Breaking

Showing posts with label தேசிய தரவரிசை பட்டியல். Show all posts
Showing posts with label தேசிய தரவரிசை பட்டியல். Show all posts

Tuesday, July 19, 2022

July 19, 2022

தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

தேசிய தரவரிசைப் பட்டியல்: சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 12-ஆவது இடம்

தரமான கல்வியை அளிப்பதில் தேசிய அளவில் சிறந்து விளங்கும் கல்லூரிகளுக்கான தர வரிசைப் பட்டியல் சென்னை மருத்துவக் கல்லூரி 12-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம், ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களை பல பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தி பட்டியல் வெளியிடுகிறது.

இதையும் படிக்க | நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஆள் மாறாட்டம்: 8 பேர் கைது

அதன்படி நிகழாண்டு தரவரிசைப் பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி 12-ஆவது இடத்தை பிடித்துள்ளது. மேலும், மாநில அரசால் நடத்தப்படும் மருத்துவ கல்லூரிகளில் முதலிடம் பெற்றுள்ளது. இதனைப் பாராட்டி மத்திய அரசு அளித்த சான்றிதழை, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் தேரணிராஜன், சிறுநீரகவியல் துறைத் தலைவா் டாக்டா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் மக்கள் நல்வாழ்வு துறைத் அமைச்சா் மா.சுப்பிரமணியத்திடம் திங்கள்கிழமை காண்பித்து வாழ்த்து பெற்றனா்.

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக மருத்துவப் பயிற்சிக்காக சென்னை மருத்துவப் பள்ளியானது கடந்த 1835-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் பின்னா் படிப்படியாக அங்கு பட்டப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இதனிடையே, சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் நீட்சியாக சென்னை மருத்துவப் பள்ளியை கல்லூரியாக மாற்ற விண்ணப்பிக்கப்பட்டது. அது ஏற்கப்பட்டு கடந்த 1850-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி சென்னை மருத்துவப் பள்ளியானது சென்னை மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

Saturday, July 16, 2022

July 16, 2022

தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? - முழு விவரம்

தேசிய தரவரிசை பட்டியலின் ‘டாப்’ இடங்களில் தமிழகக் கல்லூரிகள் எத்தனை? - முழு விவரம்

கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகள் டாப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில் கல்லூரிகளுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. ஓட்டு மொத்தம், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனங்கள், பொறியியல், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் இந்தப் பட்டியல் வெளியிடப்படுள்ளது. இதில் தமிழக கல்லூரிகள் முக்கிய இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளன. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பல கல்லூரிகளில் டாப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

> ஓட்டு மொத்த தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 18 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பல்கலைக்கழக தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 21 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> ஆராய்ச்சி நிறுவனங்களின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பொறியியல் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 16 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> மேலாண்மை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பார்மலஸி தரவரிசையில் முதல் 100 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 11 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

> பல் மருத்துவக் கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 50 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 9 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

> சட்ட கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 2 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

> கட்டிடக் கலை கல்லூரிகளின் தரவரிசையில் முதல் 30 கல்லூரிகளில் தமிழகத்தைச் சேர்ந்த 6 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன.

ஒட்டு மொத்த தரவரிசை

முதல் இடம் - ஐஐடி சென்னை

16வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் , கோவை

18வது இடம் - விஐடி, வேலூர்

பல்கலைக்கழகம்

5வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

9வது இடம் - விஐடி, வேலூர்

15வது இடம் - பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

கல்லூரிகள்

3வது இடம் - மாநிலக் கல்லூரி, சென்னை

4வது இடம் - லயோலா கல்லூரி, சென்னை

6வது இடம் - பிஜி கிருஷ்ணாம்மாள் கல்லூரி, கோவை

ஆராய்ச்சி நிறுவனங்கள்

2வது இடம் - ஐஐடி, சென்னை

10வது இடம் - விஐடி, வேலூர்

21வது இடம் - அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

பொறியியல் கல்லூரிகள்

முதல் இடம் - ஐஐடி சென்னை

8வது இடம் - என்ஐடி திருச்சி

12வது இடம் - விஐடி வேலூர்

19 வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மேலாண்மை கல்லூரிகள்

10வது இடம் - ஐஐடி சென்னை

18வது இடம் - என்ஐடி திருச்சி

27வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

பார்மஸி கல்லூரிகள்

6வது இடம் - ஜெஎஸ்எஸ் பார்மஸி கல்லூரி ஊட்டி

12வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

14வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம், கோவை

மருத்துவக் கல்லூரிகள்

3வது இடம் - கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி வேலூர்

8வது இடம் - அமிர்தா விஷ்வ வித்யாபீடம் கோவை

12வது இடம் - சென்னை மருத்துவ கல்லூரி சென்னை

பல் மருத்துவக் கல்லூரிகள்



முதல் இடம் - சவீதா கல்லூரி சென்னை

8வது இடம் - எஸ்ஆர்எம் கல்லூரி சென்னை

13வது இடம் - ராமசந்திர கல்லூரி சென்னை

கட்டிடக் கலைக் கல்லூரிகள்

5வது இடம் - என்ஐடி திருச்சி

11வது இடம் - எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரி சென்னை

23வது இடம் - தியாகராஜர் கல்லூரி மதுரை

Total Pageviews

Search This Blog