள்ளது. காங்கிரஸ் சாா்பில் ஏற்கெனவே அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, 15 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணி நிரந்தரம், விவசாயக் கடன் தள்ளுபடி, இலவசக் கல்வி, ரூ.500-க்கு எரிவாயு சிலிண்டா், ரூ.3 லட்சம் வரை விவசாயக் கடன் தள்ளுபடி பல்வேறு வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தங்கள் கட்சியின் முக்கிய வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உறுதிப்படுத்தும் வகையில் ராகுல் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா். அதில், ‘இவை காங்கிரஸின் உறுதியான வாக்குறுதிகள் - ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு பணி நிரந்தரம், அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும், உரிய நேரத்தில் பதவி உயா்வு அளிக்கப்படும். ஏற்கெனவே ராஜஸ்தானில் இதனை அமல்படுத்திவிட்டோம். குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தவுடன் அங்கும் இத்திட்டங்கள் நடைமுறைக்கு வரும்’ என்று கூறியுள்ளாா்.

Saturday, September 17, 2022

September 17, 2022

Implementation of the old pension scheme - Head Teachers Association urges - பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்-தலைமை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல் - Implementation of the old pension scheme- Head Teachers Association urges

புதுக்கோட்டையில் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில தலைவர் அன்பரசன், மாநில பொதுச் செயலாளர் மாரிமுத்து, முன்னாள் மாநில பொதுச் செயலாளர் சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பதிவு உயர்வில் 40 சதவீதம் முதல் 50 சதவீதமாக உயர்த்தி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர்கள் மற்றும் இரவு காவலர்கள் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். அனைத்து அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியமற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் அன்பரசன் கூறியதாவது: மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக ஒரு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் நிலவிவரும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும் பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதை உடனடியாக முதல்வர் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 28ஆம் தேதி சென்னையில் மாநில அளவில் ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

மாணவர்களை அன்பாக நடத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. சில பகுதிகளில் ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் அரசுக்கு பெறப்பட்டு காவல்துறை மூலமாகவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

உண்மையாக இருக்கும் குற்றச்சாட்டுகள் மீது தகுந்த ஆதாரங்கள் இருந்தால் உறுதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் சில பகுதிகளில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் மீது வைக்கின்றனர் என்று அன்பரசன் தெரிவித்தார்.

Total Pageviews

Search This Blog